சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட மாவனல்லை இளைஞர்கள் : நடந்தது என்ன?

0 220

எம்.எப்.எம்.பஸீர்

சுமார் மூன்று மாதங்­க­ளாக காணாமல் போயி­ருந்த மாவ­னெல்­லையைச் சேர்ந்த இரு இளை­ஞர்­களின் ஜனா­ஸாக்கள் கடந்த 12 ஆம் திகதி, ரம்­புக்­கனை – ஹுரீ­ம­லுவ பகு­தி­யி­லி­ருந்து மீட்­கப்­பட்­ட சம்­பவம் பெரும் அதிர்ச்­சியைத் தோற்­று­வித்­துள்­ள­து.

கொடூர சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்பட்டு கொல்­லப்­பட்ட பின்னர், பொலித்தீன் பைகளில் இட்டு, புதைத்து, கொங்றீட் இட்­டி­ருந்த நிலையில், பொலிசார் ஜனா­ஸாக்­களை மீட்­டி­ருந்­தனர். இது குறித்த விசா­ர­ணை­களில், ஐஸ் போதைப் பொருளுடன் தொடர்­பு­பட்ட பிரச்­சினை இந்த இரட்டை கொலை­களின் பின்­ன­ணியில் இருப்­பது வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ள­து.

ஆம், மொஹம்மட் இக்பால் மொஹம்மட் அசார் 26 வயது இளைஞன். மொஹம்மட் அன்வர் மொஹம்மட் அர்பான் 28 வய­தான இளைஞன். இவ்­வி­ரு­வரும் மாவ­னெல்லை – கிரிங்கதெனிய மற்றும் கெர­மி­னி­யா­வத்த பகு­தி­களைச் சேர்ந்­த­வர்கள்.

உயிரிழந்த இளைஞர்கள்

இந்த இரு இளை­ஞர்­களும் கடந்த 2022 நவம்பர் மாதம் 19 முதல் 25 ஆம் திக­திக்குள் காணாமல் போயுள்­ள­தாக அவர்­க­ளது உற­வி­னர்­களால் மாவ­னெல்லை பொலிஸ் நிலை­யத்தில் செய்­யப்­பட்­டுள்ள முறைப்­பாட்டுத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
காண­வில்லை என்ற பிரிவின் கீழ் பதிவு செய்­யப்­பட்ட குறித்த முறைப்­பா­டுகள் தொடர்பில் மாவ­னெல்லை பொலிசார் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் எந்த முன்­னேற்­றமும் இல்­லாமல் மாதங்கள் கடந்­தன.

இந் நிலையில் தான் இவ்­வி­சா­ர­ணைகள் கேகாலை வலய குற்ற விசா­ரணைப் பிரி­வி­ன­ருக்கு மாற்­றப்­பட்­டது.

கேகாலை வலய குற்ற விசா­ரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிரதீப் வீர­சே­க­ரவின் ஆலோ­ச­னைக்கு அமைய, அதன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பெண் பொலிஸ் பரி­சோ­தகர் அப்­சரா அபே­கு­ணவர்­தன தலை­மை­யி­லான குழு­வினர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இதன்­போது, குறித்த விசா­ரணைக் குழுவில் உள்­ள­டங்கும் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வ­ருக்கு ஒரு தகவல் கிடைத்­துள்­ளது. அதா­வது ரம்­புக்­கனை – ஹுரீ­ம­லுவ பகு­தியில் போதைப் பொருள் வர்த்­தகர் எனக் கூறப்­படும் ஹுரீ­ம­லுவ பர்ஹான் என்­ப­வ­ரது வீட்டில் இரு இளை­ஞர்கள் கொடூ­ர­மாக சித்­தி­ர­வதை செய்து கொல்­லப்­பட்­ட­தாக தக­வ­ல­ளித்த நபர் பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளுக்கு தெரி­வித்­துள்ளார்.

அதன் பின்னர் அவ்­விரு இளை­ஞர்­களும் வீட்டின் பின்னால் புதைக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்­துள்ள தக­வ­லாளி, தானும் சித்­தி­ர­வதையை அனு­ப­வித்து, மர­ணத்தின் பிடி­யி­லி­ருந்து தப்பி வந்­த­தாக தெரி­வித்­துள்ளார்.

