அறப்போராளிகளுக்குப் புகழாரம்: அடுத்தது என்ன?

0 421

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா.

வர­லாறு பல இடங்­க­ளிலும் பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் மீண்டும் மீண்டும் புகட்­டி­யுள்ள ஒரு பாடம் என்­ன­வெனில் மக்கள் இலட்­சக்­க­ணக்கில் திரண்டு நிரா­யு­த­பா­ணி­க­ளாக ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராகக் கிளர்ந்­தெ­ழு­கையில் ஆட்­சி­யா­ளர்­களின் படைப்ப­லங்­களும் அவை ஏந்தும் துப்­பாக்­கி­களும் பீரங்­கி­களும் மற்றும் கன­ரக ஆயு­தங்­களும் செய­லி­ழந்­து­விடும் என்­ப­தாகும். அந்த உண்­மை­யைத்தான் இலங்­கையும் சென்ற ஒன்­பதாம் திகதி உறு­தி­ப்ப­டுத்­தி­யது. இலங்­கையின் வர­லாற்­றி­லேயே முதன்­மு­த­லாக மக்கள் தமது ஒன்­று­பட்ட சக்­தியின் வலி­மையை உணர்ந்த நாள் அது­வென்றும் கூறலாம்.

இலங்­கையர் விழித்­து­விட்­டனர். அவர்­களை விழிக்கச் செய்­த­வர்கள் காலி­மு­கத்­தி­ட­லிலே மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் ஓர் அறப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­து­வைத்த சிங்­கள வாலி­பர்­களும் யுவ­தி­களும் ஆவர். யாவரும் அவர்­களை கரங்கள் கூப்பி வாழ்த்த வேண்டும். அவர்­க­ளுக்­கா­கவே இக்­கட்­டுரை வெளி­யி­டப்­ப­டு­கின்­றது.

பொத்­துவில் தொடக்கம் பொலி­கண்டி வரை
இலங்கை மக்­களின் விழிப்­பு­ணர்வின் வெளிப்­பாட்டை முதன்­மு­த­லாக 2021ஆம் வருடம் மாசி மாதம் மூன்றாம் திக­தி­யன்று தமிழ் முஸ்லிம் இளை­ஞர்­க­ளி­னதும் யுவ­தி­க­ளி­னதும் தலை­மையில் ஆரம்­பித்து நிறை­வே­றிய பொத்­து­வி­லி­ருந்து பொலி­கண்டி வரை­யி­லான பாத யாத்­திரை வெளிக்­காட்­டி­யது. அக்­கா­லாட்­ப­டை­யினர் நிரா­யு­த­பா­ணி­க­ளா­கவே ஆட்­சி­யா­ளர்­களின் அடக்­கு­மு­றைக்கும் அநீ­தி­க­ளுக்கும் எதி­ராகக் குர­லெ­ழுப்­பிய வண்ணம் தமது ஆதங்­கங்­களை முழு­நாட்­டுக்­குமே வெளிப்­ப­டுத்­தினர்.

ஆனால் அவர்­களின் குரல் சிங்­கள மக்­களின் செவி­களை எட்­டு­வ­தற்கு மேலும் சுமார் ஒரு வருடம் எடுத்­தது. இறு­தி­யாக, 2022 சித்­திரை மாதம் காலி­மு­கத்­தி­டலில் சிறு­பான்மை இள­வல்கள் எழுப்­பிய அதே ஒலி சிங்­கள இள­வல்­களின் வாய்­க­ளிலே ஒலிக்­கத் தொடங்­கிற்று. அன்று தொடங்­கிய அறப்­போ­ராட்டம் மூன்று மாதங்­க­ளாகச் சாத்­வீ­க­மா­கவும், அர­சியல் பக்­கச்­சார்­பின்­றியும், பல தியா­கங்­களின் மத்­தி­யிலும் அனைத்து இனங்­க­ளி­னது மதத் தலை­வர்­களின் ஆத­ர­வு­டனும் நடை­பெற்று அதன் முதல் குறிக்­கோ­ளான “கோத்­தாவே வெளி­யேறு” என்ற கோரிக்­கையில் வெற்­றி­காணும் வேளையை எதிர்­நோக்கிக் கொண்­டி­ருக்­கி­றது. வாழ்க! அந்த இள­வல்கள். வெல்க! அவர்­களின் தியாக உணர்வும், விழிப்பு நோக்கும் நாட்­டுப்­பற்றும்.

