மிரிஹான ஆர்ப்பாட்டம் அரபு வசந்தமா?

0 386

ஏ.ஆர்.ஏ.பரீல்

நாடு­ த­ழு­விய ரீதியில் போராட்­டங்கள், கண்­டனப் பேர­ணிகள், மக்கள் அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்­காக நாட்­க­ணக்கில் வரி­சையில் காத்துக் கிடக்­கின்­றனர்.
எரி­வாயு, எரி­பொருள், பால்மா என்று உண­வுப்­பொ­ருட்­க­ளுக்­காக காத்­தி­ருக்கும் மக்கள் ஆட்­சி­யா­ளர்­களால் கண்டு கொள்­ளப்­ப­டு­வ­தில்லை.

2019, 2020, 2021 மற்றும் 2022 என்று வரி­சை­யாக முஸ்­லிம்­களின் நோன்பு காலங்­க­ளிலே ஆட்­சி­யா­ளர்­களால் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது எனலாம்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள். இத்­தாக்­கு­தலில் நூற்­றுக்­க­ணக்­கானோர் பலி­யா­னார்கள். பலர் பலத்த காயங்­க­ளுக்­குள்­ளா­னார்கள் இத்­தாக்­குதல் ஒரு குறிப்­பிட்ட முஸ்லிம் பெயர் தாங்­கிய குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட போதும் ஆட்­சி­யா­ளர்கள் முழு முஸ்லிம் சமூ­கத்தின் மீதே இந்தப் பழியைச் சுமத்தி பழி­வாங்­கி­னார்கள்.

நூற்­றுக்­க­ணக்­கான முஸ்லிம் இளை­ஞர்கள் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டார்கள். இந்தத் தாக்­கு­தலின் பின்­ன­ணியில் ஒரு சிலர் இருந்­தி­ருக்­கலாம். ஆனால் முழு முஸ்லிம் சமூ­கமும் சந்­தே­கத்தின் கண்­கொண்டே நோக்­கப்­பட்­டது. இன்றும் இதே நிலை­மையே நீடிக்­கி­றது.

இத்­தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி இது­வரை சரி­யாக இனங்­கா­ணப்­ப­ட­வில்லை. இத்­தாக்­குதல் சம்­பவம் அர­சியல் பின்­ன­ணி­யைக்­கொண்­டது என பர­வ­லாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது. பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் இத­னையே தொடர்ச்­சி­யாகக் கூறி­வ­ரு­கிறார். இத்­தாக்­குதல் தொடர்­பாக இது­வரை உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரிகள் இனங்­கா­ணப்­ப­டா­மை­யினால் சர்­வ­தேச விசா­ரணை தேவை­யெ­னவும் அவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

முஸ்­லிம்­களின் வேதனைக் குமு­றல்­க­ளுக்கு மத்­தியில் முத­லா­வது கொரோனா ஜனாஸா பல­வந்­த­மாக எரிக்­கப்­பட்­டது. இச் சம்பவம் நடந்து சரியாக இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற அதே நாளில் (கடந்த மார்ச் 31ஆம் திகதி மாலை) இந்தக் கொடூர ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக Go Gota Home என வலி­யு­றுத்தி முதலாவது பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்று மேற்­கொள்­ளப்­பட்­டது.

இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் ஆட்டம் கண்­டு­விட்­டார்கள். நாட்டில் குறு­கிய காலத்தில் பாரிய மாற்றம் ஒன்று நிக­ழப்­போ­கி­றது. ஜனா­தி­பதி கோத்­தா­பாய ராஜ­பக்ஷ மற்றும் அமைச்­சர்­களின் இல்­லங்­களை முற்­று­கை­யிடும் அள­வுக்கு மக்கள் கொதித்­தெ­ழுந்­துள்­ளனர். நாடெங்கும் வீதி­கள்­தோறும் ஆர்ப்­பாட்­டங்­களை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்ட அப்­பாவி இளை­ஞர்கள் பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­ட­போது அவர்­களின் பெற்றோர் உற­வி­னர்கள் கதறி அழுதார்கள். சிலர் செய்­வ­த­றி­யாது மயக்கமுற்று வீழ்ந்­தார்கள். அவர்கள் அனை­வரும் அப்­போது இறை­வ­னி­டமே கையேந்­தி­னார்கள். நீதி­கேட்­டார்கள். இறை­வ­னிடம் மன்­றா­டி­னார்கள். விசேட நோன்­பு­களை நோற்­றார்கள்.
அவர்­க­ளது மன்­றாட்­டங்கள் கோரிக்­கைகள் இறை­வனால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டு­விட்­டன என்று இன்று முஸ்லிம் சமூ­கத்தில் பர­வ­லாகப் பேசப்­ப­டு­கி­றது.

