நெருக்கடி நிலையில் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்

0 387

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல் (நளீமி)

நாடு மிகவும் நெருக்­க­டி­யான ஒரு கட்­டத்தில் இருக்கும் நிலையில் இலங்கை முஸ்­லிம்­க­ளா­கிய நாம் ஹஜ்ஜுப் பெரு­நாளைக் கொண்­டாட இருக்­கின்றோம். அர­சியல் மற்றும் பொரு­ளா­தார நெருக்­க­டி­யினால் பொது­வாக அனைத்து மக்­க­ளி­னதும் இயல்பு வாழ்க்கை பாதிப்­ப­டைந்­துள்­ளது. கடந்த வரு­டங்­களில் அர­சாங்கக் கொள்­கைகள் மற்றும் கொவிட் நிலை­யினால் எமது பெருநாள் கொண்­டாட்­டங்­களை நாம் சில வரை­ய­றை­க­ளுக்கு அமை­வாக அமைத்துக் கொண்டோம். அவ்­வாறே இந்தப் பெரு­நாளும் ஒரு நெருக்­கடி சூழ்­நி­லையில் கொண்­டா­டப்­ப­ட­வி­ருப்­பதால் அவற்­றுக்­கு­ரிய வரை­ய­றை­களை அறிந்து, பேணி நடப்­பது சிறு­பான்மை சமூ­க­மாக வாழ்­கின்ற எமது கட­மை­யாகும்.

ஹஜ்ஜின் நோக்­கத்தை அறிதல் :-

அல்லாஹ் கட­மை­யாக்­கிய எல்லா வணக்­கங்­க­ளுக்கும் பிர­தா­ன­மான இரண்டு நோக்­கங்கள் உள்­ளன:-

அல்­லாஹ்வின் நெருக்­கத்தைப் பெறுதல், தக்­வாவை வளர்த்­துக்­கொள்ளல்

மனித சமூ­கத்தின் நலன்

பின்­வரும் அல்­குர்ஆன் வச­னத்தில் இவ்­விரு இலக்­கு­க­ளையும் காண முடியும். “ஹஜ்­ஜுக்­கு­ரிய காலம் குறிப்­பி­டப்­பட்ட மாதங்­க­ளாகும். எனவே, அவற்றில் எவ­ரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கட­மை­யாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்­போகம், கெட்ட வார்த்­தைகள் பேசுதல், சச்­ச­ரவு – ஆகி­யவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்­வொரு நன்­மை­யையும் அல்லாஹ் அறிந்­த­வ­னா­கவே இருக்­கிறான். மேலும் ஹஜ்­ஜுக்குத் தேவை­யான பொருட்­களைச் சித்­தப்­ப­டுத்தி வைத்துக் கொள்­ளுங்கள். நிச்­ச­ய­மாக இவ்­வாறு சித்­தப்­ப­டுத்தி வைப்­ப­வற்றுள் மிகவும் சிறந்­தது (நன்­மை­யா­னது) தக்வா (என்னும் பய­பக்­தியே) ஆகும். எனவே, நல்­ல­றி­வு­டை­யோரே, எனக்கே பய­பக்­தி­யுடன் நடந்து கொள்­ளுங்கள்.”

இவ்­வ­ச­னத்தில் மேற்­சொன்ன இரண்டு நோக்­கங்­க­ளையும் அடையும் வகையில் ஹஜ் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பதைக் காணலாம்.

ஹஜ்­ஜுக்கு செல்­லா­த­வர்கள்

ஹஜ் காலத்தில் ஹஜ்­ஜுக்குச் சென்­ற­வர்கள் செய்­வ­தற்­கு­ரிய நல்­ல­மல்கள் இருப்­பது போல ஹஜ்­ஜுக்குச் செல்­லா­த­வர்கள் செய்­வ­தற்­கு­ரிய நல்­ல­மல்­களும் உள்­ளன.அவை வரு­மாறு:-

1. இபா­தத்­களில் ஈடு­ப­டு­வது 

நோன்பு, திக்ர், ஸதகா போன்ற நற்­க­ரு­மங்­களில் அதி­க­ம­திகம் ஈடு­ப­டு­வதன் மூலம் அல்­லாஹ்வின் நெருக்­கத்தை இக்­கா­லப்­ப­கு­தியில் நாம் அதி­க­ரித்­துக்­கொள்ள வேண்டும்.

இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து விடு­தலை பெற அல்­லாஹ்வின் பக்கம் மீள்­வதும் அவ­னிடம் உதவி தேடு­வதும் அவனை அதி­க­ம­திகம் ஞாப­கப்­ப­டுத்­திக்­கொள்­வதும் அடிப்­ப­டை­யா­ன­தாகும்.

2. வீண் விர­யத்­தையும் ஆடம்­ப­ரங்­க­ளை­யும் தவிர்த்தல்

நாட்டில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­கடி நிலையில் பெரு­நாளைக் கொண்­டாடும் நாம் அத்­தி­யா­வ­சிய விட­யங்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்து, ஆடம்­ப­ரங்­களைத் தவிர்ப்­பது அவ­சி­ய­மா­ன­தாகும். ஹரா­மான விட­யங்­க­ளுக்கு செலவு செய்­வது பாவ­மாகும். அவ்­வாறே ஹலா­லான விட­யங்­களில் விரயம் செய்­வதும் பாவ­மாகும்.

வீண்­வி­ரயம் செய்­ப­வர்­களை அல்­குர்ஆன் ஷைத்­தானின் சகோ­த­ரர்கள் என்று குறிப்­பி­டு­கின்­றது.

“நிச்­ச­ய­மாக வீண்­வி­ரயம் செய்­ப­வர்கள் ஷைத்­தானின் சகோ­த­ரர்­க­ளாவர். ஷைத்­தானோ தன்­னு­டைய இறை­வ­னுக்கு நன்றி கெட்­ட­வ­னாக இருக்­கின்றான்”. (அல்­அன்ஆம்: 27)

‘ஆடம்­பரம்’ என்­பது தேவை­யற்ற விட­யங்­களில் செலவு செய்­வ­தையும் ‘விரயம்’ என்­பது தேவை­யுள்ள விட­யத்தில் தேவைக்கு அதி­க­மாகச் செலவு செய்­வ­தையும் குறிக்கும். தேவைக்கு செலவு செய்­யாமல் இருப்­பது ‘கரு­மித்­தனம்’ ஆகும்.

இஸ்லாம் எல்லா விட­யங்­க­ளிலும் நடு­நி­லையைப் பேணும் மார்க்கம் என்ற வகையில் கரு­மித்­த­னத்­தையும் ஆடம்­ப­ரத்­தையும் தடுத்­துள்­ளது.

நபி(ஸல்) அவர்கள் கூறி­னார்கள்:-

“உண்­ணுங்கள், பரு­குங்கள், தர்மம் செய்­யுங்கள், அணி­யுங்கள். வீண்­வி­ர­யமோ, அகம்­பா­வமோ கலக்­காமல் இருக்கும் கால­மெல்லாம் (நீங்கள் இவற்றில் ஈடு­ப­டலாம்)” (நஸாஈ, இப்னு மாஜா)

வீண்­வி­ரயம், ஆடம்­பரம் என்­பதை ‘தனது பிற தேவை­க­ளுக்கு மீதம் வைக்­காமல் ஒரு விட­யத்­திற்கு செலவு செய்தல்’ என்றும் சில இஸ்­லா­மிய அறி­ஞர்கள் வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­து­கின்­றனர். ஆடை­ய­ணி­வது, உணவு உண்­பது, பய­ணங்கள் மேற்­கொள்­வது, கட்­ட­டங்­களை நிர்­மா­ணிப்­பது என்­பன அடிப்­ப­டையில் மனித வாழ்வின் தேவை­க­ளாகும். அவற்றில் ஈடு­ப­டு­வது மனித வாழ்வின் இயக்­கத்­துக்கு அவ­சி­ய­மாகும். அவை அல்லாஹ் அனு­ம­தித்த, வாழ்வின் இன்ப நுகர்ச்­சியும் அலங்­கா­ர­மு­மாகும். அவற்றை அனு­ப­விப்­ப­தற்கு எவரும் தடை­யாக இருக்க முடி­யாது. அவ்­வாறு தடை செய்­வது குர்­ஆனின் கண்­ணோட்­டத்தில் குற்­ற­மு­மாகும்.

