பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை வெளியிட உத்தரவு

0 380

(றிப்தி அலி)
பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் பெயர்ப் பட்­டி­யலை வெளி­யி­டு­மாறு பொலிஸ் திணைக்­க­ளத்­திற்கு தக­ல­வ­றியும் உரி­மைக்­கான ஆணைக்­குழு உத்­த­ர­விட்­டுள்­ளது.

எதிர்­வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் இந்தப் பெயர்ப் பட்­டி­யலை வெளி­யி­டு­மாறும் தக­ல­வ­றியும் உரி­மைக்­கான ஆணைக்­குழு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

இந்த விடயம் தொடர்பில் சுரேன் டி பெரேரா என்­ப­வ­ரினால் பொலிஸ் திணைக்­க­ளத்­திடம் மேற்­கொள்­ளப்­பட்ட தக­வ­ல­றியும் விண்­ணப்பம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து தக­ல­வ­றியும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழு­விடம் மேற்­கொள்­ளப்­பட்ட மேன்­மு­றை­யீடு தொடர்­பான விசா­ர­ணை­களை ஆணைக்­குழு முன்­னெ­டுத்­தி­ருந்­தது.
ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் உபாலி அபே­ய­வர்த்­தன, ஆணை­யா­ளர்­க­ளான ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் ரோஹினி வல்­கம, சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான கிஷாலி பின்டோ ஜய­வர்த்­தன மற்றும் ஜகத் லிய­னா­ராச்சி ஆகி­யோ­ரினால் இந்த மேன் முறை­யீடு தொடர்­பி­லான தீர்ப்பு கடந்த வியா­ழக்­கி­ழமை (06) வழங்­கப்­பட்­டது.

விண்­ணப்­ப­தா­ரி­யினால் கோரப்­பட்­ட­தற்­க­மைய கடந்த 2019 ஜன­வரி 1ஆம் திக­தி­யி­லி­ருந்து பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் பெயர்ப் பட்­டியல், அவர்­களின் வயது, பால், மாவட்டம், கர்ப்பிணித் தாய்­மார்­களின் விபரம், தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யங்­களின் விபரம் போன்ற தக­வல்­களை வழங்­கு­மாறு ஆணைக்­குழு உத்­த­ர­விட்­டது.

தேசியப் பாது­காப்பு கார­ண­மாக இந்தத் தக­வல்­களை வெளி­யிட முடி­யாது என பொலிஸ் மா அதி­ப­ரினால் தெரி­விக்­கப்­பட்ட விட­யத்­தினை ஏற்­ப­தற்கு ஆணைக்­குழு மறுத்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அத்­துடன், மேன் முறை­யீட்­டா­ள­ருக்கு முன்­னுக்குப் பின் முர­ணான பதில்­களை வழங்­கி­ய­தற்­கா­கவும், ஆணையம் கேட்ட கேள்­வி­க­ளுக்கு முறை­யாக பதி­ல­ளிக்­கா­த­தற்­கா­கவும் பொலிஸ் திணைக்­களத்தை ஆணைக்குழு கடு­மை­யாக கண்டித்தமையும் குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.