அல்லாஹ் கொடிய ஆட்­சியைக் கவிழ்த்­து­விட்டான். தண்­டித்­து­விட்டான். அதுதான் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு இந்தச் சோதனை என்று பகி­ரங்­க­மாக கருத்து வெளி­யிட்டு வரு­கி­றார்கள்.

உயிர்த்த ஞாயி­று­தாக்­கு­தலின் பின்பு முஸ்லிம் சமூ­கமே இலக்கு வைக்­கப்­பட்­டது. முஸ்­லிம்கள் அனு­ப­வித்­து­வந்த உரி­மைகள் சூட்­சு­ம­மாக பறிக்­கப்­ப­டு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

அர­சாங்­கத்தின் உத்­த­ரவின் பேரில் பல பள்­ளி­வா­சல்கள் மூடப்­பட்­டன.
அர­புக்­கல்­லூ­ரிகள் 50 க்கும் 75க்கும் இடைப்­பட்ட எண்­ணிக்­கையில் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. அர­புக்­கல்­லூ­ரி­களின் பாடத்­திட்டம் திருத்­தி­ய­மைக்­கப்­ப­ட­வுள்­ளது. முஸ்­லிம்­களின் காணிகள் தொல்பொருள் என்ற போர்வையில் பலாத்­கா­ர­மாக அப­க­ரிக்­கப்­பட்­டு­கின்­றன.

அர­சாங்­கத்தின் திட்­ட­மி­டப்­பட்ட இந்த அநி­யா­யங்கள் கார­ண­மாகவே இந்த சோத­னைகள் உரு­வா­கி­யுள்­ள­தாக முஸ்­லிம்கள் தெரி­விக்­கின்­றனர்.

ஜனா­ஸாக்கள் எரிக்கப்பட்டு சரியாக இரண்டு வருடங்களில்….
கொரோனா தொற்­றினால் உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் வலுக்­கட்­டா­ய­மாக அர­சாங்கம் தகனம் செய்­து­விட்­ட­மையை முஸ்லிம் நாடுகள் மாத்­தி­ர­மல்ல முழு உலக நாடு­களும் அறியும். இலங்கை அர­சாங்­கத்தின் தீர்­மா­னத்தை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு ஐக்­கிய நாடுகள் ஸ்தாப­னத்தின் நான்கு அறிக்­கை­யா­ளர்கள் முன்­வைத்த கோரிக்­கையைக்கூட அர­சாங்கம் கவ­னத்தில் கொள்­ள­வில்லை. அர­சாங்கம் சிறு­பான்மை இனத்­த­வரின் மத உரி­மை­க­ளுக்கு இட­ம­ளிக்­க­வில்லை. அர­சி­ய­ல­மைப்பில் கூறப்­பட்­டுள்ள மத உரி­மை­களைக் கூட அரசு அலட்­சியம் செய்­தமை இங்கு குறிப்­பிட்­டுக்­கூ­றக்­கூ­டி­ய­தாகும்.

இலங்­கையில் முத­லா­வது கொரோனா ஜனாஸா 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திக­தியே பதிவானது. இந்தச் சந்­தர்ப்­பத்தில் இலங்­கையில் கொரோனா தொற்று கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களை அடக்கம் செய்­யவும் முடியும், எரிக்­கவும் முடியும் என்ற ஐ.நா. சுகா­தார ஸ்தாப­னத்தின் நிலைப்­பாடே காணப்­பட்­டது.