‘என்னை அவர்கள் மிகக் கொடூ­ர­மாக தாக்­கி­னார்கள். அவ்­வாறு நான் தாக்­கப்­படும் போது இரு இளை­ஞர்கள் அந்த வீட்டின் அறை­யொன்றில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர்கள் ஆயு­தங்­களால் வெட்­டப்­பட்­டனர். வெட்டுக் காயங்­களில் மிளகாய் பொடி தூவப்­பட்­டது. பின்னர் செனி­டைசர் கொண்டு அவர்கள் கழு­வப்­பட்­டார்கள்…. அந்த இரு இளை­ஞர்­களும் அனு­ப­வித்த நரக வேத­னையை நான் என் கண்­களால் கண்டேன்.’ என அவர் தகவல் அளித்­தி­ருந்தார்.

இது குறித்து பொலிஸ் கான்ஸ்­டபிள் தனது பொறுப்­ப­தி­கா­ரி­யான அப்­சரா அபே­கு­ணவர்­தன மற்றும் மேல­தி­காரி உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிரதீப் வீர­சே­க­ர­வுக்கு அறி­வித்த நிலையில், அவர்­க­ளது ஆலோ­ச­னைக்கு அமைய மேல­திக விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­டன.

கொலையை கண்­கண்ட சாட்­சி­யா­ளரின் வாக்குமூலங்கள் பதிவு செய்­யப்­பட்டு, அது தொடர்பில் கேகாலை நீதிவான் வாசனா நவ­ரட்­ணவுக்கு அறிக்கை இடப்­பட்­டது. நீதி­வானின் உத்­த­ரவின் பேரில், கடந்த 12 ஆம் திகதி கேகாலை சட்ட வைத்­திய அதி­கா­ரியின் பங்­கேற்­புடன் ஹுரீ­ம­லுவ பர்­ஹானின் வீட்டில் பொலிசார் தேடுதல் நடாத்தி, வீட்டின் பின்னால் கொங்றீட் இட்டு கோழிக் கூண்டு அமைக்­கப்­பட்­டி­ருந்த இடத்தில் சாட்­சி­யா­ளரின் அடை­யா­ளப்­ப­டுத்­த­லுடன் அகழ்­வு­களை முன்­னெ­டுத்­தனர்.

இந்த நட­வ­டிக்­கைகள் இடம்­பெறும் போதும் ஹுரீ­ம­லுவ பர்ஹான் மற்றும் மேலும் 3 பேர் இந்த குற்­றத்­துடன் தொடர்­பு­பட்­டுள்­ளதை பொலிசார் அடை­யாளம் கண்­டி­ருந்த போதும், அவர்கள் கைது செய்­யப்பட்­டி­ருக்­க­வில்லை. அவர்கள் தலை­ம­றை­வாக இருந்­த­மையே அதற்குக் கார­ண­மாகும்.

பொலிஸ் விசா­ர­ணை­களின் படி, இந்த இரு இளை­ஞர்­களும் சுமார் மூன்று நாட்­க­ளாக கொடூர சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளனர். அதில் 26 வய­தான மொஹம்மட் இக்பால் மொஹம்மட் அசார் முதலில் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் அவ­ரது ஜனாஸா முதலில் புதைக்­கப்­பட்­டுள்­ளது. முதலில் அகழ்வின் போது மீட்கப்பட்­டதும் அவ­ரது ஜனா­ஸாவே. பின்னர் மறு நாள் 28 வய­தான மொஹம்மட் அன்வர் மொஹம்மட் அர்பான் உயி­ரி­ழந்­துள்ளார். அவ­ரையும் அதே இடத்­துக்கு பக்­கத்­தி­லேயே சந்­தேக நபர்கள் புதைத்­துள்­ளனர்.

