­அரசியல் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை வழங்குவோம்

0 448

நாட்டு மக்­களின் ஏகோ­பித்த எதிர்ப்­பை­ய­டுத்து கோத்­தா­பய ராஜ­பக்ச பதவி வில­கி­யதைத் தொடர்ந்து, அவ்­வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தற்­காக நேற்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற வாக்­கெ­டுப்பில் ரணில் விக்­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். அவர் 134 வாக்­கு­களைப் பெற்ற அதே­வேளை அவரை எதிர்த்துப் போட்­டி­யிட்ட முன்னாள் அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும 82 வாக்­கு­களை மாத்­தி­ரமே பெற்றுக் கொண்டார்.

இதற்­க­மைய இலங்­கையின் எட்­டா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக ரணில் விக்­ர­ம­சிங்க இன்­றைய தினம் பாரா­ளு­மன்ற வளா­கத்தில் பதவிப் பிர­மாணம் செய்து கொள்­ள­வுள்ளார். பாரா­ளு­மன்றில் இடம்­பெற்ற வாக்­கெ­டுப்பைத் தொடர்ந்து உரை­யாற்­றிய அவர், நாடு எதிர்­கொண்­டுள்ள இன்­றைய நெருக்­க­டி­யி­லி­ருந்து மீள்­வ­தற்­காக, புதிய அர­சியல் கலா­சாரம் ஒன்றை கடைப்­பி­டிக்க வேண்டும் என்றும் அதற்கு சகல அர­சியல் கட்­சி­களும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்றும் வேண்­டு­கோள்­வி­டுத்தார். தனது அர­சாங்­கத்தில் அவர் யாரைப் பிர­த­ம­ராக நிய­மிக்கப் போகிறார், சகல கட்­சி­க­ளையும் உள்­வாங்­கி­ய­தாக அவ­ரது ஆட்­சிய அமை­யுமா என்­பதைப் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

இத­னி­டையே, கோத்தா வேண்டாம் என கடந்த 100 நாட்­க­ளுக்கு மேலாக காலி முகத்­தி­டலில் போராட்டம் நடத்தி வெற்றி கண்­டுள்ள போராட்­டக்­கா­ரர்கள் தற்­போது ரணில் விக்­ர­ம­சிங்­க­வையும் ஏற்றுக் கொள்ள முடி­யாது எனக் கூறி­யுள்­ளனர். ரணில் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட பின்னர் கருத்து வெளி­யிட்ட போராட்­டக்­கா­ரர்கள், அவ­ரையும் பதவி வில­கு­மாறு கோரி­யுள்­ள­துடன் தொடர்ச்சியாக போராட்­டத்தில் ஈடு­படப் போவ­தா­கவும் அறி­வித்­துள்­ளனர்.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் நாட்டில் தற்­போது அர­சியல் ஸ்திரத்­தன்மை அவ­சி­ய­மா­கி­றது என்ற உண்­மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்­போது எதிர்­கொண்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து மீள்­வ­தற்­கான பல்­வேறு நட­வ­டிக்­கைகள் ஏலவே ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. குறித்த திட்­டங்­களை வெற்­றி­க­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு நிலை­யான ஜனா­தி­பதி ஒரு­வரும் ஸ்திர­மான அமைச்­ச­ரவை ஒன்றும் அவ­சியம்.