“(நபியே) நீர் கேட்­பீ­ராக ‘அல்லாஹ் தன் அடி­யார்­க­ளுக்­காக வெளிப்­ப­டுத்­தி­யுள்ள (ஆடை) அலங்­கா­ரத்­தையும் உணவு வகை­களில் தூய்­மை­யா­ன­வற்­றையும் தடுத்­தது யார்?’ இன்னும் கூறும்; ‘அவை இவ்­வு­லக வாழ்க்­கையில் நம்­பிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அனு­ம­திக்­கப்­பட்­ட­வையே. எனினும், மறு­மையில் அவர்­க­ளுக்கு மட்­டுமே சொந்­த­மா­ன­வை­யா­கவும் இருக்கும். இவ்­வாறு நாம் நம் வச­னங்­களை அறி­யக்­கூ­டிய மக்­க­ளுக்கு விவ­ரிக்­கின்றோம்.” (அல்­அஃராப்:-32)

எனவே, அடிப்­ப­டையில் இவற்றை அனு­ப­விப்­ப­தற்­கான அனு­ம­தியும் சுதந்­தி­ரமும் இஸ்­லாத்தில் இருப்­பினும் கூட பிற­ரது புக­ழையும் மெச்­சு­த­லையும் எதிர்­பார்த்து, ஆண­வத்­து­டனும் மம­தை­யோடும் நடந்­து­கொள்­வதும் வீண்­வி­ரயம் செய்­வதும் அல்­லாஹ்­வி­னதும் தூதர்(ஸல்) அவர்­க­ளதும் பார்­வையில் கண்­டிக்­கத்­தக்­க­தாகும்.

பெருநாள் என்­பது கொண்­டா­டப்­பட வேண்­டிய ஒன்று தான். ஆனால், நாட்­டி­லுள்ள பொரு­ளா­தார சூழலில் ஏனைய செல­வி­னங்­க­ளையும் கருத்­திற்­கொண்டே பெரு­நா­ளைக்­கு­ரிய செல­வு­களைச் செய்ய வேண்டும்.

3.தேவை­யு­டை­யோ­ருக்கு உத­வுதல்

இந்த நெருக்­க­டி­யான சூழ்­நி­லையில் அன்­றாடத் தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்கு மக்கள் பெரும் அல்­லல்­ப­டு­கின்­றனர்.விலை­வாசி உயர்வு, தொழி­லின்மை, அத்­தி­ய­வ­சியப் பொருட்­களின் தட்­டுப்­பாடு போன்ற கார­ணி­களால் எல்லா மட்­டத்­தி­னரும் ஏதோ­வொரு வகையில் தேவை­யு­டை­ய­வர்­க­ளாக மாறி­விட்­டார்கள். பெருநாள் கொண்­டாட்­டத்தின் போது இத்­த­கைய தேவை­யு­டை­ய­வர்­களின் தேவை­களை அறிந்து உத­வு­வ­தற்கு முயற்­சிக்க வேண்டும். குறிப்­பாக, பெருநாள் தினத்தைக் கொண்­டா­டு­வ­தற்கு வச­தி­யற்ற உற­வி­னர்கள், அய­ல­வர்கள் விட­யத்தில் நாம் கரி­சனை கொள்ள வேண்டும்.

4. அடுத்த சமூ­கத்­த­வர்­க­ளோடு பெருநாள் சந்­தோ­சத்தை பரி­மா­றிக்­கொள்ளல்.

