ரமழான்: கொடையின் மாதம்

0 275

இலங்­கையில் புனித ரமழான் மாதம் நாளை முதல் ஆரம்­ப­மா­வ­தாக நேற்று மாலை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய நாம் எல்­லோரும் நாளை முதல் நோன்பு நோற்­ப­தற்குத் தயா­ராகிக் கொண்­டி­ருக்­கிறோம். இந்த சந்­தர்ப்­பத்தில் நம்­மோடு இணைந்து வாழ்­கின்ற ஏழை எளிய மக்கள் குறித்தும் ஒரு கணம் சிந்­திக்க வேண்­டி­யது நமது கடப்­பா­டாகும்.

ரமழான் மாதத்தில் செய்­யப்­ப­டு­கின்ற கொடைக்கும் மற்ற மாதங்­களில் வழங்­கப்­ப­டு­கின்ற கொடைக்கும் பெரிய வேறு­பாடு இருக்­கின்­றது. ரமழான் மாதத்தில் வழக்­கத்தை விட கூடு­த­லாக இறை வழி­பாட்டில் ஈடு­ப­டு­வோரைக் கண்­ட­றிந்து அவர்­க­ளுக்கு உத­வி­ய­ளிக்க வேண்டும் என்­பது மனதில் கொள்ள வேண்­டிய அம்­ச­மாகும்.

இஃதிகாஃப் இருப்போர், குர்ஆன் கற்க நாடுவோர், குர்­ஆ­னையும் இறை­மார்க்­கத்­தையும் கற்றுக் கொடுப்போர், ரம­ழானை சிறந்­த­மு­றையில் பயன்­ப­டுத்திக் கொள்ள விழைவோர், இறை­யில்லப் பணி­களில் தம்மை ஈடு­ப­டுத்திக் கொள்வோர், முஸ்லிம் உம்­மாவின் நல­னுக்­காக உழைப்போர் போன்­ற­வர்­களைக் கண்­ட­றிந்து அவர்­க­ளுக்கு பண­வு­தவி செய்­ய­வேண்டும்.

குறிப்­பாக பள்­ளி­வா­சல்­களில் இமாம்­க­ளா­கவும் முஅத்­தின்­க­ளா­கவும் சுத்­தி­க­ரிப்பு ஊழி­யர்­க­ளா­கவும் பணி­யாற்­றுவோர் தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். வெறு­மனே ஒரு தொகை அரி­சி­யோடு மாத்­திரம் நமது உத­வி­களை நிறுத்­தி­வி­டாது அவர்­க­ளது தேவை­களை ஓர­ள­வேனும் பூர்த்தி செய்யும் வகையில் கூட்­டாக உத­வி­களை வழங்க வேண்டும்.

ஆக, உலக அளவில் தன்­னு­டைய நிலை எப்­ப­டி­யி­ருப்­பினும் அதைக் கருத்தில் கொள்­ளாமல் வசந்­தமாய் வரும் அருள்­பெரு ரம­ழானைப் பயன்­ப­டுத்தி தன்­னு­டைய மறுமை வாழ்க்­கையை ஒளிரச் செய்யும் முயற்­சியில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு கை கொடுப்­பது தான் ‘ரமழான் கொடை’யின் முக்­கிய நோக்கம் என்­பதை மறந்­து­விடக் கூடாது.

சுழன்­ற­டிக்கும் சூறா­வளிக் காற்றைப் போல் நபி­களார் செல­விட்­டுள்­ளார்கள் என படிக்­கிறோம். பயானில் கேட்­கிறோம். நபி­களார் என்ன பெரிய பணக்­கா­ரரா? சொத்தும் சுகமும் நபி­க­ளா­ரிடம் கொட்டிக் கிடந்­த­னவா? கொஞ்சம் சிந்­தித்துப் பார்க்க வேண்­டாமா?

சாதா­ரண காலங்­களில் செய்­யப்­படும் பொது­வான தான தரு­மங்­களைப் போன்றே ரமழான் மாதத்து சதக்­காக்­க­ளையும் நாம் எடை­போட்டு வைத்­துள்ளோம். அத­னால்தான் ஃபுக­ராக்­களும் ஏழை­களும் ரமழான் மாதத்தில் வீதி­தோறும் திரிந்து கொண்­டி­ருக்கும் அவல நிலை நில­வு­கின்­றது.

இவ்­வ­ரி­சை­யில்தான் நோன்­பா­ளி­க­ளுக்கு நோன்பு திறக்க உத­வு­தலும் வரு­கின்­றது. இதை ஏதோ பொது­வான நற்­செயல் என வகைப்­ப­டுத்­தாமல் நோன்பு நோற்றும் சரி­யான முறையில் நோன்பைத் திறக்கும் வச­தி­யற்­றோ­ருக்­கான உதவி என்னும் கோணத்தில் பார்க்­க­வேண்டும். பள்­ளிக்கு வந்து நோன்பு திறக்கும் ஆண்கள் மட்­டும்தான் இதற்கு தகு­தி­யா­ன­வர்­களா? வீடு­களில் இருக்கும் ஏழை, எளிய பெண்கள் இவ்­வு­த­வியைப் பெற தகு­தி­யற்­ற­வர்­களா?

இறை­வனின் திருப்­திக்­காக தன்­னு­டைய வரு­மா­னத்தை இழந்து இறை வழி­பாட்டில் ஈடு­படும் இறை­ய­டி­யா­னுக்கு இறை­வனின் புறத்தில் இருந்து உத­வியும் ஒத்­தா­சையும் வரு­கின்­றது. அது எங்­கி­ருந்து வரும்? எவ்­வ­டிவில் வரும்? என்­ப­தை­யெல்லாம் யோசித்துப் பார்க்­க­வேண்டும்

நாம்தாம் அந்தக் கரு­விகள். நம்மைப் பயன்­ப­டுத்­தித்தான் நம் மூல­மா­கத்தான் இறைவன் அவர்­க­ளுக்கு உத­வு­கிறான் என்­பதை நினைவில் கொள்ள வேண்டும்
இறை­வ­னு­டைய கரு­வி­களுள் நாமும் உள்ளோம் என்­பதை உணர்ந்து நம் வழி­யா­கவும் இத்­த­கை­யோ­ருக்கு இறைவன் உதவக் கூடும் என்­பதை ஏற்று உத­வவும் ஒத்­தாசை செய்­யவும் முன்­வ­ர­வேண்டும். நம்மால் இயன்­றதை வழங்க வேண்டும். இத்­த­கை­யோரைத் தேடிக்­கண்­ட­றிந்து உதவ வேண்டும்.

நாட்டின் சமகால பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அதிகரித்த விலைவாசிக்கு மத்தியில் தான் நாம் இந்த ரமழான் மாதத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இந் நிலையில் ஆடம்பரமான இப்தார்கள், ஒன்றுகூடல்களைத் தவிர்த்து அதற்காக ஒதுக்கப்படும் பணத்தில் ஏழை மக்களுக்கு நிவாரணங்களை கிடைக்கச் செய்வதே காலத்திற்குப் பொருத்தமானதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.