‘கட்டார் சரிட்டி’ நிறுவனம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவவில்லை

அதனை தடை செய்யவுமில்லை என உறுதிப்படுத்தியது பாதுகாப்பு அமைச்சு

0 371

றிப்தி அலி

பிர­பல சர்­வ­தேச தொண்டு நிறு­வ­ன­மான ‘கட்டார் சரிட்­டி’­ யினால் இலங்­கையில் செயற்­ப­டுத்­தப்­பட்ட வங்கிக் கணக்­கு­களின் ஊடாக பரி­மாற்­றப்­பட்ட நிதி, எந்­த­வொரு பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்ற விடயம் தக­வ­ல­றியும் விண்­ணப்­பத்தின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் கட்டார் சரிட்­டி­யினால் செயற்­ப­டுத்­தப்­பட்ட வங்கிக் கணக்­குகள் முடக்­கப்­பட்­டமை மற்றும் அவ்­வ­மைப்பு தடை செய்­யப்­பட்­ட­தாக வெளி­வந்த ஊடக செய்­திகள் தொடர்பில் பாது­காப்பு அமைச்­சிற்கு கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி தக­வ­ல­றியும் கோரிக்கை சம­ர்ப்­பிக்­கப்­பட்­டது. இதற்கு கடந்த செப்­டம்பர் 12ஆம் திகதி பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் தகவல் அதி­கா­ரி­யான அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிர­சன்ன டி அல்­வி­ஸினால் வழங்­கப்­பட்ட பதி­லி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிலையில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தற்­போது பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட ‘சேவ் த பேர்ள்’ எனும் அநாதைச் சிறார்கள் பரா­ம­ரிப்பு நிலை­யத்­திற்கும் கட்டார் சரிட்­டி­யினால் நிதி­யு­தவி வழங்­கப்­பட்­டுள்­ளது.
எனினும், கடந்த 2021.04.10 ஆம் திகதி அப்­போ­தைய ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினால் 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க, பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற­பா­டுகள்) சட்­டத்தின் 27ஆம் பிரிவின் கீழ் சேவ் த பேர்ளின் செயற்­பா­டு­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டது.

இதே­வேளை, கட்டார் சரிட்டி பயங்­க­ர­வாத அமைப்பு எனவும், இந்த அமைப்பின் ஊடாக பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கப்­பட்­டுள்­ளது எனவும் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு 2020.09.23ஆம் திகதி கோட்டை நீதி­மன்­றத்தில் தெரி­வித்­தது.

இத­னை­ய­டுத்து, இந்த அமைப்பின் பணிகள் அனைத்தும் இலங்­கையில் நிறுத்­தப்­பட்­டது. இதனால், குறித்த அமைப்பின் உத­வி­களை நம்பி வாழ்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான வறிய மக்கள் பல இன்­னல்­களை இன்றும் எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.

“கொழும்பு மேல் நீதி­மன்­றத்தின் உத்­த­ர­விற்­க­மை­யவே இந்த அமைப்­பினால் அமானா வங்­கியில் செயற்­ப­டுத்­தப்­பட்ட இரண்டு கணக்­கி­லக்­கங்­க­ளிலும் காணப்­பட்ட 9 கோடி 17 இலட்­சத்து 78 ஆயி­ரத்து 180 ரூபாவும் 46 சதமும் முடக்­கப்­பட்­டது” என தக­வ­ல­றியும் விண்­ணப்­பத்­திற்­கான பதிலில் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு குறிப்­பிட்­டுள்­ளது.

கொழும்பு மேல் நீதி­மன்­றத்தின் இலக்கம் HC (SPL) 05/2020 எனும் உத்­த­ரவின் கீழேயே மேற்­படி வங்கி கணக்­கி­லக்­கங்கள் முடக்­கப்­பட்­ட­தாக குறித்த விசா­ரணைப் பிரிவு குறிப்­பிட்­டது.

“எவ்­வா­றா­யினும், கடந்த ஜூன் 30ஆம் திகதி குறித்த வங்கி கணக்­கி­லக்­கங்­களை முடக்கும் உத்­த­ரவு கொழும்பு மேல் நீதி­மன்­றத்­தினால் நீக்­கப்­பட்­டு­விட்­டது. அத்­துடன் கட்டார் சரிட்டி ஒரு­போதும் இலங்­கையில் தடை செய்­யப்­ப­ட­வில்லை” எனவும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு தெரி­வித்­தது.

