போதைப் பொருள் பாவனை அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

0 2,037

ஏ.ஆர்.ஏ. பரீல்

கடந்து சென்­று­விட்ட 2022 ஆம் ஆண்டு எமக்கு சவால்கள்மிக்க சோத­னை­யான ஆண்­டாக அமைந்­தி­ருந்­தது. பொரு­ளா­தார நெருக்­க­டிகள், அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் வானு­யர்ந்த விலை­யேற்றம், எரி­பொருள் விலை­யேற்றம் என்­ப­ன­வற்­றுடன் போதைப்­பொ­ருட்­களின் ஆதிக்­கத்­தி­லி­ருந்தும் எம்மை நாம் பாது­காத்­துக்­கொள்ள வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.

2022 இல் போதைப்­பொருள் ஒழிப்புப் பிரிவு,பொலிஸ் நிலை­யங்கள் மற்றும் ஏனைய நிறு­வ­னங்கள் ஒன்­றி­ணைந்து நாட­ளா­விய ரீதியில் மேற்­கொண்ட சுற்றி வளைப்­பு­க­ளை­ய­டுத்து ஹெரோயின் 1548 கிலோ கைப்­பற்­றப்­பட்­டது. இந்த ஹெரோயின் தொகை­யுடன் 46,258 சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்­டனர். இந்த புள்­ளி­வி­ப­ரங்­களை பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்­புப்­பி­ரிவு வெளி­யிட்­டுள்­ளது. இவ்­வாறு கைப்­பற்­றப்­பட்ட ஹெரோயினின் பெறு­மதி 2090 கோடி எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இன்று நாடு எதிர்­கொண்­டுள்ள பாரிய அச்­சு­றுத்தல் போதைப்­பொருள் என்­பதில் எவ்­வித சந்­தே­க­மு­மில்லை. ஐஸ், ஹெரோயின் கொக்கேன் போன்ற போதைப்­பொருள் கார­ண­மாக நாட்டின் இளம் பரம்­பரை மெது மெது­வாக அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்­டி­ருக்­கி­றது. மன­நிலை மற்றும் சுய நினைவு பாதிக்­கப்­பட்டு வாழ்­வ­தற்­காகப் போராடும் ஒரு பரம்­ப­ரை­யையே நாம் சந்­திக்க வேண்­டி­யுள்­ளது. அதனால் ஏனைய போராட்­டங்­க­ளை­விட போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான போராட்­டங்களை தீவி­ரப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ள­து.

இலங்கை ஓர் அழ­கிய தீவு, ஒரு கேந்­திர மையம். இந்­நாட்­டுக்கு போதைப்­பொ­ருளை கடத்தி வரு­வதில் அர­சியல்வாதிகள் தொடர்­பு­பட்­டி­ருக்­கி­றார்கள் என தொட­ராக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­வதன் மூலம் மாத்­திரம் போதைப்­பொ­ரு­ளுக்கு சமா­தி­ கட்­டி­வி­ட ­மு­டி­யாது.போதைப்­பொருள் இந்­நாட்­டுக்கு அர­சி­யல்­வா­தி­களின் ஆசீர்­வா­தத்­துடன் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தென்றால் அவ்­வா­றான அர­சி­யல்­வா­தி­களின் பெயர் மற்றும் விப­ரங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­ வேண்டும். ஆனால் இந்தத் துணிவு எவ­ரி­டமும் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அர­சி­யல்­வா­திகள் மீது குற்றம் சுமத்­து­வ­தற்கு போதிய சாட்­சிகள் இல்­லையேல் வெறு­மனே பேசிப்­பே­சி­யி­ருப்­பதில் பய­னில்லை. இத­னாலே போதைப்­பொருள் கடத்­தல்­கா­ரர்கள் துணி­வுடன் தங்கள் இலக்கை நிறை­வேற்­றிக்­கொள்­கி­றார்கள்.

