புதிய காதி நீதிபதிகளை வலுப்படுத்த வேண்டும்

0 276

நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் நில­விய காதி நீதிவான் பத­வி­க­ளுக்­கான வெற்­றி­டங்­களை நிரப்பும் பொருட்டு 34 பிர­தே­சங்­க­ளுக்­கான புதிய காதி நீதி­ப­திகள் நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் இம்­மாதம் முதல் தமது கட­மை­களை ஆரம்­பித்­துள்­ளனர். மேலும் சில பிர­தே­சங்­க­ளுக்­கான வெற்­றி­டங்­களும் விரைவில் நிரப்­பப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டில் 65 காதி நீதி­மன்ற நிர்­வாகப் பிரி­வுகள் உள்­ளன. இவற்றில் 34 நிர்­வாகப் பிரி­வு­க­ளுக்கு புதி­ய­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் 21 பிரி­வு­க­ளுக்கு ஏலவே பதவி வகித்­த­வர்­க­ளது பதவிக் காலம் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. ஏனைய 10 பிரி­வு­க­ளுக்கு அடுத்த இரண்டு மாதங்­க­ளுக்குள் புதி­ய­வர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

இம்­முறை காதி நீதி­ப­தி­க­ளுக்கு புதி­தாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­களுள் குறிப்­பி­டத்­தக்­க­வர்கள் சமூ­கத்தில் சிறந்த அந்­தஸ்­து­மிக்­க­வர்கள் என்றும் கல்வி உள்­ளிட்ட பல்­வேறு தகை­மை­களைக் கொண்­ட­வர்கள் என்றும் பொது மக்­க­ளது அபிப்­பி­ரா­யங்கள் கூறு­கின்­றன. இம்­முறை புதிய காதி நீதி­ப­தி­களை தெரிவு செய்­வதில் நீதிச் சேவை ஆணைக்­குழு இறுக்­க­மான நடை­மு­றை­களைக் கடைப்­பி­டித்­த­தாகவும் அறிய முடி­கி­றது.

கடந்த பல வரு­டங்­க­ளாக நாட்டின் காதி நீதி­மன்ற முறை­மை­யா­னது பலத்த விமர்­ச­னங்­க­ளுக்­குட்­பட்­டி­ருப்­பதை நாம் அறிவோம். தகு­தி­யற்ற பலர் இப் பத­விக்கு நிய­மிக்­கப்­பட்­ட­மையும் அவர்கள் இப் பத­வியை துஷ்­பி­ர­யோகம் செய்­த­மை­யுமே இவ்­வா­றான விமர்­ச­னங்­க­ளுக்குக் கார­ண­மாகும். இப் பத­வியைப் பயன்­ப­டுத்தி பலர் ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­ட­மையும் விசா­ர­ணை­களில் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இப் பின்­ன­ணி­யில்தான் புதிய காதி நீதி­பதி நிய­ம­னத்தில் இறுக்­க­மான விதி­மு­றை­களை நீதிச் சேவை ஆணைக்­குழு கடைப்­பி­டித்து தகு­தி­வாய்ந்­த­வர்­களை நிய­மிப்­ப­தற்கு முயற்­சித்­துள்­ளது. எனினும் சில பகு­தி­க­ளுக்கு தகு­தி­யா­ன­வர்கள் விண்­ணப்­பிக்­கா­ததன் கார­ண­மாக, பொருத்­த­மற்ற சிலர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்குத் தேவை­யான பயிற்­சிகள் வழி­காட்­டல்கள் மற்றும் ஏனைய வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்­டி­யது நீதிச் சேவை ஆணைக்­கு­ழுவின் கடப்­பா­டாகும். காதி நீதி­மன்ற முறை­மைகள் தொடர்­பி­லான போதிய தெளி­வுகள் வழங்­கப்­ப­டு­வ­துடன் தொட­ரான பயிற்­சி­களும் வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அதே­போன்­றுதான் காதி நீதி­வான்­க­ளுக்­கான கொடுப்­ப­னவும் நாட்டின் தற்­போ­தைய வாழ்க்கைச் செலவு அதி­க­ரிப்­புக்­கேற்ப அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். தற்­போது மாதாந்தம் 7500 ரூபாவே அவர்­க­ளது சேவைக்­கான கொடுப்­ப­ன­வாக வழங்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் அலு­வ­லக செல­வு­க­ளுக்­காக மாதாந்தம் 6250 ரூபா வழங்­கப்­ப­டு­கி­றது. இதற்­க­மைய மாதாந்தம் மொத்­த­மாக 13750 ரூபா­வையே காதி நீதி­வான்கள் பெற்றுக் கொள்­கின்­றனர். சில காதி நீதி­வான்கள் தாம் வசிக்கும் பகு­தி­யி­லி­ருந்து நீண்ட தூரம் பய­ணித்தே தமது கட­மை­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. இந் நிலையில் போக்­கு­வ­ரத்­துக்கே அவர்கள் பெரி­ய­தொரு தொகையை செல­விட வேண்­டி­யுள்­ளது. எனவே, நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ச இது விட­யத்தில் கவனம் செலுத்தி காதி நீதி­வான்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தரப்புகள் வழங்க வேண்டும்.

அது மாத்­தி­ர­மன்றி, காதி நீதி­வான்­களின் செயற்­றி­றனை கட்­டி­யெ­ழுப்பும் வகை­யி­லான வேலைத்­திட்­டங்­களில் முஸ்லிம் சமூக நிறு­வ­னங்­களும் கவனம் செலுத்த வேண்­டி­யதன் அவ­சியம் உண­ரப்­ப­டு­கி­றது. காதி நீதி­வான்­களை மாத்­திரம் விமர்­சித்துக் கொண்­டி­ராமல், அவர்­க­ளோடு இணைந்து செயற்­ப­டு­வதன் மூலம் இந் நீதி­மன்ற கட்­ட­மைப்பை மேலும் வலுப்­ப­டுத்­து­வது காலத்தின் தேவை­யாகும்.

ஒரு புறம் காதி நீதி­மன்ற கட்­ட­மைப்பை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என ஒரு சாரார் போர்க் கொடி தூக்­கி­யுள்­ளனர். தனி­யான காதி நீதி­மன்­றங்கள் அல்­லது மாவட்ட நீதி­மன்­றங்­க­ளி­லேயே முஸ்லிம் விவாக விவா­க­ரத்து வழக்­குகள் விசா­ரிக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்­கை­யையும் சிலர் முன்­வைக்கத் தொடங்­கி­யுள்­ளனர். இவ்வாறான நகர்வுகளுக்கு நாம் ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது. மரறாக இருக்கின்ற கட்டமைப்பை மேலும் பலப்படுத்த முன்வர வேண்டும். அது மாத்திரமன்றி, இப் பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், தமது பணிகள் மூலமாக ஏலவே இப் பதவி தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தப்பபிப்பிராயங்களை களையும் வகையில் சிறப்பாக செயற்பட வேண்டியது அவசியமாகும். அதன் மூலமே காதி நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பக் கூடியதாகவிருக்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.