யார் இந்த இள­வல்கள்?
முது­மைக்குள் நுழைந்து தமது வாழ்வின் இறுதி நாட்­களை எண்­ணிக்­கொண்­டி­ருக்கும் என்­போன்­ற­வர்­களும் முது­மையின் வாயிலை நோக்கி விரைந்து கொண்­டி­ருப்­போரும் இந்த இள­வல்­க­ளைப்­பற்­றிய சில உண்­மை­களை உண­ர­வேண்­டி­யது அவ­சியம். இவர்கள் வாழும் உலகே வேறு. அன்­றொரு காலம் வர­வில்­லாமல் செலவு செய்­து­கொண்டு செங்­கொ­டி­யேந்தி உல­கையே மாற்­ற­வேண்­டு­மென்று தெரு­வெல்லாம் கூக்­கு­ர­லிட்டுத் திரண்ட இளைஞர் சமு­தாயம் வேறு, இன்று வாழும் இள­வல்­களின் சமு­தாயம் வேறு. அவர்­க­ளது வெளித் தோற்­றமும் நடை­யுடை பாவ­னை­களும் விநோ­த­மா­ன­வை­யாக இருக்­கலாம். ஆனால் அவர்­களின் உள்­ளங்கள் மனி­தா­பி­மானம் கொண்­டவை.

உல­கத்தில் வாழும் தமது சகாக்­க­ளுடன் ஒரே நொடியில் தொடர்பு கொண்டு அவர்களுடன் உற­வாடி அவர்­களின் இன்ப துன்­பங்­களில் பங்­கு­கொள்ளும் வல்­லமை படைத்­த­வர்கள் இந்த இள­வல்கள். அர­சி­ய­லிலே ஆஷா­ட­பூ­தி­க­ளையும் பொரு­ளா­தாரச் சுரண்டல் பட்­டா­ளத்­தையும் இனங்­கண்டு அவர்­களின் திரு­கு­தா­ளங்­களை அம்­ப­லப்­ப­டுத்தி, ஒரு தனிப்­பட்ட கட்­சிக்­கா­கவோ அதன் தலை­வ­ருக்­கா­கவோ அன்றி மனித நேயத்­துடன் அனைத்து மக்­களும் சுதந்­தி­ர­மா­கவும் வறு­மைக்­கோட்­டினைத் தாண்­டியும் இயற்கை தந்ந சீத­னங்­களைப் பாது­காத்து வாழ்ந்­து­ கொண்டிருக்கும் ஓர் அற்­புத சந்­ததி.

சாதி, மத, பால் பாகு­பா­டு­களைத் தாண்டி உலக சுபீட்­சத்­துக்­காகத் தோளோ­டுதோள் சேர்ந்து போராடும் அதி­சயப் பிர­கி­ரு­திகள். இன்­றைய உலக ஒழுங்கின் சீர்­கே­டு­களை உணர்ந்து அந்த அமைப்­பையே மாற்­றி­ய­மைக்க உல­கெங்கும் எதிர்ப்பு ஊர்­வ­லங்­களை ஏற்­ப­டுத்தி, ஐ. நாவின் செவி­க­ளையே எட்­டும்­வரை குர­லெ­ழுப்பும் அதி­சயப் பிற­விகள். பட்­ட­தா­ரி­க­ளையும் பள்ளி மாண­வர்­க­ளையும் பகுத்­த­றி­வுள்ள பாமர சகாக்­க­ளையும் ஒரு புனித போரிற் பிணைத்­துள்ள உல­கப்­ப­டையின் இலங்கைக் களமே காலி­மு­கத்­தி­டலும் அங்கே குவிந்த ஆண் பெண் இள­சு­களும். இலங்கை மக்­களின் இத­யங்­க­ளையே தம்­வசம் ஈர்த்­து­விட்ட இந்த இளை­யோரை வாழ்த்­தாமல் இருக்கும் கல்­நெஞ்­சங்­களும் உண்டோ?

