‘ஸ்கொஷ்’ வீராங்கனை பத்தூமுக்கு ஏன் இந்த அநீதி?

விளையாட்டு அமைச்சு பதிலளிக்குமா?

0 545

ஏ.ஆர்.ஏ.பரீல்

நான்கு ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை நடை­பெறும் பொது­ந­ல­வாய லிளையாட்டு விழாவின் 22 ஆவது தொடரின் போட்­டிகள் கடந்த ஜூலை 28 ஆம் திகதி இங்­கி­லாந்தின் பேர்­மிங்ஹாம் நகரின் அலெக்­சாண்டர் அரங்கில் ஆரம்­ப­மா­னது.

பொது­ந­ல­வாய அமைப்பின் உறுப்பு நாடு­க­ளுக்கும் அதனை சார்ந்த பிராந்­தி­யங்­க­ளுக்கும் இடையே நடை­பெறும் விளை­யாட்­டுப்­போட்­டியே பொது­ந­ல­வாய (கொமன்வெல்த்) விளை­யாட்­டுப்­போட்டி என அழைக்­கப்­ப­டு­கி­றது. இவ்­வ­ரு­டத்­துக்­கான இப்­போட்­டியில் 72 நாடுகள் கலந்து கொள்­கின்­றன. இவ்­வி­ளை­யாட்டு விழாவில் பேட்­மின்டன், ஹொக்கி, குத்­துச்­சண்டை, தட­களம், பளு­தூக்கல், கிரிக்கெட், ஸ்கொஷ் உட்­பட 19 போட்­டி­களும், 8 பரா விளை­யாட்­டு­களும் இடம்­பெ­று­கின்­றன. சுமார் 6500 வீரர்கள் மற்றும் குழு நிர்­வா­கிகள் இந்­தப்­போட்­டிகளில் கலந்து கொள்­கின்­றனர்.

20 விளை­யாட்­டுக்­களில் 280 பிரி­வு­களில் போட்­டிகள் நடக்­கின்­றன. இவ்­வி­ளை­யாட்டு விழாவில் முதன்­மு­றை­யாக மகளிர் கிரிக்கெட் போட்­டியும் இடம்­பெ­ற­வுள்­ளது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியும் போட்­டியில் கலந்து கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்த பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் இலங்­கை­யி­லி­ருந்து ஒரு மாற்றுத் திற­னாளி உட்­பட 110 வீர, வீராங்­க­னைகள் 14 வகை­யான விளை­யாட்டுப் போட்­டி­களில் கலந்து கொண்­டுள்­ளனர். கடந்த 28 ஆம் திகதி விளை­யாட்டு விழாவின் ஆரம்ப நாளில் இலங்­கையின் தேசிய கொடியை பளு­தூக்கல் வீரர் இந்­திக்க திசா­நா­யக்க ஏந்திச் சென்றார். இலங்கை விளை­யாட்டு வீரர்கள் குழாத்தின் தலை­வ­ராக நிய­மனம் பெற்­றுள்ள இவர் கோல்ட் கோஸ்ட் 2018 பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் பளு­தூக்­கலில் வெள்­ளிப் பதக்கம் வென்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தாகும்.

மூன்று முறை தேசிய விருது பெற்ற
ஸ்கொஷ் வீராங்­கனை புறக்­க­ணிப்பு
இந்நிலையில், மூன்று முறை தேசிய விருது பெற்­றுள்ள தேசிய ஸ்கொஷ் வீராங்­கனை பத்தூம் இஸ்­ஸதீன் தான் 22 ஆவது பொது­ந­ல­வாய விளை­யாட்­டு­வி­ழாவில் ஸ்கொஷ் போட்­டியில் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், விளை­யாட்டு அதி­கா­ரி­களால் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் நீதி­வேண்டி நீதி­மன்றம் சென்­றுள்ளார். ஸ்கொஷ் போட்­டியில் கலந்து கொள்­வ­தற்கு வாய்ப்பு மறுக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து அவர்­ நீ­தி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­துள்ளார்.

தனக்கு மூன்று முறை தேசிய விருது கிடைத்து, தேசிய மட்­டத்தில் மூன்று முறை சாதனை நிலை­நாட்­டி­யுள்ள போதிலும் ஸ்கொஷ் தெரி­வுக்­குழு அதி­கா­ரிகள் பார­பட்சம் காட்­டி­யுள்­ள­தாக பத்தூம் இஸ்­ஸதீன் தனது மனுவில் குறிப்­பிட்­டுள்ளார்.

