உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 5 கிலோ வெடிபொருட்களே பயன்படுத்தப்பட்டன

வணாத்தவில்லுவில் கண்டுபிடிக்கப்பட்டதோ 1200 கிலோ

0 382

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலின் போது, மொத்­த­மா­கவே சுமார் 5 கிலோ வெடி­பொ­ருட்­களே பயன்­ப­டுத்­தப்பட்­டி­ருந்­த­தா­கவும், எனினும் அதற்கு முன்னர் சி.ஐ.டி.யினரின் விசா­ரணை ஊடாக வணாத்­து­வில்லு லக்­டோ­வத்­தையில் சுமார் 1200 கிலோ வெடி­பொ­ருட்கள் கைப்­பற்­றப்­பட்­டதன் ஊடாக மிகப் பெரும் அழிவு தடுக்­கப்பட்­ட­தா­க சி.ஐ.டி.யின் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்க சாட்­சி­ய­ம­ளித்தார். இது தொடர்பில் நீதி­மன்றம் விஷே­ட­மாக அவ­தானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரினார்.

புத்­தளம் – வணாத்­த­வில்லு, லக்டோஸ் தோட்­டத்தில், வெடி­பொ­ருட்­களை சேக­ரித்து களஞ்­சி­யப்­ப­டுத்தும் மற்றும் உற்­பத்தி செய்யும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்துச் சென்­றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்­துள்ள வழக்கு நேற்று (24) புத்­தளம் மேல் நீதி­மன்றில் சிறப்பு ட்ரயல் அட் பார் நீதி­மன்றம் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போதே இந்த வெடி­பொருள் விவ­கா­ரத்தை விசா­ரணை செய்த அதி­கா­ரி­யான பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்க மேலுள்ள விட­யத்தை வெளிப்­ப­டுத்­தினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், ‘வணாத்­து­வில்­லுவில் வெடி­பொருள் மீட்­கப்பட்ட பின்னர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் சஹ்ரான் ஹஷீம் மற்றும் மொஹம்மட் எனும் இரு­வரின் தொடர்­புகள் வெளி­ப்ப­டுத்­தப்­பட்­டன. மொஹம்மட் எனும் பெயரால் அறி­யப்­பட்ட நபர் கட்­டு­வா­பிட்­டிய தேவா­ல­யத்தில் குண்டை வெடிக்கச் செய்த ஹஸ்தூன் என உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னரே தெரி­ய­வந்­தது.

சஹ்­ரானை கைது செய்ய கடந்த 2019 ஜன­வரி 23 முதல் முயற்­சிகளை முன்­னெடுத்த போதும் அவரை கைது செய்ய முடி­ய­வில்லை. அவ­ருக்கு எதி­ராக நாம் வெளி­நாட்டு பயணத் தடை­யையும் பெற்­றி­ருந்தோம்.

சஹ்ரான் சாதா­ரண தொலை­பேசி அழைப்­புக்­களைக் கூட முன்­னெடுக்­க­வில்லை. அவர் திரிமா எனும் செய­லியை பயன்­ப­டுத்­தி­யதால் அவரை நெருங்க முடி­ய­வில்லை. அந்த செய­லியை எந்த தொலை­பேசி சேவைகள் நிறு­வ­னத்­தி­னாலும் ஹெக் செய்ய முடி­ய­வில்லை.

சஹ்­ரானை தேடி நாம் அவ­ரது வீட்­டுக்கு சென்றோம். அவ­ரது மனை­வி­யான பாத்­திமா ஹாதி­யாவின் கெக்­கு­னு­கொல்ல வீட்­டுக்கும் சென்றோம். அங்கு சென்ற எல்லா சத்­தர்ப்­பத்­திலும், கட்­டு­வா­பிட்டி தேவா­லய குண்­டு­தாரி ஹஸ்­தூனின் மனைவி சாரா ஜெஸ்மின் என­ப்படும் புலஸ்­தினி மகேத்­திரன் சஹ்­ரானின் மனை­வி­யு­ட­னேயே தங்­கி­யி­ருந்தார்.
நாம் வணாத்­து­வி­லுவில் வெடி­பொ­ருட்­களை மீட்­டதால் மிகப் பெரும் அழிவு தவிர்க்­கப்பட்­டது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் போது பயன்­ப­டுத்­தப்­பட்ட வெடி­பொ­ருட்கள் , வணாத்து­வில்­லுவில் மீட்­கப்­பட்ட வெடி­பொ­ருட்­க­ளுக்கு சம­மா­னவை. அங்கு வைத்து இர­சா­யன கலவை தொடர்­பி­லான விட­யங்கள் அடங்­கிய ஒரு கடிதம் பிர­தி­வாதி ஒருவ­ரி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்­டது.

இத­னை­விட இர­சா­யன கல­வைகள் செயும் வகை­யி­லான உப­க­ர­ணங்­களும் மீட்­கப்­பட்­டன. (உப­க­ர­ணங்­க­ளையும் அடை­யாளம் காட்டினார்)
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் பெரும்பாலும் அனைத்து குண்டுதாரிகளும் பயன்படுத்திய வெடிபொருளின் அளவு தலா 500 கிராமாகும். ஒரே ஒரு தாக்குதல்தாரி மட்டும் 800 கிராம் நிறையுடைய வெடிபொருளை பயன்படுத்தியிருந்தார்.

அதன்படி அத்தாக்குதலுக்கு பயன்படுத்திய மொத்த வெடிபொருளின் அளவு 5 கிலோவாகும். எனினும் வனாத்துவில்லுவில் நாம் கைப்பற்றிய வெடிபொருள் சுமார் 1200 கிலோ எடை கொண்டது. அப்படியானால் மிகப் பெரும் அழிவு இதனூடாக தவிர்க்கப்பட்டது என்பதை நீதிமன்றம் அவதானிக்க வேண்டும்.’ என மாரசிங்க சாட்சியமளித்தார். குறித்த சாட்சியம் தொடர்பிலான குறுக்கு விசாரணைகள் இன்று 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.