ஞானசாரரின் செயலணிக்காக 43 இலட்சம் அரச நிதி செலவீடு

‘விடிவெள்ளி’யின் தகவல் கோரிக்கைக்கு ஜனாதிபதி செயலகம் பதில்

0 214

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணிக்­காக 43 இலட்சம் ரூபா அரச நிதி செல­வி­டப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி செய­லகம் தெரி­வித்­துள்­ளது.
இந்த செய­ல­ணிக்­காக செல­வி­டப்­பட்ட நிதி தொடர்பில் விடி­வெள்ளி பத்­தி­ரிகை சமர்ப்­பித்த தக­வ­ல­றியும் விண்­ணப்­பித்­திற்­க­மை­வா­கவே இந்த விபரம் தெரி­ய­வந்­துள்­ளது.

2021.10.26 ஆம் திகதி முதல் 2022.06.17 ஆம் திகதி வரை இச் செய­லணி இயங்­கி­ய­தா­கவும் இக் காலப்­ப­கு­தியில் இச் செய­ல­ணிக்­காக அர­சாங்­கத்தின் திரண்ட நிதி­யத்­தி­லி­ருந்து 43 இலட்­சத்து 22 ஆயி­ரத்து 589 ரூபா 44 சதம் செல­வி­டப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி செய­ல­கத்தின் தகவல் அலு­வலர் எஸ்.கே. சேனா­தீ­ர­வினால் வழங்­கப்­பட்ட பதிலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே இச் செய­ல­ணியின் கால எல்லை முடி­வ­டை­வ­தற்குள் அதன் உறுப்­பி­னர்­க­ளான பேரா­சி­ரியர் தயா­னந்த பண்டா, விரி­வு­ரை­யாளர் மொகமட் இந்­திகாப் மற்றும் அசீஸ் நிசார்தீன் ஆகியோர் பதவி வில­கி­ய­தா­கவும் அதில் குறிப்பிடப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை குறித்த செய­ல­ணியின் இறுதி அறிக்கை இது­வரை வெளி­யி­டப்­ப­டா­துள்ள நிலையில், குறித்த அறிக்­கையின் பிரதி ஒன்றை வழங்­கு­மாறு முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கைக்கு சாத­க­மான பதில் கிடைக்கப் பெற­வில்லை. “இறுதி அறிக்­கையில் பல்­வேறு இனங்­களைச் சேர்ந்­த­வர்கள் முன்­வைத்த கருத்­துக்­களும் யோச­னை­களும் உள்­ள­டங்­கு­கின்­றன. இந்த அறிக்­கையில் உள்ள தக­வல்­களை வெளிப்­ப­டுத்­து­வதன் மூலம் நாட்டின் பாது­காப்­பிற்கும் தேசிய பாது­காப்­பிற்கும் ஏதேனும் பாதிப்­புகள் ஏற்­ப­ட­லா­மென்­பதால் இந்த அறிக்­கையின் பிர­தி­களை வழங்­கு­வதை தகவல் கோரிக்­கைக்­கான சட்­டத்தின் 5 (1) அ, 5 (1) எ மற்றும் 5(1) (ஆ), i பிரி­வு­களின் ஏற்­பா­டு­களின் கீழ் நிரா­க­ரிக்­கிறேன்” என குறித்த அதி­கா­ரி­யினால் பதில் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அறிக்­கையை வழங்­காமை தொடர்பில் ஜனா­தி­பதி செய­ல­கத்தின் பெயர் குறிக்­கப்­பட்ட அதி­கா­ரிக்கு ‘விடி­வெள்ளி’ பத்­தி­ரி­கை­யினால் மேன்­மு­றை­யீடு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.