பா.ஜ.க. உறுப்பினர்களின் நபிகளாரை அவமதிக்கும் கருத்து: அரபு நாடுகளுடனான இந்தியாவின் உறவில் கீறல்!

0 356

உலக முஸ்­லிம்கள் உயி­ரிலும் மேலாக மதிக்கும் முஹம்­மது நபி (ஸல்) அவர்­களை அவ­ம­திக்கும் விதத்தில் இந்­திய ஆளும் கட்­சி­யான பார­தீய ஜனதா கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் இருவர் கருத்து வெளி­யிட்­டி­ருப்­ப­தா­னது இந்­தி­யா­வுக்கும் மத்­திய கிழக்கு மற்றும் இஸ்­லா­மிய நாடு­க­ளுக்­கி­டை­யே­யான உறவில் விரி­சலை ஏற்­ப­டுத்தும் வித­மாக அமைந்­துள்­ளது.

பா.ஜ.க செய்தி தொடர்­பா­ள­ரான நூபுர் சர்மா, சமீ­பத்தில் ஒரு தொலைக்­காட்சி நடத்­திய விவா­தத்தில் பங்­கேற்றார். அப்­போது அவர், முஹம்­மது நபி (ஸல்) அவர் தொடர்பில் அவ­தூ­றாக கருத்து தெரி­வித்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது. இது தொடர்­பான கருத்தை, கட்­சியின் டில்லி ஊடகப் பிரிவைச் சேர்ந்த நவீன் குமார் ஜிண்­டால், சமூக வலை­த்த­ளத்தில் பதி­விட்டார்.

இதைத் தொடர்ந்து பாரிய கண்டனக் குரல்கள் வெடித்ததுடன் உத்­தர பிர­தே­சத்தின் கான்­பூரில் பல இடங்­களில் கல­வரமும் மூண்­டது. இதனைத் தொடர்ந்து நூபுர் சர்­மாவை, இடை­நி­றுத்தம் செய்தும், நவீன் குமார் ஜிண்­டாலை கட்­சியில் இருந்து நீக்­கியும் பா.ஜ.க நட­வ­டிக்கை எடுத்­தது. மேலும், இது தொடர்­பாக ஒரு விளக்க அறிக்­கை­யையும் பா.ஜ.க, வெளி­யிட்­டது.

‘பா.ஜ.க, அனைத்து மதங்­க­ளையும், அவற்றின் நம்­பிக்­கை­யையும் மதிக்­கி­றது. மதம் சார்ந்­த­வர்­களை அவ­தூ­றாக பேசு­வதை ஏற்க முடி­யாது. மதத்தைப் பற்றி அவ­தூ­றாக பேசு­வோரை, பா.ஜ.க, ஒரு­போதும் ஊக்­கு­விக்­காது” என அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.
எனினும் இந்த சம்­ப­வத்­துக்கு இஸ்­லா­மிய நாடுகள் கண்­டனம் தெரி­வித்­தன. அந்த நாடு­களில் உள்ள இந்­தியத் தூது­வர்­களை அழைத்தும் தங்­க­ளு­டைய அதி­ருப்­தியை தெரி­வித்­தன.

குவைட், கத்தார், சவூதி அரே­பியா, பஹ்ரைன், ஓமான், ஐக்­கிய அரபு அமீ­ரகம், ஈரான், ஈராக், பாகிஸ்தான், எகிப்து, ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான், இந்­தோ­னே­சியா, ஜோர்தான், லிபியா, மாலை­தீ­வுகள் ஆகிய நாடுகள் இவ்­வாறு கண்­டனம் தெரி­வித்­தன. முஸ்லிம் நாடு­களின் கூட்­ட­மைப்­பான, ஓ.ஐ.சி., எனப்­படும் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்பும், இந்­தி­யா­வுக்கு கண்­டனம் தெரி­வித்து விரி­வான அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

அத்­துடன் பல மத்­திய கிழக்கு நாடு­களில் இந்­திய உற்­பத்திப் பொருட்­களைப் பகிஷ்­க­ரிக்­கு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டன. குவைத் நாட்­டி­லுள்ள ஒரு பல்­பொருள் அங்­கா­டியில் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டி­ருந்த இந்­திய உற்­பத்திப் பொருட்­களை அகற்றும் காட்சி சமூக வலைத்­த­ளங்­களில் அதிகம் பகி­ரப்­பட்­டது.

