சவூதியின் தேசியதின உபசாரத்தில் ஞானசாரர்!

0 473

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

சில தினங்­க­ளுக்கு முன்னர் கொழும்பில் நடை­பெற்ற சவூதி அரே­பி­யாவின் 92வது தேசி­ய­தின விருந்­து­ப­சா­ரத்தில் இலங்­கையின் பிர­த­மரும் மற்றும் அமைச்­சர்கள் சிலரும் முஸ்லிம் தலை­வர்­களும் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர். ஆனால் அவர்­களுள் பொது­பல சேனையின் சர்ச்­சைக்­கு­ரிய செய­லாளர் ஞான­சார தேரரும் அழைக்­கப்­பட்­டி­ருந்­தமை முஸ்லிம் சமூ­கத்­துக்குள் பல விமர்­ச­னங்­களை தோற்­று­வித்­துள்­ளன. ஆனால் உண்­மை­யி­லேயே விமர்­சிக்­கப்­பட வேண்­டி­யது ஞான­சா­ரரைப் பற்­றி­யல்ல. மாறாக, உலகின் பல பாகங்­க­ளிலும் சிறு­பான்மை இனங்­க­ளாக வாழும் முஸ்­லிம்கள் தொடர்பில் சவூதி அரே­பியா கடைப்­பி­டிக்கும் கொள்­கை­யைப்­பற்­றியே. அது தொடர்­பாக சில சிந்­த­னை­களை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்­வதே இக்­கட்­டு­ரையின் நோக்கம்.

உலக சனத்­தொ­கையில் 20 சத­வீ­த­மா­ன­வர்கள் முஸ்­லிம்கள். மத­வா­ரி­யாக நோக்­கினால் கிறிஸ்­த­வர்­களின் சனத்­தொகை அதி­க­ரிப்பை விட முஸ்­லிம்­களின் சனத்­தொகை அதி­க­ரிப்பு வீதம் உயர்­வா­க­வுள்­ளது. அதில் சுமார் 20 சத­வீ­தத்­தினர் சிறு­பான்மை இனங்­க­ளாக முஸ்லிம் அல்­லாத நாடு­களில் வாழ்­கின்­றனர். அவர்­களுள் மிகப் பெரும்­பா­லா­ன­வர்கள் இந்­தி­யாவைத் தாய­க­மாகக் கொண்­டுள்­ளனர். அவ்­வாறு சிறு­பான்­மை­யி­ன­ராக வாழ்­கின்ற முஸ்லிம் சமூ­கங்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் எத்­த­னையோ.

உதா­ர­ண­மாக, நரேந்­திர மோடியின் ஆட்­சியில் இந்­துத்­து­வாக்­களால் முஸ்­லிம்கள் படும் இன்­னல்­க­ளையும் சீனா­விலே உய்கர் முஸ்­லிம்கள் பொது­வு­டமைக் குடி­ய­ரசின் இன ஒழிப்புத் திட்­டத்­துக்குப் பலி­யா­வ­தையும் உலகே அறியும். பலஸ்­தீ­னிய முஸ்­லிம்­க­ளுக்கு இஸ்­ரவேல் இழைக்கும் அநீ­திகள் அனந்தம். ஆனால் அவர்­களின் பிரச்­சி­னை­களை உலக அரங்கில் வலு­வுடன் எடுத்­துக்­கூறி அந்த அர­சு­க­ளுக்­கெ­தி­ராக மற்­றைய நாடு­க­ளுடன் இணைந்து நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள ஒரு பல­முள்ள முஸ்லிம் நாடு இல்­லையே என்­ப­துதான் இன்­றுள்ள பெரும் குறை.

