புனித ரமழானில் உயிரைப் பலியெடுத்த பள்ளிவாசல் முரண்பாடு

0 306

ஏ.ஆர்.ஏ.பரீல்

முஸ்­லிம்கள் நாடெங்கும் புனித ரமழான் மாதத்தின் அருளை அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருந்த நிலையில் கிழக்கில், சம்­மாந்­து­றையில் ஒரு துய­ர­மான நிகழ்வு அரங்­கே­றி­யி­ருக்­கி­றது.

சம்­மாந்­துறை செந்நெல் கிராமசேவை பிரிவிலுள்ள முனீர் பள்ளிவாசல் வளா­கத்­தினுள் பதி­வா­கி­யுள்ள இச்­சம்­ப­வத்­தினால் சம்­மாந்­துறை பிர­தேசம் துயரில் ஆழ்ந்­துள்­ளது.
கடந்த 7 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை அஸர் தொழு­கையின் பின்பு இரு குழுக்­க­ளுக்­கி­டையில் இடம் பெற்ற கைக­லப்பில் 65 வய­தான மஹ்ரூப் வபாத்­தா­கி­யுள்ளார்.

இது ஒரு கொலையா? கைமோ­சக்­கொ­லையா? அல்­லது கைக­லப்பின் போது வய­தான மஹ்ரூப் கீழே விழுந்து வபாத்­தா­னாரா? என்­பதை பிரேத பரி­சோ­தனை அறிக்கை, சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்கை, பொலி­ஸாரின் விசா­ரணை அறிக்கை மற்றும் சி.சி.ரி.வி பதி­வுகள் என்­ப­னவே தீர்­மா­னிக்­க­வேண்டும். அத்­தோ­டு­ நேரில் கண்ட சாட்­சி­களின் வாக்கு மூலங்­களும் இத­னைத்­ தீர்­மா­னிப்­ப­தற்கு உறு­து­ணை­யாக இருக்கும்.
இந்­தக்­கட்­டுரை எழு­திக்­கொண்­டி­ருக்­கும்­வரை பிரேத பரி­சோ­தனை அறிக்கை வெளியிடப்படவில்லை. சம்­மாந்­துறை பொலிஸார் தொடர்ந்தும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இச்­சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து பொலிஸார் சந்­தே­கத்தின் பேரில் வபாத்­தா­ன­வரின் சகோ­தரர் ஒரு­வ­ரையும் அவ­ரது மூன்று மக­ன்மாரையும் கைது செய்துள்ளனர்.

தாக்­கப்­பட்டு கால­மானார் எனக் கூறப்­படும் நபர் ஒரு இரு­தய நோயாளி என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்த துன்­ப­க­ர­மான சம்­பவம் தொடர்பில் நாம் சம்­மாந்­துறை பெரிய பள்­ளி­வாசல் நம்­பிக்கை பொறுப்­பாளர் சபையின் நிர்­வாக செய­லாளர் ஏ.எல்.நாசரை தொடர்பு கொண்டு வின­வினோம்.அவர் சம்­பவம் நடை­பெற்­ற­தற்­கான பின்­ன­ணியை விளக்­கினார்.

‘சம்மாந்துறை பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தின் கீழ் 52 சிறிய பள்­ளி­வா­சல்கள் இயங்கி வரு­கின்­றன. கொவிட் 19 நோய்த் தொற்று காலத்தில் ஜும்ஆ தொழு­கையில் நெரிசல் நிலை­மை­யினைத் தவிர்ப்­ப­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஜும்ஆ பள்­ளி­வா­சல்கள் அல்­லாத ஏனைய பள்­ளி­வா­சல்­க­ளிலும் ஜும்ஆ தொழுகை நடத்­தலாம் என அறி­வித்­தி­ருந்­தது. அதன் அடிப்­ப­டையில் 52 பள்­ளி­வா­சல்­க­ளிலும் ஜும்ஆ தொழுகை நடத்­தப்­பட்­டது. கொவிட் கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­த­தன்­பின்பு திணைக்­களம் ஜும்ஆ பள்­ளி­வா­சல்கள் தவிர்ந்த ஏனைய பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆ தொழுகை நடாத்த முடி­யாது என அறி­வித்­தது. இதன்­படி 52 பள்­ளி­வா­சல்­களில் 51 பள்­ளி­வா­சல்கள் ஜும்ஆ தொழு­கையை நிறுத்­திக்­கொண்­டன.

ஆனால் முனீர் பள்­ளி­வாசல் மாத்­திரம் ஜும்ஆ தொழு­கையை நிறுத்­த­வில்லை. உலமா சபை, மஜ்­லிஸில் சூரா என்­ப­வற்றின் கோரிக்­கை­யையும் முனீர் பள்ளி நிர்­வாகம் ஏற்­றுக்­கொள்ள வில்லை. ஜும்ஆ நடத்­து­வ­தென்றால் எழுத்து மூலம் கடிதம் ஒன்று தாருங்கள். திணைக்­க­ளத்தின் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றோம். அதற்கும் நிர்­வாகம் உடன்­ப­ட­வில்லை. பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.

