கிரிக்கெட்டில் இலங்கையா – பாகிஸ்தானா?

0 392

மர்சூக் அகமட்லெவ்வை

இன்று உல­கையே தனது ஆளு­மையால் கவர்ந்­தி­ருக்­கின்­றது கிரிக்கெட். கிரிக்­கெட்­டா­னது டெஸ்ட் என்ற இடத்­தி­லி­ருந்து சுருங்கி ஒரு நாள் போட்­டி­யிக இப்­போது அது “ டுவென்டி 20” என்று மிகவும் குறு­கிய நேரத்­திற்­கான ஒரு போட்­டி­யாக ஆகி­யி­ருக்­கின்­றது.

எமது இலங்­கையும் இந்த சர்­வ­தேச போட்­டி­களில் 1980களில் இருந்து பங்­கு­பற்றி வரு­கின்­றது. இவ்­வாறு இலங்கை போட்­டி­களில் பங்­கெ­டுக்கும் போது பாகிஸ்­தா­னோடு போட்­டி­யி­டு­கின்ற சந்­தர்ப்­பங்கள் பல ஏற்­ப­டு­கின்­றன. அவ்­வாறு பாகிஸ்­தா­னோடு விளை­யா­டு­கின்ற சந்­தர்ப்­பங்­களில் எமது முஸ்­லிம்­களில் சிலர் பாகிஸ்­தா­னுக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­வ­தையும், அவ்­வாறு செயற்­ப­டு­வது விச­னத்­திற்­குள்­ளா­வ­தையும் நாம் காண்­கின்றோம். நாங்கள் இவ்­வா­றான நிலையில் பாகிஸ்­தானை ஆத­ரிப்­ப­தற்­கான பிர­தான நோக்கம் இலங்கை கிரிக்கெட் குழாமில் முஸ்­லிம்கள் இடம்­பெ­ற­வில்லை. முஸ்­லிம்கள் மீதுள்ள துவேசம் கார­ண­மாக இலங்கை கிரிக்கெட் கட்­டு­பாட்டு சபை இலங்கை அணியில் விளை­யாட முஸ்­லிம்­களை இணைத்துக் கொள்­ள­வில்லை என்­பது தான் எம்­மவர்கள் சொல்­கின்ற கார­ண­மாகும்.

இலங்கை கிரிக்­கெட்டில் எம்­மவா;களை இணைத்துக் கொள்­வ­தற்கு துவே­சம்தான் கார­ணமா? என நாம் ஆராய வேண்டும். இலங்கை உதைப்­பந்­தாட்ட அணியில் 8 முஸ்­லிம்கள் இணைத்துக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அது­மாத்­தி­ர­மல்ல இலங்கை கால்­பந்­தாட்ட அணியில் அமா­னுல்லாஹ், ஹசீம்தீன், பக்கீர் அலி போன்­றவா;கள் அணித் தலைவர்களாக இருந்­துள்­ளார்கள். இலங்கை உதைப்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் தற்­தோ­தைய தலை­வ­ராக ஜஸ்வர் உமர் இருக்­கின்றார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் ஒரு தமிழ் பெண்­மனி தலை­வி­யாக செயற்­பட்டு ஆசிய கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தி­ருக்­கின்றார். ஏன் இலங்கை அணியில் முத்­தையா முர­ளி­தரன் என்ற தமிழர் ஒரு கலக்கு கலக்­கினார். முத்­த­தையா முர­ளி­தரன் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்த கால­கட்­ட­மா­னது இலங்கை அர­சுக்கும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கும் உச்ச கட்ட யுத்தம் நடை­பெற்ற கால­மாகும். தமி­ழர்­க­ளோடு வெறுப்பும், துவே­சமும் அதி உச்­சத்தில் இருந்த காலம். இவ்­வா­றான கால கட்­டத்தில் இலங்கை அரசு தமி­ழர்கள் மீதி­ருந்த துவே­சத்­தையும் தாண்டி மிகவும் திற­மை­சா­லி­யாக இருந்த முத்­தையா முர­ளி­தரன் என்ற தமி­ழரை கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொண்­டது. முர­ளி­தரன் இணைந்த கால கட்­டத்தில் இலங்கை அரசு முஸ்­லிம்­க­ளோடு கொஞ்சிக் குலா­விய கால­கட்­ட­மாகும். முஸ்­லிம்­க­ளுக்கு அமைச்­ச­ர­வையில் உயர்ந்த அந்­தஸ்­துக்­களை வழங்­கிய கால கட்­ட­மாகும்.

