ஜெய்லானி பள்ளியை அகற்றிவிட முடியாது

புனர் நிர்மாணம் செய்ய தீர்மானித்துள்ளது நிர்வாகம்

0 354

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கூர­க­லயில் அமைந்­துள்ள வர­லாற்­றுப்­பு­கழ்­மிக்க தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் அகற்­றிக்­கொள்ள முடி­யாது. ஜெய்­லானி பள்­ளி­வா­சலை பாது­காப்­பது எமது கட­மை­யாகும்.

பள்­ளி­வா­சலை புனர்­நிர்­மாணம் செய்­வ­தற்கு பள்­ளி­வாசல் நிர்­வாகம் தீர்­மா­னித்­துள்­ளது என பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலைவர் இப்­திகார் அஸீஸ் தெரி­வித்தார்.
தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் நிர்­வாகம் பள்­ளி­வாசல் தொடர்­பான எதிர்­கால செயற்­திட்­டங்­களை கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பள்­ளி­வா­சலில் ஒன்று கூடி ஆராய்ந்­தது.

பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத்­த­லைவர் இப்­திகார் அஸீஸ் தொடர்ந்தும் விடி­வெள்­ளிக்கு கருத்துத் தெரி­விக்­கையில் பள்­ளி­வா­சலில் ஐவேளை தொழுகை ஜும்மா தொழுகை மெள­லூது, திக்ரு மஜ்லிஸ் மற்றும் மாதாந்த கொடி­யேற்றம் போன்­ற­வ­ன­வற்றை எவ்­வித தடை­க­ளு­மின்றி தொட­ராக முன்­னெ­டுப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­வாசல் காணியில் சமா­தானம் மற்றும் நல்­லு­றவுக்கான மத்­திய நிலை­ய­மொன்­றினை நிறு­வு­வ­தற்கும் ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் வாசி­க­சாலை,அருங்­காட்­சியம் என்­ப­னவும் நிறு­வப்­ப­ட­வுள்­ளன. இந்த மத்­திய நிலையம் ஏனைய மதத்­தி­னரை கவரும் வகையில் அவர்கள் இங்கு விஜயம் செய்யும் வகையில் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.
தப்தர் ஜெய்­லா­னியில் வர­லாற்றுப் புகழ்­மிக்க இரண்டு ஸியா­ரங்கள் மண்ணில் மூடப்­பட்டு விட்­டன. அந்த ஸியா­ரங்­களை மீண்டும் திறப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் தேர­ருடன் முன்­னெ­டக்­கப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான காணியில் 70% அப­க­ரிக்­கப்­பட்­டு­விட்­டது. இப்­ப­குதி முஸ்­லிம்கள் பெரும்­பான்மை சமூ­கத்­துடன் சமா­தா­ன­மாக நல்­லு­ற­வுடன் வாழ்­வ­தற்கே விரும்­பு­கி­றார்கள்.

பள்­ளி­வா­சலை இருக்கும் இடத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொள்­ளு­மாறு எவ­ருக்கும் உத்­த­ர­வி­ட­மு­டி­யாது. இப்­பள்­ளி­வாசல் நூற்­றாண்டு கால வர­லாறு கொண்­ட­தாகும்.
கூர­க­லயில் பாரிய தாது­கோ­புரம் மற்றும் பன்­சலை நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கு விஜயம் செய்­வ­தற்கு முஸ்­லிம்கள் அச்சம் கொண்­டுள்­ளனர்.

முஸ்­லிம்கள் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை. தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கு விஜயம் மேற்­கொள்­ளலாம். யாத்­தி­ரி­கர்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்­கப்­படும்.
பள்­ளி­வா­சலில் ஒவ்வொரு மாதமும் விசேட சமய நிகழ்­வுகள் இடம்­பெ­று­கின்­றன. எதிர்­வரும் நவம்பர் மாதம் கந்­தூரி வைபவம் ஏற்­பாடு செய்­யப்­படும். பள்­ளி­வா­ச­லுக்கு விஜயம் செய்யும் மக்­க­ளுக்கு தேவை­யான வசதிகளை பள்ளிவாசல் நிர்வாக சபை ஏற்பாடு செய்துள்ளது.

ஜெய்லானியில் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சமாதானம், மற்றும் நல்லுறவு மத்திய நிலையத்துக்கும் பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்கும் பள்ளிவாசல் நிர்வாகம் முஸ்லிம் சமூகத்திடமிருந்து உதவிகளை எதிர்பார்த்துள்ளது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.