உல­கத்­திலே ஒரு முஸ்லிம் எங்கு வாழ்ந்­தாலும் அந்த முஸ்­லிமின் கிப்லா புனித கஃப­துல்­லாதான். அது இருக்கும் நாடு சவூதி அரே­பியா. ஆகவே அந்த நாடு என்­னென்ன குறைகள் இருந்­த­போதும் முஸ்­லிம்­களின் உள்­ளங்­களில் ஒரு தனி இடத்தைப் பிடித்­துள்­ளது என்­பது உண்மை. இருந்­த­போதும் பல சந்­தர்ப்­பங்­களில் சவூதி அர­சியல் தலை­வர்­களே சிறு­பான்மை முஸ்­லிம்­களின் நலன்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வது வருந்­தத்­தக்­கது. பலஸ்­தீன முஸ்­லிம்­களை பயங்­க­ர­வா­தி­க­ளென இஸ்­ரவேல் உல­கெங்கும் பறை­சாற்ற அதற்கு ஆமா போடு­வ­துபோல் சவூதி அமைச்­சர்கள் இஸ்­ர­வே­லுடன் நெருங்­கிய உறவு கொண்­டா­டு­வ­தையும், சீன முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தி­க­ளென சீன அரசு பட்டம் சூட்­டி­ய­போது அதை ஆமோ­தித்­த­தையும், மோடியின் ஆட்­சியில் இந்­திய முஸ்­லிம்கள் படு­கின்ற துன்­பங்­களை அறிந்­தி­ருந்தும் அதைப்­பற்றி எந்தக் கவ­னமும் செலுத்­தாமல் மோடி­யுடன் கைகோர்த்து நிற்­ப­தையும் சவூ­தியின் ராஜ­தந்­திரம் என்ற போர்­வைக்குள் மூடி­ம­றைப்­பது பொருந்­துமா? இந்தப் பின்­ன­ணி­யி­லேதான் இலங்­கையில் ஞான­சா­ர­ருக்கு விடுக்­கப்­பட்ட சவூதித் தூத­ரக அழைப்­பையும் நோக்­குதல் வேண்டும்.

முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழ்­கின்ற நாடு­களுள் இலங்­கைக்கு ஒரு தனிச் சிறப்­புண்டு. சுமார் எட்டாம் நூற்­றாண்­ட­ளவில் இலங்­கைக்குள் வியா­பா­ரி­க­ளாகக் கால­டி­யெ­டுத்து வைத்த அரே­பிய முஸ்­லிம்கள் பொருள்­தேடி மட்டும் வர­வில்லை. இஸ்­லாத்தின் பிர­தி­நி­தி­க­ளா­கவும் அவர்கள் செயற்­பட்­டனர். அவர்­களின் வாக்கும் செயலும் பௌத்த மன்­னர்­களைக் கவர்ந்­தி­ருக்­கா­விட்டால் அவ்­வி­யா­பா­ரி­களின் உறவை வியா­பா­ரத்­துடன் மட்டும் நிறுத்­திக்­கொண்டு அவர்­களை அன்­னி­யர்­க­ளா­கவே கணித்து நடந்­தி­ருப்பர். ஆனால் இலங்கை மன்­னர்கள் அவர்­க­ளுக்கு நீட்­டிய நேசக்­க­ரமும் காட்­டிய ஆத­ரவும் முஸ்­லிம்­களை இந்த நாட்டின் நிரந்­தரக் குடி­களுள் ஒன்­றாக வள­ரச்­செய்­தது. ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலாக இந்த நாட்டின் சிங்­கள பௌத்த மக்­க­ளுடன் பின்­னிப்­பி­ணைந்து முஸ்­லிம்கள் வாழ்ந்­த­து­போன்று வேறு எந்த ஒரு நாட்­டிலும் வாழ்ந்­த­தற்கு ஆதா­ரங்கள் கிடை­யாது.

ஆனால் இலங்கை சுதந்­திரம் அடைந்­ததன் பின்னர் இந்த உற­விலே சில கசப்­பான வெடிப்­புகள் ஏற்­படத் தொடங்­கின. அவற்­றிற்­கான கர­ர­ணங்­களை ஒவ்­வொன்­றாக விளக்­கு­வ­தற்கு இக்­கட்­டு­ரையின் நீளம் இடம்­த­ராது என்­பதால் சவூதி அரே­பி­யா­வோடு சம்­பந்­தப்­பட்ட ஒன்றை மட்டும் எடுத்­துக்­காட்­டு­வது அவ­சி­ய­மா­கின்­றது.

சவூதி அரே­பியா இஸ்­லாத்தின் இரண்டு புனிதத் தலங்­களை தனது மண்­ண­கத்தே கொண்­டுள்­ளது. அவற்றை ஒரு முஸ்லிம் எங்கு வாழ்ந்­த­போ­திலும் தனது வாழ்க்­கையில் ஒரு முறை­யா­வது தரி­சிக்­கா­விட்டால் பூரண முஸ்­லி­மாக விளங்­க­மு­டி­யாது. அதே சமயம் அந்த நாட்டின் தேசியக் கொள்­கைளுள் ஒன்று வஹ்­ஹா­பித்­துவ இஸ்லாம். அது அர­சி­ய­லோடு சம்­பந்­தப்­பட்ட ஒரு மார்க்க வழி­பாடு. அதற்­கெனச் சில தனிப்­பட்ட மார்க்கக் கொள்­கை­களும் சம்­பி­ர­தா­யங்­களும் நடை உடை பாவ­னை­களும் கால­வோட்­டத்தில் உரு­வா­கி­யுள்­ளன. எனினும் புனிதத் தலங்­களை தரி­சிக்­கப்­போகும் எந்­த­வொரு முஸ்­லிமும் வஹ்­ஹா­பித்­துவ மர­பு­களைப் பேணுதல் வேண்டும் என்ற நியதி இல்லை. அதனால் பல நூற்­றாண்டு கால­மாக மக்­கா­வுக்கும் மதீ­னா­வுக்கும் யாத்­திரை சென்­று­தி­ரும்­பிய எந்த ஒரு இலங்கை முஸ்­லிமும் வஹ்­ஹா­பித்­துவ இஸ்­லாத்தின் ஒரு பிர­தி­நி­தி­யாகத் திரும்­ப­வில்லை. ஆனால் 1980களுக்குப் பின்னர் வஹ்­ஹா­பி­யத்தின் சில சாயல்கள் இலங்­கைக்குள் ஊடு­ருவத் தொடங்­கின. இதனைச் சற்று விரி­வாக விளக்­க­வேண்­டி­யுள்­ளது.