நாம் பல்­லி­னங்கள் வாழும் ஒரு நாட்­டிலே வாழ்­கின்றோம். எமது சனத்­தொ­கை­யோடு ஒப்­பி­டு­கின்ற போது சுமார் 90% மக்கள் முஸ்லிம் அல்­லா­த­வர்கள். எமது மத மற்றும் கலா­சார விட­யங்கள் குறித்த தெளி­வுகள் அவர்­க­ளிடம் இல்­லா­தி­ருக்­கலாம். அல்­லது தவ­றான கருத்­துக்கள் அவர்கள் மத்­தி­யிலே நில­வலாம். எனவே, எமது பெருநாள் சந்­தோ­சத்தை அவர்­க­ளோடு பரி­மா­றிக்­கொள்ளும் போது அவர்கள் எம்மைப் புரிந்­து­கொள்­வ­தற்­கான நல்ல சந்­தர்ப்­ப­மாக இது அமை­யலாம்.

நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி சூழ்­நி­லையில் – அன்­றாட வாழ்­வா­தா­ரத்­துக்கு மக்கள் போராடும் நிலையில், நாம் பெரு­நாளை சந்­தோ­ச­மாகக் கொண்­டாடும் சந்­தர்ப்­பத்தில், அடுத்த சமூ­கத்தில் யாரா­வது பசி­யோடும் தேவை­யோடும் இருப்­பார்­க­ளாயின் அவர்­க­ளது தேவை அறிந்து எமது பெருநாள் உண­வினை அல்­லது தர்­மங்­களை அவர்­க­ளுக்கும் நாம் வழங்க வேண்டும்.

5. உழ்­ஹிய்யா வணக்கம்

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்­திலும் 11,12,13 ஆகிய அய்­யாமுத் தஷ்ரீக் தினங்­க­ளிலும் இஸ்லாம் வலி­யு­றுத்­திய மிக உன்­ன­த­மான சுன்னா உழ்­ஹிய்­யா­வாகும்.

இதனைப் பற்றி அல்­குர்ஆன்:-

“இத்­தி­னங்­களில் அல்­லாஹ்வின் பெயர் கூறி, அல்லாஹ் உங்­க­ளுக்கு அரு­ளிய பிரா­ணி­க­ளி­லி­ருந்து அறுத்து அதி­லி­ருந்து நீங்கள் உண்­ணுங்கள், வறு­மையால் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள ஏழை­க­ளுக்கும் கொடுத்து உத­வுங்கள்”. (ஹஜ் : 28) எனக் குறிப்­பி­டு­கின்­றது,

குர்­பா­னுக்­காக அறுக்­கப்­படும் மிரு­கங்­க­ளது மாமிசம் பற்றி கூறும் அல்லாஹ் மேலும் ஓர் இடத்தில்:-

“அவற்­றி­லி­ருந்து நீங்கள் உண்­ணுங்கள்.(வறு­மையில் இருந்­தாலும்) சுய­கெ­ள­ர­வத்தின் கார­ண­மாக பிற­ரிடம் கையேந்­தாமல் இருப்­போ­ருக்கும் கேட்டு வரு­ப­வர்­க­ளுக்கும் அதி­லி­ருந்து உண்ணக் கொடுங்கள். இவ்­வா­றுதான் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை (அந்த மிரு­கங்­களை) உங்­க­ளுக்கு நாம் வசப்­ப­டுத்திக் கொடுத்­தி­ருக்­கிறோம்”(அல்ஹஜ்:36) எனக் கூறு­கிறான்.

மேலும், அல்லாஹ் “இன்னும் உற­வி­னர்­க­ளுக்கும், ஏழை­க­ளுக்கும், வழிப்­போக்­கர்­க­ளுக்கும் அவர்­க­ளு­டைய உரி­மை­களைக் கொடுத்­து­வி­டுங்கள். வீண்­வி­ரயம் செய்­து­வி­டா­தீர்கள்” (அல்­அன்ஆம் : 26) எனக் கூறி­யுள்ளான்.

