18 வயதை நிர்ணயம் செய்வதால் இளவயதுத் திருமணத்தை இல்லாதொழிக்க முடியுமா?

0 838

சட்டத்தரணி
ஷிபானா ஷரிபுத்தீன்

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தினால் ஆளப்­ப­டு­கின்ற முஸ்லிம் சமூ­கத்தில் திரு­ம­ணத்­திற்­கான வய­தெல்­லையை 18 ஆக நிர்­ண­யித்தல் தொடர்பில் பல வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. சமூ­கத்தில் இள­வ­யதுத் திரு­ம­ணங்­களை இல்­லா­தொ­ழித்தல் என்ற தலைப்பின் கீழ் இந்த விவாதம் இடம்­பெ­று­வதைக் காணலாம். நாம் அனை­வரும் எமது சமூ­கத்தில் இள­வ­யதுத் திரு­ம­ணங்கள் நடை­பெ­றக்­கூ­டாது என்ற விட­யத்தில் கருத்­தொ­ரு­மித்­த­வர்­க­ளாக இருப்­ப­தனால் இந்த விவாதம் சரி­யா­னதே என்று எமக்கு தோன்­றலாம். ஆனால் உண்­மையில் சட்­டத்தில் 18 வயதைத் திரு­மணம் செய்­வ­தற்­கான ஆகக் குறைந்த வய­தாக நிர்­ண­யித்தல் என்­பது எமது சமூ­கத்தில் இள­வ­யது திரு­ம­ணங்­களை இல்­லாமல் ஆக்­குமா என்ற விட­யத்­தினை விஞ்­ஞா­ன­பூர்வ ஆதா­ரங்­களை முன் நிறுத்திப் பரி­சீ­லிக்க வேண்­டி­யுள்­ளது.

இலங்­கையில் பல்­வேறு சட்­டங்­களில் சிறு­வர்­க­ளி­னு­டைய வயது பல­வா­றாக வரை­யறை செய்­யப்­பட்­டுள்­ளது. உதா­ர­ண­மாகத் தண்­டனைச் சட்டக் கோவையில் ஒரு பெண் பாலியல் ரீதி­யான உற­வினை ஏற்­ப­டுத்­து­வ­தற்குச் சம்­மதம் வழங்­கக்­கூ­டிய வய­தாக 16 வயது அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. பொதுச் சட்­டத்தின் கீழ் திரு­மணம் செய்­வ­தற்­கான வயது 18 எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தொழில் செய்­வ­தற்­கான அல்­லது வேலையில் அமர்த்­தப்­ப­டு­வ­தற்­கான ஆகக் குறைந்த வய­தாக 14 வயது குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்தத் தர­வுகள் எமக்கு வலி­யு­றுத்­து­வது, பொது­வான ஒரு வயதைச் சிறு­வர்­களின் வயது என நிர்­ண­யிக்க முடி­யாது என்­ப­தாகும். இந்தப் புரி­தலின் அடிப்­ப­டையில் தான் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திரு­மண வயதை நிர்­ண­யித்தல் என்­பது தொடர்பில் எமது அணு­கு­முறை இருத்தல் வேண்டும்.