இத­னை­ய­டுத்து சம்­மாந்­துறை பெரிய பள்­ளி­வாசல் மூலம் முனீர் ­பள்­ளி­வா­ச­லுக்கு வழங்­கப்­பட்டு வந்த கொடுப்­ப­னவு மற்றும் நிதி­யு­தவி நிறுத்­தப்­பட்­டது.தொடர்ந்தும் இந்­தத்­தடை அமு­லி­லி­ருந்து வரு­கி­றது.

இந்­நி­லையில் மூனீர் பள்­ளி­வாசல் ஜமாஅத்­தார்கள் பள்­ளி­வா­ச­லுக்கு புதிய நிர்­வாகத் தெரிவு நடாத்­தப்­பட வேண்­டு­மென சம்­மாந்­துறை பெரிய பள்­ளி­வாசல் பரி­பா­லன சபை­யிடம் கோரிக்கை விடுத்­தார்கள். முனீர் பள்­ளி­வா­ச­லுக்கு புதிய நிர்­வாக சபை­யொன்று தெரிவு செய்­யப்­பட்­டாலே 52 பள்­ளி­வா­ச­லுக்­கு­மான தலைமை பரி­பா­லன சபையின் நிர்­வா­கத் ­தெ­ரி­வையும் நடத்த முடியும் என்­பதால் சம்­மாந்­துறை பள்­ளி­வா­சலும் கோரிக்­கைக்கு உடன்­பட்­டது.

இது தொடர்­பான கலந்­து­ரை­யா­டலே கடந்த வெள்­ளிக்­கி­ழமை சம்­பவம் நடந்த தின­மன்று முனீர் ­பள்­ளி­வா­சலில் இடம் பெற்­றது. கலந்­து­ரை­யா­டலில் முனீர் பள்­ளி­வா­ச­லுக்­கான நிர்­வாக சபை தெரிவை ஞாயிற்­றுக்­கி­ழமை (9) நடாத்­து­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இந்­தக் ­க­லந்­து­ரை­யாடல் இடம்பெற்­று­ தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு வெளி­யே­றியபோதே பள்­ளி ­வ­ளா­கத்­தினுள் குறிப்­பிட்ட கைக­லப்பு இடம்­பெற்­றுள்­ளது.
நிர்­வாகத் தெரிவு இடம்­பெ­றக்­கூ­டாது என்று ஒரு சாராரும் இரு பிரி­வாக பிரிந்து கைக­லப்பில் ஈடு­பட்­டுள்­ளனர். தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதன்­போதே மஹ்ரூப் என்ற 65 வய­தான நபர் கால­மா­கி­யுள்ளார். இச்­சம்­ப­வத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ளவர் கால­மா­ன­வரின் சகோ­த­ரரும் மற்றும் மூவரு­மாகும். சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள நபர் முனீர் பள்­ளி­வா­சலின் தலைவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அத்­தோடு இப்­பள்­ளி­வா­சலின் தலைவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அத்­தோடு இப்­பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபையின் பத­விக்­காலம் ஏற்­க­னவே காலா­வ­தி­யா­கி­யுள்­ள­மை­யும் குறிப்­பி­டத்­தக்­கது.

திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் பைசல்
‘சம்­மாந்­துறை முனீர் பள்­ளி­வாசல் சம்­ப­வத்தில் ஒருவர் வபாத்­தா­கி­யி­ருப்­பது கவ­லைக்­குரி­ய­தாகும். இவ்­வி­வ­காரம் தொடர்பில் திணைக்­க­ளத்தின் சம்­மாந்­துறை பிர­தே­சத்­துக்­கான கள உத்­தி­யோ­கத்தர் மூலம் தக­வல்கள் எமக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் இது­வரை பள்­ளி­வா­ச­லி­லி­ருந்து எந்­தக்­குற்­றச்­சாட்டும், முறைப்­பா­டு­களும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் தெரி­வித்தார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில், இச்­சம்­பவம் தொடர்­பி­லான பொலிஸ் அறிக்கை, மரண பரி­சோ­தனை அறிக்கை, வைத்­திய அறிக்கை என்­பன கிடைக்­கப்­பெற்­றதன் பின்பு புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்­சரின் ஆலோ­ச­னையின் பேரில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களில் பத­வியில் இருப்­ப­வர்கள் இவ்­வா­றான தாக்­குதல் சம்­ப­
வங்­களில் ஈடு­ப­டு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுக்கு தகு­தி­யான, படித்த கெள­ர­வ­மா­ன­வர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்றார்.

