சாய்ந்தமருது வீட்டிலிருந்த யாரேனும் தப்பிச் செல்வதற்கான சந்தர்ப்பம் இருந்தது

ஹாதியாவை மீட்ட மேஜர் சுதுசிங்க குறுக்கு விசாரணைகளில் சாட்சியம்

0 51

(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தலை தொடர்ந்து 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது வெலி­வே­ரியன் கிரா­மத்தில் தற்­கொலை குண்­டு­வெ­டிப்பு இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் வீட்டை இரா­ணுவம் சுற்­றி­வ­ளைத்­தி­ருந்த போது, அவ்­வீட்டில் இருந்த எவ­ரேனும் தப்பிச் செல்ல சந்­தர்ப்பம் இருந்­த­தாக மேஜர் சபித்த ஹேம­கு­மார சுபசிங்க தெரிவித்தார்.

சஹ்­ரானின் மனைவி பாத்­திமா ஹாதியா­வுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கில் நேற்று (17) கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி ஜெயராம் ட்ரொக்ஸி முன்­னி­லையில், பிர­தி­வாதி தரப்பு சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீபின் குறுக்குக் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து அவர் இதனை வெளிப்­ப­டுத்­தினார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திக­திக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் சாரா ஜஸ்மின் என்­ற­ழைக்­கப்­பட்ட புலஸ்­தினி மகேந்­திரன் என்­பவர் வெடி­பொ­ருட்­களை தயா­ரித்­தமை மற்றும் அவற்றை சேக­ரித்து வைத்­தி­ருந்­தமை தொடர்பில் நிந்­த­வூரில் வைத்து அறிந்­தி­ருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரி­வித்தன் ஊடாக ), அந்த தக­வலை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­காமை குறித்து பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 5 ஆம் அத்­தி­யா­யத்தின் அ, ஆ பிரி­வு­களின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

எச்.சி. 653/ 21 எனும் குறித்த குற்றப் பகிர்வுப் பத்­திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அந்த குற்றப் பகிர்வுப் பத்­தி­ரத்தில், கோட்டை முன்னாள் நீதிவான் ரங்க திஸா­நா­யக்க, சி.ஐ.டி. அதி­கா­ரிகள், ஒரு இரா­ணுவ வீரர் உள்­ள­டங்­க­ளாக 30 சாட்­சி­யா­ளர்கள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ள­துடன், சான்­றா­வ­ண­மாக ஒரே ஒரு ஒப்­புதல் வாக்கு மூலம் மட்டும் நிர­லி­டப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில், இவ்­வ­ழக்கில் சாட்சி விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரும் நிலையில், நேற்று, முத­லா­வ­தாக சாட்­சியம் அளித்த பிரி­கே­டியர் சுது­சிங்­க­விடம் குறுக்கு விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

இதன்­போது பிர­தி­வாதி ஹாதி­யா­வுக்­காக மன்றில், சட்­டத்­த­ரணி ரிஸ்வான் உவை­ஸுடன் சிரேஷ்ட சட்­டத்­தணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ராகி குறுக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தார்.

வழக்குத் தொடு­ந­ருக்­காக பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் தலை­மையில், அரச சட்­ட­வா­தி­க­ளான சத்­துரி விஜே­சூ­ரிய மற்றும் லாபிர் ஆகியோர் ஆஜ­ரா­கினர்.

இந் நிலையில் குறுக்கு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து சாட்­சி­ய­ம­ளித்த பிரி­கே­டியர் சுது­சிங்க, சாய்ந்­த­ம­ருது -வெலி­வே­ரியன் கிரா­மத்தில் வெடிப்பு இடம்­பெற்ற வீட்டில் மொத்­த­மாக 3 வெடிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­ன­தாக கூறினார்.

அதனால், சாய்ந்­த­ம­ருது நோக்கி சென்ற தனது குழு­வி­ன­ருக்கு, குறித்த வீட்­டுக்குள் செல்ல சுமார் 12 மணி நேர போராட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்டி இருந்­த­தாக குறிப்­பிட்டார்.

