புதிய சட்டம் முழு நாட்டையுமே திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப் போகிறது:ஹக்கீம்

0 231

தொகுப்பு :
எம்.என்.எம்.யஸீர் அறபாத் – ஓட்டமாவடி

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் “விழுமியம்” புதிய காலாண்டு சஞ்சிகையின் வெளியீட்டு நிகழ்வு, கொழும்பு 9 “தாருல் ஈமான்” கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (8) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை.

எதையும் பேசு­வ­தற்கும், எழு­து­வ­தற்கும் தயங்­கு­கிற ஒரு சூழலை, எதையும் சொல்­லு­கிற போது அதனால் வேறு விப­ரீ­தங்கள் நிகழ்ந்­து­வி­டுமோ என்று சம்­பந்­த­மில்­லாமல் ஓர் அச்ச உணர்வை ஊட்­டு­கின்ற ஒரு சூழலுக்கு நாம் முகங்கொடுத்திருந்தோம். எனினும் கடந்த வருடம் நிகழ்ந்த மாபெரும் மக்கள் புரட்­சியைத் தொடர்ந்து அந்த சூழ­லி­லி­ருந்து நாங்கள் மீண்­டு­விட்டோம் என்று எண்ணிக் கொண்­டி­ருந்­தாலும், இன்று நடை­பெ­று­கிற விட­யங்­களைப் பார்க்­கின்­ற­போது அப்­ப­டி­யான ஒரு மீட்சி இன்னும் எங்­க­ளுக்கு கிட்­ட­வில்லை என்பது புரிகிறது. அண்­மித்த காலத்தில் அவ்­வாறு கிட்டும் என்ற எதிர்­பார்ப்பும் இல்­லாமல் போகின்ற ஓர் ஆபத்து இருந்து கொண்­டி­ருக்­கி­றது.

இந்தப் பின்­ன­ணியில் இவை பேசப்­ப­டாமல் இருக்­க ­மு­டி­யாது. ஒரு துணிவு இல்­லாமல் எங்­க­ளுக்கு மீட்சி கிடை­யாது, அஷ் ஷெய்க் ஹஸனுல் பன்னா காலம் தொடக்கம் இன்­றைய காலம் வரை இவ்­வா­றான புரட்­சி­க­ர­மான கருத்­துக்­களை விதைத்த மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி போன்ற சிந்­த­னை­யா­ளர்கள், ஏன் அண்­மைக்­கா­லத்தில் எங்­களை விட்டுப் பிரிந்த கலா­நிதி யூசுப் அல் கர்­ளாவி போன்ற மேதை­க­ளு­டைய பெயர்­களை பேசு­வதும், அவர்­க­ளோடு சம்­பந்­தப்­பட்ட விட­யங்­களைப் பற்றி பகுப்­பாய்வு செய்­வதும் கூட பயங்­க­ர­வா­தத்­தோடு தொடர்­பு­பட்ட விட­ய­மாக சொல்­லப்­ப­டு­கின்ற ஒர் அபா­ய­க­ர­மான சூழல் அண்­மைய காலங்­களில் உரு­வாக்­கப்­பட்­டது. வேண்­டு­மென்றே ஆட்­சி­யா­ளர்கள் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு அப்­ப­டி­யா­னதோர் அச்ச சூழலை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்சிகளை மேற்கொண்ட பின்­ன­ணி­யில்தான் இன்று எங்­க­ளுக்கு மத்­தியில் ஓர் அசாத்­தி­ய­மான துணிச்­சலை வேண்­டு­மென்றே வர­வ­ழைத்துக் கொள்­ள­வேண்­டிய அவ­சி­யத்தில் நாங்கள் வாழ்­கிறோம்.

கடந்த வருடம் நிகழ்ந்த அந்த புரட்­சியின் உண்­மை­யான அடிப்­ப­டையே இந்த புரட்­டு­களை இல்­லாமல் செய்­ய­வேண்டும், ஒரு புதிய சமு­தா­யத்தை நாங்கள் வடி­வ­மைக்­க­வேண்டும் என்ற நோக்­கம்தான். ஆனால், அந்த நோக்­கத்­திற்கு முர­ணாக அதற்கு வெவ்­வே­றான வியாக்­கி­யா­னங்­களை இன்று தேவைப்­பட்­ட­வர்கள் வேறு­வி­த­மாகக் கொடுத்து வரு­கி­றார்கள்.