இலங்­கைக்கு ஆகாய மார்க்­க­மா­கவும், கடல் மார்க்­க­மா­கவும் இந்தப் போதைப்­பொ­ருள்கள் கடத்தி வரப்­ப­டு­கின்­றன. ஆகாய மார்க்­க­மாக கொண்டு வரப்­படும் போதைப்­பொ­ருளை பாது­காப்­புப்­ பி­ரி­வி­னரால் அல்­லது போதைப்­பொருள் ஒழிப்­புப்­பி­ரி­வி­னரால் இல­குவில் கைப்­பற்­றிக்­கொள்ள முடியும். கடல் மார்க்­க­மாக கடத்­தப்­படும் போதைப்­பொ­ருளை கைப்­பற்­று­வது கடி­ன­மாக இருந்­தாலும் கடற்­ப­டை­யி­னரின் ஒத்­து­ழைப்­புடன் இந்த ஏற்­பாட்­டினை முன்­னெ­டுக்­க ­மு­டியும்.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு கடத்தி கொண்­டு­வ­ரப்­படும் போதைப்­பொருள் நடுக்­க­டலில் பட­கு­க­ளுக்கு ஏற்­றப்­பட்டு கரையை நோக்கி எடுத்­து­வ­ரப்­ப­டு­கி­றது. போதைப்­பொருள் கடத்­தலை சுற்­றி­வ­ளைத்த பல சந்­தர்ப்­பங்­களில் இவ்­வாறு கடத்­திக்­கொண்டு வரப்­பட்ட போதைப்­பொ­ருட்­களே சிக்­கி­யுள்­ளன. இந்தப் பட­குகள் சில வேளை மீன்பிடிப் ­ப­ட­கு­க­ளாக இருக்­கலாம். போதைப்­பொருள் மூலம் பெருந்­தொகை பணத்தை ஈட்­டிக்­கொள்­ளலாம் என்­பதை நோக்­கா­கக் ­கொண்டே இப்­ப­ட­குகள் இந்தக் கடத்த­லுக்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அத்­தோடு போதைப்­பொருள் கடத்­த­லுக்கு மாத்­திரம் சில­ ப­ட­குகள் பயன்­ப­டு­கின்­றன. அதனால் கட­லுக்குச் செல்லும் பட­குகள் மீன்­பி­டிப்­ப­தற்­கா­க செல்­கின்­றனவா? அல்­லது போதைப்­பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத நட­வ­டிக்­கை­க­ளுக்­காக செல்­கின்­றனவா?- என்­பதை கடற்படை­யி­னரும், பாது­காப்புப் பிரி­வி­னரும் பரி­சோ­தனை செய்­ய­வேண்டும். இவ்­வி­ட­யத்தில் சம்­பந்­தப்­பட்ட பிரி­வினர் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும்.

போதைப்­பொருள் கடத்தல் மற்றும் விநி­யோகம் மிகவும் சூட்­சு­ம­மாக திட்­ட­மிட்டே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்­புப்­பி­ரிவின் கடமை போதைப்­பொருள் கடத்­தலை சுற்­றி­வ­ளைத்து அத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்­களைக் கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தாகும். ஆனால் கடந்த ஓரிரு வரு­டங்­க­ளுக்கு முன்பு இந்­தக்­ குற்­றச்­சாட்டின் கீழ் இப்­பி­ரிவைச் சேர்ந்த பொலிஸ் அதி­கா­ரிகள் சிலர் கைது செய்­யப்­பட்­டனர். இது வேலியே பயிரை மேயும் செயற்­பா­டாக அமைந்­துள்­ள­தல்­லவா? போதைப்­பொருள் கடத்­தலை தடுக்க வேண்­டிய பொலிஸ் அதி­கா­ரி­களே அத­னுடன் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கும்­போது கடத்­தலை முறி­ய­டிக்க முடி­யுமா?

போதைப்­பொ­ருளின் ஆதிக்­கத்­துக்குள் இந்­நாடு முழு­மை­யாக மூழ்­கி­வி­டு­வ­தற்கு முன்பு இத­னைக் ­கட்­டுப்­ப­டுத்­து­வது அதி­கா­ரத்­தி­லுள்ள அரசின் கட­மை­யாகும். இத­னைக்­ கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் இறுக்­க­மான சட்­டங்கள் அமு­லுக்கு வர­வேண்டும். நாட்டின் தேசிய பாது­காப்பு என்­பது பயங்­க­ர­வா­தத்­தினை அடி­யோடு ஒழிப்­பது மாத்­தி­ர­மல்ல, அர­சாங்கம் நாட்டில் பயங்­க­ர­வா­தத்­தையும், அடிப்­ப­டை­வா­தத்­தையும் ஒழிப்­ப­தற்கு மேற்­கொள்ளும் கடு­மை­யான நட­வ­டிக்­கைகளை போதைப்­பொ­ருளை ஒழிப்­ப­தற்கு பிர­யோ­கிக்­கவில்லை. பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்­தின்கீழ் அரசு மேற்­கொண்­டுள்ள கரி­சனையை போதைப்­பொ­ருளை ஒழிப்­பதில் காட்­ட­வில்லை.