ரணில் விக்­ர­ம­சிங்க ராஜ­பக்­சாக்­களின் நண்பர் என்­பது பரம ரக­சியம். அவர் நிச்­ச­ய­மாக ராஜ­பக்­சாக்­க­ளுக்கு எதி­ராக எந்­த­வித சட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்கப் போவ­து­மில்லை. அவர் மீதும் ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. ஆனால் அவர் தற்­போ­துள்ள பொரு­ளா­தார நெருக்­க­டியைச் சமா­ளிப்­ப­தற்­கான சில முயற்­சி­களை அவ­ரது அனு­ப­வத்தின் ஊடா­கவும் சர்­வ­தேச தொடர்­பு­க­ளி­னூ­டா­கவும் முன்­னெ­டுப்பார் என்ற நம்­பிக்கை இருக்­கி­றது. பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்ட பின்னர் அதற்­கான முயற்­சி­களை ஏலவே ஆரம்­பித்­து­முள்ளார்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட மத்­திய வங்கி ஆளுநர் நந்­தலால் வீர­சிங்க, நாட்டில் அர­சியல் ஸ்திரத்­தன்மை இருக்­கு­மானால் அடுத்த ஆறு மாதங்­களில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றத்தைக் காணலாம் எனக் குறிப்­பிட்­டி­ருந்தார். அதே­போன்று மத்­திய வங்­கியின் நிறை­வேற்று அதி­கா­ரிகள் சங்­கமும் ஸ்திர­மான அர­சாங்­கத்­தினால் மாத்­தி­ரமே பொரு­ளா­தா­ரத்தை மீண்டும் ஸ்திர­மான நிலைக்குக் கொண்டு வர முடியும் எனச் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இலங்­கையின் பொரு­ளா­தார மீட்­சிக்­கான பேச்­சு­வார்த்­தை­களை விரைவில் நிறைவு செய்ய முடியும் என சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் நிர்­வாக பணிப்­பாளர் கிறிஸ்­ட­லினா ஜோர்­ஜீ­யேவா சர்­வ­தேச ஊட­க­மொன்­றுக்கு நேற்று தெரி­வித்­தி­ருக்­கிறார். இந் நிதி­யத்­து­ட­னான பேச்­சு­வார்த்­தை­களை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கவும் அதன் உத­வி­களை விரை­வாகப் பெற்றுக் கொள்­ளவும் அர­சியல் ஸ்திரத்­தன்மை அவ­சி­ய­மாகும்.

அந்த வகையில், தற்­போது இருக்­கின்ற தெரி­வு­களை வைத்துக் கொண்டே நாம் அடுத்து வரும் நாட்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. போராட்­டக்­கா­ரர்­களின் கோரிக்கை நியாயம் என்ற போதிலும் ரணில் விக்­ர­ம­சிங்­கவை பதவி நீக்கம் செய்­வது இப்­போ­தைக்கு பொருத்­த­மா­னதும் சாத்­தி­ய­மா­ன­து­மான ஒன்­றல்ல. பாரா­ளு­மன்­றத்­திற்கு நாம் வாக்­க­ளித்து அனுப்பி வைத்த பிர­தி­நி­தி­களில் பெரும்­பான்­மை­யா­னோரின் தெரி­வாக அவர் இருக்­கிறார். அவ­ரது நிய­மனம் சட்ட ரீதி­யா­னது. அவர் தேசியப் பட்­டியல் ஊடாக சபைக்கு வந்த போதிலும், 134 எம்.பி.க்களின் வாக்­கு­க­ளுடன் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­கி­யி­ருக்­கிறார்.

எனவே அடுத்து வரும் தேர்­தல்­களில் மிகப் பொருத்­த­மான நபர்­களை பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­பு­வ­தற்­கான போராட்­டத்­தையே இப்­போது நாம் ஆரம்­பிக்க வேண்­டி­யுள்­ளது. இன்னும் இரண்டு வரு­டங்­களில் ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்கள் நடை­பெ­ற­வுள்ள நிலையில், அதில் தகை­மை­மிக்க, ஊழ­லற்ற, நேர்­மை­யான மக்கள் பிர­தி­நி­தி­களை கள­மி­றக்­கு­வ­தற்­கான தயார்­ப­டுத்­தல்­க­ளையே நாம் இப்­போது செய்ய வேண்­டி­யுள்­ளது. ஓரிரு ராஜ­பக்­சாக்­களை மாத்­திரம் விரட்­டி­ய­டித்­த­துடன் இந்தப் போராட்டம் முற்றுப் பெற முடி­யாது. மாறாக எதிர்­கா­லத்­திலும் இவ்­வா­றான பல ராஜ­பக்­சாக்கள் ஆட்­சிக்கு வரா­தி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வதும் நமது கட­மை­யாகும்.

அந்த வகையில் தற்­போ­தைய நாட்டின் நெருக்­கடி நிலை­மை­களை கருத்திற் கொண்டு உட­ன­டி­யாக ஸ்திர­மா­ன­தொரு அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான அழுத்­தங்­க­ளையே போராட்­டக்­கா­ரர்கள் வழங்க வேண்டியுள்ளது. சஜித், அநுர உள்ளிட்ட சகல தரப்புகளையும் தன்னுடன் இணைந்து பணியாற்ற வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைத்திருக்கிறார். இந்த அழைப்பை சாதகமாகக் கொண்டு சகல கட்சிகளையும் சேர்ந்த பொருத்தமான நபர்களை அமைச்சரவைக்கு நியமிப்பதன் மூலமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க முடியும். அதன் மூலமே இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்டெழ முடியும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.