முஸ்லிம் தனியார் சட்டதிருத்தங்கள் இனியாவது நிறைவேறுமா?

0 526

ஏ.ஆர்.ஏ.பரீல்

எமது நாட்டில் அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென நீண்­ட­ கா­ல­மா­கவே கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டு­வந்­துள்­ளன. இடைக்­கிடை திருத்­தங்கள் தொடர்பில் ஆராய்ந்து சிபா­ரி­சு­களை முன்­வைப்­ப­தற்கு குழுக்­களும் நிய­மிக்­கப்­பட்­டன.

இவ்­வா­றான முன்­னெ­டுப்­பு­களில் 2009ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் நிய­மிக்­கப்­பட்ட குழுவைக் குறிப்­பி­டலாம். முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக இக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. குழுவின் தலை­வ­ராக ஓய்வு பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். இக்­கு­ழுவில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, அப்­போ­தைய செய­லாளர் மர்ஹூம் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் மற்றும் நீதி­ப­திகள், சிரேஷ்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிகள், கல்­வி­மான்கள், முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்­ன­ணியின் பிர­தி­நி­திகள் என்போர் உட்­பட மொத்தம் 18 உறுப்­பி­னர்கள் அங்கம் பெற்­றி­ருந்­தனர். 2009 இல் தனது பணி­களை ஆரம்­பித்த இக்­குழு 2018 ஜன­வரி மாதமே தனது அறிக்­கையைச் சமர்ப்­பித்­தது. இதுவோர் நீண்ட பய­ண­மாகும். இந்தத் தாம­தத்­திற்கு எதி­ராக முஸ்லிம் பெண்கள் அமைப்­புகள் அமைதி ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் நடாத்­தின. இத­னை­ய­டுத்தே அறிக்கை அப்­போ­தைய (2018) நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

இரு வேறு­பட்ட அறிக்­கைகள்
முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபா­ரிசு குழுவின் தலைவர் சலீம் மர்சூப் குழு அங்­கத்­த­வர்­களை ஒரே நிலைப்­பாட்டில் வைத்­துக்­கொள்ள முயற்­சித்­தாலும் அது அவ­ரினால் முடி­யாமற் போனது. குழு­விற்குள் சில திருத்­தங்­களில் முரண்­பா­டுகள் உரு­வா­கின. குழுவின் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு அங்­கத்­த­வர்­களின் கையொப்­பங்கள் அறிக்­கையில் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த நிலையில் அங்­கத்­த­வர்­களில் சிலர் தனி­யாக வேறோர் அறிக்­கையைத் தயா­ரித்து தலை­வ­ரிடம் கைய­ளித்­தனர். அதில் 9 பேர் கையொப்­ப­மிட்­டி­ருந்­தனர்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி இந்த அறிக்­கையை சலீம் மர்­சூ­பிடம் கைய­ளித்தார். அறிக்­கையில் ரிஸ்வி முப்தி, உலமா சபையின் செய­லாளர் எம்.எம்.ஏ. முபாரக், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா, நீதி­பதி எ.டப்­ளியு.ஏ. சலாம், நீதி­பதி மொஹமட் மக்கி, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சிப்லி அஸீஸ், கலா­நிதி எம்.ஏ.எம். சுக்ரி, சட்­டத்­தணி நத்வி பஹா­வுதீன் மற்றும் பஸ்லட் சஹாப்தீன் ஆகியோர் இதில் கையொப்­ப­மிட்­டி­ருந்­தனர்.
குழுவின் தலைவர் சலீம் மர்சூப், செய­லாளர் உட்­பட ஏனைய 9 பேரும் மற்­றைய குழுவில் அடங்­கி­யி­ருந்­தனர். குழுவின் தலைவர் தயா­ரித்த அறிக்­கையில் அவர்கள் மாத்­திரம் கையொப்­ப­மிட்­டி­ருந்­தனர்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் 2018ஆம் ஆண்­டிலே திருத்­தங்­களைச் செய்­தி­ருக்க முடியும். குறித்த குழு எட்டு வரு­டங்­க­ளாக ஒன்று கூடி கருத்­துக்­களை பரி­மாறி செயற்­பட்­டாலும் இறு­தியில் சில விட­யங்­களில் முரண்­பட்டுக் கொண்­ட­மையின் பிர­தி­ப­ல­னையே நாம் இன்று அனு­ப­விக்­கிறோம். திருத்­தங்­க­ளுக்­காக போராடிக் கொண்­டி­ருக்­கிறோம்.

நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் இரு அறிக்­கைகள் கைய­ளிக்­கப்­பட்­டதால் அமைச்சர் எந்த அறிக்­கையை ஏற்­பது என்று திண்­டா­டினார். இறு­தியில் அறிக்­கையை ஆராய்ந்து தீர்­மா­ன­மொன்­றினை எய்­து­வ­தற்கு அமைச்­ச­ரவை உப­கு­ழு­வுக்கு கைய­ளிக்­கப்­பட்­டது. அமைச்­ச­ரவை உப குழுவில் அமைச்­சர்­க­ளான ரிசாத் பதி­யுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், பைசர் முஸ்­தபா, சந்­தி­ராணி பண்­டார, சுதர்­சனி பெர்­னான்டோ புள்ளே ஆகியோர் அங்கம் வகித்­தனர்.

என்­றாலும் அமைச்­ச­ரவை உப­கு­ழு­வி­னாலும் விரை­வான தீர்­மா­ன­மொன்­றினை எய்த முடி­யாமற் போனது. கால­தா­ம­த­மா­னது.

இறு­தியில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டதன் பின்பு புதிய அர­சாங்­கத்தில் நீதி­ய­மைச்­ச­ராக பதவி வகித்த அலி சப்ரி முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான ஆலோ­ச­னை­களை வழங்­கு­வ­தற்கு வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மையில் 9 பேர் கொண்ட குழு­வொன்­றினை நிய­மித்தார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் சிபாரிசுகள் கிடைக்கும் வரை ஒத்­தி­வைப்பு
தற்­போ­தைய வெளி விவ­கார அமைச்­ச­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி நீதி­ய­மைச்­ச­ராக பதவி வகித்த காலத்தில் கடந்த பெப்­ர­வரி மாதம் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் சில திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினைச் சமர்ப்­பித்­தி­ருந்­த­மையை நாம் இங்கு குறிப்­பிட்­டாக வேண்டும்.

குறிப்­பிட்ட அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­துக்கு அன்று அமைச்­சர்கள் சிலர் கடும் எதிர்ப்­பினை வெளி­யிட்­டி­ருந்­தார்கள். இத­னை­ய­டுத்து அவ் அமைச்­ச­ரவைப் பத்­திரம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. இதே­வேளை அன்­றைய அமைச்­ச­ர­வைக்கு தலைமை வகித்த அப்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷ ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் சிபா­ரி­சுகள் கிடைக்கும் வரை முஸ்லிம் தனியார் சட்­டத்தில் எவ்­வித திருத்­தங்­க­ளையும் செய்­வ­தில்லை என உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

அன்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் முஸ்லிம் ஆண்­களின் பல­தார மணம் கடு­மை­யான நிபந்­த­னை­க­ளுடன் அனு­ம­திக்­கப்­பட வேண்டும் என அமைச்சர் அலி­சப்ரி வாதா­ர­டினார். அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­திலும் இதனை உள்­ள­டக்­கி­யி­ருந்தார். மலே­சியா போன்ற நாடு­களில் பல­தார மணம் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தையும் சுட்டிக் காட்­டினார்.
அத்­தோடு காதி நீதி­மன்ற முறை­மையை இல்­லா­தொ­ழிக்­காது ‘குடும்ப சம­ரசம்’ (Family Conciliate) என்ற பெயரில் அதனை இயங்கச் செய்ய வேண்டும். குடும்ப சம­ர­சத்­துக்­கென ஆலோ­சனைச் சபை­யொன்று நிய­மிக்­கப்­பட வேண்டும். இங்கு தீர்க்­கப்­பட முடி­யாத பிரச்­சி­னைகள் மாவட்ட நீதிமன்றுக்கு அனுப்பி வைக்­கப்­பட வேண்டும் என்­பதும் அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் அடங்­கி­யி­ருந்­தது. ஆனால் அன்­றைய அமைச்­ச­ர­வையில் இருந்த அமைச்­சர்­க­ளான சரத்­வீ­ர­சே­கர, விமல் வீர­வன்ச, உத­ய­கம்­மன்­பில ஆகியோர் கடு­மை­யான எதிர்ப்பு வெளி­யிட்­டதால் அலி­சப்­ரியின் அமைச்­ச­ரவைப் பத்­திரம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

2020ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதமும் அன்­றைய நீதி­ய­மைச்சர் அலி­சப்ரி முஸ்லிம் விவாக , விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­வது தொடர்பாக அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினை சமர்ப்­பித்­தி­ருந்தார். அதில் முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 18 ஆக நிர்­ண­யிக்­கப்­பட வேண்டும். திரு­மணப் பதிவில் மணப் பெண்ணின் கையொப்பம் பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். தாப­ரிப்பு பெற்றுக் கொள்ளல் மஜிஸ்­திரேட் நீதி­மன்­றினால் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த குழுவின் சிபா­ரி­சுகள் முழு­மை­யாக அமுல்­ந­டத்­தப்­பட வேண்டும். முஸ்லிம் பெண்கள் காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட வேண்டும் எனும் உள்­ள­டக்­கங்­களே அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் அடங்­கி­யி­ருந்­தன.

