குற்றமற்றவர்களை விடுவிப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமுள்ளது

0 212

நாட்டின் குற்­ற­வியல் நடை­மு­றையின் கீழ், பொலிஸ் விசா­ர­ணை­களை மதிப்­பி­டு­வ­தற்கும், சந்­தேக நபர்­களை குற்றம் சாட்­டவோ அல்­லது விடு­விக்­கவோ சட்­டமா அதி­ப­ருக்கு அதி­காரம் உள்­ளது என ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.எம். சுஹைர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதே­வேளை உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் சட்­டமா அதி­பரின் சிபா­ரி­சுடன் விடு­விக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் சிலர் முன்­வைக்கும் விமர்­ச­னங்­கள் குறித்து தாம் கவலையடைவதாகவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

21.04.2019 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து 2000 க்கும் மேற்­பட்ட முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்­டனர். இவர்­களில் பலர் தவ­றான தக­வல்கள் கார­ண­மா­கவே கைது செய்­யப்­பட்­டனர். இவ்­வாறு கைதா­ன­வர்­களில் சிலர் பின்னர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த பொலி­சா­ராலும் சிலர் சட்­டமா அதி­ப­ராலும் மேலும் சிலர் நீதி­மன்­றத்­தாலும் விடு­விக்­கப்­பட்­டனர். எனினும் இன்னும் சிலர் கடந்த மூன்­றரை ஆண்­டு­க­ளுக்கும் மேலாக பிணை வழங்­கப்­ப­டா­மலும், குற்­றஞ்­சாட்­டப்­ப­டா­மலும் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் பலர் ஏழைக் குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.

நாட்டின் குற்­ற­வியல் நடை­மு­றையின் கீழ், பொலிஸ் விசா­ர­ணை­களை மதிப்­பி­டு­வ­தற்கும், ஒவ்­வொரு வழக்­கிலும் சாட்­சியப் பொருட்கள் கிடைப்­பது அல்­லது கிடைக்­கா­மையைப் பொறுத்து சந்­தேக நபர்­களை குற்றம் சாட்­டவோ அல்­லது விடு­விக்­கவோ அல்­லது முற்­றாக விடு­தலை செய்­யவோ சட்­டமா அதி­ப­ருக்கு அதி­காரம் உள்­ளது.
நியா­ய­மான ஆதா­ரங்கள் உள்­ள­வர்­களை மட்­டுமே குற்­றஞ்­சாட்­டவும், ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டுகள் அல்­லது ஆதா­ரங்கள் இல்­லாமல் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை விடு­விக்­கவும் சட்­டமா அதிபர் கட­மைப்­பட்­டுள்ளார்.

குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்­களின் நெருங்­கிய உற­வி­ன­ராக இருந்­த­மைக்­காக கைது செய்­யப்­பட்ட பல முஸ்லிம் பெண்கள் உட்­பட சந்­தேக நபர்கள் பலர் குற்­றஞ்­சாட்­டப்­ப­டா­மலோ அல்­லது விடு­விக்­கப்­ப­டா­மலோ கிட்­டத்­தட்ட மூன்­றரை ஆண்­டு­க­ளாக தடுப்புக் காவலில் உள்­ளனர்.

இந்த வழக்­குகள் தொடர்பில் சட்­டமா அதிபர் அவ­ச­ர­மாக கவனம் செலுத்­து­வ­துடன் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் ஈடு­பட்­ட­தற்­கான எந்த ஆதா­ரமும் இல்­லாத நிலையில் கொடூ­ர­மான பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக விதிகள்) சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை நீதியின் அடிப்­ப­டை­யிலோ அல்­லது பிணை­யிலோ உடன் விடு­விக்க ஆவன செய்ய வேண்டும்.

அவர்­களில் பலர் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­திற்கு இந்த ஆண்டு முன்­வைக்­கப்­பட்ட திருத்­தத்தின் கீழ் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் பிணை பெறு­வ­தற்கு சட்­டத்­த­ர­ணி­களைத் தக்­க­வைத்துக் கொள்ள முடி­யாத நிலையில் உள்­ளனர். ஏனைய குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்­க­ளு­ட­னான தொடர்­புகள் மற்றும் உற­வு­களின் கார­ண­மா­கவே தாம் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர்கள் முறை­யி­டு­கின்­றனர். மேலும் சில வழக்­கு­களில் பொலிசார் ஆதா­ரங்­களைத் தேடு­கின்­றனர், சிலர் வழக்­கு­களில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

21/4 தாக்­கு­தல்கள் குறித்து அதி­கா­ரி­க­ளுக்குத் தெரி­விக்கத் தவ­றி­ய­தாக எங்கள் மீது குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இருப்­பினும் ஈஸ்டர் தாக்­கு­தல்கள் அன்­றைய அர­சாங்­கத்­திலும் இந்­தி­யாவின் ‘ரோ’விலும் உள்ள சிலரைத் தவிர நாட்டில் உள்ள அனை­வ­ருக்கும் அதிர்ச்­சி­ய­ளிக்கும் ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது என்­பதை புல­னாய்­வா­ளர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.