உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா?

0 316

ஏ.ஆர்.ஏ.பரீல்

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பினர் தொகையை 8000 லிருந்து 4000 ஆக குறைப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. அதற்­கான ஆரம்ப கட்ட நட­வ­டிக்­கைகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த முன்­னெ­டுப்­புக்­காக பிர­தமர் தினேஷ் குண­வர்­தன உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்­லை­களை மீள் நிர்­ணயம் செய்­வ­தற்­காக தேசிய எல்லை நிர்­ணய குழு­வொன்­றினை அண்­மையில் நிய­மித்­துள்ளார்.

உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை எதிர்­வரும் மார்ச் மாதத்­துக்கு முன்பு நடத்த வேண்­டி­யுள்ள நிலையில் ஏன் இந்த எல்லை நிர்­ணய குழு-? என பல தரப்­பி­லி­ருந்தும் கேள்வி தொடுக்­கப்­ப­டு­கி­றது. எல்லை நிர்­ண­யத்­திற்­கான தேசிய குழு­வொன்­றினை நிய­மித்­தி­ருப்­பது உள்­ளூ­ராட்சி தேர்­தலை பின்­தள்­ளு­வ­தற்கே என்று எதிர்­க்கட்­சிகள் அரசின் மீது குற்றம் சுமத்தி வரு­கின்­றன.

இதே­வேளை உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ணயம் தொடர்பில் அமைக்­கப்­பட்­டுள்ள தேசிய குழு, உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்­து­வது தொடர்­பான நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடை­யாக அமை­யுமா என்று தேர்­தல்கள் ஆணைக்­குழு ஆராய்ந்து வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது­தொ­டர்­பாக சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னையைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தேர்­தல்கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ளது.

தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரத்­துக்கு அமைய, சட்­டப்­ப­டி­யான தடைகள் எதுவும் இல்­லா­விட்டால் அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திக­திக்கு முன்பு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடாத்­தப்­பட வேண்டும். இந்த அறி­வித்­தலை வெளி­யிடும் அதி­காரம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு கடந்த செப்­டெம்பர் மாதம் 20 ஆம் திக­திக்குப் பின்னர் கிடைத்­துள்­ளது. தற்­போது இடம் பெற்­று­வரும் தேர்தல் இடாப்பு திருத்த நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பின்னர் தேர்­த­லுக்­கான அறி­வித்­தலை வெளி­யி­டு­வ­தற்கு தேர்­தல்கள் ஆணைக்­குழு எதிர்­பார்த்­துள்­ளது.

இந்­நி­லை­யிலே பொது­நிர்­வாகம், உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்சர் என்ற வகையில் பிர­தமர் தினேஷ் குண­வர்­தன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தலை­மையில் எல்லை நிர்­ணயம் தொடர்பில் தேசிய குழு­வொன்­றினை நிய­மித்­துள்ளார். இது பற்­றிய விசேட வர்த்­த­மானி அறி­வித்­த­லையும் வெளி­யிட்­டுள்ளார்.

இந்த எல்லை நிர்­ணய குழுவின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளாக ஜய­லத்­ரவி திசா­நா­யக்க, டப்­ளியூ.எம்.எம்.ஆர்.அதி­காரி, கே.தவ­லிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்தக் குழு எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 28 ஆம் திகதி வரை செயற்­ப­ட­வுள்­ளது. அவ்­வா­றெனில் எதிர்­வரும் மார்ச் 20 ஆம் திக­திக்கு முன்பு உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்த முடி­யுமா? என்­பது சந்­தே­கமே. இத­னாலே இந்தக் குழு தேர்­தலை நடத்தும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடை­யாக அமை­யலாம் என்று கூறப்­ப­டு­கி­றது.

நாடு தீவிர பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்­கி­யுள்­ளது. அத்­தி­யா­வ­சிய உண­வுப்­பொ­ருட்கள் உட்­பட மின்­கட்­டணம், போக்­கு­வ­ரத்து கட்­டணம் என்­பன உச்சம் தொட்­டுள்­ளன. மருந்து பொருட்­களின் விலைகள் பன்­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ளன. பல மருந்­து­க­ளுக்கு தட்­டுப்­பாடும் நில­வு­கி­றது. மக்கள் வறுமைக் கோட்­டுக்கும் அப்பால் தள்­ளப்­பட்­டுள்­ளனர். இவ்­வா­றான நிலையில் தேர்தல் ஒன்­றினை எதிர்­கொள்ள அர­சாங்கம் விரும்­ப­வில்லை. அவ்­வாறு தேர்­த­லொன்று நடத்­தப்­பட்டால் அர­சாங்கம் படு­தோல்­வியை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும். இத­னா­லேயே தேர்­தலைப் பிற்­போ­டு­வ­தற்­காக எல்லை நிர்­ணய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக எதிர்­கட்சி பிர­சாரம் செய்து வரு­கி­றது.

