மறைந்தும் மனங்களில் வாழும் ‘ஷைகுல் பலாஹ்’ அப்துல்லாஹ் (றஹ்மானீ)

0 365

கவிமணி மெளலவி
எம்.எச்.எம் புஹாரி (பலாஹி)
செயலாளர், ஜாமிஅதுல் பலாஹ்
பணிப்பாளர் சபை.

காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ் அற­புக்­கல்­லூரி அதிபர் சங்­கைக்­கு­ரிய ஷைகுல் பலாஹ் எம்.ஏ.முகம்­மது அப்­துல்லாஹ் (றஹ்­மானீ) அவர்கள் 12.10.2016 ஆம் திகதி ஹிஜ்ரி 10.01.1438 ஆஷுறா தினத்­தன்று கால­மா­னார்கள்.

சங்­கைக்­கு­ரிய “ஷைகுல் பலாஹ்”­அ­வர்கள் தென்­னிந்­தியா தஞ்சை மாவட்டம் அதி­ராம்­பட்­டி­னத்தில் 21.03.1932 இல் பிறந்­தார்கள். இவர்­க­ளது தந்தை மிகச் சிறந்த மார்க்க அறிஞர் முகம்­மது அபூ­பக்கர் ஆலிம் அவர்கள். தாயார் ஸபிய்யா உம்மா ஆவார்.
தந்தை அபூ­பக்கர் ஆலிம் அவர்கள் அட்­டா­ளைச்­சேனை கிழக்­கி­லங்கை அற­புக்­கல்­லூ­ரியில் அதி­ப­ராகக் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருக்­கும்­போது, தனயன் அப்­துல்லாஹ் ஹஸறத் அவர்கள் அக்­கல்­லூ­ரியில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கடமை புரிந்­தார்கள்.

ஷைகுல் பலாஹ் அவர்கள் தமது தாய­க­மான அதி­ராம்­பட்­டி­னத்­தி­லுள்ள மத்­ர­ஸதுர் ரஹ்­மா­னிய்­யாவில் மார்க்கக் கல்வி பயின்று “றஹ்­மானீ” பட்டம் பெற்­றார்கள்.

இவர்கள் தனது தந்­தை­யுடன் அட்­டா­ளைச்­சேனை கிழக்­கி­லங்கை அற­புக்­கல்­லூ­ரியில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருக்­கும்­போது காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ் அற­புக்­கல்­லூ­ரியில் அதி­ப­ருக்­கான வெற்­றிடம் ஏற்­பட்­டது. காத்­தான்­கு­டியின் முக்­கிய பிர­மு­கர்கள் ஜாமி­அதுல் பலாஹில் அதி­ப­ராக கட­மை­யாற்ற வரு­மாறு ஷைகுல்­பலாஹ் அவர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­த­தற்­கி­ணங்க 13.10.1959 இல் வந்து சேர்ந்­தார்கள். சிறிது காலம் இங்கு உப அதி­ப­ராகக் கட­மை­யாற்­றிய பின் அதி­ப­ராக நிய­மிக்­கப்­பட்­டார்கள்.

இவர்­க­ளது அய­ராத முயற்­சி­யினால் பலாஹ் அற­புக்­கல்­லூரி பெரு­வ­ளர்ச்சி கண்­டது. இலங்­கையின் பல பகு­தி­க­ளையும் சேர்ந்­த­வர்கள் இங்கு மார்க்கக் கல்­வியை கற்க அனு­மதி பெற்­றார்கள்.

அப்­துல்லாஹ் ஹஸறத் அவர்கள், அதி­ராம்­பட்­டினம் செ.மு.க. நூறு முகம்­மது மரைக்­காயர் அவர்­களின் புதல்வி உம்முல் பஜ்­ரியா அவர்­களை 02.09.1961 இல் மண­மு­டித்­தார்கள். இவர்­க­ளுக்கு மூன்று ஆண் மக்கள். மூத்­தவர் முகம்மத் றஹ்­ம­துல்லாஹ். இவர் ஜாமி­அதுல் பலாஹில் மார்க்கக் கல்வி பயின்று மௌலவி பலாஹீ பட்டம் பெற்று தற்­போது வாழைச்­சேனை, அல்­குல்­லிய்­யதுந் நஹ்­ஜதுல் இஸ்­லா­மிய்யா அற­புக்­க­லா­பீ­டத்தில் அதி­ப­ராகப் பணி­யாற்­று­வ­தோடு, காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ் அறபுக் கல்­லூ­ரி­யிலும் அதி­ப­ராகப் பதவி வகிக்­கி­றார்கள்.