யார் இந்த நூபுர் சர்மா?
நூபுர் சர்மா ஒரு வழக்­க­றிஞர். டெல்லி பல்­க­லைக்­க­ழ­கத்தில் படித்­து­விட்டு லண்­டனில் சட்ட மேற்­ப­டிப்பு படித்தார். 2008 இல் தான் அர­சி­யலில் அடி­யெ­டுத்து வைத்தார். பா.ஜ.க. இளை­ஞ­ரணித் தலை­வ­ரானார். பின்னர், 2015 டெல்லி சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் அரவிந்த் கேஜ்­ரி­வாலை எதிர்த்துப் போட்­டி­யிட்டு தோல்வி அடைந்தார்.

தன்­னு­டைய கருத்து உள்­நோக்­கத்­துடன் கூறப்­ப­ட­வில்லை என்றும் யாரு­டைய மன­தையும் புண்­ப­டுத்­தி­யி­ருந்தால் மன்­னிப்பு கோரு­வ­தா­கவும் நூபுர் சர்மா ட்விட்­டரில் தெரி­வித்­துள்ளார். அத்­துடன் இச் சம்­ப­வத்­திற்குப் பிறகு தனக்கு கொலை மிரட்­டல்கள் வரு­வ­தாகக் கூறி டெல்லி பொலிஸ் நிலை­யத்தில் அவர் புகார் கொடுத்­துள்ளார்.

இத­னி­டையே, பாஜக செய்தித் தொடர்­பா­ளர்கள் இரு­வரும் கைது செய்­யப்­பட வேண்டும் எனும் கோரிக்­கை­களும் வலுத்­துள்­ளன. திமுக சிறு­பான்­மை­யினர் நல­வு­ரிமைப் பிரிவுச் செய­லாளர் மஸ்தான் வெளி­யிட்ட அறிக்­கையில், “நபிகள் பெருமான் குறித்து அவ­தூறு கருத்தைத் தெரி­வித்த பா.ஜ.க.வின் செய்தித் தொடர்­பா­ளர்கள் இரு­வரும் கைது செய்­யப்­பட வேண்டும். பொறுப்­பற்ற வகையில் செய்­யப்­படும் இது­போன்ற வெறுப்பு விமர்­ச­னங்கள் சமூ­கத்தில் அமை­தியை மட்­டு­மல்ல, எதிர்­கா­லத்­துக்கே கேடு விளை­விப்­பவை. அவர்கள் இருவர் மீதும் கட்சி ரீதி­யான நட­வ­டிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னைக் காப்­பாற்றிக் கொள்ள முய­லக்­கூ­டாது” என்று குறிப்­பிட்­டுள்ளார்.

கேர­ளாவும் எதிர்ப்பு
இந்­நி­லையில் கேரள முத­ல­மைச்சர் பின­ராயி விஜ­யனும் இக் கருத்­து­களைக் கண்­டித்­துள்ளார். ‘முகம்­மது நபிக்கு எதி­ராக பாஜக செய்தித் தொடர்­பா­ளர்­களின் கீழ்த்­த­ர­மான கருத்­துக்­களால், நமது மதிப்­பிற்­கு­ரிய மதச்­சார்­பற்ற ஜன­நா­ய­கத்தை உல­கத்தின் முன் மீண்டும் ஒரு­முறை இழி­வு­ப­டுத்­தி­யுள்­ளது சங்­ப­ரிவார். மேலும் மத­வெறி சக்­தி­க­ளுக்கு எதி­ராக ஒரு­மித்த குரல் எழுப்ப வேண்­டிய தருணம் இது’ என்று பதி­விட்­டுள்ளார்.

பொலிஸ் அழைப்­பாணை
சர்ச்­சைக்­கு­ரிய கருத்தை வெளி­யிட்ட நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகி­யோரை ஜூன் 22 இல் ஆஜ­ரா­கு­மாறு மும்பை பொலிஸ் அழைப்­பாணை விடுத்­துள்­ளது.

அல் கைதா எச்­ச­ரிக்கை
இத­னி­டையே முகம்­மது நபியை ‘அவ­ம­திக்கும்’ யாரையும் கொலை செய்வோம் எனவும் தற்­கொலைப் படைத் தாக்­குதல் நடத்­துவோம் எனவும், அல் கைதாவின் தெற்­கா­சிய கிளை எச்­ச­ரித்­துள்­ளது.

