வக்பு சபையின் செயற்பாடுகளை மீண்டும் தொடர்வதற்கு அனுமதி

0 259

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ரம நாயக்­க­வினால் அண்­மையில் உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த வக்பு சபையின் செயற்­பா­டுகள் மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அதற்­கான அனு­ம­தி­யினை அமைச்சர் வழங்­கி­யுள்ளார். அமைச்சின் செய­லாளர் சோம­ரத்ன விதா­ன­ப­திக்கு அது தொடர்­பான உத்­த­ர­வினை வழங்­கி­யுள்ளார்.

வக்பு சபையின் செயற்­பா­டுகள் புதிய உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­படும் வரை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சின் செய­லா­ள­ரினால் வக்பு சபையின் தலை­வர்­க­ளுக்கும் உறுப்­பி­னர்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தை வாபஸ் பெறு­மாறும், வக்பு சபையின் பத­விக்­காலம் தொடர்ந்தும் செயற்­பாட்டில் இருக்­கு­மெ­னவும் அமைச்சின் செய­லாளர் நேற்று முன்­தினம் வக்பு சபைக்கு கடிதம் மூலம் அறி­வித்­துள்ளார்.

முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு சிலரே வக்பு சபையை விமர்­சித்து அதனைக் கலைத்­து­விட்டு புதி­யதோர் சபையை நிறு­வு­மாறு தன்­னிடம் கோரி­ய­தாக அமைச்சர் விதுர விக்­ரம நாயக்க தன்னைச் சந்­தித்த முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளி­டமும் வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் மற்றும் உறுப்­பி­னர்­க­ளி­டமும் தெரி­வித்­துள்ளார்.

கடந்த திங்­கட்­கி­ழமை காலை அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா, வை.எம்.எம்.ஏ.ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில்,சூரா­க­வுன்ஸில்,ஷரீஆ கவுன்ஸில் உட்­பட முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­த­நி­திகள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­கவை அவ­ரது அமைச்சில் சந்­தித்து வக்பு சபையின் செயற்­பா­டுகள் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு அதி­ருப்தி வெளி­யிட்­ட­துடன் அதன் செயற்­பா­டுகள் வழ­மை­போன்று நடை­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்கப்பட வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்­தனர்.
இதே வேளை 17 சிவில் சமூக அமைப்­புகள் வக்பு சபையின் செயற்­பா­டுகள் இடை­நி­றுத்­தப்­ப­டக்­கூ­டாது என அமைச்­சரை கடிதம் மூலம் வேண்­டி­யி­ருந்­தனர். வக்பு சபையின் சேவைகள் தொடர்­பிலும் விளக்­க­ம­ளித்­தி­ருந்­தனர். வக்பு சட்­டத்தை மீறாது தற்­போ­தைய வக்பு சபை தொட­ராக செயற்­பட்டு வந்­துள்­ள­மை­யையும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.
கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களின் சந்­திப்­பி­னை­ய­டுத்து அமைச்சர் வக்பு சபையின் உறுப்­பி­னர்­களை தனி­யாக சந்­தித்து கலந்­து­ரை­யாட்­டினார்.

இச்­சந்­திப்பில் வக்­பு­ச­பையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் உட்­பட 5 உறுப்­பி­னர்கள் கலந்து கொண்­டனர். மெள­லவி பஸ்ருல் ரஹ்மான் மற்றும் ஏ.உதுமா லெப்பை ஆகிய இரு­வரும் கலந்து கொள்­ள­வில்லை.

வக்பு சபையின் செயற்­பா­டுகள் தொடர்பில் அதன் தலைவர் சப்ரி ஹலீம் தீன் அமைச்­ச­ரிடம் விளக்­க­ம­ளிக்­கையில் “சமூ­கத்தில் ஒரு சிலர் அவர்­க­ளுக்கு சாத­க­மான முறையில் வக்பு சபை செயற்­ப­ட­வேண்டும் என நினைக்­கி­றார்கள்.

வக்பு சட்­டத்தின் படி­யன்றி குறுக்கு வழியில் தீர்­மா­னங்கள் எடுக்கப்­ப­ட­வேண்டும். தீர்ப்­புகள் வழங்­கப்­பட வேண்டும் என எதிர்­பார்க்­கி­றார்கள். அவ்­வா­றா­ன­வர்­களே உங்­களை (அமைச்­சரை) தவ­றாக வழி­நா­டத்தி சபையின் செயற்­பா­டு­களை இடை நிறுத்­தி­யுள்­ளார்கள்.

வக்பு சபை சட்­டத்தை 100 வீதம் அமுல்­ப­டுத்­து­கி­றது. அரசியல் மற்றும் தனியார் செல்வாக்கு இடமளிப்பதில்லை. இதனாலேயே ஒரு சிலர் தற்போதைய வக்பு சபை கலைக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள் என்றார்.

இந்நிலையில் தொடர்ந்தும் வக்பு சபை செயற்பட்டு வக்பு சட்டத்தின் படி தனது கடமைகளை முன்னெடுக்க வேண்டுமென அமைச்சர் வேண்டிக்கொண்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.