2012 ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ணயம் தொடர்பில் இவ்­வா­றான ஒரு குழு நிய­மிக்­கப்­பட்­டது. அக்­கு­ழுவின் பணிகள் 2015 ஆம் ஆண்டு நிறை­வுற்­றன. மேலும் 2017 ஆம் ஆண்டு கே.தவ­லிங்­கத்தின் தலை­மையில் மாகாண சபைகள் தொடர்பில் எல்லை நிர்­ண­யத்­துக்­காக குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. அக்­கு­ழுவின் அறிக்கை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைய­ளிக்­கப்­பட்­ட­துடன் அக்­கு­ழுவின் பணிகள் நிறை­வுக்கு வந்­தன. தற்­போது மஹிந்த தேசப்­பி­ரிய தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு­வுக்கு தனது அறிக்­கையை சமர்ப்­பிக்க 4 மாத­கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது கடந்த முதலாம் (நவம்பர்) திகதி முதல் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 28 ஆம் திக­தி­வரை கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ணய குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்­கா­கவே என எதிர்­கட்­சிகள் அர­சாங்­கத்தின் மீது குற்றம் சுமத்­து­வ­துடன் குழுவின் தலை­மைப்­பொ­றுப்­பினை ஏற்­றுள்ள மஹிந்த தேசப்­பி­ரிய மீதும் அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ளன. தலைமைப் பொறுப்­பினை ஏற்­றுக்­கொண்­டுள்­ளமை அர­சாங்­கத்தின் தேர்­தலை பிற்­போடும் முயற்­சிக்கு துணை­போ­வ­தாகும் என்று குற்றம் சுமத்­தி­யுள்­ளன.

மஹிந்த தேசப்­பி­ரிய அர­சியல் யாப்பின் அடிப்­ப­டையில் நிய­மிக்­கப்­பட்ட எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் தலைவர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இவர் இந்தப் பத­விக்கு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிய­மிக்­கப்­பட்டார். கடந்த அக்­டோபர் மாதம் 31 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் 21 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தச்­சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது. இத்­தி­ருத்­தச்­சட்டம் தற்­போது அமுலில் உள்­ளதால் எல்லை நிர்­ணய ஆணைக்­குழு உட்­பட அனைத்து சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களும் புதி­தாக நிய­மிக்­கப்­பட வேண்டும். என்­றாலும் புதி­தாக ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­ப­டும்­வரை இது­வரை காலம் இயங்கி வந்த ஆணைக்­கு­ழுக்கள் செயற்­படும். இதற்­கி­ணங்­கவே மஹிந்த தேசப்­பி­ரிய எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ராக தொடர்ந்தும் செயற்­ப­டு­கிறார்.

மேலும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு 2012 ஆம் ஆண்டு கலப்பு தேர்தல் முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இதன் கார­ண­மாக உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளது எல்­லை­களை நிர்­ண­யிப்­ப­தற்­காக 2012 இல் எல்லை நிர்­ணய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இக்­குழு 2015 இல் தனது அறிக்­கையை கைய­ளித்­தாலும் அந்த அறிக்கை தொடர்பில் சிக்­கல்கள் ஏற்­பட்­டதால் மீளாய்­வுக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு அந் ­ந­ட­வ­டிக்கை 2017 ஆம் ஆண்­டு­வரை நீடித்­தது.

தற்­போது உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­க­ளது எண்­ணிக்­கையை குறைப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. அதற்­கா­கவே எல்லை நிர்­ணய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. உ-றுப்­பி­னர்­க­ளது எண்­ணிக்­கையை குறைக்கும் பிரே­ர­ணைக்கு கடந்த அக்­டோபர் 17 ஆம் திகதி அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யது. இத­ன­டிப்­ப­டையில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்கை குறைக்­கப்­ப­ட­வுள்­ளது. அதன்­மூலம் உறுப்­பி­னர்­க­ளது எண்­ணிக்­கையும் குறை­ய­வுள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்­கையைக் குறைப்­ப­தென்றால் எல்லை நிர்­ணயம் மீள மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இத­ன­டிப்­ப­டை­யிலே எல்லை நிர்­ணய குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்­னைய சந்­தர்ப்­பங்­களைப் போன்று யாப்பின் அடிப்­ப­டையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களும் குழு­வுக்கு நிய­மிக்­கப்­ப­ட­வேண்­டு­மென ஆணைக்­குழு வேண்­டி­ய­தற்­கி­ணங்­கவே தான் இக்­கு­ழு­வுக்கு நிய­மனம் பெற்­றுள்­ள­தாக மஹிந்த தேசப்­பி­ரிய ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்தார்.