எனினும் ஸ்கொஷ் தெரி­வுக்­குழு பயிற்­சிகள் மற்றும் தேர்­வினை பல முறை நடாத்­திய போதிலும் பத்தூம் இஸ்­ஸதீன் இவற்றில் கலந்து கொள்­ளாது வெளி­நா­டு­களில் நடக்கும் போட்­டி­களில் கலந்து கொள்­வதில் மாத்­திரம் கரி­சனை காட்­டி­யதாலேயே பத்தூம் இஸ்­ஸதீன் இல்­லாது ஸ்கொஷ் அணி­யினை தெரிவு செய்ய தாம் நிரப்­பந்­திக்­கப்­பட்­ட­தாக தெரி­வுக்­குழு அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

“நான் இலங்­கையில் 3 வரு­டங்­க­ளாக தேசிய ஸ்கொஷ் வீராங்­கனையாக முன்னணியில் இருக்கிறேன். தற்­போதும் நானே இலங்­கையின் தேசிய ஸ்கொஷ் வீராங்­கனை. இலங்­கையில் முதல்­தர வீராங்­க­னை­யா­கவும், சர்­வ­தே­சத்தில் 246 ஆவது நிலை வீராங்­க­னை­யா­கவும் இருக்­கிறேன்.

பொது­ந­ல­வாய ஸ்கொஷ் போட்­டிக்கு முதல் நிலை வீராங்­க­னையே அனுப்பி வைக்­கப்­ப­ட­வேண்டும். அதா­வது நான். ஆனால் இலங்கை ஸ்கொஷ் சம்­மே­ளனம் (பெட­ரேஷன்) எனது பெயரை நீக்­கி­விட்­டது. இவ்­வ­ருடம் ஸ்கொஷ் போட்­டிக்கு இலங்­கை­யி­லி­ருந்து 2 வீராங்­க­னை­களும், 2 வீரர்­களும் அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். ஆனால் நான் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை.

இந்தப் போட்­டிக்கு எனது பெயரை உள்­வாங்­காது இலங்கை ஸ்கொஷ் சம்­மே­ள­னமும், விளை­யாட்டு அமைச்சின் பணிப்­பாளர் நாய­கமும் விளை­யாட்டுத் துறை அமைச்­சரும் நீக்­கி­விட்­டார்கள்.

நான் விளை­யாட்­டின்­போது உபா­தை­க­ளுக்­குள்­ளானேன். அந்த உபா­தை­யி­லி­ருந்து மீள்­வ­தற்கு ஸ்கொஷ் சம்­மே­ளனம் எனக்கு சந்­தர்ப்பம் தரு­வ­தில்லை. நான் சுகம் பெற்­றுக்­கொள்­வ­தற்கு எனக்கு கால அவ­காசம் வழங்­கு­மாறு நான் கோரி­யி­ருந்தேன் என பத்தூம் இஸ்­ஸதீன் சிங்­கள ஊட­க­மொன்­றிற்கு வழங்­கிய நேர்­கா­ணலில் தெரி­வித்­துள்ளார்.
மேலும் அவர் தெரி­விக்­கையில், நான் உபா­தை­க­ளி­லி­ருந்து மீள்­வ­தற்கு அவர்கள் கால அவ­காசம் தர­வில்லை. உபா­தை­யி­லி­ருந்து மீளாது விளை­யாட்டு ஒத்திகைகளில் கலந்து கொள்­வ­தற்கு முடி­யாது என கால அவ­காசம் கோரி­யி­ருந்தேன். Trial இல் கலந்து கொள்­ளாது நான் இடை­ந­டுவில் வில­கி­ய­தாக அதி­கா­ரிகள் குற்றம் சுமத்­து­கி­றார்கள்.

Trial க்குப் பின்பே எனது உபா­தைக்கு சிகிச்சை பெற்­றுக்­கொண்டேன். அதி­கா­ரி­களும் அதற்கு அனு­ம­தித்­தார்கள்.கதிர்வீச்சு சிகிச்­சைக்கு செல்ல வேண்­டி­யி­ருந்­தது. சிகிச்­சைக்கு செல்­லும்­போது மின் தடை இருந்­தது. நான் நோன்பு காலத்­திலும் சிகிச்­சைக்குச் சென்றேன். மின் தடை­யுள்ள சந்­தர்ப்­பங்­களில் என்னால் எப்­படி கதிர்வீச்சு சிகிச்சை (Electric) பெற்­றுக்­கொள்ள முடியும். முழு இலங்­கை­யிலும் மின்­தடை இருந்­தது. அப்­போது என்னை தொடர்பு கொண்டு மின்­தடை இருக்­கி­றது. இப்­போது சிகிச்­சைக்கு வர வேண்டாம் என அறி­வித்­தார்கள். இவ்­வாறு காலம் கடந்­தது. புது­வ­ருட விடு­மு­றையில் விளை­யாட்டு அமைச்சும் மூடப்­பட்­டது.