இனி­யென்ன செய்­வது?
அறப்­போ­ராட்­டத்தின் முதல் வெற்­றி­யாக புனித பௌத்­தத்தின் பாது­கா­வ­லர்கள் என்ற போர்­வைக்குள் ஒழிந்து கொண்டு நாட்­டையே சூறை­யா­டிய ஒரு கும்­பலை இனங்­கண்டு அதன் ஏமாற்று வித்­தை­க­ளையும் அம்­ப­லப்­ப­டுத்தி அந்த ஏமாற்று வித்­தைக்­கா­ரர்­களை ஓடி ஒழியச் செய்­த­மையைக் குறிப்­பி­டலாம். அவர்­களின் பதவி துறப்­புகள் இன்னும் சட்­ட­பூர்­வ­மா­க­வில்லை என்­றாலும் அது விரைவில் நடை­பெறும் எனத் துணிந்து கூறலாம்.

பிர­த­மரின் வீட்­டினை எரித்­ததும் ஜனா­தி­ப­தியின் மாளி­கைக்கு சேதங்­களை இழைத்­ததும் அரு­வ­ருக்­கத்­தக்க செயல்­க­ளெ­னினும் அவற்றை அறப்­போ­ரா­ளி­களே செய்­தார்­களா அல்­லது அவர்­க­ளுக்­குள்ளே புகுந்­து­விi­யா­டிய சில விஷ­மிகள் செய்­த­னரா என்­பது தெளி­வில்லை. ஆனாலும் ஒட்­டு­மொத்­தத்தில் ஜூலை ஒன்­பது ஒரு மகத்­தான வெற்றித் திருநாள். இலங்­கையின் வர­லாற்­றிலே பொன் எழுத்­துக்­களால் பொறிக்­கப்­ப­ட­வேண்­டிய ஒரு நிகழ்வு. ஆனாலும் அறப் போராட்­டத்தின் அடிப்­படைக் குறிக்கோள் அது­வல்ல.

அதன் இறுதி இலக்கு நாட்டின் அர­சி­ய­லையும் பொரு­ளா­தா­ரத்­தையும் ஏழு தசாப்­தங்­க­ளாக ஆட்­டு­வித்த சிந்­தனைச் சட்­ட­கத்­தையே (paradigm) மாற்றி அமைப்­ப­தாகும். அதற்­கான போராட்டம் இனித்தான் ஆரம்­ப­மா­கி­றது.

சிந்­தனைச் சட்­டகம்
1997ல் விஞ்­ஞானப் புரட்­சி­களின் கட்­ட­மைப்பு என்ற ஒரு நூலை ஆங்­கி­லத்தில் எழுதி வெளி­யிட்ட தோமஸ் கூன் என்னும் ஒரு விஞ்­ஞானத் தத்­து­வ­ஞானி, விஞ்­ஞானப் புரட்சி என்­பது அதன் கட்­ட­மைப்­பான சிந்­தனைச் சட்­டகம் இடை­யி­டையே ஏற்­படும் மாற்­றங்­களை தொடர்ந்தும் தனது அமைப்­புக்குள் உள்­ள­டக்க முடி­யாது என்ற நிலையில் சட்­ட­கத்­தையே மாற்­று­வதால் ஏற்­ப­டு­வது என விளக்­கி­யுள்ளார். தத்­து­வ­ரீ­தி­யான அவ­ரது விளக்­கத்தை விப­ரிப்­ப­தாயின் இக்­கட்­டுரை வேறு திசையில் திரும்­பி­விடும் என்­ப­தாலும் அது பல­ருக்கு விளங்­காமல் போகலாம் என்­ப­தாலும் இலங்­கையின் அர­சியல் பொரு­ளா­தார அமைப்­பு­க­ளுக்கு கூனின் விளக்கம் பொருந்­து­மாற்றை மட்டும் தொட்டுக் காட்டி அதனை அறப்­போ­ராட்­டத்தின் அடுத்த கட்­டத்தை விளக்கப் பயன்­ப­டுத்­துவோம்.

