பெண் சட்டத்தரணிகளின் புதிய ஆடை ஒழுங்கு அபாயா அணிய முடியாத நிலை

முஸ்லிம்கள் அதிருப்தி;மறு பரிசீலனை செய்யுமாறு நீதியமைச்சர், பிரதம நீதியரசர், சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரிக்கை

0 216

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
பெண் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்­கான நீதி­மன்ற ஆடையில் மாற்றம் ஏற்­ப­டுத்தி வெளி­யி­டப்­பட்­டுள்ள புதிய வர்த்­த­மானி அறி­வித்­த­லை­ய­டுத்து முஸ்லிம் பெண் சட்­டத்­த­ர­ணிகள் அபாயா அணிந்து நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களில் கலந்து கொள்ள முடி­யா­மற்­போ­யுள்­ள­தென முஸ்லிம் சமூகம் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளது.

கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டுள்ள 2325/ 44 ஆம் இலக்க வர்த்­த­மானி அறி­வித்­தலில் பெண்­ சட்­டத்­த­ர­ணி­களின் நீதி­மன்ற ஆடை தொடர்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்­தப்­பு­திய வர்த்­த­மானி அறி­வித்­தலின் படியே முஸ்லிம் பெண் சட்­டத்­த­ர­ணிகள் அபாயா அணிந்து நீதி­மன்ற கட­மை­க­ளுக்கு செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

பெண் சட்­டத்­த­ர­ணி­களின் ஆடை தொடர்பில் 2018 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்­டி­ருந்த வர்த்­த­மானி அறி­வித்­த­லின்­படி பெண் ­சட்­டத்­த­ர­ணிகள் கறுப்­பு­நிற GOWN/ CLOAK அணி­யலாம் எனக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு முஸ்லிம் பெண் சட்­டத்­த­ர­ணிகள் நீள­மான கவுன் என்ற வகையில் அபாயா அணிந்து நீதி­மன்­றுக்குச் சென்­றார்கள்.

ஆனால் புதி­தாக வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலில் இந்த GOWN/ CLOAK என்ற வார்த்தை அகற்­றப்­பட்­டி­ருப்­ப­தனால் முஸ்லிம் பெண் சட்­டத்­த­ர­ணிகள் இதன் பின்பு அபாயா அணிந்து செல்லும் அனு­மதி உயர்­நீ­தி­மன்ற புதிய விதி­களின் படி இல்­லா­மற்­போ­யுள்­ளது.

இதனை மீறி முஸ்லிம் பெண் சட்­டத்­த­ர­ணி­யொ­ருவர் அபாயா அணிந்து வழக்­கொன்றில் ஆஜ­ரானால் எதிர்­த­ரப்பு புதிய வர்த்­த­மானி அறி­வு­றுத்­த­லுக்­க­மைய அவரின் ஆடையைக் கேள்­விக்கு உட்­ப­டுத்­தலாம். இதனால் நீதி­மன்ற செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வது அல்­லது சட்­டத்­த­ர­ணிகள் இருக்­கையில் அமர்­வது முடி­யாமற் போகும்.

பிரே­ரணை நிறை­வேற்றம்
புதிய வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யா­ன­தை­ய­டுத்து கல்­முனை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் அவ­ர­ச­மாகக் கூடி பிரே­ர­ணை­யொன்­றினை நிறை­வேற்­றி­யுள்­ளது.
பெண் சட்­டத்­த­ணி­களின் ஆடை­தொ­டர்பில் 2018 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள நீண்ட கவுண் என்ற ஆடையை மீண்டும் புதி­தாக வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலில் உள்­வாங்கு­மாறு குறித்த பிரே­ரணை தெரி­விக்­கி­றது என கல்­முனை சட்­டத்­த­ர­ணிகள் சங்க உறுப்­பினர் ஆரிகா காரி­யப்பர் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

குறிப்­பிட்ட பிரே­ரணை பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்த ஜய­சூ­ரி­ய­வுக்கும், இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­த­லைவர் கெள­சல்யா நவ­ரத்­ன­வுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. இதன் பிர­தி ­நீதி, சிறைச்­சா­லைகள் புனர்­நிர்­மாணம், அர­சி­ய­ல­மைப்பு அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­வுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம்
இதே வேளை முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் அதன் செய­லாளர் ரஸ்­மரா ஆப்தீன் தலை­மையில் இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் கெள­சல்யா நவ­ரத்­னவை நேற்று முன்­தினம் சந்­தித்து புதிய வர்த்­த­மானி அறி­வித்­த­லை­ய­டுத்து முஸ்லிம் பெண் சட்­டத்­த­ர­ணி­களின் ஆடை தொடர்பில் ஏற்­பட்­டுள்ள சர்ச்­சையை விளக்­கி­யது.
ஜனா­தி­பதி சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­த­பாவின் வழி­காட்­டலின் கீழ் இந்தச் சந்­திப்பு இடம் பெற்­றது.

இதே­வேளை நேற்று இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் நிர்­வாகக் குழு ஒன்று கூடி இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஆராய்ந்தது. முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் முன்புபோல் GOWN/ CLOAK ஆடையணிந்து (அபாயா) நீதிமன்ற கடமைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை மீண்டும் பெற்றுக் கொடுப்பதென நிர்வாகக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதென சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட சட்டத்தரணி சபீனா மஹ்ரூப் ‘விடிவெள்ளி’ க்குத் தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.