இந்­நி­லையில் 2020 மார்ச் 30ஆம் திகதி கொரோனா தொற்றால் இறந்­த­வரின் ஜனா­ஸாவை அடக்கம் செய்­யாது எரிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­தது. நீர்கொழும்பில் இடம்­பெற்ற இந்த ஜனா­ஸாவை எரிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­த­தை­ய­டுத்து குடும்­பத்­தினர் அச்­சத்­துக்­குள்­ளா­கினர். வேத­னைக்­குள்­ளா­கி­னார்கள். அக்­கு­டும்­பத்­துடன் பிர­தேச சுகா­தார அதி­கா­ரி­களும் பொலி­ஸாரும், பாது­காப்­புத்­த­ரப்­பி­னரும் அச்­சு­றுத்தும் தொனி­யிலே பேசி­யி­ருந்­தனர். ஜனாஸா எரிக்­கப்­ப­டு­வதை தடுப்­ப­தற்கு முடி­யாமற் போனது. அன்று இரவே ஜனாஸா எரிக்­கப்­பட்­டது.

முஸ்­லிம்­களின் வேதனைக் குமு­றல்­க­ளுக்கு மத்­தியில் முத­லா­வது கொரோனா ஜனாஸா பல­வந்­த­மாக எரிக்­கப்­பட்­டது.

இச் சம்பவம் நடந்து சரியாக இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற அதே நாளில் (கடந்த மார்ச் 31ஆம் திகதி மாலை) இந்தக் கொடூர ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக முதல் பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்று மேற்­கொள்­ளப்­பட்­டமை இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இந்த ஆர்ப்­பாட்­டத்தில் இன மத வேறு­பா­டு­க­ளின்றி மக்கள் கலந்து கொண்­டனர்.

முஸ்­லிம்­களின் மத­ உ­ரி­மை­களை கலால் எட்டி உதைத்­து­விட்டு ஜனா­தி­ப­தியே 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஜனாஸா எரிப்­புக்கு உத்­த­ர­விட்டார். அதே ஜனா­தி­ப­திக்கு எதி­ராக இரண்டு வரு­டங்­களின் பின்பு கடந்த மார்ச் 31 ஆம்­ தி­கதி Go Gota Home என வலி­யு­றுத்தி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

முத­லா­வது ஜனாஸா எரிக்­கப்­பட்டு ஓரிரு தினங்கள் கடந்து இரண்­டா­வது கொரோனோ ஜனாஸா நிகழ்ந்­தது. மரு­தா­னையைச் சேர்ந்த ஒருவர் ஐ.டீ.எச். இல் உயி­ரி­ழந்தார். இவ­ரது ஜனா­ஸாவை எரிப்­ப­தற்கும் அவ­ரது வீட்­டாரை வற்­பு­றுத்­தியே கையொப்பம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

இதே­வேளை 20 நாளே­யான ஆண்­கு­ழந்­தை­யொன்று பல­வந்­த­மாக தகனம் செய்­யப்­பட்­டமை இலங்­கையில் மட்­டு­மன்றி முழு உலகி­லும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது. குறிப்­பாக முஸ்லிம் நாடு­களில் வாழும் மக்கள் அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

இந்­தக்­ கு­ழந்தை 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் திகதி காலை 10.45 மணி­ய­ளவில் சுக­யீனம் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. 8ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு குழந்தை மர­ண­ம­டைந்­து­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது. மறு­தினம் டிசம்பர் 9ஆம் திகதி மாலை 4 மணிக்கு அந்தக் குழந்தை தகனம் செய்யப்பட்டது. குழந்­தையின் மரணம் பற்றி பெற்­றோ­ருக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை. பெற்றோர் நேரம் கழித்து வைத்­தி­ய­சா­லையைத் தொடர்பு கொண்­ட­போது தான் குழந்தை மரணம் அடைந்­து­விட்ட செய்தி பெற்­றோ­ருக்கு தெரி­விக்­கப்­பட்­டது.