இப்­போது சட்ட மூலங்கள் உரு­வாக்­கப்­பட்­டுக்­கொண்டு வரு­கின்­றன. அவற்­றிற்கு இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­தினர் கூட கடு­மை­யான விமர்­ச­னத்தை முன்­வைக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்கள்.

1979 ஆம் ஆண்டில் இருந்து இன்­று­வரை, 6 மாதங்­க­ளுக்கு மாத்திரம் எனக் கொண்­டு­வந்த ஒரு தற்­கா­லி­க­மான பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை 40 வரு­டங்­க­ளுக்கு மேல் இன்னும் அர­சாங்கம் தக்­க­வைத்துக் கொண்­டி­ருப்­பது, தேசிய பாது­காப்­பிற்கு அவ­சியம் என்ற ஒரு போலி­யான கார­ணத்தைச் சொல்­லித்தான் என்­பதை இன்று பகி­ரங்­க­மாக பொது­வெ­ளியில் எல்­லோரும் கதைக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள். தேசியப் பாது­காப்­பிற்கு என்று கொண்­டு­வ­ரு­கின்ற சட்டம் இன்று சாதா­ரண பொது­மக்­களின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான ஒரு சட்­ட­மாக உரு­வா­கி­யி­ருக்­கி­றது என்­ப­துதான் உண்மை.

இந்த பின்­ன­ணி­யில்தான் இவ்­வா­றான விட­யங்­க­ளுக்கு எதி­ரான ஒரு மக்கள் எழுச்சி, மக்கள் திரட்சி உரு­வா­கி­யது காலத்தின் தேவை­யாகும்.

இந்த உள்­நாட்டுப் பிரச்­சி­னையை வெளி­நா­டு­க­ளுக்குச் சென்று அல்­லது வெளி­நாட்­டுத் தூது­வர்­க­ளிடம் சொல்­வதும் இந்த நாட்டின் இறை­யாண்­மைக்கு விரோ­த­மா­னது என்று கற்­பிக்­கின்ற நிலைமை தோன்­றி­யி­ருக்­கின்­றது. ஏனென்றால், இப்­போது பக்­கத்து நாடு­க­ளிலும் இது நடக்­கி­றது, வெளி­நா­டு­களில் போய் ஏதா­வது உள்­நாட்டுப் பிரச்­சி­னையை கதைத்தால் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையும் பறி­போ­கின்ற நிலை­வரம் ஏற்­ப­டு­கிற ஓர் அச்­ச­மான சூழலை உரு­வாக்கி வரு­கி­றார்கள்.

இந்தப் பின்­ன­ணியில் நாங்கள் துணிச்­ச­லோடு செயற்­பட வேண்டும்.ஏனென்றால், சிவில் சமூ­கத்தின் விழிப்­பு­ணர்ச்சி என்­பது சாமான்­ய­மா­ன­தல்ல. இன்று அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு மத்­தியில் விழிப்­பு­ணர்ச்­சியை எதிர்­பார்ப்­பது என்­பது கடினம், அவர்கள் எல்­லோரும் சிவில் சமூ­கத்­திற்கு இன்று பயந்­து ­போ­யி­ருக்­கி­றார்கள். சிவில் சமூ­கத்தைக் கொண்­டுதான் சில விட­யங்­களை சாதித்­துக்­கொள்­ள­வேண்டும் என்ற நிலை­வரம் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

போதாக்­கு­றைக்கு, சர்­வ­தேச நாணய நிதியம் இந்த நாட்­டுக்குக் கடன் கொடுத்து, அத­னூ­டாக இந்தப் பொரு­ளா­தார சிக்­க­லி­லி­ருந்து எங்­களை மீள விடு­வித்துக் கொண்­டு­ வ­ரு­கின்ற நிலையில், அதைப் பாழ­டித்­து­வி­டு­வோமோ என்­ப­தற்­காக இனி வீதிக்­கி­றங்கிப் போராட அச்­சப்­ப­டு­கிற ஒரு நிலையை மக்­க­ளுக்கு மத்­தியில் உரு­வா­க்­கு­வ­தற்கு முயற்­சிகள் நடக்­கின்­றன.

இவற்­றை­யெல்லாம் கார­ண­மாக வைத்து, இன்­னு­மின்னும் இந்த முழு நாட்­டை­யுமே ஒரு திறந்­த­வெளி சிறைச்­சா­லை­யாக மாற்­று­கிற ஒரு நிலை­மைக்கு புதிய சட்­ட­மூலம் வழி­வ­குக்­கப்­போ­கின்­றது என்­பதில் எந்­த­வி­த­மான மாற்றுக் கருத்தும் கிடை­யாது.

