போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காலாவதியான கண்ணீர்ப் புகை குண்டுகள்

புலனாய்வில் தகவல்

0 226

காலி முகத்­தி­டலை மையப்­ப­டுத்தி ‘அர­க­லய’ எனும் பெயரில் நடாத்­தப்­பட்ட போராட்­டங்­களில் பங்­கேற்ற போராட்டக் காரர்கள் மீது காலா­வ­தி­யான கண்ணீர் புகைக் குண்­டுகள் வீசப்­பட்­டுள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சி.எஸ். ஆர். எனும் சமூகம் மதற்றும் மத விவ­கா­ரத்­துக்­கான மையத்தினால் ஊட­க­வி­ய­லாளர் தரிந்து ஜய­வர்­தன தலை­மை­யி­லான ஆய்வுக் குழு முன்­னெ­டுத்த புல­னாய்வில் இந்த விடயம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சுமார் 10 மாத­கா­ல­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள இந்த ஆய்வில், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்கள், நம்­பிக்­கை­யான மூலங்­களின் ஊடாக கிடைத்த தக­வல்கள் மற்றும் தனி நபர் நேர்­கா­ணல்கள் ஊடாக வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­களை மையப்­ப­டுத்தி இந்த விடயம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன், குறித்த அறிக்­கையும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த 2022 மார்ச் 31 ஆம் திகதி, மிரி­ஹா­னையில், முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் இல்லம் முன்­பாக ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்டம் முதல் 2022 ஜூலை 9 ஆம் திகதி ஜனா­தி­பதி மாளிகை, செய­ல­கத்தை கைப்­பற்­றிய போராட்டம், அதனைத் தொடர்ந்து வந்த நாட்­களில் நடாத்­தப்­பட்ட போராட்­டங்­களை கட்­டுப்­ப­டுத்த பெரும்­பாலும் சுமார் 20 வரு­டங்கள் வரை பழைய கண்ணீர் புகைக் குண்­டுகள் பயன்­ப­டுத்­தப்பட்­டுள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 10 வரு­டங்­களில் இலங்கை சுமார் 45 ஆயிரம் கண்ணீர்ப் புகைக் குண்­டு­களை கொள்­வ­னவு செய்­துள்­ள­துடன் அதற்­காக செல­வி­டப்­பட்­டுள்ள மொத்த செலவு 162,101,131.66 ரூபா என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த மொத்த கண்­ணீர்­ப்புகைக் குண்­டு­களில் 8 ஆயிரம் வரை பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன், அதில் 2022 மார்ச் 31 முதல் 2022 ஜூலை 17 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் மட்டும் 6000 இற்கும் அதி­க­மான கண்ணீர் புகைக் குண்­டுகள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இக்­கா­லப்­ப­கு­தியில் பயன்­ப­டுத்­தப்­பட்ட கண்ணீர் புகைக் குண்­டு­களின் பெறு­மதி 26706578.17 ரூபா என வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட, இலங்கை கடந்த 2012, 2017, 2019, 2020 ஆம் ஆண்­டு­களில் கண்ணீர் புகைக் குண்­டு­களை இறக்­கு­மதி செய்­துள்­ள­துடன் பல சந்­தர்ப்­பங்­களில், கண்ணீர் புகைக் குண்­டு­களை கொள்­வ­னவு செய்ய முன்னர் அதன் மாதி­ரிகள் கூட பரீட்­சிக்­கப்­ப­ட­வில்லை என உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக போராட்டக்காரர்கள் மீது வீசப்­பட்ட கண்ணீர் புகைக் குண்­டுகள், காலா­வ­தி­யா­னவை என ஆய்வு கூடம் ஊடாக அறிக்கை இது­வரை பெறப்­ப­டாத போதும், வீசப்­பட்ட கண்ணீர் புகைக் குண்­டு­களில் காணப்­பட்ட உற்­பத்தி திக­தி­க­ளுடன் ஓப்­பீடு செய்யும் போது அவை கால­வ­தி­யா­னவை என உறு­திப்­ப­டுத்த முடி­யு­மாக இருந்­த­தாக ஆய்வுக் குழு­வினர் குறிப்­பிட்­டனர். குறிப்­பாக கண்ணீர் புகைக் குண்டு ஒன்றின் ஆயுட் காலம் 5 வரு­டங்கள் என்ற ரீதி­யி­லேயே இந்த முடி­வுக்கு ஆய்வுக் குழு­வினர் வந்­துள்­ளனர்.
குறிப்­பாக இந்த ஆர்ப்­பாட்­டங்­க­ளி­டையே 10 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் நூற்­றுக்­க­ணக்­கானோர் காய­ம­டைந்­துள்ள பின்­ன­ணியில், காலாவ­தி­யான கண்ணீர்ப் புகைக் குண்­டு­களின் பிர­யோகம் தொடர்பில் பாரிய அதிர்ச்சி உரு­வா­கி­யுள்­ளது.

குறிப்­பாக இது­வரை பொலிசார் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளிப்­ப­டுத்­தி­யுள்ள தர­வு­க­ளுக்கு அமைய, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு, கல்­கிசை, மட்­டக்­க­ளப்பு, கண்டி உள்­ளிட்ட 10 பொலிஸ் வல­யங்­க­ளுக்கு, கடந்த 2012, 2017 ஆம் ஆண்­டு­களில் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட கண்ணீர் புகைக் குண்­டு­களே விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­மையும் அவையே அந்த வல­யங்­களில் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சி.எஸ். ஆர். நிறுவனத்தின் தலைவர் அருட் தந்தை ரொஹான் சில்வா, சட்டத்தரணி சுரேன் டி பெரேரா, சட்டத்தரணி மனுஷிகா குரே, மனித உரிமை ஆர்வலர் ருகி பெர்ணான்டோ, ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, பாத்திமா ரஸ்மா உள்ளிட்ட குழுவினர் இந்த ஆய்வினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.