ஒரு தனியார் வைத்­தி­ய­சா­லையில் பி.சி.ஆர்.சோதனை நடத்­தப்­பட வேண்­டு­மென குழந்­தையின் தந்தை மன்­றா­டி­யுள்ளார். வைத்­தி­ய­சாலை நிர்­வாகம் அதற்கு அனு­ம­தி­ய­ளிக்க மறுத்­துள்­ள­தோடு குழந்­தையை தகனம் செய்ய கையொப்பம் இடு­மாறு அவரை வற்­பு­றுத்­தி­யுள்­ளது. தகனம் செய்­யப்­ப­டு­வதை பார்­வை­யிட பொரளை பொது மையா­னத்­துக்கு வரு­மாறு தந்­தைக்கு அழைப்பு விடுத்­துள்­ளது. தகனம் செய்­வ­தற்கு இன்னும் எத்­த­னையோ உடல்­களை இருக்கும் நிலையில் ஏன் எனது குழந்­தையை தகனம் செய்ய இவ்­வ­ளவு அவ­சரம் காட்­டு­கி­றீர்கள் என்ற தந்­தையின் கேள்­விக்கு வைத்­தி­ய­சாலை நிர்­வாகம் பதி­ல­ளிக்­க­வில்லை. அவர்கள் குழந்­தையை எரிப்­ப­திலே குறி­யாக இருந்­தார்கள் என குழந்­தையின் தந்தை ஊட­க­வி­ய­லாளர்­க­ளிடம் தெரி­வித்திருந்ததை இங்கு நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

பெரும்­பான்மை சமூ­கத்தின் இன­வாத அர­சியல் தான் இலங்­கையின் போக்கை மாற்­றி­ய­மைத்­தது என்­பதை யாரும் மறந்­து­வி­டக்­கூ­டாது. 1948 இல் இலங்கை சுதந்­திரம் அடைந்­த­போது முழு உல­கத்­துக்கும் முன்­மா­தி­ரி­யான ஒரு நாடா­கவே அது திகழ்ந்­தது. பொரு­ளா­தாரம், அர­சியல் ஸ்திரப்­பாடு, சமூக நல்­லி­ணக்கம் என அனைத்­திலும் அது மேலோங்­கி­யி­ருந்­தது. இன்று உலகில் மிகவும் ஊழல் மிக்க ஒரு நாடா­கவும், வங்­கு­ரோத்து நிலைக்கு வந்­து­விட்ட தோல்வி கண்ட நாடா­கவும் இலங்கை மாறி­யுள்­ளது. இந்­நி­லையை உரு­வாக்­கி­ய­வர்கள் இந்த நாட்­டின்­ சி­று­பான்மை இன­மக்கள் அல்லர்.
இன்று பெரும்­பான்­மை மக்கள் அரசின் இன­வாத திரு­கு­தாளங்­களை உணர்ந்து கொண்­டுள்­ளார்கள். சிறு­பான்மை மக்­க­ளுடன் கைகோர்த்து வரு­கி­றார்கள். இன­வாத பெளத்த மத­கு­ரு­மார்­க­ளுக்கு எதி­ரா­கவும் பெரும்­பான்மை இன­மக்கள் போர்க்­கொடி ஏந்­தி­யுள்­ளனர்.

ஆட்­சி­யா­ளர்கள் சிறு­பான்மை மக்­க­ளுக்கு செய்த கொடூ­ரங்கள் மற்றும் அட்­டூ­ழியங்கள் இன்று அவர்­களை பழி­வாங்­கி­விட்­டன என்று கூறி­னா­ல் அது மிகை­யா­காது.
கொரோனா தொற்­றுக்­குள்­ளாகி மர­ணிப்­போரை கட்­டாயம் எரிக்க வேண்டும் என்ற வர்த்­த­மானி அறி­வித்­தலை வாபஸ் பெறும்­படி பல மனுக்கள் உயர்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டன. குறிப்­பிட்ட மனுக்­களை விசா­ர­ணைக்கு ஏற்­காது பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்த ஜய­சூ­ரிய நிரா­க­ரித்தார்.