இந்­திய துணைக்­கண்­டத்தின் அல்-­கய்தா என தம்­மைத்­தாமே அழைத்­துக்­கொள்ளும் இந்த குழு இது­தொ­டர்­பாக உருது மற்றும் ஆங்­கி­லத்தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

அந்த அறிக்­கையில், “சில தினங்­க­ளுக்கு முன்னர் இந்­துத்­து­வாவின் பிர­சா­ர­கர்கள் முகம்­மது நபி குறித்தும் அவ­ரு­டைய மனைவி ஆயிஷா குறித்தும் இந்­திய தொலைக்­காட்சி ஒன்றில் அவ­ம­திக்கும் வகை­யிலும் அவ­தூறு பரப்பும் வகை­யிலும் பேசி­யுள்­ளனர். இதற்கு பதி­ல­டி­யாக துடுக்­குத்­த­ன­மான மற்றும் வெறுக்­கத்­தக்க கருத்­து­களை கூறும் உலகின் வாய்கள், குறிப்­பாக இந்­துத்­துவ தீவி­ர­வா­திகள் ஆக்­கி­ர­மித்­துள்ள இந்­தி­யாவில் கொலைகள் மற்றும் தற்­கொ­லைப்­படை தாக்­கு­தல்கள் நிகழ்த்­தப்­படும் என அல் கைதா எச்­ச­ரித்­துள்­ளது.

மேலும், முகம்­மது நபியை இழி­வு­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு “மன்­னிப்பு வழங்­கப்­ப­டாது. இத்­த­கைய விவ­கா­ரத்­திற்கு கண்­டன வார்த்­தைகள் மூல­மா­கவோ அல்­லது வருத்­தத்தின் மூல­மா­கவோ எதிர்­வி­னை­யாற்­றப்­ப­டாது” எனவும் அவை வன்­முறை தாக்­கு­தல்கள் மற்றும் பதி­ல­டியால் மட்­டுமே எதிர்­கொள்­ளப்­படும் எனவும் அந்த அமைப்பு தெரி­வித்­துள்­ளது. அல் கைதாவின் இந்த அறி­விப்பு பிராந்­தி­யத்தில் பதற்­றத்தைத் தோற்­று­வித்­துள்­ளது.

அரபு நாடு­க­ளு­ட­னான இந்­தி­யாவின் உறவு
பாஜக தலைமை மற்றும் இந்­திய அரசின் தலைமை இரு­வரும் இவ்­வி­வ­காரம் தொடர்­பாக கருத்து தெரி­விக்க வேண்­டி­யி­ருக்கும் என ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர். அப்­படி செய்­ய­வில்­லை­யென்றால் அரபு நாடுகள் மற்றும் ஈரா­னுடன் இந்­தியா கொண்­டி­ருக்கும் உற­வுக்கு பாதிப்பு ஏற்­படும் ஆபத்து உரு­வாகும் என அவர்கள் கூறு­கின்­றனர்.
குவைத், கத்தார், சவூதி அரே­பியா, பஹ்ரைன், ஓமான் மற்றும் ஐக்­கிய அரபு அமீ­ரகம் அங்கம் வகிக்கும் வளை­குடா ஒத்­து­ழைப்பு கவுன்­சி­லு­ட­னான (ஜிசிசி) இந்­தி­யாவின் வர்த்­தகம் 2021ஆம் ஆண்டில் 87 பில்­லியன் டொல­ராக உள்­ளது. இலட்­சக்­க­ணக்­கான இந்­தி­யர்கள் இந்த நாடு­களில் பணி­பு­ரிந்து வரு­கின்­றனர். மேலும் கோடிக்­க­ணக்­கி­லான பணத்தை இந்­தி­யா­வுக்கு அனுப்புகின்றனர். இந்தியாவின் எரிபொருள் இறக்குமதிக்கான முக்கிய ஆதாரமாக இந்நாடுகள் உள்ளன.

குவைட், கத்தார், சவூதி
அரே­பியா, பஹ்ரைன், ஓமான், ஐக்­கிய அரபு அமீ­ரகம், ஈரான், ஈராக், பாகிஸ்தான், எகிப்து, ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான்,
இந்­தோ­னே­சியா, ஜோர்தான், லிபியா, மாலை­தீ­வுகள் ஆகிய நாடுகள் கண்­டனம் தெரி­வித்­தன. முஸ்லிம் நாடு­களின் கூட்­ட­மைப்­பான, ஓ.ஐ.சி., எனப்­படும் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்பும், இந்­தி­யா­வுக்கு கண்­டனம் தெரி­வித்து விரி­வான அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

 

இந்திய பிரதமராக 2014இல் ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து நரேந்திர மோடி இந்நாடுகளுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்துவருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. மேலும், ஜிசிசியுடனான விரிவான ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவ்வாறான நிலையில் இந்த சர்ச்சை வெடித்துள்ளமை இந்தியாவின் எதிர்காலத்திற்கு பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது. அரபு நாடுகள் கோருவது போல இந்திய அரசாங்கம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.