பெண்கள் காதிகளாக நியமிக்கப்படுவர்

பலதாரமணம் நீக்கப்படாது; ஜனவரிக்குள் தனியார் சட்ட திருத்தம் அமைச்சரவைக்கு வரும் என்கிறார் நீதியமைச்சர்

0 378

(றிப்தி அலி)
காதி நீதி­ப­தி­க­ளாக பெண்­க­ளையும் நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு தேவை­யான திருத்­தங்­களை முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக என நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

சட்ட வரைஞர் திணைக்­க­ளத்­தினால் தற்­போது வரை­யப்­ப­டு­கின்ற முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்துச் திருத்தச் சட்­ட­மூலம் ஜன­வரி மாதம் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்டு அங்­கீ­காரம் பெறப்­படும் என அமைச்சர் கூறினார்.

விடி­வெள்­ளிக்கு வழங்­கிய பிரத்­தி­யோக நேர்­கா­ணலின் போதே நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,
“இச்­சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து நிய­மிக்­கப்­பட்ட துறைசார் நிபு­ணர்­களைக் கொண்ட குழுவின் பரிந்­து­ரை­களின் பிர­கா­ரமே முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இந்த விடயம் தொடர்பில் கடந்த டிசம்பர் 8ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் இந்த விட­யத்­துடன் தொடர்­பு­டைய தரப்பின் பிர­தி­நி­திகள் ஆகி­யோரை பாரா­ளு­மன்­றத்­திற்கு அழைத்து கலந்­து­ரை­யா­டினேன்.

இச்­சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ள அவர்­க­ளினால் இதன்­போது அனு­மதி வழங்­கப்­பட்­டது. அது மாத்­தி­ர­மல்­லாமல், இந்தக் கூட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்ட திருத்­தங்கள் தொடர்­பான முன்­மொ­ழி­வு­களும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.

இதற்­க­மைய, பல­தார திரு­மண விட­யத்தில் தற்­போ­தைய சூழ்­நி­லையில் எந்­த­வித மாற்­றமும் கொண்­டு­வ­ரப்­ப­ட­மாட்­டாது. அது போன்று காதி நீதி­மன்ற முறை­யிலும் எந்த மாற்றம் மேற்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. எனினும், இந்த முறை­மை­யினை வினைத்­தி­ற­னாக மேற்­கொள்ள சில நிபந்­த­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன், காதி நீதி­ப­தி­க­ளாக பெண்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன், காதி நீதி­ப­தி­களின் தக­மைகள் நீதிச் சேவைகள் ஆணைக்­கு­ழு­வி­னா­லேயே நிர்­ண­யிக்­கப்­படும்” என்றார்.
பாரா­ளு­மன்­றத்தில் 1951ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து திருத்தச் சட்­டத்தில் கடந்த பல தசாப்­தங்­க­ளாக எந்­த­வித திருத்­தமும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இதனால், குறித்த சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­ள­வென 2009 இல் அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால், ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது.

சுமார் 9 வருட கால இழு­ப­றியின் பின்னர் இக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள் இரு குழுக்­க­ளாகப் பிரிந்து அறிக்­கை­களை சமர்ப்­பித்­தனர். இதனால், சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழுவின் அறிக்­கையை அமுல்­ப­டுத்­து­வதில் இழு­பறி தோன்­றி­யது.
நீதி அமைச்­சர்­க­ளாக 2009ஆம் ஆண்டின் பின்னர் பதவி வகித்த பலரும் இச்­சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான தமது ஆர்­வத்தை வெளிப்­ப­டுத்­திய போதிலும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில்தான் 2019 இல் “ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கோஷத்­துடன் ஆட்­சிக்கு வந்த பொது­ஜன பெர­முன தலை­மை­யி­லான அர­சாங்கம் முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்துச் திருத்தச் சட்­டத்­தையும், காதி நீதி­மன்ற முறை­யி­னையும் இல்­லா­தொ­ழிப்­பதை தனது இலக்­கு­களில் ஒன்­றாகக் கொண்­டி­ருந்­தது.

இதற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரமும் வழங்­கி­யி­ருந்­தது. அது மாத்­தி­ர­மல்­லாமல், முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினால், ஞான­சார தேரரை தலை­வ­ராக கொண்டு தோற்­று­விக்­கப்­பட்ட “ஒரே நாடு ஒரே சட்டம்” செய­ல­ணியின் சிபா­ரி­சிலும் இந்த விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது.

இருப்பினும், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் போதும் முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்தவோ, ஒழிக்கவோ சாத்தியப்படவில்லை. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையுடன் இதில் திருந்தங்களை மேற்கொள்ள தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.