மூவ­ர­டங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாமின் பெரும்­பான்­மையின் அடிப்­ப­டையில் இம்­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. நீதி­மன்றம் இதனை தள்­ளு­படி செய்­தது.
“எரிக்­கப்­பட்ட முத­லா­வது ஜனா­ஸா­வுக்கும் இரண்­டா­வது ஜனா­ஸா­வுக்கும் கொரோனா இருந்­ததா? என்­பதில் சந்­தேகம் இருக்­கி­றது. அவர்கள் முதுமை மற்றும் ஏற்­க­னவே வேறு நோய்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்த நிலையில் மர­ணித்­தி­ருக்­கவும் வாய்ப்பு இருக்­கி­றது. எரிக்­கா­ம­லி­ருந்­தா­லா­வது தோண்­டி­யெ­டுத்து பரி­சோ­தனை செய்து பார்க்­கலாம். ஆனால் அப்­ப­டி­யான சந்­தர்ப்­பத்தை இல்­லாமற் செய்­வ­தற்கே ஜனா­ஸாக்­களை எரித்­தனர்” என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சாஹிர் மெள­லானா தெரி­வித்திருந்தார்.

ஜனாஸா முத­லா­வது எரிக்­கப்­பட்ட தினத்­தை­ய­டுத்து இரண்டு வரு­டங்­களின் பின்பு அதா­வது 2022 மார்ச் 31 ஆம் திகதி ஜனாஸா எரிப்­புக்கு உத்­த­ர­விட்ட ஜனா­தி­ப­திக்கும் அவரது கட்சியினருக்கும் இறைவன் பாடம் புகட்டியுள்ளான் என்றே குறிப்­பி­டத்­தோன்­று­கின்­றது. அநியாயமிழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதை இதன் மூலம் நாம் கண்டு கொள்ளலாம்.

ஜனா­தி­பதி இல்­லத்­துக்கு அருகில் ஆர்ப்­பாட்­டங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் பல இன்­னல்­களை அனு­ப­வித்து வந்­துள்ளது. குறிப்­பாக ரமழான் காலத்தில் முஸ்­லிம்கள் பல அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.

தங்­க­ளுக்கு இன்­னல்கள் ஏற்­பட்­ட­ போ­தெல்லாம் ஆட்­சி­யா­ளர்­களால் சவால்கள் விடுக்­கப்­பட்ட போதெல்லாம் அவர்கள் இறை­வ­னி­டமே கையேந்­தி­னார்கள். பொதுத்­தேர்தல் மற்றும் ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போ­து­கூட நாட்டில் நல்­லாட்சி அமை­ய­வேண்­டு­மென்றே பிரார்த்­தித்­தார்கள். ஆனால் பத­விக்கு வந்த ஆட்­சி­யா­ளர்கள் அதி­கார மோகத்தில் மூழ்­கி­விட்­டி­ருந்­தனர். அதன் பிர­தி­ப­ல­னையே இன்று நாடு எதிர்கொண்­டுள்­ளது.

ஜனா­தி­பதி வெற்றி பெற்று பத­விக்கு வந்­ததும் முஸ்­லிம்கள் தனக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என்று பகி­ரங்­க­மா­கவே தெரி­வித்­தி­ருந்தார். அவ­ரது செயற்­பா­டுகள் முஸ்­லிம்கள் அடிப்­ப­டை­வா­திகள் என்றும் அவர்­களைத் தண்­டிக்கும் பாணி­யிலே அமைந்­தி­ருந்­தது.
அதன் பிர­தி­ப­லனே மிரி­ஹா­னயில் அவ­ரது இல்­லத்­துக்கு அருகில் கடந்த 31ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட பாரிய எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம். எரி­பொருள் தட்­டுப்­பாடு, மின் துண்­டிப்பு, விலை­வாசி உயர்வு பால்மா தட்­டுப்­பாடு உள்­ளிட்ட பல விட­யங்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து மிரி­ஹான பொலிஸ் பிரிவில் அமைந்­துள்ள ஜனா­தி­ப­தியின் இல்­லத்­துக்கு அருகில் மக்கள் பரிய ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இத­னை­ய­டுத்து ஆர்ப்­பாட்­டத்தைக் கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் கொழும்பு மாவட்டம் முழு­வதும் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு முதல் வெள்­ளிக்­கி­ழமை அதி­கா­லை­வரை பொலிஸ் ஊர­டங்கு அமுல்­ப­டுத்­தப்­பட்­டது.