இதன்­போது அந்த 12 மணி நேரம், புல­னாய்வு நட­வ­டிக்கை ஒன்­றுக்­கான கால நேர­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டதா என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் குறுக்கு விசா­ரணை செய்த நிலையில், அது தொடர்பில் தனக்கு தெரி­யாது என மேஜர் சுது­சிங்க குறிப்­பிட்டார்.

தொடர்ந்து குறுக்கு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த மேஜர் சுது­சிங்க, வெடிப்பு நடந்த வீட்டின் முன் பக்­க­மாக தானும் தனது குழு­வி­னரும் சுமார் 75 முதல் 100 மீட்டர் தூரத்தில் இருந்­த­தா­கவும், அவ்­வீடு மதிலால் சூழப்­பட்­டது எனவும் தெரி­வித்தார். குறித்த மதி­லா­னது 4 அடி­வரை உய­ர­மா­னது என அவர் குறிப்­பிட்டார்.

இதன்­போது இரா­ணுவ பாது­காப்பு போடப்­பட்­டி­ருந்த அந்த சூழலில் வெடிப்பு இடம்­பெறும் போது அவ்­வீட்டில் இருந்த எவ­ருக்­கேனும் தப்பிச் செல்ல சந்­தர்ப்­பங்கள் இருந்­ததா என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் கேள்வி எழுப்­பினார். இதற்கு பதி­ல­ளித்த மேஜர் சுது­சிங்க, அவ்­வாறு தப்பிச் செல்ல சந்­தர்ப்பம் இருந்­த­தாக குறிப்­பிட்டார்.
அது மட்­டு­மன்றி பின்னால் இருந்த மதில் 4 அடி மட்­டுமே உயரம் என்­பதால் அத­னூ­டாக பாய்ந்து செல்ல முடியும் எனவும், தான் உள்­ளிட்ட குழு­வினர் வீட்டின் முன் பக்­க­மாக இருந்­த­மையால் பின் பக்கம் என்ன நடக்­கி­றது என்­பதை தெளி­வாக கண்­கா­ணிக்க முடி­யாது எனவும் குறிப்­பிட்டார்.

வெடிப்பின் பின்னர், பாது­காப்­பினை உறுதி செய்து சுமார் 12 மணி நேரத்தின் பின்னர் குறித்த வீட்­டுக்குள் முதலில் நுழைந்­தவர் தானே என இதன்­போது குறிப்­பிட்ட மேஜர் சுது­சிங்க, வீட்டின் பின் பக்­க­மாக தான் நுழைந்­த­தா­கவும் கூறினார்.

இதன்­போது சாரா ஜெஸ்­மினின் பெயரை குறிப்­பிட்டு நேர­டி­யாக குறுக்கு கேள்­வி­களை சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் எழுப்­பினார். அதற்கு பதி­ல­ளித்த அவர், சாரா ஜெஸ்மின் தப்பிச் செல்ல உத­வி­ய­மைக்­காக பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ருக்கு குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளமை தொடர்பில் தான் அறி­வ­தா­கவும், எவ்­வா­றா­யினும் சாரா தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் தன்­னிடம் எந்த விசா­ர­ணை­க­ளையும் சி.ஐ.டி.யினர் முன்­னெ­டுக்­க­வில்லை எனவும் மேஜர் சுது­சிங்க குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து மேஜர் சுது­சிங்­க­விடம் மீள கேள்­வி­களை எழுப்பி அரச தரப்பின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் விளக்­கங்­களை பதிவு செய்தார். சாரா ஜெஸ்மின் தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில் தககல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை தொடர்பில் ஊடகங்கள் ஊடாகவே தான் அறிந்ததாக அவர் அதன்போது கூறினார்.

இதனையடுத்து 2 ஆவது சாட்சியாளராக, அப்போதைய அம்பாறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தற்போதைய எம்பிலிபிட்டிய உதவி பொலிஸ் அத்தியட்சருமான லசந்த தடல்லகேயின் சாட்சி நெறிப்படுத்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அந் நடவடிக்கைகள் இன்றும் தொடரவுள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.