“ஸ்ட்ரெந்தன் எம்.எம்.டீ.ஏ’ அமைப்பின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை

திருத்தங்களுக்கான குழுத் தலைவர்

0 224

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முன்னாள் நீதி­ய­மைச்சர் சட்­டத்­த­ரணி அலி­சப்­ரி­யினால் நிய­மிக்­கப்­பட்ட முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­கான குழு மீதான, ‘ஸ்ட்ரெந்தன் எம்.எம்.டீ.ஏ. ( Strengthen MMDA) அமைப்பின் குற்­றச்­சாட்­டு­களும், குழுவின் பரிந்­து­ரைகள் மீதான அதி­ருப்­தியும் அடிப்­ப­டை­யற்­றவை. குழுவின் அறிக்­கையை படித்­துப்­பார்க்­காது இந்த அமைப்பு நீதி­ய­மைச்­சரைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கின்­றமை நகைப்­புக்­கு­ரி­ய­தாகும் என முன்னாள் நீதி­ய­மைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட்ட குழுவின் தலை­வ­ரான சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

‘எமது குழுவின் பரிந்­து­ரைகள் அடங்­கிய அறிக்கை முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி­சப்­ரிக்கும், தற்­போ­தைய நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷவுக்கும் மாத்­தி­ரமே கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அறிக்­கையில் என்ன அடங்­கி­யுள்­ளது என படித்துப் பார்க்­காது ஊகத்தின் பேரில் குழு­வையும், குழுவின் பரிந்­து­ரை­க­ளையும் விமர்­சிப்­பது அடிப்­ப­டை­யற்­ற­தாகும். குறிப்­பிட்ட அமைப்பு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்பில் அர­சியல் சுய­நலம் அல்­லது வேறு கார­ணங்­களின் நிமித்­தமே விமர்­சிக்­கி­றது. எதிர்ப்பு வெளி­யி­டு­கி­றது. இந்த அமைப்பைச் சேர்ந்த இரு பெண்கள், ஐக்­கிய இராச்­சி­யத்­தி­லி­ருந்து கொண்டு இங்­குள்ள அமைப்பின் உறுப்­பி­னர்­களை வழி­ந­டாத்­து­கி­றார்கள். இதன் பின்­ன­ணியில் நிகழ்ச்சி நிரல் ஒன்று இருப்­ப­தாகத் தெரி­கி­றது என்றும் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

‘ஸ்ட்ரெந்தன் எம்.எம்.டீ.ஏ’ அமைப்பு கடந்த வாரம் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷவைச் சந்­தித்து முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி­சப்­ரி­யினால் நிய­மிக்­கப்­பட்ட முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­கான குழுவின் அறிக்கை தொடர்­பாக விமர்­சித்­தது. அதி­ருப்தி வெளி­யிட்­டது. அத்­தோடு நாட்டில் நீண்ட கால­மாக நல்­லி­ணக்­கத்­தோடு வாழ்­கின்ற முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மை­க­ளையும் அடை­யா­ளங்­க­ளையும் இல்­லா­ம­லாக்கும் வகையில் பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன என சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

குழுவின் பரிந்­து­ரைகள் பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்­களின் அபி­லா­சை­களை பிர­தி­ப­லிக்­க­வில்லை. பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்­களின் அதி­ருப்­தியை பெற்றுக் கொண்­டுள்­ளது. அதனால் குழுவின் பரிந்­து­ரைகள் அமுல்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது. அறிக்கை நிரா­க­ரிக்­கப்­பட வேண்டும். குறித்த திருத்­தங்­க­ளுக்­கான ஆலோ­ச­னைக்­குழு கலைக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் ஸ்ட்ரெந்தன் எம்.எம்.டீ.ஏ அமைப்பு நீதி­ய­மைச்­சரைக் கோரி­யுள்­ளது.