வியா­ழக்­கி­ழமை மாலை 6 மணி­ய­ளவில் மிரி­ஹான ஜுப்லி கணு சந்­தியில் ஆரம்­பித்த அமைதி ஆர்ப்­பாட்டம் எம்­புல்­தெ­னிய ஜனா­தி­பதி இல்­லத்­துக்கு அருகே பெங்­கி­ரி­வத்தை வீதியில் அமை­தி­யற்ற நிலை­மையை தோற்­று­வித்­தது. இறு­தியில் பாது­காப்பு படை­யினர் கண்­ணீர்­புகை பிர­யோகம், இறப்பர் குண்­டுத்­தாக்­குதல் நடத்தி ஆர்ப்­பாட்­டத்தை கட்­டுப்­ப­டுத்­தினர். இதன்­போது 4 ஊட­க­வி­ய­லா­ளர்கள் 39 சிவி­லி­யன்கள் படு­கா­ய­ம­டைந்­தனர். இரு பஸ்­வண்­டிகள் , பொலிஸ் ஜீப் ஒன்று, 2 மோட்டார் சைக்­கிள்கள் 2 முச்­சக்­க­ர­வண்­டிகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் ஜுப்லி கணு சந்­தி­யி­லி­ருந்து அமை­திப்­பே­ர­ணி­யாக சில சுலோ­கங்­க­ளுடன் மிரி­ஹான எம்­புல்­தெ­னிய ஜனா­தி­பதி இல்­லத்தை நோக்கி நக­ர­லா­யினர். இந்­நி­லையில் அமை­திப்­பே­ர­ணி­யாக சென்ற பொது­மக்­களை பாது­காப்பு தரப்­பினர் ஜனா­தி­பதி இல்­லத்­துக்கு அருகே உள்ள பெங்­கி­ரி­வத்தை வீதியின் முகப்பில் தடுத்­தனர். இதனால் ஆர்ப்­பாட்ட பேர­ணியில் கலந்து கொண்ட மக்கள் மஹ­ர­கம119 பஸ்­வண்டி பய­ணிக்கும் வீதியை மறித்து தங்கள் எதிர்ப்­பினை வெளி­யிட்­டனர்.

இதன்­போது மக்கள் தன்­னிச்­சை­யாக ஆயி­ரக்­க­ணக்கில் அங்கு திரண்­டனர். அவர்கள் ‘ஜனா­தி­ப­தியே பதவி விலகு’, ‘முடி­யா­விட்டால் விட்டுச் செல்’, ‘கோட்டா கோ ஹோம்’ போன்ற பதா­தை­களை ஏந்தி கோஷ­மிட்­டனர். நிலைமை மோச­ம­டைந்­தது. இத­னை­ய­டுத்து பாது­காப்பு அங்கு பலப்­ப­டுத்­தப்­பட்­டது. நுகேகொடை பொலிஸ் வல­யத்தின் அனைத்துப் பொலிஸ் நிலை­யங்­க­ளி­லி­ருந்தும் பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்­டனர். கல­கத்­த­டுப்புப் பொலி­ஸாரும் மேல­திகப் படைப்­பி­ரி­வி­னரும் ஸ்தலத்­துக்கு அழைக்­கப்­பட்­டனர்.

நிலை­மையை சமா­ளிப்­ப­தற்­காக அப்­ப­கு­தியில் மின்­தடை தொட­ரப்­பட்­டது. தொலைத்தொடர்பு வச­தி­க­ளிலும் இடைஞ்­சல்கள் ஏற்­பட்­டன. என்­றாலும் சுமார் 5000 க்கும் மேற்­பட்ட மக்கள் அங்கு கூடி­னார்கள். ஜனா­தி­ப­திக்கு எதி­ரான கோஷம் அதி­க­ரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து பொலிஸார் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை கலைக்க முற்­பட்­ட­போது அது வன்­முறைப் போராட்­ட­மாக மாறி­யது.