இவ்­வ­ச­னத்­திலே தேவை­யு­டைய உற­வு­களும் ஏழை­க­ளுக்­கு­மான எமது உத­வி­யா­னது அவர்­க­ளுக்­கு­ரிய உரிமை (ஹக்) என்­ப­தாகச் சொல்­லப்­பட்­டுள்­ளது. அத்­தோடு விரயம் செய்ய வேண்டாம் என்­பதும் சேர்த்து கூறப்­பட்­டுள்­ளது. எமது ஆடம்­ப­ரங்கள், விர­யங்கள் என்­பவை அவர்­க­ளது உரி­மை­களை மீறும் செய­லாக அமையும் என்­பதை இதி­லி­ருந்து நாம் புரிந்­து­கொள்ள வேண்டும்.

உழ்­ஹிய்­யாவின் போதான சட்ட ஒழுங்­குகள்

உழ்­ஹிய்யா விட­யத்தில் சட்டம், ஒழுங்கு, பொதுச் சுகா­தாரம் என்­ப­வற்றை பேணு­வ­தோடு, அடுத்த சமூ­கத்­த­வர்­களின் உணர்­வு­களை மதித்து நடக்க வேண்டும்.

உழ்­ஹிய்­யாவைப் பொறுத்­த­வரை அதற்­காக நாம் மிரு­கங்­களை ஓர் இடத்­தி­லி­ருந்து இன்­னு­மொரு இடத்­திற்கு வாக­னங்கள் மூலம் எடுத்துச் செல்லும் போது அதற்­கான அனு­ம­தியை உரிய அரச அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து முறை­யாகப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். இது விட­ய­மாக அநீ­திக்­குள்­ளாக்­கப்­பட்டால் உரி­ய­வர்­க­ளி­னூ­டாக அவற்றைத் தீர்த்­துக்­கொள்ள முயற்­சிக்­கலாம். அப்­ப­டியும் கூட அனு­மதி மறுக்­கப்­படும் போது அல்­லாஹ்வின் பொறுப்பில் விட்டு விடு­வதே தவிர வேறு வழி­களில் தீர்க்க முயற்­சிக்­க­லா­காது.

அனு­ம­திக்­கப்­பட்ட அளவை விட அதி­க­மாக மிரு­கங்­களை வாக­னங்­களில் எடுத்துச் செல்ல ஒரு­போதும் முயற்­சிக்கக் கூடாது. இதன்­மூலம் நாம் நாட்டின்   சட்­டத்தை மீறு­ப­வர்­க­ளாவோம் என்­ப­தற்கும் அப்பால் ஜீவ­கா­ருண்யம் பற்­றிய இஸ்­லா­மிய ஒழுங்கு விதி­களை மீறி­ய­வர்­க­ளாகக் கரு­தப்­பட்டு அல்­லாஹ்வின் தண்­ட­னைக்கு உள்­ளாக நேரிடும்.

மிரு­கங்­களை வாக­னத்தில் கொண்டு செல்­லும்­போது மட்­டு­மன்றி, பாதையில் ஓட்டிச் செல்­லும்­போதும் – குறிப்­பாக பிற சம­யத்­த­வர்கள் வாழும் பிர­தே­சங்­க­ளுக்­குள்ளால் ஓட்டிச் செல்­லும்­போது அதி­க­மாக எச்­ச­ரிக்­கை­யாக நடந்து கொள்­வது அவ­சி­ய­மாகும். அவர்கள் அவ­தா­னித்­தாலும் இல்­லா­விட்­டாலும் அல்லாஹ் எம்மை அவ­தா­னிப்­பதால், அவ­னது படைப்­பி­னங்­களை துன்­பு­றுத்­தி­ய­வர்­க­ளாக நாம் மாறி­வி­ட­லா­காது.

