-காதி நீதிபதிகளாக ஆண்களை மட்டும் இணைத்துக்கொள்ளும் வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்திய மனுக்கள் – விசாரணைகளுக்கு ஏற்காது நிராகரித்தது உயர் நீதிமன்று

0 279

( எம்.எப்.எம்.பஸீர்)
காதி நீதி­ப­தி­க­ளையும், காதி மேன் முறை­யீட்டு சபை உறுப்­பி­னர்­க­ளையும் நிய­மனம் செய்யும் வித­மாக முஸ்லிம் ஆண்­க­ளிடம் இருந்து மட்டும் விண்­ணப்­பங்­களைக் கோரும் வர்த்­த­மானி அறி­வித்­தலை சவா­லுக்கு உட்­ப­டுத்­திய இரு அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை உயர் நீதி­மன்றம் விசா­ர­ணை­க­ளுக்கு ஏற்­கா­ம­லேயே நிரா­க­ரித்­தது.

கடந்த ஒக்­டோபர் 7 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலை திருத்தி, பெண்­களும் குறித்த இரு பத­வி­க­ளுக்கும் விண்­ணப்­பிக்க முடி­யு­மான வகையில் உத்­த­ர­வொன்­றினை பிறப்­பிக்­கு­மாறு கோரி, இரு முஸ்லிம் பெண் செயற்­பாட்­டா­ளர்கள் தாக்கல் செய்த இரு அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களே இவ்­வாறு நிரா­க­ரிக்­கப்­பட்­டன.
நீதி­ய­ரசர் ப்ரீத்தி பத்மன் சூர­சேன தலை­மை­யி­லான ஷிரான் குண­ரத்ன மற்றும் அச்­சல வெங்­கப்­புலி ஆகிய நீதி­ய­ர­சர்­களை உள்­ள­டக்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் இந்த மனுக்­களை பரி­சீ­லனை செய்­தது. பரி­சீ­ல­னையின் பின்னர், மனுக்­களை விசா­ர­ணைக்கு ஏற்­காது நிரா­க­ரிப்­ப­தாக குறித்த நீதி­ய­ர­சர்கள் குழாம் அறி­வித்­தது.

காதி நீதி­ப­தி­க­ளாக பெண்­க­ளுக்கு விண்­ணப்­பிக்க உள்ள தடையை நீக்கி உத்­த­ர­வி­டு­மாறு கோரப்­பட்­டி­ருந்த இந்த மனுக்­களில் பிர­தி­வா­தி­க­ளாக நீதிச் சேவை ஆணைக் குழுவின் தலைவர், அதன் செய­லாளர், உதவிச் செய­லாளர் மற்றும் சட்ட மா அதிபர் உள்­ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்,.

இந் நிலையில், மனுக்களை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம், அவற்றை விசாரணைக்கு ஏற்காது நிராகரித்தது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.