முஸ்லிம் இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிப்பதை ஏற்க முடியாது

பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் சிவில் செயற்பாட்டாளர்கள் எடுத்துரைப்பு

0 274

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தற்­கொ­லை குண்­டுத் ­தாக்­கு­த­லை­ய­டுத்து சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு இது­வரை காலம் குற்­றங்கள் எதுவும் நிரூ­பிக்­கப்­ப­டா­துள்ள முஸ்லிம் இளை­ஞர்­களை புனர்­வாழ்­வ­ளிக்க அர­சாங்கம் மேற்­கொண்­டு­வரும் நட­வ­டிக்­கை­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. குற்றம் நிரூ­பிக்­கப்­ப­டாத நிலையில் அவர்கள் புனர்­வாழ்வு மையங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்டால் அவர்கள் பயங்­க­ர­வா­திகள் என நிரூ­பிக்­கப்­ப­டு­வார்கள். இதனால் அவர்­க­ளது எதிர்­காலம் இரு­ள­டைந்து விடும் என்று  முஸ்லிம் சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் சாரா ஹல்­ட­னிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்­வி­வ­காரம் தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் வழங்குமாறும் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்­களின் கோரிக்கை நியா­ய­மா­னது என ஏற்­றுக்­கொண்ட உயர் ஸ்தானிகர் சாரா ­ஹல்டன் இது தொடர்பில் அரச மட்­டத்தில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்தார்.

பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் முஸ்லிம் இளை­ஞர்­க­ளுக்கு அவ­ர­வர்­க­ளது வீடு­க­ளி­லேயே புனர்­வாழ்­வ­ளிக்­கப்­ப­ட­வேண்டும். அந்­தந்தப் பிர­தேச பள்­ளி­வா­சல்­களின் மேற்­பார்­வையின் கீழ் இந்­ந­ட­வ­டிக்கையை மேற்­கொள்­ளலாம். அவர்­க­ளுக்கு உள­வியல் ரீதி­யான மீட்பு முயற்­சி­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டலாம். அதனை விடுத்து பாது­காப்பு அமைச்­சினால் அவர்கள் அரச புனர்­வாழ்வு நிலை­யங்­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்டால் சமூக விரோ­திகள், பயங்­க­ர­வா­திகள் என முத்­திரை குத்­தப்­ப­டு­வார்கள். அரச நிறு­வ­னங்­களும் அவர்­களை புறக்­க­னிக்கும். இதனால் வாழ்நாள் முழு­வதும் அவர்கள் சவால்­களை எதிர்­கொள்ள நேரிடும் என தான் சா­ரா­ ஹல்­ட­னிடம் தெரி­வித்­த­தாக சமூக செயற்­பாட்­டா­ளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் பிர­தித்­த­லை­வ­ரு­மான ஹில்மி அஹமட் தெரி­வித்தார்.

பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ருடன் நேற்று முன்­தினம் அவ­ரது வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்ற சந்­திப்­பின்போதே இவ்­வாறு தெரி­வித்­த­தாக அவர் விடி­வெள்­ளிக்குக் கூறினார். மேலும் அவர் தெரி­விக்­கையில்; எவ்­வித குற்­றச்­செ­யல்­களும் நிரூ­பிக்­கப்­ப­டாது வரு­டக்­க­ணக்கில் முஸ்லிம் இளை­ஞர்கள் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­பது அத்­தோடு அவர்­களை புனர்­வாழ்வு மையங்­க­ளுக்கு அனுப்பி வைக்க முயற்­சிப்­பது முஸ்­லிம்கள் மீதான பழி­வாங்­க­லாகும். அதனால் இது தொடர்பில் அரச தரப்­புடன் பேசி நியா­ய­மான தீர்­வினைப் பெற்­றுத்­தா­ருங்கள் என கோரிக்கை விடுத்­தோம். மேலும் வெளி­நா­டு­க­ளி­லிந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் இஸ்­லா­மிய நூல்கள், குர்ஆன் பிர­திகள் அவற்றின் உள்­ள­டக்கம் தொடர்பில் கண்­கா­ணிப்­ப­தற்­காக சுங்­கத்­தி­ணைக்­களம், பாது­காப்பு அமைச்சு என்­ப­ன­வற்றில் தடுத்து வைக்­கப்­ப­டு­கின்­றன. இஸ்­லா­மிய நூல்­களும், குர்ஆன் பிர­தி­க­ளுமே இவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்டு ஆரா­யப்­ப­டு­கின்­றன. ஆனால் ஏனைய மத நூல்­க­ளுக்கு இவ்­வா­றான விதி­முறை பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை. ஏன் இந்த பார­பட்சம்? இது தொடர்­பிலும் உயர் ஸ்தானிகர் கவனம் செலுத்த வேண்­டு­மென கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. மேலும் நாட்டின் பொரு­ளா­தார நிலைமை, உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல், நாட்டில் இடம்­பெற்­று­வரும் மக்கள் போராட்­டங்கள் தொடர்­பிலும் இச்­சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. நாட்டின் பொரு­ளா­தார நிலை எவ்­வா­று இருந்தாலும் தேர்தலொன்று கட்டாயம் தேவை. இது மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமையாகும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன. இச்சந்திப்பில் மூன்று பெண் சமூக செயற்பாட்டாளர்களும் சமூக செயற்பாட்டாளர் ஹிஷாம் மொஹமட்டும் பங்கு கொண்டிருந்தனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.