கடை­சி­யாக வெளி­யி­டப்­பட்ட 2012 ஆம் ஆண்டின் குடி­சன மதிப்பு அறிக்­கையில் 15 வய­திற்கு குறை­வான திரு­ம­ணங்கள் 3204 இடம் பெற்­றுள்­ளன. அவற்றில் 471 திரு­ம­ணங்கள் முஸ்லிம் சமூ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளன. அதே­போன்று 15 வய­திற்கும் 19 வய­துக்கும் இடை­யான திரு­ம­ணங்கள் 87,633 இடம் பெற்­றுள்­ளன அதில் அண்­ண­ள­வாக 12000 திரு­ம­ணங்கள் முஸ்லிம் சமூ­கத்தில் நடை­பெற்­றுள்­ளன. இங்கு நாம் கவ­னிக்க வேண்­டி­யது யாதெனில், பொதுச்­சட்­டத்­திற்குத் திரு­ம­ணத்­திற்­கான ஆகக் குறைந்த வயதெல்லை 18 என்று நிர்­ண­யிக்­கப்­பட்ட பின்­னரே முஸ்லிம் சமூகம் தவிர்ந்த ஏனைய சமூ­கத்தில் இப்­பெ­ரு­ம­ள­வான இள­வ­யதுத் திரு­ம­ணங்கள் பதி­வா­கி­யுள்­ளன. இந்தப் புள்­ளி­வி­ப­ர­மா­னது திரு­ம­ணத்­திற்­கான ஆகக் குறைந்த வய­தெல்­லையை 18 எனச் சட்­டத்­தினால் வரை­ய­றுப்­பதன் மூலம் இள­வ­யதுத் திரு­ம­ணங்­களைத் தடுக்க முடி­யாது என்­பதை விஞ்­ஞான பூர்­வ­மாக நிறு­வு­கின்­றது.

இலங்­கையின் தண்­டனைச் சட்டக் கோவைக்கு 1995 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட 22 ஆம் இலக்கத் திருத்தச் சட்­டத்தின் மூலம் பெண் ஒருவர் பாலியல் ரீதி­யான உற­வினை மேற்­கொள்­ளு­வ­தற்குச் சம்­மதம் தெரி­விக்கக் கூடிய ஆகக் குறைந்த வய­தெல்­லை­யாக 16 வயது நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தினால் ஆளப்­ப­டு­கின்ற முஸ்­லிம்கள் பின்­பற்­று­கின்ற இஸ்லாம் மார்க்­கத்தில் திரு­மண பந்­தத்­திற்கு வெளியே உறவு கொள்­ளுதல் முற்­றா­கத்­த­டுக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். எனவே எமது சட்­டத்தில் பாலியல் உற­வினை ஏற்­ப­டுத்த சம்­மதம் தெரி­விக்­கக்­கூ­டிய வயது திரு­மண வய­தாதல் வேண்டும்.

அண்­மையில் பேரா­தெ­னிய பல்­க­லைக்­க­ழ­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு ஆய்வு அறிக்­கையின் படி இள­வ­யதுக் கர்ப்பம் தரித்தல் என்­பது முஸ்லிம் அல்­லாத சமூ­கத்­தி­லேயே அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றது எனவும், அங்கு 18 வய­துக்கு முன்னர் திரு­மணம் செய்ய அனு­மதி இல்லை என்­பதால் அவ்­வாறு பிறக்­கின்ற பிள்­ளைகள் அநாதை இல்­லங்­களில் சேர்க்­கப்­ப­டு­கின்ற பரி­தாப நிலை காணப்­ப­டு­கின்­றது எனவும் குறிப்­பி­டு­கின்­றனர். இந்தத் துர்ப்­பாக்­கிய நிலை­மைக்குப் பொதுச்­சட்­டத்தின் கீழ் திரு­மணம் செய்­வ­தற்­கான ஆகக் குறைந்த வய­தாக 18வயது நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருப்­பது மிகப் பிர­தா­ன­மான காரணி என்­பதை எம்மால் மறுக்க முடி­யாது. மேலும் ஐக்­கிய நாடுகள் சபையின் பரிந்­து­ரையின் படி அங்­கத்­துவ நாடுகள் தங்­க­ளது நாட்டில் திரு­மணம் செய்­வ­தற்­கான ஆகக் குறைந்த வயதெல்லை 15ஐ விட குறை­வாக இல்­லாமல் பார்த்துக் கொள்­ளப்­பட வேண்டும் என்­றுதான் குறிப்­பி­டப்படு­கின்­றது.

