சக சமூகங்களின் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்

0 367

முஸ்லிம் சமூகம் மீதான பல்வேறு சந்தேகங்களும் குற்றச்சாட்டுக்களும் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டே உள்ளன. அண்மைக் காலமாக அரசியல் அரங்கிலும் பொது வெளியிலும் மாற்றங்கள் இருப்பதாக தெரிந்தாலும் மக்களின் மனதில் அந்த சந்தேகங்கள், தப்பபிப்பிராயங்கள் நீடிக்கவே செய்கின்றன.

இவ்வாறான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு காத்­தி­ர­மான பதில்­களை உரிய தரப்­பி­ன­ருக்கு வழங்­கு­வது யார் என்ற கேள்வி தொடர்ந்தும் நீடித்­துக்­கொண்டே இருக்­கி­றது.
குறிப்­பாக, இலங்கை முஸ்­லிம்களை தீவிரவாதப் போக்குடன் தொடர்புபடுத்தும் குற்­றச்­சாட்டுக்கள் தொடர்ந்தும் இருந்தே வரு­கின்­றன.

வெறு­மனே, அர­சி­ய­லுக்­காக முஸ்­லிம்கள் மீது சோடிக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை பாமர சாதா­ரண மக்கள் மாத்­தி­ர­மன்றி படித்த மற்றும் உயர் வர்க்க சமூகம் இன்னும் நம்­பிக்­கொண்­டுதான் இருக்­கி­றது.

கடந்த வாரம் மத்­திய மலை­நாட்­டி­லுள்ள பிர­பல முஸ்லிம் பாட­சா­லை­யொன்­றுக்கு வருகை தந்­தி­ருந்த வலயக் கல்வி அலு­வ­லக அதி­காரிகள் ஒரு சிலர், முஸ்லிம் மாண­வி­களை விளை­யாட்டில் ஈடு­ப­டுத்­தப்­ப­டா­மை­யினால் அவர்கள் தீவி­ர­வா­தத்­தின்பால் ஈர்க்­கப்­ப­டு­வ­தாக அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்­டொன்றை முன்­வைத்துள்ளனர். குறித்த இடத்தில் இருந்த ஆசி­ரி­யர்­களால் அவர்­க­ளுக்கு உரிய அடிப்­ப­டை­யி­லான பதில் வழங்க முடி­யாமல் போயுள்­ளது.

பொது­வாக முஸ்லிம் பாட­சா­லை­களில் பெண்­க­ளுக்­கான விளை­யாட்­டுகள் மறுக்­கப்­ப­டு­வ­து­மில்லை. அத்­தோடு, இதனால் அவர்கள் தீவி­ர­வா­தத்­தின்பால் ஈக்­கப்­ப­டு­வதும் இல்லை. இஸ்லாம் விளையாட்டை ஆகுமாக்கியுள்ளது போன்ற விளக்கங்கள் உரிய இடத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் இந்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பதி­ல­ளிக்கத் தெரி­யா­மையே எமது சமூகம் தொடர்ந்தும் குற்­ற­வாளிக் கூண்டில் கைக் கட்டி நிற்­ப­தற்கும் கார­ண­மாக அமைந்­தி­ருக்­கி­றது. இவ்­வாறு அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்ற பல்­வேறு உதா­ர­ணங்­க­ளையும் சுட்­டிக்­காட்ட முடியும்.

கடந்த ஒரு தசாப்­தத்­திற்கும் மேலாக சிங்­கள கடும்­போக்­கு­வாத அர­சியல் சக்­தி­களும் ஓரிரு தமிழ் கடும்­போக்­கு­வாத அர­சி­யல்­வா­தி­களும் முஸ்லிம் மக்கள் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளையும் முன்­வைத்து அர­சியல் நடத்தி வரு­கின்­றனர். அத்­தோடு, இலங்கை முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் சில பிழை­யான அணு­கு­மு­றை­களும் அர­சியல் செயற்­பாடு­களும் சமூ­கத்தை பாதிப்­ப­டையச் செய்­கின்­றது. இது சரி செய்­யப்­பட வேண்­டிய தேவை இருக்­கின்­றது.

மாறு­பட்ட குழப்­ப­க­ர­மான சூழலில் கடந்த சில வாரங்­க­ளாக தேர்தல் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போது, சில சிங்­கள அர­சியல் தலை­மை­க­ளி­னா­லேயே குறித்த பொய்­யாக சோடிக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் சிங்­கள மக்கள் மத்­தியில் எடுத்­து­ரைக்­கப்­பட்­டது. அர­சியல் இலா­பத்­துக்­காக முஸ்லிம் சமூகம் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட பொய் பிர­சா­ரங்கள் குறித்து சரி­யான தெளி­வூட்­டல்­களை மேற்­கொள்ள வேண்­டிய பொறுப்பு நம் சமூ­கத்­தி­டமும் இருக்கிறது.

மார்க்க விடயங்களை அணுகும் உலமா சபை, முஸ்லிம் கவுன்சில், தேசிய ஷூரா சபை, பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள், தஃவா அமைப்புகள் என்பனவும் இந்த பொறுப்புகளிலிருந்து விலகிக் செயற்பட முடியாது. அத்தோடு, முஸ்லிம் சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் இந்த விடயங்களில் தம்மாலான பங்களிப்பை நல்க வேண்டியது அவசியமானதாகும்.

அண்மைக்காலமாக பள்ளிவாசல்களை மையப்படுத்தி சக இனங்களைச் சேர்ந்த மக்களுக்க இஸ்லாம் பற்றிய தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. எனினும் இவ்வாறு பள்ளிவாசல் நிகழ்வுகளுக்கு வந்து சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவானதே. எனவேதான் விரிவான நீண்ட கால திட்டமிடல்களின் அடிப்படையில் சந்தேகங்களை தெளிவுபடுத்துகின்ற, தப்பபிப்பிராயங்களை களைகின்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.