தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தராக பாயிஸ் முஸ்தபா

0 215

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பிர­பல சட்­ட­மேதை ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் புதிய வேந்­த­ராக ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

கண்டி மாவட்­டத்தின் மட­வ­ளையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இவர் சட்­டத்­த­ரணி மர்ஹும் எஸ்.எம்.முஸ்­த­பாவின் மக­னாவார். இவர் கடந்த செவ்­வாய்­க்கி­ழமை 15 ஆம் திகதி முதல் எதிர்­வரும் 5 வரு­ட­ கா­லத்­துக்கு இப்­ப­த­விக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இவர் ஐக்­கிய இராச்­சி­யத்­துக்­கான இலங்­கையின்‌ உயர் ஸ்தானி­க­ராக 2002 முதல் 2005 வரை கட­மை­யாற்­றி­யுள்ளார். மேலும் இலங்­கையின் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ராக 2000 ஆம் ஆண்டு முதல் 2003 வரை பதவி வகித்­துள்ளார். கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் கலா­நி­தி­ப் பட்டம் பெற்­றுள்ள இவர் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவில் ஒரு பிரி­வுக்கு தலை­வ­ரா­கவும் பதவி வகித்­துள்ளார்.

இவர் முன்னாள் அமைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி, பைசர் முஸ்­த­பாவின் தந்­தை­யாவார். பைசர் முஸ்­தபா ஜனா­தி­ப­தியின் சட்ட ஆலோ­ச­க­ராக 2015 ஆம் ஆண்டு நிய­மிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பல்­க­லைக்­க­ழக வேந்­த­ராக நியமிக்கப்பட்டுள்ள பாயிஸ் முஸ்தபாவின் மகளும் ஓர் சட்டத்தரணியாவார். இவரது குடும்பம் நான்-கு தலைமுறை யாக சட்டத்தரணிகளைக் கொண்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.