இரண்­டா­வது புதல்வர் முகம்­மது முஸ்­தபா சிறு­வ­ய­தி­லேயே மர­ணித்­து­விட்டார். மூன்­றா­வது புதல்வர் முகம்­மது பறக்­க­துல்லாஹ் கொழும்பு பெரிய பள்­ளி­வாசலில் இயங்கும் ஜாமிஆ மதீ­னதுல் இல்ம் கலா­பீ­டத்தில் ஹாபிழ் பட்டம் பெற்று பின்னர் ஜாமி­அதுல் பலாஹில் மார்க்கக் கல்வி பயின்று, அக்­கல்­லூ­ரி­யி­லேயே அல்­குர்ஆன் மன­ன­பீடம் மற்றும் ஷரீஆ பீடங்­களில் விரி­வு­ரை­யா­ள­ரா­கவும் கட­மை­யாற்­றினார். தற்­போது தனது சொந்த ஊரான தென்­னிந்­தியா அதி­ராம்­பட்­டி­னத்­தி­லுள்ள அறபுக் கல்­லூ­ரியில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்­று­கின்றார்.

55 வருட கால­மாக, பெற்ற தாயை, பிறந்த பொன்­னாட்டை உற்றார், உற­வினர், சுற்­றத்தார், நண்­பர்­களைப் பிரித்து கடல் கடந்து வந்து கல்விப் பணி­யாற்­றிய ஷைகுல் பலாஹ் அவர்கள் தனது சொந்த ஊரில் வாழ்ந்த காலம் மிக­மிகக் குறை­வா­னது.
கொழும்பு இரண்டாம் குறுக்குத் தெருவில் அழ­கிய தோற்­றத்­துடன் கம்­பீ­ர­மாகக் காட்சி தரும் ஜாமிஉல் அழ்பர் சம்­மாங்­கோட்­டுப்­பள்­ளியைக் கட்­டு­வ­தற்கு நிலம் கொடுத்து உத­வி­யவர், ஷைகுல் பலாஹ் அவர்­களின் பாட்­டனார் அப்துல் காதிர் அவர்­க­ளாவார். இந் நிலையில் இப்­பள்­ளி­வா­சலின் நம்­பிக்­கை­யாளர் சபைத் தலை­வ­ரா­கவும் ஷைகுல் பலாஹ் அவர்கள் மர­ணிக்­கும்­வரை கட­மை­யாற்­றி­னார்கள்.

தமது வாழ்­நாளை ஜாமி­அதுல் பலாஹின் பெரு­வ­ளர்ச்­சிக்­காக முழு­மை­யாக அர்ப்­ப­ணித்த ஷைகுல் பலாஹ் அவர்­க­ளிடம் மார்க்கக் கல்வி பயின்ற பலாஹீ, மௌல­விகள் இன்று உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் தஃவாப்­பணி புரிந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.
ஜாமி­அதுல் பலாஹில் அதி­ப­ராகக் கட­மை­யாற்றிக் கொண்டு பல்­வேறு பொதுப்­ப­ணி­க­ளிலும் ஈடு­பட்­டார்கள். காத்­தான்­குடி நகரை இஸ்­லா­மிய நெறி­மு­றையில் வழி­ந­டத்தும் தனிப்­பெ­ருந்­த­லை­வ­ராக மிளிர்ந்­தார்கள். காத்­தான்­குடி மக்­களின் இன்ப துன்­பங்­களிற் பங்கு கொண்டு மக்­களின் மனங்­களை வென்­றார்கள்.

இலங்­கையில் புதிய தொழுகை நேரத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்குப் பாரிய பங்­க­ளிப்புச் செய்­தார்கள். காத்­தான்­குடி ஜம்­இய்­யத்துல் உலமா, பள்­ளி­வாசல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் ஆகி­ய­ன­வற்றின் சிறப்­பான செயற்­பா­டு­க­ளுக்குப் பாரிய பங்­க­ளிப்புச் செய்­தார்கள்.

அன்னார் 12.10.2016 ஆம் திகதி ஹிஜ்ரி 1438 முஹர்ரம் மாதம் 10ஆம் நாள் ஆஷுறா தினத்­தன்று இவ்­வு­லகை விட்­டுப்­பி­ரிந்­தார்கள். அன்­னாரின் ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் இலங்­கை­யின் ­பல பகு­தி­க­ளையும் சேர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் சமு­க­ம­ளித்­தி­ருந்­தனர். அது மாத்­தி­ர­மன்றி பிற சம­யங்­களின் பெரி­யார்கள், அர­சியற் தலை­வர்கள், அற­புக்­கல்­லூ­ரி­களின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் அன்னாரின் ஜனாஸாவுக்கு மரியாதை செலுத்தினார்கள். இது அன்னார் இலங்கை மக்களால் எந்தளவு தூரம் நேசிக்கப்பட்டார்கள் என்பதற்குத் தக்க சான்றாகும்.

அன்னாரின் 6 ஆவது நினைவு தினம் எதிர்வரும் 09.08.2022 ஆகும். இதையொட்டி ஜாமிஅதுல் பலாஹ் பழைய மாணவர் அமைப்பான மஜ்லிஸுல் பலாஹிய்யீன் விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

அன்னாருக்கு அல்லாஹ் மறுமைப் பாக்கியங்களை நிறைவாக அருள்வானாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.