இலங்கை சுதந்­திரம் அடைந்த நாள்­தொ­டக்கம் இந்த நாட்டின் அர­சி­ய­லையும் பொரு­ளா­தா­ரத்தின் வளர்ச்­சி­யையும் வழிப்­ப­டுத்­திய கொள்கை பௌத்த சிங்­களப் பேரி­ன­வாதம். அதைத்தான் இலங்­கையின் சிந்­தனைச் சட்­டகம் எனக்­க­ரு­தலாம். அந்தச் சிந்­தனைச் சட்­ட­கத்­தினுள் அர­சாங்­கங்கள் மாறின, ஆளும் தலை­வர்கள் மாறினர், பொரு­ளா­தார அமைப்­பு­களும் நட­வ­டிக்­கை­களும் மாறின. ஆனால் அவை எல்­லா­வற்­றையும் பௌத்த சிங்­களப் பேரி­ன­வாதம் தனது எல்லைக் கோட்டைத் தாண்­டா­த­வண்ணம் கண்­கா­ணித்துக் கொண்­டது. இருந்தும் அந்த எல்­லைக்குள் இருந்­து­கொண்டே சிங்­கள இனத்­தையும் பௌத்த மதத்­தையும், ஏன் நாட்­டை­யும்­கூட, தமது சுய­லா­பத்­துக்­காகச் சுரண்டத் தொடங்­கிய கும்­பல்­களை அந்தச் சட்­ட­கத்­தினால் இனங்­காண முடி­ய­வில்லை. அந்தச் சுரண்டல் வளர்ந்து வளர்ந்து பகற்­கொள்­ளை­யா­கவே மாறி­ய­போதும் சட்­ட­கத்தின் பாது­கா­வ­லர்கள் அதைப்­பற்றிப் பரா­மு­க­மா­கவே இருந்­தனர்.

அது­மட்­டு­மல்ல, அக்­கொள்­ளைக்­கா­ரர்­களின் பௌத்த வேடத்தை வெறும் போலி­யென உண­ராது அவர்­க­ளுக்கு சிறப்புப் பட்­டங்­க­ளையும் வழங்கி வாழ்த்­தினர். பொன்­னாடை போர்த்திப் பூமா­லை­களும் சூடினர். இந்தப் பம்­மாத்து ஏழு தசாப்­தங்­க­ளாக வளர்ந்து கடைசி இரண்­டரை வரு­டங்­களுள் அதன் இம­யத்தை எட்­டி­யது. அதன் விஷ விளைவை விப­ரிக்­கவும் வேண்­டுமா? இறு­தி­யாக இந்தச் சட்­டகம் இருக்­கும்­வரை நாடும் மக்­களும் ஈடேற்றம் காண­மு­டி­யாது என்ற உண்­மையை உணர்ந்­த­வர்­களே இன்­றைய சிங்­கள பௌத்த இள­வல்கள்.

சிந்­தனைச் சட்­டகம் மாற­வேண்டும்
அறப்­போ­ரா­ளி­களின் மிக­முக்­கி­ய­மான கோரிக்கை சட்­டக மாற்றம். அந்த மாற்றம் ஓர் அடிப்­படை மாற்றம். ஆங்­கி­லத்தில் systemic change என்று கொச்­சை­யாகப் பேசப்­படும் அந்த மாற்­றத்தின் அசல் வடிவம் சட்­டக மாற்றம். சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தால் இந்த நாட்டை செழிப்­ப­டையச் செய்ய முடி­யா­தென்­ப­தையே அறப்­போ­ரா­ளிகள் தமது போராட்­டத்தின் அடி­நா­த­மாகக் கொண்­டுள்­ளனர். அவர்கள் உட­ன­டி­யாக அமுல்படுத்­து­வ­தற்­கென வெளி­யிட்­டுள்ள கோரிக்­கை­களுள் ஐந்­தா­வது கோரிக்கை அந்த மாற்­றத்­தையே தொட்டுக் காட்­டு­கின்­றது. அத­னா­லேதான் பௌத்த சிங்­கள இள­வல்­க­ளுடன் தமிழ், இந்து, இஸ்­லா­மிய, கிறிஸ்­தவ இளை­ஞர்­களும் யுவ­தி­களும் இணைந்து போரா­டு­கின்­றனர். சட்­டக மாற்­றமே இலங்­கைக்கு ஒரு புது யுகத்தை கொண்­டு­வரும். அதை அடை­வதே அறப்­போ­ராட்­டத்தின் அடுத்த கட்டம்.

