முஸ்லிம் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக சதுரி பிண்டோ

புதிய பணிப்பாளர் தெரிவுக்கான நேர்முக பரீட்சை நிறைவு

0 474

(ஏ.ஆர்.ஏ.பரீல், றிப்தி அலி)
முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு பதில் பணிப்­பா­ள­ராக கிறிஸ்­தவ மத அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் திருமதி. சதுரி பிண்டோ நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் செய­லா­ள­ரினால் இந்­நி­ய­மனம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஒன்­றரை வரு­ட­கா­ல­மாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ராக கட­மை­யாற்­றிய இப்­ராஹிம் அன்ஸார் கடந்த டிசம்பர் 30 ஆம் திக­தி­யுடன் ஓய்வு பெற்றுச் சென்­ற­தை­ய­டுத்தே இப்­பு­திய நிய­மனம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
இலங்கை நிர்­வாக சேவையைச் சேர்ந்த இரு அதி­கா­ரிகள் இத்­தி­ணைக்­க­ளத்தின் உத­விப்­ப­ணிப்­பா­ள­ர்களாக நீண்ட கால­மாக தொடர்ந்தும் கட­மையில் இருக்கும் போதே இந்­நி­ய­மனம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு முஸ்லிம் அல்­லாத ஒருவர் குறிப்­பாக பெண் ஒருவர் முதன் முதலில் இப்­ப­த­விக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

எனினும் புதி­தாக நிய­மனம் பெற்­றுள்ள பதில் பணிப்­பாளர் இன்­று­வரை (04.01.2023) கடமையை பொறுப்பேற்கவில்லை என திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்­வா­றா­யினும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு ஒரு புதிய பணிப்­பாளர் விரைவில் நிய­மிக்­கப்­ப­டுவார் என புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார். இப்­ப­த­விக்கு விண்­ணப்­பித்­தி­ருந்­த­வர்­க­ளுக்­கான நேர்முகப்பரீட்சை நேற்று புதன்கிழமை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.