­உணவுப் பஞ்சத்தை வெற்றி கொள்வோம்

0 628

நாட்டில் அடுத்து வரும் மாதங்­களில் பாரிய உணவுப் பற்­றாக்­குறை ஏற்­படும் என்றும் அதற்கு முகங்­கொ­டுப்­ப­தற்குத் தயா­ராக இருக்­கு­மாறும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை பல­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது. மக்கள் இரண்டு வேளை உணவு உட்­கொள்­கின்ற நிலைமை ஏற்­படும் எனக் குறிப்­பிட்ட அவர், அந்த நிலைமை ஏற்­படக் கூடாது என்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். துர­திஷ்­ட­வ­ச­மாக அந்த நிலை ஏலவே வந்­து­விட்­டது. மக்கள் இப்­போது ஒரு வேளை உணவைப் பெற்றுக் கொள்­வ­தற்குக் கூட திண்­டாடி வரு­கி­றார்கள். கொழும்பில் சமைப்­ப­தற்கு விற­கு­கூட இல்­லாத நிலையில், தனது வீட்டின் கட்­டிலை உடைத்து அதனை விற­காகப் பயன்­ப­டுத்­து­கின்ற ஒரு சகோ­த­ரரின் காணொளி இப்­போது சமூக வலைத்­த­ளங்­களில் அதிகம் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது. இதுவே நாட்டு மக்­களின் இன்­றைய நிலை­யாகும்.

இந்த நிலை­மை­யி­லி­ருந்து அர­சாங்கம் நம்மை மீட்­டெ­டுக்கும் என்ற எதிர்­பார்ப்பை தவி­டு­பொ­டி­யாக்­கு­வ­தா­கவே பிர­த­மரின் இந்த உரை அமைந்­துள்­ளது. இந் நிலையில் பிர­த­மரின் இக் கருத்­துக்­களை விமர்­சித்துக் கொண்­டி­ருப்­ப­தை­ விடுத்து, நாம் எதிர்­நோக்­க­வுள்ள இந்தப் பஞ்­சத்­திற்கு எவ்­வாறு முகங்­கொ­டுப்­பது என்­ப­தற்­கான திட்­ட­மி­டல்­களும் தயார்­ப­டுத்­தல்­க­ளுமே இப்­போ­தைக்கு அவ­சி­ய­மாகும்.

தற்­போது இலங்­கையில் உணவுப் பொருட்­களின் விலைகள் 57.4 வீதத்­தினால் உயர்ந்­துள்­ள­தாக புள்ளி விப­ரங்கள் கூறு­கின்­றன. இது நாட்டு மக்­களின் ஆரோக்­கி­யத்தில் பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்றும் குறிப்­பாக பிள்­ளை­களில் ஊட்­டச்­சத்­துக்­கு­றை­பாட்டை ஏற்­ப­டுத்தும் என்றும் உலக உணவுத் திட்டம் எச்­ச­ரித்­துள்­ளது. இன்று ஒவ்­வொரு வகுப்­ப­றை­க­ளிலும் பல மாண­வர்கள் உணவு உட்­கொள்­ளா­ம­லேயே பாட­சா­லைக்கு வரு­வ­தாக ஆசி­ரி­யர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். அர­சாங்கம் பாட­சா­லை­களில் நடை­மு­றைப்­ப­டுத்தும் உண­வுத்­திட்­டமும் தற்­போது செய­லி­ழந்­துள்­ளது. எதிர்­கா­லத்தில் அதுவும் நிறுத்­தப்­படும் ஆபத்தே நில­வு­கி­றது.

இவ்­வா­றான பின்­ன­ணியில் மக்­களை வீட்டுத் தோட்­டங்­களைச் செய்­யு­மாறும் அவற்றின் மூலம் தங்­க­ளது உணவுத் தேவை­களைப் பூர்த்தி செய்­யு­மாறும் அர­சாங்கம் வலி­யு­றுத்தி வரு­கி­றது. அதே­போன்று பொது நிறு­வ­னங்­களின் காணிகள், மத தலங்­களின் காணி­க­ளிலும் பயிர்ச் செய்­கை­களில் ஈடு­பட்டு அவ்வப் பிர­தேச மக்­களின் பசியைப் போக்­கு­வ­தற்­கான திட்­டங்­களை முன்­னெ­டுக்­கு­மாறு ஆலோ­ச­னைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. அரச ஊழி­யர்­க­ளுக்கு வெள்­ளிக்­கி­ழ­மை­களில் விடு­மு­றை­ய­ளித்து அவர்­க­ளையும் விவ­சாய நட­வ­டிக்­கை­களில் ஈடு­படத் தூண்­டு­வது பற்றி அர­சாங்கம் தீவி­ர­மாக சிந்­தித்து வரு­கி­றது.