அகீகா, நேர்ச்சை, உழ்­ஹிய்யா போன்ற நோக்­கங்­க­ளுக்­காக இருந்­தாலும் – ஏன் சாதா­ர­ண­மாக இறைச்­சிக்­கா­க­வேனும் நாம் மிரு­கங்­களை அறுக்க நேரிட்டால் – அறுக்கும் நேரம், அறுக்கும் இடம் என்­ப­வற்­றையும் முன்­கூட்­டியே நன்­றாக சிந்­தித்துத் தீர்­மா­னிக்க வேண்டும். ஏனெனில்,  பக்­கத்து வீட்டில் இருப்­பவர் வேற்று மதத்­த­வ­ராக இருக்­கலாம். மிரு­கங்கள் அறுக்­கப்­படும் காட்­சி­யையோ அல்­லது அறுக்­கப்­பட்ட பின்னர் அவை தோலு­ரிக்­கப்­படும் அல்­லது இறைச்­சி­யாக்­கப்­படும் காட்­சி­யையோ, பாதை­களில் பகி­ரங்­க­மாக இரத்தம் சொட்டச் சொட்ட வாக­னங்­களில் ஏற்­றப்­படும் அல்­லது கொண்டு செல்­லப்­படும் காட்­சி­யையோ அவர்கள் காண விரும்­ப­மாட்­டார்கள். எனவே, முடிந்­த­வரை மறை­வா­கவும் கண்­ணி­ய­மா­கவும் இவற்றைச் செய்­வ­தற்கு அதிக கவ­ன­மெ­டுக்க வேண்டும்.

உழ்­ஹிய்­யாவைப் பொறுத்­த­வரை நாம் ஊன்றிக் கவ­னிக்க வேண்­டிய வேறு ஒரு விட­யமும் இருக்­கின்­றது. அது தான் அறுக்­கப்­பட்ட மிரு­கங்­க­ளது எச்ச சொச்­சங்கள் அல்­லது கழி­வு­க­ளாகும். அறுக்­கப்­பட்ட மிரு­கங்­க­ளது தலைகள், தோல், முள், கால்கள் என்பன ஆங்காங்கே எறியப்படுவதுண்டு. இதனால் சூழல் மாசடைகிறது. ஓரிரு நாட்களில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கிறது. நாய்களும், பூனைகளும், காகங்களும் அவ்விடங்களுக்குப் படையெடுக்கின்றன. பின்னர் அங்கு வரும் அதிகாரிகளும் பிற சமயத்தவர்களும் முஸ்லிம் சமூகம் சுத்தமற்ற, அடுத்தவர்கள் பற்றிய எவ்வித அக்கறையுமற்ற சுயநல சமூகம் என்று முடிவெடுக்கலாம்.

பிறர் எம்மைக் குறை கூறுவர் என்­ப­தற்­காக நாம் எமது வாழ்வை ஒழுங்­கு­ப­டுத்த வேண்டும் என்­ப­தல்ல. எமது மார்க்­கத்தில் எக்­கா­ரி­யத்­தையும் திறம்­பட செய்­யும்­ப­டியும், சுத்­த­மாக இருக்கும் படியும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. “சுத்தம் ஈமானின் பாதி”,  “ஒவ்­வொரு காரி­யத்­தையும் திறம்­படச் செய்­யும்­படி அல்லாஹ் கட­மை­யாக்­கி­யுள்ளான்” போன்ற பல ஹதீஸ்கள் எம்மை நெறிப்படுத்த வேண்டும்.

ஹஜ் என்பது வெறுமனே அறுத்துப் பலியிடல் என்பது மட்டுமல்ல. ஏலவே குறிப்பிட்டது போல அதன் நோக்கம் இறை நெருக்கத்தை அடைவது, மனிதர்களுடைய நலன் என்ற வகையில் இப்பெருநாள் தினத்தை நாம் இஸ்லாம் கூறிய வழிகாட்டல்களோடு கொண்டாடி மகிழ்வோம். அதே போன்று இத்தினத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களையும் அவர்களது குடும்பத்தினதும் வாழ்வையும், அவர்களது நல்ல பண்புகளையும் ஆளுமைகளையும் நினைவுகூர்வோம்.

வல்லவன் அல்லாஹ் எமது நல்லமல்களை ஏற்றுக் கொள்வானாக! – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.