“முஸ்லிம் அரச நிறுவனங்களை திணைக்கள கட்டடத்துக்கு மாற்றுக”

0 199

(ஏ.ஆர்.பரீல்)
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள கட்­டித்தின் வெற்­றி­ட­மா­க­வுள்ள மாடி­க­ளுக்கு காதிகள் சபை, வக்பு ட்ரிபி­யுனல், அஹ­தியா பாடசா­லைகள் தலை­மை­ய­கம் ­மற்றும் முஸ்லிம் அரச நிறு­வ­னங்­களை இடம் மாற்­று­மாறு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி ரணில்­ விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்­கை­ வி­டுக்­க­வுள்­ளனர். இது தொடர்பில் ஜனா­தி­ப­தியை உட­ன­டி­யாக சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

இக்­கட்­டி­டத்­துக்கு கிறிஸ்­தவ மத அலு­வல்கள் திணைக்­க­ள­த்தினை இடம் மாற்­று­வ­தற்­கான பணிகள் நடை­பெற்று வரு­கின்ற நிலையில், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்­துத்­தெ­ரி­விக்­கையில்; தற்­போது காதிகள் சபை வக்பு ட்ரிபி­யுனல், அஹ­தியா போன்ற முஸ்லிம் நிறு­வ­னங்கள் பல்­வேறு இடங்­களில் செயற்­பட்டு வரு­கின்­றன. திணைக்­க­ளத்தின் வெற்­றி­ட­மா­க­வுள்ள மாடி­க­ளுக்கு இவற்றை இடம் மாற்­று­வது பொருத்­த­மா­ன­தாகும்.

முஸ்லிம் சமூ­கத்தின் அனைத்து விட­யங்­க­ளையும் ஒரே குடையின் கீழ் சேவை­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.

அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்­ச­ருடன் இவ்­வி­வ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினேன். ஆனால் அவர் ஒரு உறு­தி­யான பதில் தர­வில்லை. இது பற்றி யோசிக்­கலாம் என்றே கூறினார். திணைக்­கள கட்­டி­டத்தின் மாடிகள் வெற்­றி­ட­மா­க­வுள்­ளதை சுட்­டிக்­காட்­டினார். எனவே ஜனா­தி­ப­தியை உட­ன­டி­யாக சந்­தித்து எமது வேண்­டு­கோளை முன்­வைக்­க­வுள்ளேன் என்றார்.
இவ்­வி­வ­காரம் தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஜிபுர் ரஹ்மான், எச்.எம்.எம்.ஹரீஸ், இசாக் ரஹ்மான் மற்றும் எம்.எச்.எம்.ஹலீம் ஆகி­யோரும் அமைச்சர் விதுர விக்­ர­மநாயக்கவுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்­தனர்.

இதே­வேளை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இயங்­கி­வரும் கட்­டி­டத்தின் ஒரு மாடியில் கிறிஸ்­தவ மத அலு­வல்கள் திணைக்­க­ளத்­தினை இடம்­மாற்­றிக் ­கொள்­வ­தற்­கான பணிகள் தற்­போது மும்­மு­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றன.
இம்­மாத இறு­திக்குள் இப்­ப­ணிகள் முடி­வு­றுத்­தப்­பட்டு அடுத்­த­ மாதம் முதல் கிறிஸ்­தவ சமய அலு­வல்கள் திணைக்­களம் இங்கு இயங்­க­வுள்­ளது. இந்து சமய அலு­வல்கள் திணைக்­க­ளமும் வெகு­வி­ரைவில் கட்டிடத்தின் ஒரு மாடிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இந்து சமய அலு­வல்கள் திணைக்­களம் தற்­போது வாடகை கட்­டி­டத்தில் இயங்கி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இக்­கட்­டி­டத்­துக்கு வழங்­கப்­படும் வாட­கையை நிறுத்­திக்­கொள்­வ­தற்கு அரசு தீர்மானித்துள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.