பரி­கா­ரங்­களும் சூழ்ச்­சி­களும்
இதற்­கி­டையில் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு உட­ன­டி­யான பரி­கா­ரங்­களை நாட­வேண்­டி­யது இப்­போ­துள்ள ஸ்திர­மற்ற அரசின் தலை­யாய கடமை. ஏனெனில் அந்த நெருக்­க­டிகள் ஒவ்­வொன்­றாக அதி­க­ரிக்­கையில் வாய்­மூடி இருந்­த­வர்கள் இப்­பி­ர­தி­நி­திகள். உதா­ர­ண­மாக, ஜனா­தி­ப­தியின் வெற்று வாக்­கு­று­தி­களை நம்­பிக்­கொண்டு, ஆடம்­பரச் செ­ல­வி­னங்­களை ஆமோ­தித்து, நாட்டின் வரு­வா­யையும் உற்­பத்­தி­யையும் நாச­மாக்கி, கடன்­ப­ளுவை வள­ர­விட்­ட­வர்கள் இவர்கள். அந்தப் பளு கட்­டுக்­க­டங்­காமல் பெரு­கி­ய­போது சர்­வ­தேச நாணய நிதியின் உத­வி­யைக்­கூட நாடத் தயங்­கி­ய­வர்­களும் இவர்­களே. இன்­றைக்கு அந்த நிதியின் பரி­கா­ரங்கள் மட்டும் நிரந்­தரத் தீர்­வா­காது என்­ப­தையும் உணர்­வார்­களோ என்­னவோ. அவை மட்­டுமா? நேச­நா­டு­களின், அதிலும் குறிப்­பாக அரபு நாடு­களின் நட்­பினை உதறி எறிந்­த­வர்­களும் இந்த ஆட்­சி­யி­னரே.

இத்­த­னைக்கும் மத்­தியில், மத்­தி­ய­ வங்­கியும் ரணிலின் நிலை­யற்ற அர­சாங்­கமும் இது­வரை எடுத்த நிதி, வரி சம்­பந்­த­மான நட­வ­டிக்­கைகள் யாவுமே அவ­சி­ய­மா­ன­வை­யெ­னினும் அவையே பொரு­ளா­தார ரீதி­யான நிரந்­தரத் தீர்வை தர­மாட்டா. அவ்­வா­றான ஒரு தீர்வு உள்­நாட்டு உற்­பத்தி அதி­க­ரித்து ஏற்­று­ம­திகள் பெருகி சென்­ம­தி­நி­லு­வையில் மிகை காணாமல் ஏற்­ப­ட­மாட்­டாது. அந்த நிலை ஏற்­பட முக்­கி­ய­மான தேவை அனைத்து மக்­க­ளி­னதும் அய­ராத அர்ப்­ப­ணிப்­பு­களும் முயற்­சி­களும். அவற்­றிற்குத் தடை­யாக அமைந்­துள்­ளதே நடை­மு­றை­யி­லுள்ள சிந்­தனைச் சட்­டகம்.