திறந்­த­வெளி சிறைச்­சா­லை­யாக மாற்­று­வது மட்­டு­மல்ல, அந்த திறந்­த­வெளி சிறைச்­சா­லையின் சாவியை நாட்டின் தலைவர் வைத்துக் கொண்டு, அவர் அந்த சாவியை கட­லுக்குள் வீசி­யெ­றிந்­து­விட்டு ஆட்­சியில் நீடிப்­ப­தற்­கான ஒரு நிலை­வ­ர­மாக அது மாறி­விடும்.

என­வேதான், இந்த விவ­காரம் சம்­பந்­த­மான ஒரு விழிப்­பு­ணர்ச்சி என்­பது முக்­கி­ய­மா­னது.
உதா­ர­ணத்­திற்கு ஒரு விட­யத்தை சொல்­கிறேன். இந்த “நீதி” யின் அநீ­தியை அனு­ப­வித்­த­வர்கள் இங்கு இருக்­கி­றீர்கள், இந்த நாட்டில் யாரையும் பயங்­க­ர­வாதி என்று குற்­றம்­சாட்­டி­விட்டு, இந்த சட்­டத்தின் கீழ் நீதி­மன்­றத்தின் மேற்­பார்வை இல்­லாமல் நீண்ட காலத்­திற்கு தடுத்­து­ வைப்­பது என்ற முயற்சி புதிய சட்­டத்தில் இன்­னு­மொரு கட்டம் மேலே போயி­ருக்­கி­றது. எந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வேண்­டு­மென்­றாலும் ஒரு தடை உத்­த­ரவில் கையெ­ழுத்­திட்டால் ஒரு வரு­டத்­திற்கு தடுப்புக் காவலில் வைக்­கலாம், எந்த நீதி­மன்­றமும் அதில் தலை­யிட முடி­யாது, அந்த ஒரு வருடம் முடிந்த பிறகு இன்­னு­மொரு வரு­டமும் நீதி­மன்­றத்தின் கீழாக ஒரு Judicial Custody இல் தடுத்து வைக்­கலாம். ஒப்­பீட்டு ரீதி­யாக நாம் இப்­போது இணை­யத்தில் செட் ஜீபீடி (ChatGPT) என்ற ஒன்­றிற்குக் போய் சரி­யான கேள்­வியை சரி­யாக போட்டால் அது விடையைத் தரும். அது Artificial Intelligence இல் எங்கள் எல்­லோ­ருக்கும் இருக்­கின்ற ஒரு பெரி­ய­தொரு வாய்ப்­பாகும்.

மற்ற நாடு­களில் இத்­த­கைய பயங்­க­ர­வாதச் சட்­டத்­திற்கு கீழ் நீதி­மன்­றத்தின் மேற்­பார்வை இல்­லாமல் தடுப்­புக்­கா­வலில் வைப்­ப­தற்கு என்ன ஏற்­பாடு இருக்­கி­றது என்று செட் ஜீபீடியில் ஒரு கேள்­வியை போட்டுப் பார்த்தேன்.

அமெ­ரிக்­காவில் Patriot சட்டம் என்று ஒன்­றி­ருக்­கி­றது. அது பயங்­க­ர­வாத தடுப்­புக்­காக கொண்­டு­வ­ரப்­பட்ட விசே­ட­மான சட்டம். அதன் கீழ் 6 நாட்­க­ளுக்கு மேலே நீதி­மன்­றத்தின் மேற்­பார்வை இல்­லாமல் யாரையும் தடுப்­புக்­கா­வலில் வைக்க இய­லாது.

பிரான்ஸில் அதே­மா­திரி 7 நாட்கள் என்று நினைக்­கிறேன், அதுவும் ஒரு அவ­சர கால சட்­டத்தின் கீழ் கொண்­டு ­வந்­ததை இப்­போ­துதான் சட்­டத்­திற்குள் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்கள்.

இங்­கி­லாந்தில், பிரிட்­டனில் 28 நாட்கள் என்று போட்­டி­ருக்­கி­றார்கள், 28 நாட்கள் தடுத்து வைத்­தி­ருக்­கலாம் ஆனால், தேவைப்­பட்டால் இன்­னு­மொரு 14 நாள் நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் அதனை நீடிக்­கலாம். ஆகக்­கூ­டினால் ஒன்று அல்­லது ஒன்­றரை மாதங்­கள்தான். அதுதான் ஆகக்­கூ­டியதென எனக்கு செட் ஜீபிடி தந்த விடை.

