சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தாலும் இலங்கை வங்குரோத்து நிலைக்கே செல்லும்

பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் சபையில் சுட்டிக்காட்டு

0 261

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் கடனைப் பெற்­றுக்­கொள்ள கடன் மறு­சீ­ர­மைப்பு விவ­கா­ரத்தை வெற்­றி­கொண்டுவிட்டோம் என பெருமை கொள்ள முடி­யாது. ஏனெனில், முறைமை கட்­ட­மைப்பில் மாற்றம் ஏற்­ப­டுத்­தாத கார­ணத்­தினால் உலகில் பெரும்­பா­லான நாடுகள் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் கடனை பெற்­றுக்­கொண்­டதன் பின்­னரும் வங்­கு­ரோத்து நிலையை அடைந்­துள்­ளன. இலங்­கையும் அவ்­வா­றான நிலையை நோக்கிச் செல்­கி­றதா என்ற சந்­தேகம் எழு­வ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற கலால் சட்டம் ஒழுங்கு விதிகள் மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கையில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

கடன் மறு­சீ­ர­மைப்பு விவ­கா­ரத்தில் வெற்­றி ­பெற்­றுள்­ள­தாக ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்­ளதை வர­வேற்­கிறோம். பொரு­ளா­தார நெருக்­க­டியில் இருந்து மீள்­வ­தற்கு அர­சாங்கம் எடுக்கும் சிறந்த தீர்­மா­னங்­க­ளுக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பு வழங்­குவோம். நாட்டை நெருக்­க­டிக்­குள்­ளாக்கி அர­சியல் செய்யும் நோக்கம் எமக்கு இல்லை.

இலங்­கையின் பிர­தான நிலை கடன் வழங்­கு­னரான சீனா கடன் மறு­சீ­ர­மைப்பு விவ­கா­ரத்தில் இலங்­கைக்கு சார்­பாக செயற்­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. ஆகவே சீன கூட்­ட­ர­சாங்­கத்­திற்கு நாட்டு மக்கள் சார்பில் நன்­றியை தெரி­வித்துக் கொள்­கிறோம்.
கடு­மை­யான தீர்­மா­னங்­களை மேற்­கொண்­டதால் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொள்ள முடியும் என ஜனா­தி­பதி குறிப்­பி­டு­கிறார். எரி­பொ­ருளின் விலை ,மின்­கட்­டணம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள நிலையில் வரி வீதமும்,வட்டி வீதமும் பன்­ம­டங்கு அதி­கிக்­கப்­பட்­டுள்­ளது.

பொரு­ளா­தார நெருக்­க­டியில் இருந்து மீள்­வ­தற்கு அர­சாங்கம் எடுத்த அனைத்து தீர்­மா­னங்­க­ளுக்கும் நாட்டு மக்கள் பலி­யா­கி­யா­கி­யுள்­ளார்கள். பொரு­ளா­தார ரீதியில் பாதிக்­கப்­பட்ட மக்­களை பண­ய­மாக கொண்டு பொரு­ளா­தார நெருக்­க­டியில் இருந்து மீள அர­சாங்கம் கவனம் செலுத்­தி­யுள்­ளது.

ஒட்­டு­மொத்த மக்­களும் ஒன்­றி­ணைந்து போராட்­டத்தில் ஈடு­பட்டு அர­சாங்­கத்­திற்கு முன்­வைத்த கோரிக்கை தற்­போது நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளதா, இல்லை. அர­சாங்கம் ஆரம்­பத்தில் செயற்­பட்­டதை போன்று தற்­போதும் செயற்­ப­டு­கி­றது. பொரு­ளா­தார பாதிப்­புக்கு மத்­தியில் அமைச்­ச­ரவை அமைச்­சுக்­களின் எண்­ணிக்­கையும், அமைச்­சர்­க­ளுக்­கான வரப்­பி­ர­சா­தங்­களும் குறைக்­கப்­ப­ட­வில்லை.

அர­சாங்கம் வெளிப்­படைத் தன்­மை­யுடன் செயற்­பட வேண்டும் என சர்­வ­தேச நாணய நிதியம் அறி­வு­றுத்­தி­யுள்ள நிலையில் ஊழல் மோச­டிக்கு எதி­ரான சட்­ட­மூ­லத்தை அர­சாங்கம் இது­வரை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வில்லை. மாறாக அர­சாங்கம் வழமை போன்று முறை­யற்ற வகையில் செயற்­ப­டு­கி­றது.

பாரா­ளு­மன்­றத்தின் சிறப்புக் குழுக்­க­ளுக்கு எதிர்க்­கட்­சிகள் நிய­மிக்­கப்­பட வேண்டும் என 2015 ஆம் ஆண்டு தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒரு யோச­னையை பாரா­ளு­மன்­றத்­திற்கு முன்­வைத்து அதனை நிறை­வேற்­றினார். ஆனால் அவர் தற்­போது அந்த முறை­மையை முழு­மை­யாக மீறி ஆளும் தரப்­புக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­கிறார்.

பாரா­ளு­மன்­றத்தின் சிறப்பு குழுக்­க­ளான கோப் ,கோபா மற்றும் அர­சாங்க நிதி தொடர்­பான தெரிவு குழுக்­களின் தலைவர் பத­விகள் ஆளும் தரப்­பிற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது, இவ்­வா­றான நிலையில் எவ்­வாறு தவ­றுகள் சுட்­டிக்­காட்­டப்­படும்.

சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் கடனை பெற்­றுக்­கொள்ள கடன் மறு­சீ­ர­மைப்பு விவ­கா­ரத்தை வெற்­றி­கொண்டு விட்டோம் என பெருமை கொள்ள முடி­யாது, ஏனெனில் அர­சாங்கம் தனது முறைமை கட்­ட­மைப்பில் மாற்றம் ஏற்­ப­டுத்­தாத கார­ணத்­தினால் உலகில் பெரும்­பா­லான நாடுகள் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் கடனை பெற்­றுக்­கொண்­டதன் பின்­னரும் வங்­கு­ரோத்து நிலையை அடைந்துள்ளன. இலங்கையும் அவ்வாறான நிலை நோக்கிச் செல்கிறதா?

பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­ன­வினால் மாத்­திரம் தீர்வு காண முடியும், நாட்டை முன்­னேற்­ற­ம­டைய செய்ய முடியும் என பொது­ ஜன பெர­மு­னவின் பொதுச்­செ­ய­லாளர் வெட்­க­மில்­லாமல் கருத்­து­ரைக்­கிறார். நாடு வங்­கு­ரோத்து நிலை அடைந்­துள்­ள­தற்கு பொது­ஜன பெர­மு­னவும், அதன் தலை­வர்­களும் பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.