ஸ்கொஷ் சம்­மே­ள­னத்­துக்கு எனது உபாதை தொடர்பில் விளக்­கினேன். வைத்­திய அறிக்­கை­யொன்­றினைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக விளை­யாட்டு அமைச்­சுக்கு சென்றேன். அப்­போது ஸ்கொஷ் உபாதை தொடர்­பான டாக்டர் அங்கு இருக்­க­வில்லை. பின்பு நான் லங்கா வைத்­தி­ய­சா­லைக்கு சென்று டாக்­ட­ரிடம் திக­தி­யொன்று பெற்­றுக்­கொண்டேன். அத்­தி­னத்தில் 45 நிமிடம் அந்த டாக்டர் என்னைப் பரி­சோ­தித்து நான் இன்னும் உபா­தை­யி­லி­ருந்து மீண்டு தகுதி பெற­வில்லை என்றார். ஓய்வு எடுங்கள். பின்பு விளை­யா­டுங்கள் என்றே அவர் கூறினார்.

நான் தேசிய மட்­டப்­போட்­டியில் முழு­மை­யாக விளை­யா­டினேன். இளைப்­பா­ற­வில்லை. நான் இடை­ந­டுவில் வில­கி­யி­ருந்­தாலே போட்­டி­யி­லி­ருந்தும் என்னை விலக்க முடியும்.
அக்­கா­லத்­தி­லி­ருந்த விளை­யாட்டு அமைச்சர் நாமல் ராஜ­ப­க்ஷ­வுடன் எனது நிலைமை தொடர்பில் பேச­வில்லை. நான் இலங்கை ஸ்கொஷ் சம்­மே­ள­னத்­து­டனே பேசினேன். நான் மார்ச் மாதத்தில் விருது ஒன்று பெற்றேன். இது கூட விளை­யாட்டு அமைச்சருக்கு தெரியாதாம். விளை­யாட்டு அமைச்சர் என்ற வகையில் இதனை அவர் ஏன் அறி­யா­தி­ருந்தார். இதனால் தான் நாமல் ராஜ­ப­க்ஷவின் கவ­னக்­கு­றை­வி­னாலே எனது பெயர் பொது­ந­ல­வாய போட்­டிக்கு உள்­வாங்­கப்­ப­ட­வில்லை.

எனது பெயர் நீக்­கப்­பட்­டமை அர­சியல் ரீதி­யா­னது என்றே கூறுவேன். என்னை போட்­டிக்கு அனுப்­பா­தி­ருந்தால் அவர்­க­ளது நண்­பர்­களை போட்­டிக்கு அனுப்­பலாம். இதுவே எனது பெயர் நீக்­கப்­பட்­ட­மைக்குக் காரணம்.

முத­லா­வது நிலை­யி­லி­ருக்கும் என்னை அனுப்­பாது 2 ஆவது மற்றும் 3 ஆவது நிலை­யி­லுள்ள இரு பெண்­களை அனுப்­பி­யி­ருக்­கி­றார்கள். போட்­டிக்கு தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள் யாரினது நண்­பர்கள் என எனக்குத் தெரி­யாது.

நான் தேசிய விருது பெற்ற வீராங்­கனை. என்னை போட்­டிக்கு எவ்­வித தெரி­வுக்கும் உட்­ப­டுத்தாது அனுப்­பி­யி­ருக்­கலாம்.

தற்­போ­தைய விளை­யாட்டு அமைச்சர் ரொஷான் ரண­சிங்­க­வுடன் நான் பேச­வில்லை. எனது உற­வினர் பேசினார். எனது பெயரை உள்­வாங்க பணிப்­பாளர் நாயகம் விரும்­ப­வில்லை என அவர் தெரி­வித்தார்.

நான் தொடர்ந்தும் பயிற்­சிகள் பெற்று எதிர்­கா­லத்தில் சர்­வ­தேச போட்­டி­களில் கலந்து கொண்டு இலங்­கைக்கு விருது பெற்றுக் கொடுக்­கவே விரும்­பு­கிறேன்.
நான் வெளி­நாட்டில் இருந்தாலும் அடிக்கடி இலங்கை வருவேன்.

ஆசிய ஸ்கொஷ் சம்பியன்சிப் போட்டி கொரியாவில் நடைபெறவுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெறவுள்ளது. இவற்றிலும் எனது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான பயணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
நான் இலங்கை அணியில் விளையாடக் கூடாது என தடை செய்யும் குழுவொன்று ஸ்கொஷ் சம்மேளனத்திலும், விளையாட்டு அமைச்சிலும் இருக்கிறது.
இலங்கை ஸ்கொஷ் சம்மேளனம், விளையாட்டுத்துறை அமைச்சு என்பன இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறேன். எந்தவொரு விளையாட்டு சம்மேளனமும் தங்களது வீரர்களுக்கு இவ்வாறான அநீதியை இழைக்க வேண்டாம். இது தவறு. இது இலங்கைக்குப் பாதகமாக அமையும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.