இந் நிலை­யி­லேயே தற்­போது இரு சட­லங்­களும் மீட்­கப்­பட்டு பிரேத பரி­சோ­தனை நட­வ­டிக்­கைக்­காக கடந்த 12 ஆம் திகதி கேகாலை வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

பொலிஸ் விசா­ர­ணை­களின் பிர­காரம், ஜனா­ஸா­வாக மீட்­கப்­பட்ட இரு இளை­ஞர்­களும் போதைப் பொருள் பயன்­பாட்­டா­ளர்கள் என தெரி­ய­வந்­துள்­ளது. கடந்த 2022 நவம்பர் மாதம் நாடெங்கும் போதைப் பொரு­ளுக்கு தட்­டுப்­பாடு நில­வி­யது. இந்த கால கட்­டத்தில் தான் இவ்­விரு இளை­ஞர்­களும், ஹுரீ­ம­லுவ பர்ஹான் எனும் போதைப் பொருள் வர்த்­தகர் என அறி­யப்­படும் நப­ரிடம் ஐஸ் போதைப் பொருள் கொள்­வ­னவு செய்ய சென்­றுள்­ள­தாக பொலிஸ் விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கொலை செய்­யப்பட்­ட­வர்­களில் ஒரு­வ­ரான 28 வய­தான மொஹம்மட் அன்வர் மொஹம்மட் அர்பான் என்­ப­வரின் சகோ­த­ர­ருக்கும், ஹுரீ­ம­லுவ பர்ஹான் எனும் போதைப் பொருள் வர்த்­த­க­ருக்கும் இடையே, போதைப் பொருள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் காணப்­பட்ட பிரச்­சினை இக்­கொ­லையை தூண்­டி­யுள்­ள­தாக பொலிசார் நம்­பு­கின்­றனர்.

அதா­வது மொஹம்மட் அன்வர் மொஹம்மட் அர்­பானின் சகோ­தரர், ஹுரி­ம­லுவ பர்­ஹா­னிடம் ஐஸ் போதைப் பொரு­ளினை பெற்­றுக்­கொண்டு பணம் கொடுக்­கா­தி­ருந்த சம்­பவம் ஒன்­றினை மையப்­ப­டுத்தி, இவ் இரு இளை­ஞர்­களும் ஐஸ் போதைப் பொருள் கொள்­வ­னவு செய்ய சென்ற போது ஹுரீ­ம­லுவ பர்­ஹா­னுடன் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது. இதுவே இறு­தியில் அவ்­வி­ரு­வரின் உயி­ரையும் பறித்­துள்­ள­தாக பொலிசார் கூறு­கின்­றனர்.

அது மட்­டு­மன்றி, ஐஸ் போதைப் பொருள் கொள்­வ­னவு செய்ய சென்­ற­தாக கூறப்­படும் அவ்­விரு இளை­ஞர்­களும், போதைப் பொருள் வர்த்­தகம் தொடர்பில் பொலி­சா­ருக்கு தகவல் அளிப்­ப­வர்கள் என பர்ஹான் சந்­தே­கித்­துள்­ள­தா­கவும் அத­னா­லேயே அவர் அவ்­விரு இளை­ஞர்­க­ளையும் மிகக் கொடூ­ர­மாக சித்­தி­ர­வதை செய்­துள்­ளா­தா­கவும் பொலிஸார் கூறு­கின்­றனர்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே குறித்த இரு இளை­ஞர்­க­ளி­னதும் ஜனா­ஸாக்கள் மீட்­கப்­பட்­டன. கொலை செய்­யப்­பட்ட அவ்­விரு இளை­ஞர்­களின் ஜனா­ஸாக்­களை சுற்­று­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட பொலித்தீன் ஹுரீ­ம­லுவ பர்­ஹானின் வீட்­டி­லி­ருந்து மீட்­கப்­பட்­டன.
இந் நிலையில் சந்­தேக நபர்­களை பொலிசார் தேடி வரும் நிலையில், இரு சந்­தேக நபர்கள் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். மாவ­னெல்லை மற்றும் கெலி ஓய பகு­தி­களில் வைத்து அவ்­வி­ரு­வரும் கைது செய்­யப்­பட்ட நிலையில், அவர்­களில் ஒரு­வரின் வீட்­டி­லி­ருந்து கொல்­லப்­பட்ட இளைஞர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான மோட்டார் சைக்­கிளும் மீட்­கப்­பட்­டது. எனினும் ஹுரி­ம­லுவ பர்ஹான் உள்­ளிட்ட மேலும் இருவர் தொடர்ந்து தலை­ம­றை­வாக இருந்து வரு­கின்­றனர்.