இதே­வேளை, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கட்டார் சரிட்­டியின் நிதி மீதான தடை­யினை நீக்­கு­வ­தற்­கான தீர்­மா­னத்­தினை பாது­காப்பு அமைச்சு சட்­டமா அதி­ப­ருக்கு அறி­வித்­துள்­ளது என உத்­தி­யோ­க­பூர்வ செய்­தி­யினை மின் சக்தி அமைச்சர் காஞ்­சன விஜ­ய­சே­கர கட்டார் சரிட்டின் உயர் அதி­கா­ரி­களை கடந்த ஜூன் 30ஆம் திகதி டோஹாவில் சந்­தித்து தெரி­வித்­தி­ருந்தார்.

இலங்­கையில் பல மில்­லியன் ரியால்­களைச் செல­விட்டு தொண்டுப் பணி­களை முன்­னெ­டுத்த கட்டார் சரிட்டி நிறு­வ­னத்தை தீவி­ர­வாத முத்­திரை குத்தி, அதன் வங்கிக் கணக்­கு­களை முடக்கி
அசௌ­க­ரி­யத்துக்குள்­ளாக்­கி­ய­மை­யா­னது இலங்கை
அர­சாங்­கத்தின் முட்­டாள்­த­ன­மான நட­வ­டிக்­கை­யாகும்.

எனினும், கட்டார் சரிட்டின் செயற்­பா­டு­களை மீண்டும் இலங்­கையில் ஆரம்­பிப்­பது தொடர்பில் இது­வரை எந்தத் தக­வலும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. எவ்­வா­றா­யினும், கட்டார் சரிட்­டியின் பணிகள் அடுத்த வருடம் இலங்­கையில் ஆரம்­பிக்­கப்­ப­டலாம் என கொழும்­பி­லுள்ள கட்டார் தூது­வ­ர­லா­யத்தின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் நம்­பிக்கை வெளி­யிட்டார்.
கட்டார் அர­சாங்­கத்தின் நேரடி கட்­டுப்­பாட்டில் 1992ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்­நி­று­வ­னத்­தினால் உல­க­ளா­விய ரீதியில் பல நாடு­க­ளுக்கு தேவை­யான மனி­தா­பி­மான உத­விகள் வழங்­கப்­பட்டு வரு­வ­துடன் அந்­நாட்டு அர­சாங்­கங்­க­ளுடன் மிகவும் நெருங்கி செயற்­பட்டு வரு­கின்­றது.

அது மாத்­தி­ர­மல்­லாமல், ஐக்­கிய நாடுகள் போன்ற பல சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளுடன் இந்த அமைப்பு நெருங்கி செயற்­ப­டு­கின்­றது. 1997ஆம் ஆண்டு முதல் உல­க­ளா­விய ரீதியில் 77 ஒப்­பந்­தங்­களை மேற்­கொண்டு 76 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான பல நிகழ்ச்சித் திட்­டங்­களை கட்டார் சரிட்டி மேற்­கொண்­டுள்­ளது.

இந்த ஊடாக பாகிஸ்தான், யெமன், சூடான், ஈராக், நைஜீ­ரியா, சிரியா, பலஸ்தீன், பங்­க­ளாதேஷ் மற்றும் சோமா­லியா போன்ற பல நாடு­களில் குடிநீர், விவ­சாயம், உணவு, சுகா­தாரம், வாழ்­வா­தார உதவி, பாட­சாலை நலன்­புரி, சமூக நலன், மீள்­கு­டி­யேற்றம், மற்றும் அக­தி­க­ளுக்­கான உதவி போன்ற பல மனி­தா­பி­மான மற்றும் அபி­வி­ருத்தி நிகழ்ச்­சிகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அண்மையில் கட்­டா­ருக்கு விஜயம் செய்த இலங்கை அமைச்­சர்கள் குழு கட்டார் சரிட்­டி அதி­கா­ரி­களை சந்­தித்தபோது…

இதற்கு மேல­தி­க­மாக ஐக்­கிய நாடு­களின் அக­தி­க­ளுக்­கான உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்­துடன் 32 ஒப்­பந்­தங்­களை மேற்­கொண்டு உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்கும், அக­தி­க­ளுக்கும் தேவை­யான நிதி தொடர்­பான மனி­தா­பி­மான செயற்­திட்­டங்­களை கட்டார் சரிட்டி மேற்­கொண்­டுள்­ளது.