இலங்கை கிரிக்கெட் அணியில் முஸ்­லிம்­க­ளுக்கு சந்­தர்ப்பம் வழங்­கிய போதும் அவர்கள் பிர­கா­சிக்­காத கார­ணத்தில் கிடைத்த சந்­தர்ப்­பத்தை இழந்­தார்கள். உதா­ர­ண­மாக நவீட் நவாஸ், பர்வேஸ் மஹ்றூப் போன்­றவா;களுக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டது. சுமார் பத்து போட்­டி­களில் விளை­யாட சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டது. ஆனால் இவா;கள் ஒரு செஞ்­ச­ரி­யா­வது அடித்­தார்­களா? அல்­லது ஒரு அரை செஞ்­ச­ரி­யா­வது அடிக்க வேண்­டாமா? அது­வு­மில்லை அணியை வெற்றிப் பாதைக்கும் இட்டுச் செல்­ல­வில்லை. இவா;களுக்கு கிடைத்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்­த­வில்லை. எங்­க­ளி­டத்தில் திறமை இருந்தால் எங்­களை யாரும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது.

நாங்கள் ஒரு சிறு­பான்மை இனம் என்­ற­ப­டியால் எமது திற­மைகள் மற்­றவர்களை விட ஒரு படிமேல் காட்­டி­னால்தான் இலங்கை அணிக்கு சந்­தர்ப்பம் தரு­வார்கள். உங்­க­ளி­டத்தில் அசா­தா­ரண திறமை இருந்தால் யாரும் மட்டம் தட்ட முடி­யாது. சூரி­யனைக் கையால் மறைக்க முடி­யுமா? முடி­யாது. அதேபோல் நாங்கள் அசா­தா­ரண திற­மை­களைக் கொண்டு பிர­கா­சிக்கும் போது யாரும் கையால் மறைக்க முடி­யாது. அப்­படி ஒரு திற­மை­சாலி இருந்து அவ­ருக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் விளை­யாட சந்­தர்ப்பம் வழங்­கா­விட்டால் அவரை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அவ­ருக்­காக உலகம் முழு­வதும் இருந்து குரல் எழும். அவ­ருக்கு இலங்­கையில் சந்­தர்ப்பம் வழங்கா விட்டால் அவுஸ்­தி­ரே­லி­யாவோ, ஐக்­கிய இராச்­சி­யமோ சிட்­டிசன் கொடுத்து தங்கள் கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொள்­வார்கள். அமெ­ரிக்கா ஒலிம்­பிக்கில் தங்கம் குவிப்­பது வேறு நாட்டுப் பிர­ஜை­களை தங்­க­ளது நாட்டு பிர­ஜை­க­ளாக்­கித்தான்.

அவ்­வா­றான நாடு­களில் நாம் எமது திற­மையை நிரூ­பித்தால் பின்னர் இலங்கை அணியே எங்கள் கால்­களில் விழுந்து வட்டா வைத்து எம்மை இலங்­கைக்கு அழைத்து தங்கள் கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொள்­வார்கள். இன்று இலங்கை அணி எந்தத் திற­மை­சாலி வந்து எங்­களைக் காப்­பாற்­றுவார் என்ற நிலையில் இருக்­கி­றது. மேய்ப்­ப­வ­னாக நாங்கள் சென்றால் எங்­களை இணைத்துக் கொள்­வார்கள்.

எனவே முதலில் நாம் திற­மை­களை வளர்த்து கௌண்டி போட்­டி­களில் விளை­யாடி கிரிக்கெட் உலகில் அசைக்க முடி­யாத ஜாம்­ப­வான்­க­ளாக வேண்டும். நாம் பல­வீ­ன­மாக ஆட்­க­ளாக இருந்து கொண்டு துவே­சத்தால் மட்டும் தான் எம்மை இணைத்துக் கொள்­ள­வில்லை என்று கோபித்துக் கொண்டு பாகிஸ்­தானை ஆத­ரிக்கக் கூடாது.

ஒரு­முறை இந்­தி­யாவில் இடம்­பெற்ற இலங்கை, அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டி­யின்­போது முத்­தையா முர­ளி­த­ரனின் பந்து வீச்சு பிழை­யென நடுவர் சொன்னபோது அணித் தலைவர் அர்­ஜுனா ரண­துங்க நடு­வரை நோக்கி கையை நீட்டி, நீட்டி மிகக் கார­சா­ர­மாக தனது ஆட்­சே­ப­னையை தெரி­வித்தார். அர்­ஜுனா துவேசம் உள்­ளவர் என்றால் முர­ளிக்கு எதி­ராக வந்த இந்தக் குற்­றச்­சாட்டை வைத்து முர­ளியை அணி­யி­லி­ருந்து தூக்­கி­யி­ருக்க முடியும்.