இலங்­கையில் 1978 இல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட திறந்த பொரு­ளா­தாரக் கொள்கை முஸ்­லிம்­க­ளுக்குக் கிடைத்த ஒரு வரப்­பி­ர­சாதம் என்று கூறு­வதில் மிகை­யில்லை. ஒரு புறத்தில் எண்ணெய் வளத்தால் செல்­வத்தில் மிதந்து தமது நாடு­களை நவீ­னப்­ப­டுத்தத் துணிந்த சவூதி அரே­பி­யாவும் ஏனைய வளை­குடா நாடு­களும், மறு­பு­றத்தில் பொரு­ளா­தார வறு­மையால் பீடிக்­கப்­பட்டுத் தொழில் வாய்ப்­பற்று வாடிய பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தொழி­லா­ளி­களை உள்­ள­டக்­கிய இலங்கை போன்ற வளர்ச்­சி­குன்­றிய நாடு­களும். சவூதி அரே­பியா தொழி­லா­ளி­க­ளைத்­தேடி தனது கத­வு­களைத் திறந்­து­வி­டவே இலங்­கையின் தொழிற்­படை அதிலும் குறிப்­பாக முஸ்லிம் தொழி­லா­ளிகள், ஆண்­களும் பெண்­களும் உட்­பட, சாரி­சா­ரி­யாக அங்கே நுழையத் தொடங்­கினர். வரு­டக்­க­ணக்­காக அங்கு வாழ்ந்த இத்­தொ­ழி­லா­ளிகள் வஹ்­ஹா­பித்­துவக் கொள்­கை­க­ளி­னதும் அதன் கலா­சார மர­பு­க­ளி­னதும் பாதிப்­பு­க­ளுக்குப் பலி­யா­காது வாழ்ந்­தி­ருக்க முடி­யாது. குறிப்­பாக அரபு மக்­களின் உடைகள் இத்­தொ­ழி­லா­ளி­களிற் சில­ரையோ பல­ரையோ கவ­ர­லா­யின. தொழிற்­காலம் முடிந்து அவர்கள் தாய்­நாடு நோக்கித் திரும்­பு­கையில் அவ்­வு­டை­களும் அவர்­களைத் தொடர்ந்­தன. இந்த உடை­யினால் ஏற்­பட்ட முஸ்­லிம்­களின் வெளித்­தோற்றம் அவர்­களை ஏதோ இந்த நாட்­டுக்குச் சொந்­த­மா­ன­வர்கள் அல்ல என்ற ஒரு தப்­பான கருத்தை பெரும்­பான்மை மக்­க­ளி­டையே வளர்த்­து­விட்­டமை தவிர்க்க முடி­யாத ஒரு துர்ப்­பாக்­கி­யமே.