அர­சாங்­கத்தின் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை சிலர் வேடிக்­கை­யாகப் பார்ப்­ப­துடன் மாத்திரம் கடந்து போய்க் கொண்­டி­ருக்­கின்­றனர். உண்­மையில் நிலைமை மிகவும் பார­தூ­ர­மா­கவே மாறிக் கொண்­டி­ருக்­கி­றது. இலங்­கைக்கு வரு­டத்­திற்கு 2.4 மில்­லியன் மெற்றிக் தொன் அர­சி தேவைப்­ப­டு­கின்ற போதிலும் தற்­போது நாட்டில் 1.6 மில்­லியன் மெற்றிக் தொன் அரிசி மாத்­தி­ரமே கையி­ருப்பில் உள்­ள­தாக பிர­தமர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அடுத்த பெரும்­போக அறு­வடை 2023 பெப்­ர­வரி மாதமே கிடைக்கும். அவ்­வா­றான நிலையில் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் அரி­சிக்கு பாரிய தட்­டுப்­பாடு நிலவும். அரிசி இருந்­தாலும் அதற்குப் பாரிய விலை செலுத்த வேண்டி வரும் என பொரு­ளா­தார நிபு­ணர்கள் எச்­ச­ரிக்கை விடுக்­கின்­றனர்.

என­வேதான் ஆகக் குறைந்தது 2022 டிசம்பர் வரை­யான அடுத்த ஆறு மாத காலப்­ப­கு­திக்­கான உணவு உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய தேவை­களை நாம் எவ்­வாறு பூர்த்தி செய்யப் போகிறோம் என்­பதை ஒவ்­வொரு குடும்­பமும் திட்­ட­மிட வேண்­டி­யுள்­ளது. தலைக்கு மேல் வெள்ளம் வந்­து­விட்ட நிலையில், இறை­வனைத் தவிர வேறு யாரும் நம்மைக் காப்­பாற்றப் போவ­தில்லை. அதற்­கான முயற்­சி­களை நாம் மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.
இஸ்லாம் விவ­சா­யத்தை ஊக்­கு­விக்­கி­றது. அதில் மிகுந்த அருள் உள்­ள­தா­கவும் குறிப்­பி­டு­கி­றது. இந் நிலையில் பள்­ளி­வா­சல்­கள்­தோறும் மஹல்லா ரீதி­யாக மக்­களை வீட்டுத் தோட்­டங்­க­ளின்பால் ஊக்­கு­விக்க வேண்­டிய தேவை­யுள்­ளது. அதே­போன்று பள்­ளி­வா­சல்கள் மற்றும் பொது நிறு­வ­னங்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகளில் பயிர்ச் செய்­கை­களை மேற்­கொண்டு அவ்வப் பிர­தே­சத்­திற்குத் தேவை­யான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யுள்­ளது. இது தொடர்பில் தேசிய சூறா சபை ஏற்­க­னவே வழி­காட்­டல்­களை வழங்கி வரு­கின்­றமை பாராட்­டுக்­கு­ரி­ய­தாகும்.

அடுத்து வரும் மாதங்­களில் கையில் எவ்­வ­ளவு பணம் இருந்தும் பிர­யோ­ச­ன­மி­ருக்­காது. பொருட்­களின் விலைகள் இப்­போ­தி­ருப்­பதை விடவும் பன்­ம­டங்கு உயரப் போகின்­றன. பொருட்­க­ளுக்கு பாரிய தட்­டுப்­பாடு நிலவும். மக்கள் எரி­வாயு, எரி­பொ­ரு­ளுக்கு மாத்­தி­ர­மின்றி அரசி, மாவு, பாண், மரக்­கறி போன்­ற­வற்­றுக்­கா­கவும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை வரப்போகிறது. இதற்கு நாம் தயாராக வேண்டும். எனவேதான் எமது குடும்பம் பட்டினியில் வாடுவதைத் தடுக்க வேண்டுமானால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் திட்டமிட்ட வேண்டும். அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதே வலியுறுத்துவதே எமது நோக்கமாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு விரைவில் விடிவைத் தருவானாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.