நாட்டின் முப்­பது வீத மக்­களைப் புறக்­க­ணித்­து­விட்டுப் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­ப­லா­மென நினைப்­பது மடமை. அந்த மட­மைக்குத் தூப­மிட்ட பேரி­ன­வாதச் சட்­ட­கத்தைப் பாது­காக்­கவே அதன் பாது­கா­வ­லர்கள் புதிய சூழ்ச்­சி­களை மேற்­கொள்ள விளை­வ­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. உதா­ர­ண­மாக, நாடா­ளு­மன்­றத்­துக்­குள்ளே யார் ஜனா­தி­ப­தி­யா­வது யார் பிர­த­ம­ரா­வது யார் யார் அமைச்­சர்­க­ளா­வது என்ற போட்­டியின் அந்­த­ரங்கம் அந்த நாடா­ளு­மன்­றத்தை விரை­விலே கலைத்­து­விட்டுப் புதிய தேர்­தலை நடாத்தி அறப்­போ­ரா­ளி­களின் வாக்குப் பலத்தைப் பரீட்­சித்­துப்­பார்க்கத் தயங்­கு­வதே.

மக்கள் யாப்பும் தேர்­தலும்
எனினும் தற்­போ­தைய சிந்­தனைச் சட்­ட­கத்தை ஒழித்து எல்லா இனத்­த­வரும் சம உரி­மை­யுள்ள இலங்­கையர் என்ற உய­ரிய அடிப்­ப­டையில் மக்கள் நலன்­பேணும் சிந்­தனைச் சட்­டகம் ஒன்றை உள்­ள­டக்­கிய அர­சியல் யாப்­பொன்றை வரை­வ­தற்கு இந்தத் தற்­கா­லிக அரசு வழி­வகை செய்தல் வேண்டும். புதிய யாப்பும் அதன் அடிப்­ப­டை­யி­லான பொதுத் தேர்தலும் நடைபெறும்வரை அறப்போராட்டம் தொடர வேண்டி இருக்கிறது. இதுதான் அப்போராட்டத்தின் அடுத்த கட்டம். நடைமுறையிலுள்ள யாப்பின்கீழ் தேர்தலில் போராளிகள் குதிப்பது தற்கொலைக்குச் சமன். அதைத்தான் தேர்தல் களத்தில் குதியுங்கள் என்று பாட்டாலி ரணவக்க போன்ற இனவாதிகள் போராளிகளைக் கேட்பதின் இரகசியம்.

தேவை ஒரு லீ குவான் யூ
சீர­ழிந்து, உலக நாடு­களின் நகைப்­புக்கு இலக்­காகிக் கிடக்கும் இலங்­கையைச் சீர்­ப­டுத்தி அதன் பொரு­ளா­தா­ரத்­தையும் வளர்த்து உலக அரங்கில் மதிப்­புள்ள ஒரு நாடாக மாற்­று­வ­தற்கு சிங்­கப்­பூரின் மறைந்த தலைவன் லீ குவான் யூ இங்கே மறு­பி­றவி எடுக்க வேண்­டி­யுள்­ளது. ஜே. ஆர் தொடக்கம் அவ­ருக்குப் பின்­வந்த தலை­வர்கள் யாவரும் இலங்­கையை சிங்­கப்­பூ­ராக மாற்­றுவோம் என்று பறை­ய­டித்­தனர். ஆனால் சிங்கை நகர் அரசு எந்தச் சிந்­தனைச் சட்­ட­கத்தின் அடிப்­ப­டையில் உரு­வா­ன­தென்­பதை உணர மறுத்­து­விட்­டனர். லீ குவான் யூ சீனர்­க­ளுக்­கா­கவோ மலா­யர்­க­ளுக்­கா­கவோ இந்­தி­ய­ருக்­கா­கவோ அந்த நாட்டை வளர்க்­க­வில்லை. அதை சிங்­கை­நகர் மக்­க­ளுக்­காக வளர்த்து மூன்றாம் உலக நாடாய் இருந்­ததை முதலாம் உலக நாடாக மாற்­றினார். அவ்­வா­றான ஒரு சிந்­தனைச் சட்­ட­கத்­தையும் ஒரு தலை­வ­னையும் இலங்­கையின் அறப்­போ­ரா­ளி­க­ளி­ட­மி­ருந்தே தோற்­று­விக்க முடியும். அவர்களின் கைகளிலேயே இலங்கையின் எதிர்காலச் சுபீட்சம் தங்கியுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.