பயான்கள் மாத்திரம் தீர்வல்ல!

0 453

அட்­டு­ளு­கம பிர­தே­சத்தில் 9 வய­தான சிறுமி ஆயிஷா, கடத்திச் செல்­லப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் அனை­வ­ரையும் வெகு­வாகப் பாதித்­துள்­ளது. இச் சம்­பவம் இன, மத பேத­மின்றி நாட்டு மக்கள் அனை­வ­ரையும் அதிர்ச்­சி­யிலும் கவ­லை­யிலும் ஆழ்த்­தி­யுள்­ளது.

இக் குற்­றத்தை இழைத்த நபர் போதைப் பொரு­ளுக்கு அடி­மை­யா­னவர் எனத் தெரி­ய­வ­ரு­கி­றது. குறித்த பிர­தே­சத்தில் அண்­மைக்­கா­ல­மாக போதைப் பொருள் பாவனை அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் இதனால் அங்கு குற்றச் செயல்கள் மலிந்­துள்­ள­தா­கவும் பிர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர். குறிப்­பாக பாட­சாலை மாண­வர்­களை இலக்கு வைத்தும் பாரி­ய­ளவில் போதைப் பொருள் விற்­பனை இடம்­பெ­று­வ­தாக அவர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

உண்­மையில் இந்த ஆபத்து அட்­டு­ளு­க­மைக்கு மாத்­திரம் உரி­ய­தல்ல. மாறாக நாட்டின் பல பகு­தி­க­ளி­லு­முள்ள முஸ்லிம் பிர­தே­சங்­களில் இன்று போதைப் பொருள் வியா­பாரம் களை­கட்­டி­யுள்­ளது. இதனால் முழுக்க முழுக்க முஸ்­லிம்கள் வாழ்­கின்ற பகு­தி­களில் கூட போதைக்கு அடி­மை­யா­ன­வர்­களின் எண்­ணிக்கை பல்கிப் பெரு­கி­யுள்­ளது. குற்றச் செயல்­களும் அதி­க­ரித்­துள்­ளன. சில மாதங்­க­ளுக்கு முன்னர் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள ஒரு முஸ்லிம் பிர­தே­சத்தில் போதைக்கு அடி­மை­யான இளைஞர் ஒருவர் தனது தந்­தையின் கண் ஒன்றைத் தோண்­டி­யெ­டுத்த பரி­தாப சம்­ப­வத்தை ‘விடி­வெள்­ளி­’யூ­டாக நீங்கள் அறிந்­தி­ருப்பீர்கள். இவ்­வா­றான பார­தூ­ர­மான குற்றச் செயல்கள் நாட­ளா­விய ரீதியில் போதைக்கு அடி­மை­யா­ன­வர்­களால் இடம்­பெற்ற வண்­ண­மே­யுள்­ளன.

அட்­டு­ளு­கம சம்­பவம் இரண்டு விட­யங்கள் தொடர்பில் நமது கவ­னத்தை ஈர்க்­கி­றது. ஒன்று, போதைப் பொருள் பாவ­னையும் அதன் தாக்­கங்­களும். அடுத்­தது, சிறு­வர்­க­ளுக்கு பாது­காப்­பில்­லாத சூழல். இவ்­வி­ரண்­டுக்­குமே நேரடித் தொடர்­பி­ருக்­கி­றது. போதைக்கு அடி­மை­யா­ன­வர்கள் தமது இச்­சை­களைத் தீர்த்துக் கொள்ள சிறு­வர்­களைக் குறி­வைக்­கின்­றனர். ஒரு கட்­டத்தில் அவர்கள் கொலை செய்­யவும் துணி­கின்­றனர். அதுவே சிறுமி ஆயி­ஷாவின் விட­யத்­திலும் நடந்­துள்­ளது.