திருத்­தங்­க­ளுக்­கான ஆலோ­சனைக் குழுவின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் மேலும் தெரி­விக்­கையில், ‘எனது தலை­மையில் குழு நிய­மிக்­கப்­பட்ட போது இவ்­வி­வ­காரம் என்ன நிலை­மையில் இருந்­தது என்­பதை ஸ்ட்ரெந்தன் எம்.எம்.டீ.ஏ அமைப்பு அறிந்­தி­ருக்க வேண்டும். அப்­போது கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்தார். ஞான­சார தேரரின் தலை­மையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. பல­தார மணம் இல்­லாமற் செய்­யப்­ப­டு­வ­தற்கும், காதிக்­கோடு முறைமை ஒழிக்­கப்­ப­டு­வ­தற்கும் அப்­போது அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்­தது. பெண்­களின் திரு­மண வய­தெல்லை 18ஆக அதி­க­ரிப்­ப­தற்கும், திரு­மணப் பதிவில் மணப்­பெண்ணின் கையொப்பம் பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும் என்­ப­தற்கும் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்­தது.

2021இல் ஜூலை மாதம் நீதி­ய­மைச்­ச­ரி­ட­மி­ருந்து எமது குழு­வுக்கு கடிதம் ஒன்று அனுப்­பப்­பட்­டது. அக்­க­டி­தத்தில் காதி­நீ­தி­மன்ற முறைமை மற்றும் பல­தார மணம் தொடர்பில் அமைச்­ச­ரவை தீர்­மானம் மேற்­கொண்­டுள்­ளதால் ஏனைய திருத்­தங்கள் தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­மாறு அக்­க­டி­தத்தில் கோரப்­பட்­டி­ருந்­தது.

என்­றாலும் எமது குழு காதி­நீ­தி­மன்ற முறைமை ஒழிக்­கப்­ப­டக்­கூ­டாது. மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும். காதி­நீ­தி­ப­தி­களின் கொடுப்­ப­ன­வுகள் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். அவர்­க­ளது தகை­மைகள் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். மஜிஸ்­திரேட் தரத்தில் காதி நீதி­ப­திகள் நிய­மிக்­கப்­பட வேண்டும் என்ற பரிந்து ரைகளை நாம் முன்­வைத்தோம்.

இதே­வேளை அமைச்­ச­ர­வையின் தீர்­மானம் கட்­டாயம் நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மென்றால் காதி­நீ­தி­ப­திகள் என்ற பெயர் மாற்றம் செய்­யப்­பட்டு அவர்கள் கொன்­சி­லி­யேட்டர் (Conciliator) ஆக நிய­மிக்­கப்­பட வேண்டும் என்றும் பரிந்­துரை செய்­துள்ளோம். இவ்­வாறு காதி­நீ­தி­மன்ற முறை­மையை இல்­லாமற் செய்­யாது மாற்று பெயரில் இம்­மு­றை­மையைத் தொடரும் வகை­யிலே எமது சிபா­ரிசு அமைந்­துள்­ளது.

இவ்­வா­றான நிலையில் குறிப்­பிட்ட அமைப்பு அறிக்­கையை வாசிக்­காமல் எங்களை எவ்­வாறு விமர்­சிக்க முடியும். எமது குழுவின் அறிக்­கையை அவர்கள் பெற்றுக் கொள்­வதில் பிரச்­சி­னைகள் இருந்தால் தகவல் அறியும் சட்­டத்தின் கீழ் (RTI) அவர்கள் அறிக்­கையைக் கோர முடியும். இதை விடுத்து குறிப்­பிட்ட அமைப்­பினர் சுய­நலன் கருதி ஏதோவோர் நிகழ்ச்சி நிரலின் கீழ் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தின் திருத்­தங்கள் தொடர்பில் விமர்­சிப்­பதை ஒரு போதும் அனு­ம­திக்க முடி­யாது.

தசாப்­த­கா­ல­மாக இத்­தி­ருத்­தங்கள் விமர்­சிக்­கப்­பட்டு, சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வது சமூ­கத்­துக்குப் பாதகமாகவே அமையும்’ என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.