இதே­வேளை, இலங்­கைக்கும் கட்­டா­ருக்கும் இடையில் கடந்த 1976ஆம் ஆண்டு முதல் இரா­ஜ­தந்­திர உறவு பேணப்­பட்டு வரு­கின்­றது. அது மாத்­தி­ர­மல்­லாமல், பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் இலங்­கைக்கு கட்டார் உள்­நாட்­டிலும், சர்­வ­தேச ரீதி­யிலும் கைகொ­டுத்து உத­வி­யுள்­ளது. இதனால், கட்டார் சரிட்டி, அதன் தொண்டுப் பணி­களை கடந்த 1993ஆம் ஆண்டு முதல் இலங்­கையில் முன்­னெ­டுத்து வரு­கி­றது.

பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் கீழுள்ள அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்­கான செய­ல­கத்தில் FL162614 எனும் இல­கத்தின் கீழ் பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள இந்த தொண்டர் அமைப்­பினால் கடந்த 2018 வரை சுமார் 14 மில்­லியன் கட்டார் ரியால்கள் பெறு­ம­தி­யான உத­வி திட்­டங்­கள் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இதற்­க­மைய, 30 வரு­டங்கள் நாட்டில் இடம்­பெற்ற யுத்தம் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்­காக ஐந்து பல்­தேவை கட்­டி­டங்கள் இந்த நிறு­வத்­தினால் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் ஓட்­ட­மா­வடி, ஏறாவூர், கிண்­ணியா மற்றும் பொல­ந­றுவை மாவட்­டத்தின் அது­கல ஆகிய பிர­தே­சங்­களில் கட்டார் சரிட்­டி­யினால் நான்கு வீட­மைப்பு திட்­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன.

நான்கு மில்­லியன் கட்டார் ரியால் பெறு­ம­தி­யான இந்த வீட்டுத் திட்­டத்தில் 22 வீடுகள், சுகா­தார மையம், முன்­பள்ளி, பள்­ளி­வாசல், கிணறு மற்றும் நான்கு கடைகள் ஆகி­யன காணப்­ப­டு­கின்­றன. அது மாத்­தி­ர­மல்­லாமல், சுமார் 1,000க்கும் மேற்­பட்ட அநாதைச் சிறார்­க­ளுக்கு கட்டார் சரிட்­டி­யினால் அனு­ச­ரணை வழங்­கப்­பட்­டுள்­ளது.

அது மாத்­தி­ர­மல்­லாமல், கட்­டாரின் தலை­ந­க­ரான டோஹா­வி­லுள்ள இலங்கை தூது­வ­ரா­ல­யமும் கட்டார் சரிட்­டியும் இணைந்து கொவிட் காலத்தில் டோஹாவில் நிர்க்­க­தி­யான இலங்­கை­யர்­க­ளுக்கு உல­ரு­ணவுப் பொருட்கள் விநி­யோ­கிக்கும் செயற்­திட்­ட­மொன்றை முன்­னெ­டுத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வாறு இலங்­கையில் பல மில்­லியன் ரியால்­களைச் செல­விட்டு தொண்டுப் பணி­களை முன்­னெ­டுத்த கட்டார் சரிட்டி நிறு­வ­னத்தை தீவி­ர­வாத முத்­திரை குத்தி, அதன் வங்கிக் கணக்­கு­களை முடக்கி அசௌ­க­ரி­யத்துக்குள்­ளாக்­கி­ய­மை­யா­னது இலங்கை அர­சாங்­கத்தின் முட்­டாள்­த­ன­மான நட­வ­டிக்­கை­யாகும். இதன் கார­ண­மாக இலங்­கைக்கு எரி­பொருள் உள்­ளிட்ட அத்­தி­ய­வ­சிய உத­விகள் தேவைப்­பட்ட காலத்தில் குறித்த நிறு­வ­னத்­தினால் இலங்­கையில் இயங்க முடி­யாமல் போனது. அத்­துடன் பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்கித் தவிக்கும் அப்­பாவி இலங்கை மக்­க­ளுக்கு உதவும் வாய்ப்­பு­களும் இதன் மூலம் மறுக்­கப்­பட்­டன. கடந்த அர­சாங்­கத்தின் இன­வாத செயற்­பா­டு­களால் நாட்­டுக்கு ஏற்­பட்ட மிகப் பெரிய பாதிப்­பு­களில் கட்டார் சரிட்­டிக்கு எதி­ரான போலி­யான குற்­றச்­சாட்­டுக்­களும் ஊடகப் பரப்­பு­ரை­களும் முக்­கிய பங்­கு­வ­கித்­துள்ள­தை யாராலும் மறுக்க முடி­யாது. கட்டார் சரிட்டி விரைவில் தனது பணி­களை இலங்­கையில் ஆரம்­பித்து, தொண்டுப் பணிகளைத் தொடர வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.