இந் நிலையில் அவ்­வி­ரு­வரும் கேகாலை நீதிவான் வாசனா நவ­ரத்ன முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்ட பின்னர் இம்­மாதம் 23 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். ஹுரீ­ம­லுவ பர்­ஹானை தேடி விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.
அண்­மைக்­கா­ல­மாக பதி­வாகும் குற்றச் செயல்­களை எடுத்து நோக்கும் போது, போதைப் பொருள் குறிப்­பாக ஐஸ் போதைப் பொருள் மற்றும் அதன் அடிப்­ப­டையில் புரி­யப்­பட்ட பாரிய குற்­றங்கள் முஸ்லிம் சமூ­கத்தில் அதி­க­ரித்துச் செல்­வதை காண முடி­கின்­றது. கடந்த 15 ஆம் திகதி கொலன்­னாவை பகு­தியில், 62 வயது மூதாட்டி ஒருவர், அவ­ரது வீட்டில் வேலைக்கு அமர்த்­தப்­பட்­டி­ருந்த பெண் மற்றும் அவ­ரது கண­வரால் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­மையும் அதன் பின்­ன­ணி­யிலும் ஐஸ் போதைப் பொருள் மோகமே இருப்­ப­தையும் அறிய முடி­கின்­றது.

இத­னை­விட ஐஸ் போதைப் பொரு­ளுடன் கடந்த ஒரு மாதத்தில் கைது செய்­யப்பட்­டுள்ள சந்­தேக நபர்­களில், குறிப்­பி­டத்­தக்க அள­வா­ன­வர்கள் முஸ்­லிம்கள் என்­பதும் கசப்­பான உண்­மை­யாகும்.

போதைப் பொருள் ஒரு புற­மி­ருக்க, மாத்­தறை பகு­தியில் சொத்­துக்­காக தனது தாயை மகன் கொலை செய்த சம்­ப­வமும் பதி­வா­னது. இவை விரல் விட்டுச் சொல்­லத்­தக்க முஸ்லிம் சமூ­கத்­துக்குள் பதி­வான அண்­மைய பாரிய குற்றச் செயல்களாகும்.

இவ்­வா­றான பாரிய குற்றச் செயல்­களை வெறு­மனே பொலிஸ் நட­வ­டிக்­கைகள் ஊடாக மட்டும் தடுத்­து­விட முடி­யாது. குற்­றங்­களை இன மத அடிப்­ப­டையில் பார்ப்­பது பொருத்­த­மற்­ற­தாக இருப்பினும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இன, மத சமூக கட்டமைப்புக்களை காத்திரமாக பயன்படுத்த முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. அவ்­வா­றான நிலையில், முஸ்லிம் ச­மூ­கத்­துக்கு மத்­தியில் அதி­க­ரித்­துள்ள பாரிய குற்­றங்­களை கட்­டுப்­ப­டுத்த காத்­தி­ர­மான சமூக கட்­ட­மைப்பின் அவ­சியம் மிக ஆழ­மாக உண­ரப்­பட்­டுள்­ளது. இதற்­காக முஸ்லிம் ஆன்­மிக தலை­மைகள், அர­சியல் தலை­மைகள், சமூக செயற்­பாட்­டா­ளர்கள் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­துடன் எமது பள்­ளி­வா­சல்கள், பாட­சா­லைகள், சமூக அமைப்­புக்­க­ளையும் பயன்­ப­டுத்த வேண்டும்.

மூலைக்கு மூலை போதைப் பொருள் வர்த்­தகம் பர­வி­யுள்ள சூழலில் அதனை மையப்­ப­டுத்­திய குற்­றங்­களும் அதி­க­ரிக்கும் நிலையில், நாளைய நாள் பாது­காப்­பான­தாக அமைய வேண்­டு­மானால் முஸ்லிம் சமூகம் இப்­போ­தேனும் கண் விழித்து சமூக மட்ட காத்திரமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.