இந்­நி­லையில் பொலிஸார் முதலில் தண்ணீர் பிர­யோகம் மேற்­கொண்டு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை கலைக்க முயன்­றனர். அது சாத்­தி­யப்­ப­டா­த­தை­ய­டுத்து பொலிஸார் அதி­ர­டிப்­ப­டை­யினர் கல­க­ம­டக்கும் பொலிஸார் மற்றும் இரா­ணு­வத்­தினர் தடி­களைக் கொண்டும் இறப்பர் குண்­டு­களைக் கொண்டும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களைக் கலைத்­தனர்.
தீ வைப்புச் சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் இனந்தெரியாத சக்தி ஒன்று இருந்த­தாக ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் தெரி­வித்­தனர். இந்த ஆர்ப்­பாட்டம் மற்றும் வன்­மு­றைகள் கார­ண­மாக சுமார் 39 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இச்­சம்­ப­வத்தின் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு அடுத்­தக்­கட்ட விசா­ர­ணைகள் குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­களப் பணிப்­பா­ளரின் தலை­மை­யி­லான குழு­வினால் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட்டு வருகின்றன.

ஆர்ப்­பாட்­டத்தின் பின்­ன­ணியில் அடிப்­ப­டை­வா­திகள்?
மிரி­ஹான பகு­தியில் வியாழன் இரவு மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்டம் திட்­ட­மி­டப்­பட்ட அடிப்­ப­டை­வா­தி­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டமை தெரி­ய­வந்­துள்­ள­தாக ஜனா­தி­பதி ஊட­கப்­பி­ரிவு அறி­வித்­துள்­ளது.

இவர்கள் ‘அரபு வசந்­தத்தை நாட்டில் உரு­வாக்­குவோம்’ என்­ற­வாறு குர­லெ­ழுப்பி ஆர்ப்­பாட்­டத்தை வழி­ந­டத்­தி­யுள்­ள­தா­கவும் ஊட­கப்­பி­ரிவு குறிப்­பிட்­டுள்­ளது.
ஜனா­தி­பதி ஊட­கப்­பி­ரிவின் அறிக்­கையில் ‘‘நுகே­கொடை ஜுபிலி பிர­தே­சத்­திற்கு அண்­மையில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களில் திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­வாத குழு­வினர் முரண்­பா­டான வகையில் செயற்­பட்டு வன்­மு­றையை தோற்­று­வித்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இரும்பு கம்­பிகள் மற்றும் தடி உள்­ளிட்­ட­வற்­றுடன் குறித்த குழு­வினர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த மக்­களை தூண்­டி­லிட்டு ஜனா­தி­ப­தியின் வீட்டு பகு­திக்குச் சென்று முரண்­பா­டான நிலை­மையைத் தோற்­று­வித்­துள்­ளனர்.

இவ்­வாறு வன்­மு­றையில் செயற்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தோடு அவர்­களில் பலர் திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­வா­திகள் என்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது. இவர்கள் அரபு வசந்­தத்தை நாட்டில் உரு­வாக்­குவோம். என்­ற­வாறு குர­லெ­ழுப்பி ஆர்ப்­பாட்­டத்தை வழி­ந­டத்­தி­யுள்­ளனர்’’ என அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இந்த அறிக்கை மீண்டும் நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை தூண்­டி­வி­டு­வ­தற்­கான முயற்­சியாகவே பலராலும் நோக்கப்படுகிறது. இது­வரை காலமும் அர­சாங்கம் இன­வா­தத்தை முன்னிறுத்தியே அதிகாரத்தில் அமர்ந்திருந்தது.
இறுதிக்கட்டத்திலும் அதிகாரத்தை இழக்கவுள்ள நிலையிலும் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

முஸ்­லிம்கள் நாம் புனித ரமழான் மாதத்தில் இறை­வ­னிடம் கையேந்­துவோம். நிச்­சயம் முஸ்­லிம்­க­ளுக்கு விமோ­சனம் கிட்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.