பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுப்போம்

0 573

சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டு அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டுள்ள பலஸ்தீன மக்களுக்கு உலக மக்களிடமிருந்து ஆதரவைப் பெற்றுக் கொடுக்கவே இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இத் தினத்தைக் குறிக்கும் வகையில் இலங்கை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இம்முறை கொழும்பில் கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இக் காலப்பகுதியில் பலஸ்தீன மக்களின் அவல நிலை குறித்து நாமும் கவனம் செலுத்துவது அவசியமானதாகும்.

பலஸ்­தீனின் 13 மில்­லியன் சனத் தொகையில் அரை­வா­சிக்கும் அதி­க­மானோர் அக­தி­க­ளாக்­கப்­பட்­டுள்­ளனர். இஸ்ரேல் இது­வரை பலஸ்­தீ­னுக்கு வர­லாற்று ரீதி­யாக சொந்­த­மாக 27 ஆயிரம் சதுர அடி பரப்­ப­ள­வுள்ள நிலத்தை அப­க­ரித்­துள்­ளது. இது மொத்த நிலத்தில் 85 வீத­மாகும். மேற்குக் கரையில் மாத்­திரம் 2072 ஏக்கர் விவ­சாய நிலம் இஸ்­ரே­லினால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது மேற்குக் கரையின் மொத்த நிலப்­ப­ரப்பில் 37 வீத­மாகும். அங்கு 931.5 ஏக்கர் விவ­சாய நிலம் மாத்­தி­ரமே பலஸ்­தீ­னர்­க­ளுக்குச் சொந்­த­மா­க­வுள்­ளது. இது மேற்குக் கரையின் மொத்த நிலப்­ப­ரப்பில் 17 வீத­மாகும்.

இஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் தனது ஆக்கிரமிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தே வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் கட்டிடங்களையும் நிர்மாணித்து வருகிறது. பல குடியிருப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
பலஸ்தீன மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வது கூட முன்னரை விட இப்போது அதிகம் இஸ்ரேலினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பலஸ்தீன விவசாயிகளுக்கு கூட விவசாயத்தில் ஈடுபடும் உரிமை மறுக்கப்படுகிறது. ஒலிவ் மரங்கள் உட்பட பெறுமதிமிக்க மரங்களை இஸ்ரேல் அகற்றி வருகிறது.

இஸ்ரேலின் அடக்குமுறையினால் காஸாவில் வாழும் மக்களின் வாழ்க்கை சகல வழிகளிலும் நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மின்சாரம், மருந்துப் பொருட்கள் என அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் காஸா மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். காஸாவின் எல்லைப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீரை விநியோகிப்பதற்கான கட்டுப்பாட்டையும் இஸ்ரேலே வைத்திருக்கிறது. இதனால் உரிய காலத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு அறுவடை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

உலகின் மிகப் பெரிய திறந்த வெளிச் சிறைச்­சா­லை­யாக காஸா அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. காஸாவில் வாழும் 10 வீத­மான மக்கள் மாத்­தி­ரமே சுத்­த­மான குடி நீரைப் பெறு­கின்­றனர். மிகுதி 90 வீத­மானோர் மனிதப் பாவ­னைக்­கு­த­வாத மாச­டைந்த நீரையே பரு­கு­கின்­றனர். அதிலும் பலஸ்­தீ­னர்கள் தமக்குச் சொந்­த­மான நீரை இஸ்­ரே­லி­ட­மி­ருந்தே பணம் கொடுத்து வாங்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். மேற்குக் கரையின் பிர­தான நீர் மூல­மான அகுபர் மலை­யி­லி­ருந்து கிடைக்கும் நீரில் 80 வீதம் இஸ்­ரேலின் கட்­டுப்­பாட்­டி­லேயே உள்­ளது. அத்­துடன் மேற்குக் கரையில் பலஸ்­தீன நக­ரங்­க­ளுக்­கான நீர் விநி­யோகம் பல நாட்­க­ளுக்கு அல்­லது வாரக் கணக்கில் தொடர்ச்­சி­யாக இஸ்­ரே­லினால் துண்­டிக்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­வாறு பலஸ்­தீன மக்கள் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்­பினால் சொல்­லொணா துய­ரங்­களைச் சந்­தித்து வரு­கின்­றனர். இஸ்ரேல் தனது ஆக்­கி­ர­மிப்­பையும் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளையும் நிறுத்­து­வ­தற்குப் பதி­லாக தொடர்ந்தும் தீவி­ர­மாக முன்­னெ­டுத்தே வரு­கி­றது. இதனை உல­கி­லுள்ள எந்­த­வொரு நாட்டினாலும் தட்டிக் கேட்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