எல்லை நிர்­ணயம் தொடர்பில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள இத்­தே­சிய குழு­வுக்கும் தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­வ­தற்கும் எந்த சம்­பந்­த­மு­மில்லை. இக்­கு­ழு­வினால் ஒரு­போதும் தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­ப­டாது என குழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.
எமது குழுவின் பணிகள் நிறை­வுற்று உறுப்­பி­னர்கள் தொகை குறைக்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அடிப்­ப­டையில் தேர்­தலை நடத்­து­வதா? அல்­லது தற்­போது உள்ள 8000 உறுப்­பி­னர்­களின் அடிப்­ப­டையில் தேர்­தலை நடத்­து­வதா? என்­பதை தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவே தீர்­மா­னிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். தேவை­யேற்­படின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்­கையை குறைப்புச் செய்­வ­தற்கு முன்பும் தேர்­தலை நடத்­தலாம். எதிர்­வரும் பெப்­ர­வரி 28 ஆம் திக­திக்கு முன்பு எல்லை நிர்­ணய பணி­யினை நிறைவு செய்­யலாம் என்றும் அவர் தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்­கான தேவை தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு இல்லை என்­பது தெரி­கி­றது என்­றாலும் அர­சியல் வாதிகள் எல்லை நிர்­ண­யத்தை காரணம் காட்டி தேர்­தலைப் பின்­தள்ளும் நிலைமை காணப்­ப­டு­கி­றது.

மஹிந்த தேசப்­பி­ரிய தலை­மை­யி­லான எல்லை நிர்­ணய குழு தனது அறிக்­கையை குறிப்­பிட்ட தினத்­துக்கு முன்பு உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரிடம் கைய­ளித்­தாலும் அவ்­வ­றிக்கை பாரா­ளு­மன்­றத்­தினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் தற்­போது பெரும்­பான்மை பலம் பொது­ஜன பெர­மு­ன­வுக்கே இருக்­கி­றது. தற்­போது நாட்டில் நிலவும் நெருக்­கடி நிலைமை கார­ண­மாக அக்­கட்சி தேர்தல் ஒன்­றினை எதிர்­கொள்ள தயக்கம் காட்­டு­வ­தா­கவே தெரி­கி­றது. அதனால் எல்லை நிர்­ணய அறிக்­கையை அக்­கட்சி பாரா­ளு­மன்­றத்தில் நிரா­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்பும் உள்­ளது. அவ்­வாறு நிரா­க­ரிக்­கப்­பட்டால் மீண்டும் மீளாய்வுக் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு அறிக்கை திருத்­தங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட வேண்டும். இவ்­வா­றான நிலைமை காலத்தை நீடிக்கும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இல்லை.

முதன் முதல் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ணய செயற்­பா­டுகள் 2012 முதல் 2017 வரை நீடித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

2017இல் மாகாண சபை­க­ளுக்­கென கலப்பு தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தோடு மாகாண சபை அதிகார எல்லையை நிர்­ண­யிப்­ப­தற்­காக எல்லை நிர்­ணயம் மேற்­கொள்­ளப்­பட்­டது. கே. தவ­லிங்கம் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட எல்லை நிர்­ணய குழு தனது அறிக்­கையை 2018 ஆகஸ்ட் மாதம் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்­தது. ஆனால் பாரா­ளு­மன்றம் அவ்­வ­றிக்­கையை முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

அதன் பின்பு அவ்­வ­றிக்கை அப்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மை­யி­லான மீளாய்­வுக்­கு­ழு­வுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது. மீளாய்வுக் குழு இரண்டு மாதங்­களில் தனது அறிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­க­வேண்­டி­யி­ருந்­தது. ஆனால் இது நடைபெறவில்லை. அதனாலே மாகாண சபைகளினது தேர்தல் இதுவரை நடைபெறவில்லை.

அன்­றி­ருந்த அர­சியல் தலை­வர்­களே இன்றும் இருக்­கி­றார்கள். அன்­றுபோல் இன்றும் அர­சாங்கம் தேர்­தலை நடாத்­து­வதில் அக்­கறை கொள்­ள­வில்லை.
மஹிந்த தேசப்­பி­ரிய தலை­மை­யி­லான எல்லை நிர்­ணய குழு தனது அறிக்­கையை குறிப்­பிட்ட கால எல்­லைக்குள் சமர்ப்­பிக்க வேண்டும். அவ்­வாறு சமர்ப்­பிக்­கப்­பட்டால் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு தேர்­தலை நடத்­து­வ­தற்­குள்ள சவால்கள் குறிப்பிட்டளவு மட்டுப்படுத்தப்படும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.