இத­னை­ய­டுத்து 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அமைச்­ச­ரவை உப­குழு முன்­வைத்த பிரே­ர­ணைக்கு அமை­வாக முஸ்லிம் ஆண்­களின் பல­தார மணத்தை தடை செய்­வ­தற்கும் முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையை 18 ஆக அதி­க­ரிப்­ப­தற்கும் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யது. இத்­தி­ருத்­தங்­க­ளுக்கு முஸ்லிம் சமூ­கத்தில் பலத்த எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டது . இதனால் முஸ்லிம் சமூ­கத்தில் பல பிரச்­சி­னைகள் உரு­வா­கலாம் என்­ப­த­னா­லேயே சில திருத்­தங்­களை உள்­ள­டக்கி கடந்த 2022 பெப்­ர­வரி 21ஆம் திகதி அலி­சப்ரி அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்­றினை கைய­ளித்தார். இவ் அமைச்­ச­ரவைப் பத்­தி­ரமே அமைச்­சர்கள் சில­ரினால் பல­மாக எதிர்க்­கப்­பட்டு நிரா­க­ரிக்­கப்­பட்­டது. அத்­தோடு ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியின் அறிக்கை சமர்ப்­பிக்கும் வரை இச்­சட்­டத்தில் மேல­தி­க­மாக எவ்­வித தீர்­மா­னமும் மேற்­கொள்­வ­தில்லை எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’
செய­ல­ணியின் அறிக்கை கைய­ளிப்பு
ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­பதி செய­ல­ணியின் பரிந்­து­ரைகள் அடங்­கிய இறு­தி­ய­றிக்கை கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி அப்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

8 அத்­தி­யா­யங்­களைக் கொண்ட இவ்­வ­றிக்கை 43 பரிந்­து­ரை­களை உள்­ள­டக்கி தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இப்­ப­ரிந்­து­ரையில் நாட்டில் சகல இனங்­க­ளுக்கும் ஒரே சட்டம் அமுல்­ப­டுத்தப்பட­வேண்டும் எனவும் காதி நீதி­மன்­றங்கள் ஒழிக்­கப்­பட வேண்டும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. செய­ல­ணியின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வ­தாக அப்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷ செய­ல­ணியின் தலைவர் ஞான­சார தேர­ரிடம் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

ஆனால் ஆட்­சியில் திடீ­ரென ஏற்­பட்ட மாற்­றங்கள் முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக் கரு­வினை கிடப்பில் தள்ளி விட்­டன.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் சிபா­ரி­சு­களை அமுல்­ப­டுத்­து­வ­தில்லை என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருக்­கிறார். ஆட்சி மாற்றம், அர­சி­யலில் மாற்றம் என்­பன முஸ்­லிம்­களின் தனியார் சட்­டத்தை பாது­காத்­து­விட்­டன என்றே கூற வேண்டும்.

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் குறித்த ஆலோ­சனைக் குழு
முஸ்லிம் தனியார் சட்­ட­தி­ருத்­தங்கள் தொடர்­பாக ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி சப்­ரி­யினால் நிய­மிக்­கப்­பட்ட சீர்­தி­ருத்த ஆலோ­சனைக் குழு கடந்த வாரம் தனது அறிக்­கையை நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷவிடம் கைய­ளித்­தது.

குழுவின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்­ரி­ ஹ­லீம்தீன் அறிக்­கையை அமைச்­ச­ரிடம் கைய­ளித்தார்.

குழுவின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் அறிக்கை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கையில், இச்­சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­கான சிபா­ரி­சு­களை முன்­வைப்­ப­தற்கு ஏற்­க­னவே நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த குழு பல­தார மணம் தொடர்பில் எவ்­வித சிபா­ரி­சு­க­ளையும் முன்­வைக்­க­வில்லை. குழு சமர்ப்­பித்த ஏனைய திருத்­தங்­களின் சட்­ட­வ­ரைபு ஏற்­க­னவே பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. என்­றாலும் பல­தார மணம் தொடர்­பான விவ­கா­ரத்­தினால் அத்­தி­ருத்­தங்கள் இன்னும் அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

பல­தார மணத்தை கடு­மை­யான நிபந்­த­னை­க­ளுடன் அனு­ம­திப்­ப­தற்கு சிபா­ரிசு செய்­துள்ளோம். குழுவின் 9 உறுப்­பி­னர்­களில் 7 பேர் இதற்கு ஆத­ரவு வழங்­கி­யுள்­ளார்கள். இருவர் எதிர்த்­துள்­ளார்கள்.