உலகின் பல நாடு­களில் 18 வயதைத் திரு­மண வய­தாக நிர்­ண­யித்­துள்­ளனர் அந்தத் தரத்தை எமது சட்­டத்­திலும் உள்­வாங்க வேண்டும் அல்­லாது போனால் நாம் பின்­ன­டைந்த சமூ­க­மாக மாறி­வி­டுவோம் என்று பலர் வாதி­டு­கின்­றனர். இந்த வாதம் சரி­யா­னதா?

வளர்ச்சி அடைந்த நாடு­க­ளான அமெ­ரிக்கா இங்­கி­லாந்து போன்ற நாடு­களில் கூட திரு­மணம் செய்­வ­தற்­கான ஆகக் குறைந்த வய­தெல்லை 18 என்­பது, திறத்­த­வர்கள் தாமாகத் தமது திரு­ம­ணத்தைச் செய்து கொள்­வ­தற்­கான வயது ஆகும். ஆனால் அந்த நாடு­களில் கூட விசேட சந்­தர்ப்­பங்­களில் அவ­சியம் ஏற்­ப­டு­கின்ற போது பெற்­றோ­ரு­டைய சம்­ம­தத்­து­டனும் நீதி­மன்­றத்தின் சம்­ம­தத்­து­டனும் 18 வய­துக்கு முன்­ன­ரான திரு­ம­ணங்கள் செய்­யப்­ப­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. இஸ்­லாத்தில் திரு­மணம் ஒன்றின் போது மண­ம­க­ளு­டைய ‘வலி’யின் (பாது­கா­வ­லரின்) சம்­மதம் கட்­டா­ய­மான ஒன்­றாக இருக்­கின்­றது. எனவே திரு­ம­ணத்­திற்­கான ஆகக் குறைந்த வயதெல்லை 18 என்ற வாதம் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பு­டை­ய­தல்ல.

18 வயதைத் திரு­மணம் செய்­வ­தற்­கான ஆகக் குறைந்த வய­தாக நிர்­ண­யித்தல் என்­பது இள­வ­யதுத் திரு­ம­ணங்­களை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்­கான வெற்­றி­க­ர­மான ஒரு பொறி­மு­றை­யல்ல. பொதுச்­சட்­டத்தால் ஆளப்­ப­டு­கின்ற மக்கள் வாழும் சமூ­கத்தில் நடக்­கின்ற 18 வய­துக்கு குறை­வா­ன­வர்­க­ளுக்­கான திரு­ம­ணங்­களின் புள்ளி விப­ரங்கள் இதற்குச் சான்று.

திரு­மணம் செய்­வ­தற்கு உரிய ஆகக் குறைந்த வய­தெல்­லை­யாக 18 வயதை நிர்­ண­யிப்­பதால் ஏற்­ப­டக்­கூ­டிய பாத­க­மான விளை­வுகள் எவை எனச் சில உதா­ர­ணங்­க­ளோடு ஆராய்வோம்.