அதே சமயம் ஏற்­க­னவே 1950களிலே தொடங்­கிய தப்லீக் பிர­சா­ரங்கள் பள்­ளி­வா­சல்­களில் தொழ வரு­கின்­ற­வர்­களின் எண்­ணிக்­கையை பல்­லா­யி­ரக்­க­ணக்கில் பெருக்­கவே இட­வ­ச­தி­யற்ற எத்­த­னையோ பள்­ளி­வா­சல்­களைப் பெருப்­பிக்­கவும் புதி­தாகப் பள்­ளி­வா­சல்­களை கட்­டவும் வேண்­டிய ஓர் அவ­சியம் ஏற்­பட்­டது. முஸ்லிம் நாடு­களின் நன்­கொ­டைகள் மூலம் பல பள்­ளி­வா­சல்­களும் மத­ர­சாக்­களும் நிர்­மா­ணிக்­கப்­பட்­டன. ஆனால் சவூதி அரே­பி­யாவின் நன்­கொ­டை­களால் கட்­டப்­பட்ட பள்­ளி­வா­சல்­களும் மத­ர­சாக்­களும் வஹ்­ஹா­பியக் கருத்­துக்­களை பரப்­பத்­தொ­டங்­கி­யதால் முஸ்­லிம்­க­ளுக்­குள்­ளேயே மதப்­பி­ள­வுகள் ஏற்­பட்டு அவை கோஷ்டிச் சண்­டை­க­ளா­கவும் மாற­லா­யின. இவ்­வாறு உடை­களும், தொழுவோர் எண்ணி;க்கையும், கட்­டி­டங்­களின் பெருக்­கமும் ஏற்­ப­டுத்­திய வெளித்­தோற்றம் ஒரு வித­மான பீதியை அதா­வது முஸ்­லிம்கள் இந்த நாட்­டையே இஸ்­லா­மிய நாடாக மாற்ற விளை­கின்­றனர் என்ற ஒரு மனோ­ப­யத்தை பெரும்­பான்­மை­யி­ன­ரி­டையே தோற்­று­விக்­க­லா­யிற்று. அதை வளர்ப்­பதில் சில அதி­தீ­விர பௌத்த சிங்­கள இயக்­கங்கள் ஆர்வம் காட்­டின. அவற்றுள் ஒன்­றுதான் ஞான­சே­ரரின் பொது­பல சேனை.
அவ்­வி­யக்­கங்­களின் இஸ்­லா­மோ­போ­பியச் செயற்­பா­டுகள் 2009க்குப் பின்னர் ஒரு புதிய உத்­வே­கத்தை அடைந்­தது. பல கல­வ­ரங்­களில் ஞான­சா­ரரே முக்­கிய பங்கு கொண்­டுள்ளார் என்­ப­தற்கு மறுக்க முடி­யாத ஆதா­ரங்­க­ளுண்டு. அவரின் முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்­சா­ரமே வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுக்கு வழி­வ­குத்­தன. அதனால் முஸ்­லிம்கள் அனு­ப­வித்த துன்­பங்­களும் இழப்­பு­களும் அனந்தம்.

அண்­மையில் காத்­தான்­கு­டிக்கு விஜயம் செய்த ஞான­சாரர் நார­தர்போல் நடித்து அங்கு புரை­யோ­டிக்­கி­டந்த ஒரு மதப்­பி­ள­வுக்கு மேலும் தூப­மிட்­டதை இப்­பத்­தி­ரி­கையில் வெளி­வந்த ஒரு கட்­டுரை எற்­க­னவே விளக்­கி­யுள்­ளது. இவை­யெல்லாம் சவூதி அர­சுக்கு நன்­றா­கத்­தெ­ரியும். தெரி­ய­வில்லை என்றால் சவூ­தியின் கொழும்புத் தூத­ரகம் தனது கட­மையை ஒழுங்­காகச் செய்­ய­வில்லை என்­றுதான் முடி­வு­கட்­ட­வேண்டும். இந்தப் பின்­ன­ணியில் ஞான­சா­ரரை ஏன் சவூதித் தூதுவர் தேசி­ய­தின ஒன்று கூட­லுக்கு அழைத்தார் என்பது ஒரு புதிராக இருக்கிறது. “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்பதற்கேற்ப சவூதித் தூதரகம் நடந்து கொண்டதா அல்லது அதையும் ஒரு ராஜதந்திரம் என்று கருதுவதா என்பது தெரியவில்லை.

ஆனால் சிங்கள பௌத்த பேரினவாதம் சிறுபான்மை இனங்களை வலுவிழக்கச் செய்து அவர்களை அரசியல் அனாதைகளாக்குவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் யாவும் உலக அரங்கில் இன்று பேசுபொருளாகி விட்டன. 2021 இல் ஐ.நா.வின் மனித உரிமைகள் சபை இலங்கை அரசுக்கெதிராக நிறைவேற்றிய கண்டனத் தீர்மானமும் அதனைத் தொடர்ந்து உலக இஸ்லாமிய கூட்டுறவுத்தாபனம் நிறைவேற்றிய கண்டனத் தீர்மானமும் சவூதி அரசுக்குத் தெரயாமலில்லை. இன்று இலங்கை எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளின் மத்தியில் இவ்வாறான கண்டனத் தீர்மானங்கள் நாட்டின் நிலைமையை மேலும் மோசமாக்கும். ஆகவே ஞானசாரர் போன்ற நாரதர்களுக்கு ஒரு கடும் எச்சரிக்கையையாவது சவூதித் தூதுவர் விடுத்திருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை என்றால் இலங்கை முஸ்லிம்களுக்கு சவூதி அரசு ஒரு பெரும் ஏமாற்றமே.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.