உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய அறிக்கை தயார்

உறுப்பினர் தொகை 4714 ஆக குறைப்பு

0 202

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பினர் தொகை­யினை அரை­வா­சி­யாகக் குறைக்கும் நோக்கில் நிய­மிக்­கப்­பட்ட எல்லை நிர்­ணய குழுவின் அறிக்கை தயார் நிலையில் உள்­ளது. இவ்­வ­றிக்கை விரைவில் பிர­த­மரும் பொது நிர்­வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்­த­ன­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தற்­போ­தைய உறுப்­பினர் தொகை சுமார் 8500 இலிருந்து 4714 ஆக குறைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு எண்­ணிக்­கையை குறைக்கும் வகை­யிலே எல்லை நிர்­ணயம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இந்த உறுப்­பினர் தொகையில் தேர்­தல்கள் ஆணைக்­குழு மாற்­றங்­களை செய்ய முடியும் என எல்லை நிர்­ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

எல்லை நிர்­ணய அறிக்­கையைக் கைய­ளிப்­ப­தற்கு திக­தி­யொன்­றினை ஒதுக்கித் தரு­மாறு தான் பிர­த­ம­ரிடம் கோரிக்கை விடுத்­துள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

இதே­வேளை 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் 340 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்­லைகள் மீள் நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் கல்­முனை மாந­கர சபை தொடர்­பான வழக்­கொன்று நீதி­மன்றில் விசா­ர­ணையின் கீழ் உள்­ள­தா­கவும் அச்­ ச­பைக்­கான எல்லை நிர்­ணயம் கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும் எல்லை நிர்­ணய குழுவின் உறுப்­பினர் கே.தவ­லிங்கம் தெரி­வித்தார்.

ஒன்­பது மாகா­ணங்­களைச் சேர்ந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ணய அறிக்கை தனித்­த­னி­யாக மாகாண ரீதியில் சிங்­களம், தமிழ், ஆங்­கிலம் ஆகிய மூன்று மொழி­க­ளிலும் மொத்தம் 27 அறிக்­கைகள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

நில அளவைத் திணைக்­கத்தின் ஒத்­து­ழைப்­புடன் தேவை­யான நில அளவை வரை­ப­டங்கள் அறிக்­கை­க­ளுடன் இணைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். குறிப்­பிட்ட அறிக்­கைகள் வரை­ப­டங்கள் தவிர்த்து அர­சாங்க வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­படும் என­வும்­ அவர் விளக்­கினார்.

எல்லை நிர்­ணய குழுவின் அறிக்கை தொடர்பில் முறைப்­பா­டுகள் முன்வைக்கப்பட்டால் மீளாய்வுக் குழுவொன்றினை நியமித்து அது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அதிகாரமுண்டு என்றும் தெரிவித்தார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.