முத­லா­வ­தாக; 18 வய­திற்கு குறை­வான ஒரு பெண் ஒரு ஆணுடன் உறவு கொண்டு கர்ப்­ப­மா­கி­விட்டால் அவ­ளுக்கு வழங்­கப்­ப­டக்­கூ­டிய தீர்வு, குறித்த நபரைத் திரு­மணம் செய்து வைப்­ப­தாகும். சட்டம் திரு­மணம் செய்­வ­தற்­கான ஆகக் குறைந்த வய­தாக 18 ஐ நிர்­ணயம் செய்­யு­மாயின் அத்­தி­ரு­மணம் சாத்­தி­ய­மற்­ற­தாகி போகும். இங்கு பாதிப்­புக்கு உள்­ளாகுப­வர்கள் குறித்த பெண்ணும் அவ­ளுக்கு பிறக்கப் போகும் குழந்­தையும் ஆகும். பெண்­ணுக்கு 18 வயது பூர்த்­தி­யா­கின்ற போது சம்­பந்­தப்­பட்ட ஆண் அந்தப் பெண்ணைத் திரு­மணம் செய்து கொள்ள மறுப்பின் குறித்த நப­ரிடம் இருந்து சொத்­து­ரிமை உட்­பட எந்தத் திரு­மணம் சார் உரி­மை­க­ளையும் அவர்கள் பெற்றுக் கொள்ள மாட்­டார்கள். இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் பிறக்­கின்ற குழந்­தைகள் வாரி­சு­ரிமைச் சட்டம், பிறப்பு இறப்­பினைப் பதிவு செய்யும் சட்டம், தாப­ரிப்புச் சட்டம் என்­ப­வற்றின் கீழ் ஏனைய குழந்­தைகள் போன்று சம­மாக மதிக்­கப்­பட மாட்­டார்கள். இந்­நி­லை­மை­யா­னது எமது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் உறுப்­புரை 12 இனால் உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மைக்கு எதி­ரா­ன­தாகும். அதே போன்று CRC, CEDAW போன்­ற­வற்றின் நிபந்­த­னை­க­ளுக்கும் முர­ணா­ன­தாகும்.

இரண்­டா­வ­தாக, 18 வய­திற்கு குறை­வான ஒரு பெண் ஓர் இயற்கை அனர்த்தம் கார­ண­மாக அல்­லது ஒரு விபத்தின் கார­ண­மாக அநா­தை­யாக்­கப்­ப­டு­கின்ற போது அவ­ளு­டைய பாது­காப்­பிற்­கா­கவும் அவ­ளுக்கு உணர்வு ரீதி­யான பக்க பல­மாக அமை­வ­தற்­கா­கவும் இருக்­கின்ற ஒரு சிறப்­பான தேர்வு திரு­மணம் ஆகும். சுனாமி அனர்த்தம் ஏற்­பட்ட காலத்தில் இப்­ப­டி­யாகப் பல சம்­ப­வங்கள் கையா­ளப்­பட்­டன. சட்­டத்தில் 18 வயதைத் திரு­மண வய­தெல்­லை­யாக நிர்­ண­யிப்­பதால் இவ்­வா­றான பெண் பிள்­ளைகள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு ஏற்­படும்.

மூன்­றா­வ­தாக; வறுமைக் கோட்­டிற்கு கீழ் வாழ்­கின்ற விதவைத் தாய்­மார்­களின் பரா­ம­ரிப்பில் இருக்­கின்ற 18 வய­துக்கு குறை­வான பெண் பிள்­ளை­களைத் திரு­மணம் செய்து வைத்தல் என்­பது, அந்தக் குடும்­பத்­திற்கு பாது­காப்­பையும் பொரு­ளா­தாரப் பலத்­தையும் வழங்­கக்­கூ­டி­ய­தா­கவும் அந்த விதவைத் தாயின் சுமையைக் குறைக்க கூடிய ஒரு பொறி­மு­றை­யா­கவும் இருக்­கின்­றது. இவ்­வா­றான குடும்­பங்­களில் அதி­க­மான பெண் பிள்­ளைகள் தங்­க­ளது பாட­சாலைக் கல்­வியை இடை­நி­றுத்­தி­ய­வர்­க­ளாக இருப்­பதை நாங்கள் காண்­கின்றோம். இங்கு திரு­மணம் என்­பது ஓர் அவ­சி­ய­மா­னதும் ஆரோக்­கி­ய­மா­ன­து­மான தேர்­வாக அமை­கின்­றது. இங்கு நாங்கள் கருத்தில் கொள்ள வேண்­டி­யது யாதெனில் எமது நாட்டில் இவ்­வா­றான நிலை­மையில் வாழ்­கின்ற குடும்­பங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கக்­கூ­டிய எந்த ஒரு சரி­யான திட்­டங்­களும் பொறி­மு­றை­களும் இல்லை என்­ப­தாகும்.