அடிக்­கடி பயங்­க­ர­வாதத் தாக்­கு­த­லுக்­குள்­ளா­கின்ற நாடு என்று சொல்­லப்­ப­டு­கிற துருக்­கியிலேயே 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மேல் ஒருவரை தடுப்பில் வைத்­தி­ருக்க இய­லாது. அதுதான் சட்டம். தேவைப்­பட்டால் இன்­னு­மொரு 24 மணித்­தி­யாலம் நீதி­மன்ற அனு­ம­தி­யோடு வைத்­தி­ருப்­ப­தற்கு, ஆதா­ரங்­களைக் காட்டி பெற்றுக் கொள்­ள­வேண்டும்.

இந்த நாடு­க­ளி­லில்­லாத விட­யத்தை எங்கள் நாட்டில் இப்­படிக் கொண்­டு­வந்து போடு­வதன் விளைவை நாங்கள் ஏற்­க­னவே நிறைய அனு­ப­வித்­து­விட்டோம். அது­மட்­டு­மல்ல, ஐசீசீபிஆர் சட்­டத்­தி­லி­ருக்­கின்ற வெறுப்­பூட்­டத்­தக்க பேச்­சுக்­களை பேசு­கின்­ற­வர்­களின் விட­யத்தில், உண்­மை­யா­கவே வெறுப்­பூட்­டத்­தக்க பேச்­சுக்­களைப் பேசி இனங்­க­ளுக்­கி­டையில் முறு­கல்­களை ஏற்­ப­டுத்­து­கிற எத்­த­னையோ பேரை இது கவ­னத்தில் எடுக்­க­வில்லை. ஆனால், எங்­களில் நிறையப் பேர் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

அஹ்னாப் ஜெஸீம் என்ற இளம் கவிஞர், ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ், அஸாத் சாலி, றிசாட் பதி­யுத்தீன், டாக்டர் ஷாபி சிஹாப்தீன் என்று பட்­டியல் நீண்டு கொண்டே போகி­றது. அவர்­க­ளுக்கு இந்த சட்­டத்­தைத்தான் பயன்­ப­டுத்­தி­னார்கள். இப்­போது அதனை புதிய பயங்­க­ர­வாத சட்­டத்­திற்குள் கொண்­டு­வந்து போட்­டி­ருக்­கி­றார்கள்.மிக மோச­மாக துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­கின்ற ஒரு சட்ட ஏற்­பா­டாக அது மாறி­விட்­டது. உண்­மை­யான தேவைக்கு பயன்­ப­டுத்­து­வ­தற்கு அல்­லாது, அர­சாங்­கத்­திற்கு தேவை­யா­ன­வர்­களை தடுப்புக் காவலில் வைப்­ப­தற்­கா­கவும், வேறு கார­ணங்­க­ளுக்­காக பழி­வாங்கும் நோக்­கிலும் அவ்­வாறு செய்­யப்­ப­டு­கி­றது.

நான் இங்கு குறிப்­பிட்ட வழக்­கு­களில் நீதி­மன்­றத்­தி­னூ­டாக சிலர் பிணையில் இருக்­கி­றார்கள்; சிலர் விடு­த­லை­யா­கி­யி­ருக்­கி­றார்கள், அவ்­வா­றான அநீ­தி­களை நீதி­மன்­றங்­களே கடு­மை­யாக விமர்­சித்­தி­ருக்­கின்­றன.

அண்­மையில் இன்­னு­மொரு முயற்சி நடந்­தது. Bureau of Rehabilitation என்று இன்­னு­மொரு சட்­டத்தைக் கொண்டு வந்­தார்கள். ஏனென்றால், எங்­க­ளுக்­கி­ருக்­கின்ற ஒரே ஒரு அடைக்­கலம் எங்­க­ளு­டைய நீதிமன்­றங்­கள்தான். நீதிமன்­றத்தில் போய் அதை சவா­லுக்கு உட்­ப­டுத்­தி­ய­தனால் நீதிமன்றம் அந்த முழு சட்­ட­மூ­லத்­தை­யுமே தூக்கி எறிந்­தது. அது முழு­மை­யாக மனித உரிமை விழு­மி­யங்­களை மீறு­கின்ற ஒரு சட்­ட­மூ­ல­மாகும்.