வக்பு சபையின் தலைவர்
இதே­வேளை சம்­மாந்­துறை முனீர் பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற கூட்டம் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற கூட்­ட­மாகும். புதிய நிர்­வாக சபை தெரிவு தொடர்­பாக எவ்­வித கூட்­டமும் கூட்ட முடி­யாது. இது தொடர்பில் ஏற்­ப­னவே பள்­ளி­வா­ச­லுக்கு திணைக்­க­ளத்­தினால் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது என வக்பு சபையின் தலைவர் மொஹிதீன் ஹுசைன் தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில் ‘உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் ஏற்­பா­டுகள் நடை­பெற்­று­வரும் நிலையில் பள்­ளி­வா­சல்­களில் புதிய நிர்­வாகத் தெரி­வுகள் நடாத்த முடி­யாது என தேர்­தல்கள் ஆணைக்­குழு ஏற்­க­னவே அறி­வித்­துள்­ளது.

சம்­மாந்­துறை செந்நெல் கிராம முனீர் பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற சம்­பவம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் வக்பு சபையும் ஆராய்ந்து உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்ளும் என்றார்.

பள்ளிவாசல் பரிபாலன சபை
செயலாளர்
சம்­ப­வத்தில் உயிர்­து­றந்த மஹ்­ரூப்பும், சந்­தே­கத்தின் பேரில் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ள நால்வரில் ஒருவரும் ஒரு­தாய்­ பிள்­ளைகள், ஒன்று விட்ட சகோ­த­ரர்கள் என சம்­மாந்­துறை பள்­ளி­வாசல் பரி­பா­லன சபையின் செய­லாளர் எம்.ஐ.எம்.இஸ்ஸாக் தெரி­வித்தார்.

இச்­சம்­பவம் தொடர்பில் அவர் மேலும் விடி­வெள்­ளிக்குத் தெரி­விக்­கையில் ‘ உயிர் துறந்­த­வரும், சந்­தேக நபரும் இரு­தய நோயா­ளிகள் எனக் கூறப்­ப­டு­கி­றது. பலி­யா­னவர் 4 இரு­தய அடைப்­புகள் கொண்­டி­ருந்­தா­கவும் நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்­த­வ­ரா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத்­தோடு இரு குடும்­பங்­க­ளுக்கும் கடந்த 10 வருட கால­மாக தனிப்­பட்ட பிரச்­சி­னை­யொன்று இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது என்றும் கூறினார்.

சட்டம் கடுமை­யாக்கப்பட ­வேண்டும்
பள்­ளி­வா­சல்­களின் நிர்­வாக சபை தெரி­வுக்­கான விதி­மு­றைகள் தொடர்பில் வக்பு சட்டம் திருத்­தங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட வேண்டும். நிர்­வா­கி­க­ளாக புத்திஜீவி­களும், சமூக ஆர்­வ­லர்­களும், மார்க்­கத்தை சரி­யாக பேணு­ப­வர்­க­ளுமே நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். பண­பலம், அர­சி­யல்­பலம் கொண்­ட­வர்கள் நிரா­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும். இது ஒவ்வொரு பிர­தேச ஜமா அத்­தார்­களின் பொறுப்­பாகும்.

உழ்­ஹிய்யா பகிர்வில் பரி­தா­ப­க­ர­மான ஒருவர் அதுவும் நிர்வாகிகளில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வடு மறைவதற்கு முன்பு பள்ளிவாசல் வளாகத்தில் மீண்டும் ஓர் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் புனிதம், பொறுமை, சாந்தி, சமாதானம் பேண வேண்டிய ரமழான் மாதத்தில் ஓர் உயிர் காவுகொள்ளப்பட்டது. இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.

ஜும்ஆ தொழுகை விடயத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை 52 பள்ளிவாசல்களில் 51 பள்ளிவாசல்கள் பின்பற்றியுள்ளன. ஆனால் ஒரேயொரு பள்ளிவாசல் மாத்திரம் அறிவுறுத்தல்களை மதியாது தன்னிச்சையாக செயற்பட்டு வந்துள்ளது. அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும், வக்­பு­ச­பையும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள், வக்பு சொத்­துகள் தொடர்பில் இறுக்­க­மான விதி­மு­றை­களைப் பேண­வேண்டும் இத­னையே நாமும் வலி­யு­றுத்­து­கின்றோம்.

ஜனாஸா நல்லடக்கம்
மூனீர் பள்ளிவாசல் கைகலப்பில் பலியான மஹ்ரூபினது ஜனாஸா நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில் செந்நெல் கிராம முனீர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பலியானவரின் சகோதரரும் மற்றும் மூவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.