எமது சமூ­கத்­தி­லி­ருந்து இள­வ­யதுத் திரு­ம­ணங்­களை இல்­லா­ம­லாக்க வேண்டும் என்ற பொது­வான கருத்தில் நாங்கள் அனை­வரும் உடன்­ப­டு­கின்றோம். அதில் எவ்­வித சந்­தே­கமும் இல்லை. ஆனால் சட்­டத்தில் 18 வயதைத் திரு­மண வய­தாக நிர்­ண­யிப்­பது இதற்கு ஒரு தீர்­வாக அமையப் போவ­தில்லை. மாறாகக் கல்வித் தரத்தை அதி­க­ரித்தல், சரி­யான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­துதல், பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­துதல் போன்­ற­வையே இதனைச் சாத்­தி­ய­மாக்கக் கூடிய பொறி­மு­றை­யாகும். சட்­டப்­படி 16 வய­தினைத் திரு­மண வய­தாக நிர்­ண­யிப்­ப­தற்­கான கோரிக்­கையை முன்­வைக்கக் கூடிய வலு­வான அடிப்­ப­டைகள் காணப்­ப­டு­கின்ற போதும் சர்­வ­தே­ச­ரீ­தி­யாக அடை­யாளம் செய்­யப்­பட்­டுள்ள 18 வயதைத் திரு­மணம் செய்யக் கூடிய ஆக குறைந்த வய­தாக எமது சட்­டத்­திலும் உள்­வாங்­கு­வ­தற்­கான தேவையை நாமும் கருத்திற் கொள்­கிறோம். ஆனால் சட்­டத்தில் திரு­மண வயது தொடர்­பான பிரி­விற்கு, விசேட சந்­தர்ப்­பங்­களில் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வா­றான ஒரு விதி­வி­லக்கு வாச­கமே எமது நியா­ய­பூர்­வ­மான கோரிக்­கை­யாக உள்­ளது. அதன் அவ­சியம் இங்கு விஞ்­ஞா­ன­பூர்­வ­மாக நிறு­வப்­பட்­டு­முள்­ளது.

ஆனாலும், எம்மில் சிலர் எமது பெண்­க­ளையும் சிறு­வர்­க­ளையும் மேலும் சிக்­க­லுக்குள் தள்­ளி­வி­டக்­கூ­டிய சட்­டத்­தி­ருத்­தங்­களைச் செய்­து கொள்ள அதிக பிர­யத்­த­னப்­ப­டு­கின்­றனர். இதற்கு அவர்கள் கூறு­கின்ற நியாயம் யாதெனில் சமூ­கத்தில் இள­வ­யதுத் திரு­ம­ணங்­களின் அவ­சியம் இருப்­பதை நாம் அறிவோம் ஆனால் அதனைச் சட்­டத்தால் அங்­கீ­க­ரிக்க முடி­யாது என்­ப­தாகும். இது எப்­படி இருக்­கின்­றது என்றால் “உனக்குப் பசிக்­கி­றது, உணவின் தேவை இருக்­கி­றது என்­பதை நாம் அறிவோம் ஆனால் அதனை எமது சட்டம் இனங்­கண்டு தீர்­வைத்­தர இட­ம­ளிக்க மாட்டோம்” என்று கூறு­வ­தற்குச் சம­னா­னது. சட்டம் என்­பது சமூ­கத்தில் உள்ள பிரச்­சி­னை­களை இனங்­கண்டு அவற்­றுக்குத் தீர்வைத் தரு­வ­தாக அமைய வேண்­டுமே அன்றி, நான் பிடித்த முய­லுக்கு மூன்று கால் என்ற கதையாய் அமைந்து விடக்­கூ­டாது.

எனவே பொது­மக்­க­ளா­கிய நாம் இந்த விட­யத்தில் தெளி­வு­டை­ய­வ­ராதல் வேண்டும் என்பதோடு எமது சமூகத்தின் நன்மை கருதி எமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவும் வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.