5000 மாண­வர்கள்
தடுப்பு நிலை­யங்­க­ளில்
போதைப்­பொ­ரு­ளு­ட­னான குற்­றச்­சாட்­டு­களில் அதா­வது குறிப்­பாக போதைப்­பொருள் பாவ­னை­யு­ட­னான குற்­றச்­சாட்­டுக்­க­ளின்கீழ் 5000 மாண­வர்கள் தடுப்பு நிலை­யங்­களில் இருக்­கி­றார்கள் என மேல­திக சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாயகம் ஜெனரல் சந்­தன ஏக்­க­நா­யக்க தெரி­வித்­துள்ளார். இவர்கள் க.பொ.த சாதா­ரண தரம் மற்றும் க.பொ.த உயர்­த­ரப் ­ப­ரீட்­சை­களில் சித்­தி­ய­டைந்­த­வர்­க­ளென்றும் 22 முதல் 30 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளெ­னவும் தெரி­வித்­துள்ள அவர் இவ்­வாறு இளம் தலை­மு­றை­யினர் பெரும் எண்­ணிக்­கையில் போதைப்­பொருள் பாவ­னைக்கு அடி­மை­யா­கி­யுள்­ளமை நாட்டின் எதிர்­கா­லத்தை சவா­லுக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளது என ஆருடம் கூறி­யுள்ளார்.

போதைப்­பொருள் பாவனை, வர்த்­தகம் மற்றும் சுற்­றி­வ­ளைப்பு தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்­த­போதே அவர் இத்­த­க­வல்­களைக் கூறி­யுள்ளார்.
2021 ஆம் ஆண்டு சமூக மட்­டத்தில் ஹெரோயின் பாவனை குறை­வ­டைந்து ஐஸ் ­ரக போதைப்­பொருள் பாவனை சடு­தி­யாக உயர்­வ­டைந்­தது. ஹெரோயின் போதைப்­பொ­ரு­ளை­வி­டவும் ஐஸ் போதைப்­பொ­ருளின் விலை குறை­வாக உள்­ள­துடன் எமது நாட்டில் ஐஸ் போதைப்­பொருள் பாவ­னைக்கு எதி­ரான சட்டம் கடந்த காலங்களில் அமுலில் இல்­லா­தி­ருந்­தமை கார­ண­மா­கவே அதன் பா­வனை அதி­க­ரித்­த­தா­கவும், ஐஸ் ­போ­தைப்­பொ­ருள் ­பா­வ­னைக்கு எதி­ராக மரண தண்­டனை சட்டம் அண்­மை­யிலேயே இயற்­றப்­பட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

2015 ஆம் ஆண்டு பாட­சாலைக் கல்­வியைத் தொட­ராத 600 பேர் போதைப்­பொருள் பாவ­னை­யு­ட­னான குற்றச் செயல்­க­ளுடன் கைது செய்­யப்­பட்டனர். இந்த எண்­ணிக்கை 2021 ஆம் ஆண்டு 190 ஆகக் குறை­வ­டைந்­தது. கடந்த காலங்­க­ளில் ­போ­லன்றி தற்­போது படித்த இளம் தலை­மு­றை­யினர் போதைப்­பொருள் பாவனை மற்­று­ம் அத­னு­ட­னான குற்­றச்­செ­யல்கள் கார­ண­மாக கைது செய்­யப்­பட்டு தண்­ட­னைக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றார்கள்.
2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதா­ரண தர மற்றும் உயர்­தர பரீட்­சை­களில் சித்­தி­ய­டைந்த 2000 பேர் போதைப்­பொருள் பாவனை மற்றும் அத­னு­ட­னான குற்­றச்­செ­யல்கள் கார­ண­மாக கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டிருந்­தார்கள். இந்த தொகை கடந்த 2021 ஆம் வருடம் 5000 ஆக உயர்­வ­டைந்­தது.

