சர்வகட்சி இடைக்கால அரசொன்று நிறுவப்பட வேண்டும்

செங்கடகல பிரகடனம் வெளியீடு

0 231

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கடந்த 8 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை பெளத்த, இந்து, இஸ்­லா­மிய, கிறிஸ்­தவ மதத் தலை­வர்கள், துறைசார் நிபு­ணர்கள், வர்த்­தக சமூகம் மற்றும் சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் அர­சியல் கட்­சிகள் சாராத தேசிய கூட்­ட­மைப்­பாக ஒன்­றி­ணைந்து பிர­க­டனம் ஒன்­றினை வெளி­யிட்­டுள்­ளனர்.

அப்­பி­ர­க­ட­னத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; கடு­மை­யான பொரு­ளா­தார மற்றும் சமூக நெருக்­க­டி­களால் நாட்டு மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இவற்­றி­லி­ருந்து விடு­பட்டு நிம்­மதி மற்றும் சந்­தோ­ஷ­ம­டை­வ­தற்கும் மீண்டும் எமது நாட்டை உலகின் கெள­ர­வ­மான, சுதந்­தி­ர­மான தேச­மாக உயர்த்தி நிறுத்­து­வ­தற்கும் இலங்கை மக்கள் தமது எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் மூலம் தெளி­வாக வெளிப்­ப­டுத்தி வரும் அபி­லா­ஷை­களை இப்­பி­ர­க­டனம் மூலம் முழு இலங்கை மக்­க­ளுக்கும் அறி­விக்­கிறோம்.

பாரா­ளு­மன்­றத்தில் இய­லு­மான வரை அனைத்துக் கட்­சி­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சர்­வ­கட்சி அர­சாங்கம் ஒன்று வரை­ய­றுக்­கப்­பட்ட காலத்­திற்கு நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். பொது மக்­களின் வாழ்வை இயல்பு நிலைக்கு மாற்­று­வதன் மூலம் தற்­போது இலங்கை முகங்­கொ­டுத்­துள்ள கடு­மை­யான பொரு­ளா­தார மற்றும் சமூக நெருக்­க­டியில் இருந்து மீட்­டெ­டுத்து நாட்டை மீண்டும் அபி­வி­ருத்­திப்­பா­தையில் செலுத்­து­வது அந்த அர­சாங்­கத்தின் முதன்மை நோக்­க­மாக இருக்க வேண்டும். குறித்த இடைக்­கால அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை 15 உறுப்­பி­னர்­களைக் கொண்­டி­ருக்க வேண்டும் என்­ப­தோடு அமைச்சுப் பொறுப்­புகள் கட்­சி­பே­தங்­க­ளின்றி பாரா­ளு­மன்­றத்தில் இருக்கும் மிகத் தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும்.

தற்­போது வர்த்­த­மானி மூலம் அறி­விக்­கப்­பட்­டுள்ள 22 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் மக்­களின் குறைந்த பட்ச எதிர்­பார்ப்­புக்­க­ளை­யேனும் பூர­ணப்­ப­டுத்­து­வ­தில்லை என்­பதால் அது தொடர்பில் நாம் ஒரு­போதும் திருப்தி அடை­வ­தில்லை. மீண்டும் குறைந்த பட்சம் 19 ஆவது திருத்­த­மேனும் நடை­மு­றைக்கு வரும் வகையில் சீர­மைக்­கப்­பட்டு மிகக் குறு­கிய காலத்­திற்குள் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும்.

கோத்­தா­பய ராஜ­பக்ஷ நிபந்­த­னை­க­ளின்றி உட­ன­டி­யாக பதவி வில­க­வேண்டும்.
தற்­போ­தைய பொரு­ளா­தார மற்றும் சமூக நெருக்­க­டியைத் தீர்ப்­ப­தற்குத் தெளி­வான, இலக்­கு­க­ளுடன் கூடிய வேலைத்­திட்­ட­மொன்றை முன் வைக்க முடி­யு­மான, தகு­தி­யுள்ள தலைவர் ஒருவர் ஜனா­தி­பதி பத­விக்கு நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும்.

மக்கள் முகங்­கொ­டுத்­துள்ள பரி­தா­ப­க­ர­மான நிலை­மையை நிறை­வுக்குக் கொண் வரு­வ­தற்­காக சர்­வ­ம­தத்­த­லை­வர்கள், பொது­மக்கள் அமைப்­புகள், புத்தி ஜீவிகள், துறைசார் நிபு­ணர்கள், வர்த்­தக சமூகம் போன்ற அனை­வ­ருக்கும் பொது­வான வேலைத்­திட்­ட­மொன்­றினை குறித்த இடைக்­கால அரசு முன் வைக்க வேண்டும்.

தற்­கா­லிக, அடைக்­கால அர­சாங்கம் மூலம் பாரா­ளு­மன்ற மற்றும் ஜனா­தி­பதி தேர்­தல்­களை நடத்­து­வது தொடர்­பாக வரை­ய­றுக்­கப்­பட்ட காலங்கள் அறி­விக்­கப்­பட்டு அதற்­கேற்ப தேர்­தல்கள் நடத்­தப்­பட வேண்டும்.

அனைத்து அர­சியல் கட்­சி­களும் தேசத்தின் பாது­காப்பு மற்றும் பொது­மக்கள் நலன் என்­ப­வற்றைத் தமது அபி­லா­ஷை­யாகக் கொண்டு தமது கட்­சி­களை ஜன­நா­யக மற்றும் தூர நோக்கு கொண்­ட­வை­யாக மாற்­றிக்­கொள்ள உறு­தி­பூண வேண்டும்.

பொது­மக்கள் இந்தச் செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைக்க வேண்டும்.
இந்தச் செயன்­மு­றையின் ஆரம்பம் முதல் இறு­தி­வரை நல்­லெண்­ணத்­து­டனும் பொது நலனை ஒழுங்­கு­ப­டுத்தும் பாரிய பணியை நாம் அனை­வரும் தனித்­த­னி­யா­கவும் ஒற்­று­மை­யா­கவும் மேற்­கொள்வோம் என்று இப்­பி­ர­க­டனம் மூலம் அறி­வித்­துக்­கொள்­கிறோம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­க­ட­னத்தில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், உதவி செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம், பொருளாளர் மற்றும் கிறிஸ்தவ சமூகம் சார்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித், இந்து சமூகம் சார்பில் இந்து பேரவையின் சிவ தர்சக சர்மா குருக்கள், பெளத்த சமூகம் சார்பில் மூன்று நிக்காயாக்களின் சார்பில் அனுநாயக்க தேரர்கள், சுமார் 50 க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கையொப்பமிட்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.