காதி­நீ­தி­மன்­றங்­க­ளுக்குப் பதி­லாக சம­ரசம் செய்து வைப்­ப­வர்கள் (Conciliator) நிய­மிக்­கப்­பட வேண்டும். முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 18 ஆக அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். விவாகப் பதிவில் மணப்­பெண்ணின் கையொப்பம் பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும் எனவும் ‘வொலி’யின் கையொப்பம் பெற்­றுக்­கொள்­வதை விருப்­பத்­துக்­கு­ரி­ய­தாக சிபா­ரிசு செய்­துள்ளோம். மணப்பெண் ‘வொலி’யின் கையொப்பம் தேவை­யெனக் கரு­தினால் பெற்­றுக்­கொள்­ளலாம். திரு­மணம் வலி­தா­வ­தற்கு ‘வொலி’ கட்­டா­ய­மில்லை என்றார்.

முஸ்லிம் சமூ­கத்தின் விருப்­பப்­படி
திருத்­தங்கள்
முஸ்லிம் சமூ­கத்தின் விருப்­பப்­ப­டியே முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­படும் என நீதி, சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மற்றும் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.
இச்­சட்­டத்தில் திருத்­தங்கள் ஏனைய சமூ­கங்­க­ளுடன் முரண்­ப­டாத வகையில் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இது எமது பொறுப்­பாகும். முஸ்லிம் தனியார் சட்டம் இலங்கை சுதந்­திரம் பெற்றுக் கொள்­வ­தற்கு முன்­பி­ருந்தே நடை­மு­றையில் இருந்­து­வ­ரு­கி­றது.
முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி­சப்­ரியின் காலத்தில் இச்­சட்­டத்­தி­ருத்­தங்­களை உள்­ள­டக்­கிய சட்ட மூல­மொன்று தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. காதி நீதி­மன்ற முறை­மையை இல்­லாமற் செய்தல், திரு­ம­ணத்­திற்கு மணப் பெண்ணின் அனு­ம­தியைப் பெற்றுக் கொள்ளல், பல­தார மணத்தை இல்­லாமற் செய்தல் போன்ற பரிந்­து­ரைகள் ஏற்­க­னவே பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன.

என்­றாலும் திருத்த ஆலோ­ச­னைக்­குழு பல­தார மணம் கடும் நிபந்­த­னை­க­ளுடன் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டு­மென பரிந்­து­ரைத்­துள்­ளது. முஸ்லிம் தனியார் சட்டம் அவர்­க­ளது மதத்தின் அடிப்­ப­டை­யி­லான சட்­ட­மாகும். அவர்­க­ளது கருத்­து­க­ளுக்கு மதிப்­ப­ளித்து திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­படும் என்றார்.

சமூ­கத்தின் எதிர்­பார்ப்பு
முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் சமூ­கத்தின் பெரும்­பான்­மை­யி­னரின் விருப்­பப்­ப­டியே திருத்­தப்­ப­ட­வேண்டும். முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தின் மூலம் பெண்­களே பாதிப்­ப­டை­கி­றார்கள் என்ற கருத்து சமூ­கத்தின் மத்­தியில் பர­வ­லாக உள்­ளது. எனவே முஸ்லிம் பெண்கள் பாதிப்­புக்­குள்­ளா­காத வகை­யி­லான திருத்­தங்­களே காலத்தின் தேவை­யாகும். விவாக பதிவில் மணப்பெண் கட்­டாயம் கையொப்­ப­மிட வேண்டும். பல­தார மணம் கடும் நிபந்­த­னை­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட வேண்டும். நியா­ய­மான கார­ணங்­க­ளின்றி தலாக் பெற்றுக் கொள்ளும் கணவர் கட்­டா­ய­மாக மத்தாஹ் வழங்க வேண்டும். பெண்கள் காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­ம­னம்­பெற வேண்டும் போன்ற திருத்­தங்­களே இன்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றன. அத்தோடு திருத்தங்கள் குர் ஆன், ஹதீஸுக்கு முரண்படாத வகையில் அமைய வேண்டுமென்பதே சமூகத்தின் நிலைப்பாடாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.