என­வேதான் சமூ­கத்­தி­னதும் எதிர்­கால சந்­த­தி­யி­னதும் நன்மை கருதி போதைப் பொருளை ஒழிப்­ப­தற்­கான கடு­மை­யான முயற்­சி­களை நாம் மேற்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது. இதற்­கான குறு­கிய மற்றும் நீண்ட கால திட்­டங்­களை வகுக்க வேண்­டி­யுள்ளது.
போதைப் பொருள் ஒழிப்பு என்று வரு­கின்ற போது நாம் பள்­ளி­வா­சல்­களில் குத்பா பிர­சங்கம், விசேட பயான் நிகழ்ச்­சி­க­ளையே முதல் தெரி­வாகக் கொள்­கிறோம். அதனைச் செய்தால் நமது கடமை முடிந்துவிட்டதாக கருதுகிறோம். எனினும் அவற்றினால் மாத்திரம் எதிர்­பார்க்­கப்­படும் மாற்­றங்­களை எம்மால் ஏற்­ப­டுத்த முடி­யாது என்ற யதார்த்­தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் போதைப் பொருள் பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கும் பள்­ளி­வா­ச­லுக்­கு­மி­டை­யி­லான இடை­வெளி அதிகம். ஒன்றில் அவர்கள் பள்­ளி­க­ளுக்கு வரு­வ­தில்லை. அல்­லது பள்­ளிகள் அவர்­களை உள்­வாங்­கு­வ­தில்லை. அவ்­வாறு அவர்கள் பள்­ளிக்கு வந்­தாலும் கூறப்­படும் விட­யங்­களை விளங்கிக் கொள்ளும் நிலை­மையில் இருக்­க­மாட்­டார்கள். ஆயி­ஷாவை துஷ்­பி­ர­யோகம் செய்ய முயன்று, கொலை செய்த நபரும், இவ்­வா­றா­ன­தொரு பாரிய குற்­றத்தை இழைத்­து­விட்டு அன்­றைய தினம் ஜும்ஆ தொழு­கைக்கும் சென்­றி­ருப்­ப­தாக பொலிஸ் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

போதை­யொ­ழிப்பு வேலைத்­திட்­டங்­களைப் பொறுத்­த­வரை முஸ்லிம் நாடு­களின் ஒத்­து­ழைப்­பு­களை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும். போதைக்கு அடி­மை­யா­ன­வர்­க­ளுக்கு பள்­ளி­வா­சல்­க­ளையும் ஏனைய நிறு­வ­னங்­க­ளையும் மையப்­ப­டுத்­திய சிகிச்சை மற்றும் வழி­காட்­டல்கள் எவ்­வாறு வழங்­கப்­ப­டு­கின்­றன என்ற முன்­மா­தி­ரி­களை இங்கும் நடை­மு­றைப்­ப­டுத்த முடியும். அதற்குத் தேவை­யான பொரு­ளா­தாரம் உள்­ளிட்ட வளங்­க­ளையும் பெற்றுக் கொள்ள முடியும். அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­பன இது தொடர்பில் சிந்­திக்­கவும் ஒன்­றி­ணைத்து செயற்­ப­டவும் முன்­வர வேண்டும்.

மறு­புறும் இலங்கை சிறு­வர்­க­ளுக்கு பாது­காப்­பற்ற நாடாக மாறி­யுள்­ளது. சிறுவர் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றன. துர­திஷ்­ட­வ­ச­மாக, இலங்­கையில் கடந்த 20 மாதங்­க­ளுக்குள் 14 சிறு­வர்கள் இவ்­வாறு கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் புள்­ளி­வி­ப­ரங்கள் கூறு­கின்­றன. ஆயி­ஷாவின் கொலை இடம்­பெற்ற இதே காலப்­ப­கு­தியில் மேலும் பல இது­போன்ற சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. இதனால் பெற்­றோர்­களும் சிறார்­களும் பலத்த அதிர்ச்­சி­யிலும் அச்­சத்­திலும் ஆழ்ந்துள்ளனர்.

பிள்ளைகள் தமது கல்வி நடவடிக்கைகளுக்குக் கூட வெளியில் செல்ல அச்சப்படுகின்றன. இது அவர்களது உடல், உள ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும். எனவேதான் இந்த விவகாரங்கள் குறித்து முஸ்லிம் சமூகத்தில் மிகவும் தீவிரமான உரையாடல்கள் இடம்பெற வேண்டும். அதிலிருந்து நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். குறிப்பாக பாடசாலை மட்டத்திலிருந்து போதைப் பொருளுக்கு எதிரான காத்திரமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்கள் அமல்களுக்காக மாத்திரமன்றி சமூகப் புனரமைப்புக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமே ஓரளவு மாற்றங்களை எம்மால் ஏற்படுத்த முடியும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.