ஏனென்றால், இவர்கள் இவ்­வ­ளவு காலமும் தடுப்­புக்­கா­வலில் வைத்­தி­ருந்த நூற்­றுக்­க­ணக்­கான இளை­ஞர்­களை அவ்­வாறு செய்­த­தற்கு காரணம் சொல்­ல­ வ­ழி­யில்லை. எனவே, அவர்­க­ளை­ ஒரு கட்­டாயத் தடுப்­புக்­கா­வலில் புனர்­வாழ்வு முகா­மொன்­றுக்­குள் தள்­ளி­வி­ட­வேண்டும் என்­ப­துதான் நோக்கம்.

அதை நீதி­மன்றம் தூக்­கி­யெ­றிந்­து­விட்­டது. ஏனென்றால், முழு­மை­யாக சர்­வ­தேச மனித உரிமை நிய­தி­க­ளுக்கு முர­ணா­னது மாத்­தி­ர­மல்ல எங்­க­ளு­டைய அர­சியல் அமைப்பின் சட்ட ஏற்­பா­டு­க­ளுக்கும் முர­ணா­னது என்று நீதிமன்றம் மிகத் துணிச்­ச­லான ஒரு தீர்ப்பைக் கொடுத்­தது. அதற்குப் பிறகு வேறு வழி­யில்­லாமல் தனி­யாக போதைப் பொருள்­க­ளுக்கு அடி­மை­யா­ன­வர்­க­ளுக்கு மாத்­திரம் அதை மட்­டுப்­ப­டுத்தி, சட்­ட­மூ­லத்தைக் கொண்­டு­வந்து ஒரு மாதிரி நிறை­வேற்­றி­னார்கள்.

ஏனென்றால் சட்­ட­மூ­லத்தை கொண்­டு­வந்து வேறு வழி­யில்­லாமல் அதற்­கா­வது அதை மட்­டுப்­ப­டுத்தி வைத்­தி­ருக்கக் கூடும். அதே நிலை­மையில் பீரோ ஒப் ரீஹெ­பி­லி­டேஷன் என்ற விட­யத்தைக் கொண்­டு­வந்து இன்னும் காரணா, காரி­யங்­களில் சம்­பந்­த­மில்­லாமல் ஏதோ சிறிய சிறிய விட­யங்­க­ளுக்­காக ஏதா­வது ஒரு வகுப்பில் ஒன்றும் தெரி­யாமல் போய் உட்­கார்ந்து இருந்த இளை­ஞர்கள் நிறையப் பேரை புனர்வாழ்வுக்கு அனுப்பும் திட்டம் வரலாம்.

சட்­டமா அதிபர் விரும்­பினால், அவர் தடுப்­புக்­கா­வலில் இருப்­ப­வ­ருக்கு ஒரு தெரிவைக் கொடுக்­கலாம். இந்த தெரிவு ஒன்­று­மல்ல. “நீங்கள் இந்த தெரிவை எடுக்காதுவிட்டால் நாங்கள் வழக்குத் தொடுப்போம். வருடக் கணக்கில் வழக்குப் பேச நேரும்.உங்களுக்கு பிணையுமில்லாமல் நீடிக்கவரும்” என்று அச்சுறுத்துகின்ற பாணியில் கதைத்தால், பிறகு வேறு வழியில்லாமல் அதையாவது ஏற்றுக்கொண்டு 2 வருடம் “உள்ளே” இருந்துவிட்டு வருவோம் என்கின்ற ஒரு அச்ச உணர்வு அப்பாவிகளுக்கு உருவாகலாம்.
என்னைப் பொறுத்தமட்டில் இந்த நாட்டில் பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவந்து பயங்கரவாதம் ஒழிந்ததாக எதுவும் இல்லை. உண்மையிலேயே நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்குகின்ற சட்டமூலமாக அது மாறுகின்ற ஒரு நிலைவரம்தான் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, இது ஒன்றுமே தேவையில்லை. இருக்கின்ற தண்டனைச் சட்டக்கோவையில் அதற்கான குற்றங்களை ஒழுங்காக வகைப்படுத்திக் கொண்டுவந்தால் மாத்திரம் போதும் என்ற நிலைமைக்கு இன்று நாட்டில் இருக்கின்ற பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவார்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது ஆட்சியாளர்களை பாதுகாப்பதற்கான ஒரு கவசமாக மாத்திரம், வெறும் “தேசியப் பாதுகாப்பு” என்ற போர்வையில் கொண்டுவரப்படுகின்ற மிக மோசமான காரியம் என்பதால் அதற்கெதிராகப் பேசவேண்டிய நிலைமையில், துணிவோடு இதை சொல்லவேண்டிய ஒரு காலகட்டத்தில் நாங்கள் வாழ்கின்றோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.