இலங்கை கிரிக்கெட் ஜாம்­ப­வான்­க­ளான சங்­கக்­கார, ஜெய­சூ­ரிய, மஹேல போன்றோர் கொவிட்-19 இல் பாதிக்­கப்­பட்டு மர­ணித்த முஸ்லிம் ஜனா­ஸாக்­களை எரிப்­ப­தற்கு கடும் ஆட்­சே­பனை செய்­தார்கள். சங்­கக்­கார “கொவிட்டில் மர­ணித்த ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு முஸ்­லிம்­க­ளுக்கு சகல உரி­மை­களும் உண்டு” என்று சொன்னார். இவ்­வாறு இவா;கள் பெரும்­தன்­மை­யாக முஸ்லிம் சமூ­கத்­திற்கு குரல் கொடுக்­கின்ற இந்த சூழலை நாம் நமது துவே­சத்தைக் காட்டி கெடுத்துக் கொள்­ளக்­கூ­டாது.

மறு­புறம் விளை­யாட்டை வைத்து தேசப்­பற்றை அள­வி­டக்­கூ­டாது என்று இன்னும் எம்­மவா;கள் சிலர் முக­நூலில் எழு­து­கின்­றார்கள். இது விளை­யாட்­டு­தானே. இதிலே நாங்கள் பாகிஸ்­தானை ஆத­ரிப்­பதால் எங்­க­ளது தேசப்­பற்று குறை­யாது என்­கின்­றார்கள். நாங்கள் என்ன நியாயம் சொன்­னாலும் சிங்­க­ளவர்கள் எங்­க­ளுக்கு தேசப்­பற்று இல்­லை­யென்றே சொல்­வார்கள். நாங்கள் இலங்கை பிர­ஜைகள் இல்­லை­யென்று சொல்­வ­தற்கு எங்­களில் என்ன பிழை பிடிக்­கலாம் என்று திரி­பவா;களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்­பாக அமையும்.

நான் பஹ்­ரைனில் வேலை வாய்ப்பு பெற்­றி­ருந்­த­போது நாங்கள் இலங்கை – பாகிஸ்தான் போட்­டியின் போது பாகிஸ்­தா­னுக்கு ஆத­ர­வாக செயற்­பட்டால் இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் போன்ற நாடு­களைச் சேர்ந்­தவா;கள் எங்­களை வினோ­த­மாக பார்ப்­பார்கள். “ஏன் நீங்கள் பாகிஸ்­தானை ஆத­ரிக்­கின்­றீர்கள்? நீங்கள் பாகிஸ்­தானை ஆத­ரிக்க வேண்டாம். இனிமேல் நீங்கள் இலங்­கை­யைத்தான் ஆத­ரிக்க வேண்டும். அதுதான் நாட்­டுப்­பற்று.” என்று பாகிஸ்தான் பிர­ஜையே எங்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­குவார். வெளி­நா­டு­களில் இருந்­தால்தான் தெரியும். நாங்கள் அங்கு சிங்­க­ளவர், தமிழர், முஸ்லிம் என்று பிரிந்­தி­ருக்க மாட்டோம். இலங்­கை­யர்கள் என்ற ரீதியில் ஒருவருக்கொருவா; உதவியாக இருப்போம். எங்களுக்குள் எந்தவித துவேசமும் இருக்காது.

துவேசம் யாரிடத்தில் இருக்கின்றது என்றால், அது எங்களிடத்தில்தான் இருக்கிறது. நாங்கள் இலங்கை கிரிக்கெட் அணியை இலங்­கை­யர்கள் விளை­யா­டு­கி­றார்கள் என்று பார்ப்­ப­தில்லை. சிங்­க­ள­வர்கள் விளை­யா­டு­கி­றார்கள் என்றே பார்க்கின்றோம். எனவே சிங்களவர்கள் விளையாடுகின்றார்கள் என்று பார்க்காமல் இலங்கையர்கள் விளையாடுகிறார்கள் என்று பார்ப்போம். ஏனெனில் இலங்கையை உலக நாடுகளுக்கு அதிகமாக தெரிய வந்தது கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை இலங்கை வென்ற பின்தான். எனவே நாம் இலங்கையராக மீண்டும் எழுவோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.