இலங்கையின் கடன் நெருக்கடி ஆசிய நாடுகளுக்கு ஒரு பாடம்

மலேசிய முன்னாள் பிரதமர் மஹாதீர்

0 368

இலங்­கையின் தற்­போ­தைய கடன் நெருக்­க­டி­யா­னது ஆசிய நாடு­க­ளுக்கு ஒரு எச்­ச­ரிக்கை என தெரி­வித்­துள்ள முன்னாள் மலே­சிய பிர­தமர் மகாதீர் முகம்மட், இலங்கை ஆட்­சி­யா­ளர்கள் நாண­யத்தை மோச­மாக நிர்­வ­கித்­ததும் மோச­மான முத­லீட்டுக் கொள்­கை­யுமே இதற்கு காரணம் என்றும் தெரி­வித்­துள்ளார்.

சர்­வ­தேச நாணய நிதி­யத்­தையும் அவர் கடு­மை­யாக விமர்­சித்­துள்ளார். நிக்கி ஏசியா எனும் சர்­வ­தேச ஊட­க­மொன்­றிற்கு வழங்­கி­யுள்ள செவ்­வியில் அவர் இதனைக் குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்­கையின் தற்­போ­தைய கடன் நெருக்­க­டி­யா­னது ஆசிய நாடு­க­ளுக்கு ஒரு எச்­ச­ரிக்­கை­யாகும். ஆசிய நாடுகள் பொறுப்­பு­ணர்­வுள்ள நிதிக்­கொள்­கையை பின்­பற்­ற­வேண்டும் அல்­லது சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் கரங்­களில் சிக்க வேண்­டி­யி­ருக்கும்.
கடன் வழங்­கி­ய­வர்­க­ளுக்கு செலுத்­து­வ­தற்­கான வலு­வான நாணய இருப்பு இலங்­கை­யிடம் இல்­லா­ததே அதன் பிரச்­சினை. நாண­யத்தை மோச­மாக நிர்­வ­கித்­ததும் மோச­மான முத­லீட்டுக் கொள்­கை­யுமே இதற்கு காரணம்.

அனை­வரும் இலங்­கையின் பாதையில் செல்­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­களால் அச்­சு­றுத்­தப்­பட்­டுள்­ளனர், இது அனை­வ­ருக்கும் ஒரு பாடம்.

சர்­வ­தேச நாண­ய­நி­தியம் அல்­லது உலக வங்­கி­யிடம் நீங்கள் சென்­றீர்கள் என்றால் அவர்கள் நீங்கள் உங்கள் கடன்­களை திருப்­பிச்­செ­லுத்தும் விட­யத்தில் மாத்­தி­ரமே அக்­கறை செலுத்­து­வார்கள்.

குறிப்­பிட்ட நாட்­டிற்கு பொரு­ளா­தார ரீதியில் அல்­லது சமூக ரீதியில் என்ன நடக்­கின்­றது என்­பது குறித்து அவர்­க­ளுக்கு கவ­லை­யில்லை.

அவர்கள் நாட்­டையும் அதன் பொரு­ளா­தார கொள்கையையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு முயற்சிப்பார்கள் அதாவது நாங்கள் அவர்களிடம் சரணடைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.