வடக்கு கிழக்கை அச்சுறுத்தும் சிங்களமயமாக்கல்

0 273

வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகு­தி­களில் சிங்­க­ள­மா­ய­மாக்கல் செயற்­பா­டுகள் தீவி­ர­ம­டைந்து வரு­வதை அண்மைக் கால சம்­ப­வங்கள் உணர்த்தி நிற்­கின்­றன. சிறு­பான்மை மக்­களின் பூர்­வீக நிலங்­களில் புத்தர் சிலை­களை வைப்­பதும் தொல்­பொருள் பாது­காப்பு வலயம் என்ற பெயரில் காணிகள் அப­க­ரிக்­கப்­ப­டு­வதும் தொடர் கதை­யா­கி­யுள்­ளது. இதில் ஒரு படி மேல் சென்று பௌத்த பிக்­குகள் அரச பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுடன் வந்து துப்­பாக்­கியைக் காட்டி மக்­களை மிரட்­டு­கின்ற அள­வுக்கு நிலை­மைகள் மோச­ம­டைந்­துள்­ளன.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் புல்­மோட்டை பொன்­ம­லைக்­குடா பிர­தே­சத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களில் புத்தர் சிலை­களை வைப்­ப­தற்கு பௌத்த பிக்கு தலை­மை­யி­லான குழு­வினர் மேற்­கொண்ட முயற்சி அப் பகு­தியில் பலத்த சல­ச­லப்பைத் தோற்­று­வித்­துள்­ளது. சிறு­பான்மை மக்­களின் நிலத்தில் அத்­து­மீறிப் பிர­வே­சித்­தது மாத்­தி­ர­மன்றி, அதற்கு எதிர்ப்புத் தெரி­வித்த காணி உரி­மை­யா­ளர்­களை துப்­பாக்­கி­களைக் காட்டி அச்­சு­றுத்தும் வகையில் அமைச்­சர்­க­ளுக்­கான பாது­காப்பு பிரிவின் அதி­கா­ரிகள் நடந்து கொண்­டமை மிகுந்த விச­னத்தைத் தோற்­று­வித்­துள்­ளது.

பௌத்த பிக்­கு­க­ளுக்கு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள பாது­காப்பு வழங்­கு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்­தது யார்? அல்­லது குறித்த பாது­காப்பு அதி­கா­ரிகள் எந்த அமைச்­ச­ருக்­கான பாது­காப்பு பிரிவில் கட­மை­யாற்­று­கின்­றனர்? என்ற கேள்­வி­க­ளுக்கு இது­வரை விடை கிடைக்­க­வில்லை. இது தொடர்பில் சிறு­பான்மை பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்றில் கேள்­வி­யெ­ழுப்­பிய போதும் மத, கலா­சார விவ­கார அமைச்சர் உரிய பதிலை அளிக்­க­வு­மில்லை.
திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் இவ்­வா­றான சிங்­க­ள­ம­ய­மாக்கல் வேலைத்­திட்­டங்கள் கடந்த சில வரு­டங்­க­ளாக அதி­க­ரித்தே வரு­கின்­றன. எனினும் இவற்றை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான எந்­த­வித காத்­தி­ர­மான வேலைத்­திட்­டங்­களும் அர­சாங்க தரப்­பி­லி­ருந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்லை.

அதே­போன்­றுதான் வவு­னியா மாவட்­டத்தில் அமைந்­துள்ள வெடுக்­கு­நாறி மலை ஆதி­லிங்­கேஸ்­வரர் ஆல­யத்தை அழிப்­ப­தற்­கான முயற்­சி­களும் இன­வாத சக்­தி­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளமை பலத்த கண்­ட­னத்தை தோற்­று­வித்­துள்­ளது. அங்­கி­ருந்த விக்­கி­ர­கங்கள் அகற்­றப்­பட்டு பற்­றை­க­ளுக்குள் வீசப்­பட்­டுள்­ள­துடன் ஆலய வளா­கமும் முற்­றாக அழிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்டும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் நடாத்­தப்­பட்டும் குற்­ற­வா­ளிகள் எவரும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

அதே­போன்­றுதான், ஏறாவூர் நக­ருக்­குட்­பட்ட புன்­னைக்­குடா வீதியின் பெயரை ‘எல்மிஸ் வெல்­கம’ எனும் சிங்­கள பெய­ருக்கு மாற்­று­வ­தற்கு கிழக்கு மாகாண ஆளுநர் நட­வ­டிக்கை எடுத்­துள்ள விவ­கா­ரமும் தற்­போது பேசு பொரு­ளா­கி­யுள்­ளது. காலா­கா­ல­மாக 99 வீதம் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வரும் இப் பகு­தியில் உள்ள வீதிக்கு தென்­மா­கா­ணத்தைச் சேர்ந்த சிங்­க­ளவர் ஒரு­வ­ரது பெயரைச் சூட்­டு­வ­தற்கு ஆளுநர் முனை­வ­தா­னது திட்­ட­மிட்ட சிங்­க­ள­மா­ய­மாக்கல் நட­வ­டிக்கை என அப் பகுதி மக்கள் பலத்த கண்­டனம் தெரி­வித்­துள்­ளனர். இது தொடர்பில் அப் பகுதி சிவில் அமைப்­புகள், பள்­ளி­வா­சல்கள் என்­பன தமது எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ளன.

இவ்­வாறு நாட்டில் தொடர்ச்­சி­யான இனங்­க­ளுக்­கி­டையே, மதங்­க­ளுக்­கி­டையே முறு­கல்­களைத் தோற்­று­விக்கும் வகை­யி­லான செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்ற போதிலும் அவற்றைத் தடுத்து நிறுத்­து­வ­தற்­கான எந்­த­வொரு வேலைத்­திட்­டங்­களும் அரச தரப்பில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. தொல்­பொருள் என்ற போர்­வையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்­களின் பூர்­வீக காணி­களை அப­க­ரிப்­ப­தற்­கான மறை­முக வேலைத்­திட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது என்­ப­தையும் இதற்கு அர­சாங்­கத்தின் பூரண ஆசீர்­வாதம் இருக்­கி­றது என்­ப­தையும் மட்டும் தெளி­வாக உணர முடி­கி­றது.

ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தான் தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்வை வழங்­குவேன் என அடிக்­கடி வலி­யு­றுத்தி வரு­கின்ற போதிலும் அதனை செயலில் காட்­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. குறிப்­பாக திட்­ட­மிட்ட சிங்­க­ள­ம­ய­மாக்கல் தொடர்பில் அவர் தொடர்ச்­சி­யாக மௌனம் காத்து வரு­கின்­றமை சந்­தே­கத்தை தோற்­று­விக்­கி­றது. இந்த வருட இறு­தியில் தேர்தல் ஒன்று இடம்­பெ­றலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலையில் இன­வா­தத்தை கிளப்பி அதன் மூலம் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்கின்ற கேவலமான அரசியலையா ரணில் விக்ரமசிங்கவும் அவர் சார்ந்தவர்களும் முன்னெடுக்கின்றனர் என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. தான் ஒரு கனவான் அரசியல்வாதி என்பதை நிரூபிக்க வேண்டுமாயின், ஜனாதிபதி உடனடியாக இவ்வாறான சிங்களமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும். இது தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். அதன் மூலமே வடக்கு கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முடியுமாகவிருக்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.