இந் நிலையில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டியது இலங்கையின் கடப்பாடாகும்.

இம்முறை ஐக்கிய நாடுகள் 77வது பொதுச்­சபைக் கூட்­டத்­தொ­டரில் இலங்கை சார்பில் உரை நிகழ்த்திய இலங்­கையின் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் அலி சப்ரி, சர்­வ­தேச சமூ­கத்தின் தலை­யீட்டில் பலஸ்­தீனப் பிரச்­சினை அவ­ச­ரமாத் தீர்க்­கப்­ப­ட­வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

‘‘பலஸ்­தீ­னர்­க­ளுக்கு தமது நிலப்­ப­ரப்­பெல்­லைக்குள் அவர்தம் அனைத்­து­வ­கை­யான‌ வளங்­க­ளையும் முழு­மை­யாகப் பயன்­ப­டுத்த மறுக்­க­மு­டி­யாத உரி­மை­யுள்­ளது போலவே அவர்­க­ளுக்­கான சுயா­தீன, சுய­நிர்­ண­ய­முள்ள தனித்­தே­ச­மொன்றை அமைத்­தா­ளவும் அவர்கள் உரி­மை­யுள்­ள­வர்கள். இதுவே இலங்­கையின் பலஸ்­தீனப் பிரச்­சினை தொடர்­பான மாறாத‌ கொள்­கை­ நி­லைப்­பா­டாகும்’’ என அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
‘‘பலஸ்­தீனப் பிரச்­சினை தொடர்பில் நிரந்­தர சமா­தானத் தீர்­வொன்­றுக்­கான அனைத்­து­வ­கை­யான முஸ்­தீ­பு­க­ளையும் அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­க­ளையும் பலஸ்­தீனம் இஸ்ரேல் ஆகிய இரு­த­ரப்­பி­ன­ரதும் பாது­காப்­பினை உத்­த­ர­வா­தப்­ப­டுத்தும் வகையில் மேற்­கொள்­ளப்­படும் அனைத்து பொறி­மு­றை­க­ளுக்கும் இலங்கை எப்­போதும் ஆத­ர­வ­ளிக்கும் உறு­தி­யான நிலைப்­பா­டி­லேயே உள்­ளது’’ என்றும் அவர் தெரி­வித்திருந்தார். அந்த வகையில் இரு-தேச ( Two-state solution ) உருவாக்க தீர்வு யோசனையையே இலங்கை எப்போதும் ஆதரிப்பதாகவும் அமைச்சர் சப்ரி தெரிவிதிருந்தார்.

இலங்கை எப்போதுமே பலஸ்தீனின் நட்பு நாடாகவே வரலாற்றில் தனது இடத்தைப் பதித்துள்ளது. இந் நிலைப்பாட்டில் எந்தவிதத்திலும் மாற்றங்கள் ஏற்பட அனுமதிக்க முடியாது. அதேபோன்று இலங்கை முஸ்லிம்களும் எப்போதுமே பலஸ்தீனுக்காக குரல் கொடுத்து வந்துள்ளனர். அந்தக் குரல் தொய்வடைய நாம் இடமளிக்க முடியாது.தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பலஸ்தீன் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் அந்தப் புனித மண்ணின் விடுதலை க்காக குரல் கொடுக்கவும் பிரார்த்திக்கவும் நாம் அனைவரும் முன்வர வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.