2020 ஆம் ஆண்டு 22 பட்­ட­தா­ரிகள் போதைப் பொருள் பாவனை மற்றும் அத­னுடன் தொடர்­பு­டைய குற்­றச்­செ­யல்­க­ளினால் கைது செய்­யப்­பட்டு சிறை வைக்­கப்­பட்­டார்கள். 2021 ஆம் ஆண்டு 18 பட்­ட­தா­ரிகள் போதைப்­பொருள் பாவனை கார­ண­மாக தண்­ட­னைக்­குள்­ளாக்­கப்­பட்­டார்கள்.

2015 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் 30 முதல் 40 வய­துக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களே போதைப்­பொருள் பாவனை மற்றும் அத­னு­ட­னான குற்­றச்­செ­யல்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்­ட­ார்கள். ஆனால் தற்­போது 22 முதல் 30 வய­துக்­குட்­பட்ட தரப்­பி­னரே போதைப்­பொருள் பாவனை கார­ண­மாக கைது செய்­யப்­ப­டு­கி­றார்கள். சிறைச்­சா­லை­களில் உள்ள இளம் வய­தி­னரில் அநேகர் போதைப்­பொருள் பாவ­னை­யு­ட­னான குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் எனவும் மேல­திக சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாயகம் ஜெனரல் சந்­தன ஏக்க நாயக்க விளக்­க­ம­ளித்­துள்ளார்.

பிர­தி­பொ­லிஸ்மா அதிபர்
தேச­பந்து தென்­னகோன்
பாட­சாலை மாண­வர்கள் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­கி­யுள்­ளார்கள் என்று கிடைக்­கப்­பெற்ற தக­வல்­க­ளுக்­க­மைய அண்­மைக்­கா­ல­மாக மா­ண­வர்­களின் புத்­த­கப்­பை­கள் பொலிஸாரினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. என்றாலும் மாணவர்களின் புத்தகப் பைகளை சோத­னை­யி­ட ­வேண்டாம் என பொலி­ஸா­ருக்கு நாம் உத்­த­ர­விட்­டுள்ளோம். ஏனென்றால் இது பொலி­ஸா­ருக்கு உரிய கட­மை­யல்ல. பாட­சா­லை­களே இது விட­யத்தில் செயற்­ப­ட­வேண்டும். மாண­வர்­களின் புத்­த­கப் ­பை­களை சோத­னை­யி­ட ­வேண்டும் என மேல் ­மா­கா­ணத்­துக்குப் பொறுப்­பான பிர­தி­ பொ­லிஸ்­மா­ அ­திபர் தேச­பந்து தென்­னக்கோன் தெரி­வித்­துள்ளார்.

நாட்­டில் ­போ­தைப்­பொ­ருட்­களை முற்றாக ஒழிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புத் தேவை.

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளை பொலிஸார் சோதனைக்குட்படுத்தாவிட்டாலும் பாடசாலைகளுக்கருகில் போதைப் பொருட்களுடன் எவரும் கைது செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முஸ்லிம் சமூகம்
போதைப்­பொ­ருளை ஒழிப்­பதில், கிரா­மங்­க­ளுக்குள், நக­ரங்­க­ளுக்குள் போதைப்­பொருள் நுழை­வதை தடுப்­ப­தற்கு முஸ்லிம் சமூகம் போதைப்­பொருள் தடுப்பு பிரி­வி­ன­ருக்கும் பொலி­ஸா­ருக்கும் ஒத்­து­ழைப்பு நல்க வேண்டும்.

முஸ்லிம் கிரா­மங்­களில் பள்ளிவாசல் நிர்­வா­கங்கள் இது ­வி­ட­யத்தில் அதிக கரி­சனை கொள்ள வேண்டும். கிரா­மங்­களில் இளை­ஞர்­க­ளுக்கும் பெற்­றோ­ருக்கும் விழிப்­பு­ணர்வுக் கூட்­டங்கள் நடத்­தப்­ப­ட­வேண்டும்.

போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­கி­யுள்­ள­வர்­களை புனர்­வாழ்வு நிலை­யங்கள் ஊடாக சமூ­கத்­துக்கு பய­னுள்­ள­வர்­களாக மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுடன் இணைந்து முன்­னெ­டுக்­கப்­ப­ட ­வேண்டும்.
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள், சமூக நல இயக்கங்கள் என்பன போதைப்பொருள் ஒழிப்பில் விரைந்து முன்னின்று செயற்பட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.