இராணுவம் – பொலிஸ் வலுக்கும் முரண்பாடு

0 291

எம்.எப்.எம்.பஸீர்

இலங்கை இரா­ணு­வத்தின் மோட்டார் சைக்கிள் படைப் பிரிவின் 4 மோட்டார் சைக்­கிள்கள், பாரா­ளு­மன்ற வளா­கத்தை சுற்­றி­யுள்ள வீதித் தடையை அண்­மித்து நிலை கொண்­டி­ருந்த ஆர்ப்­பாட்டக் காரர்­க­ளி­டையே, தேவை­யற்ற விதத்தில் சஞ்­ச­ரித்த சம்­பவம் பாரிய சந்­தே­கங்­களை தோற்­று­வித்­துள்­ளது. இந் நிலையில், குறித்த சம்­ப­வத்தின் போது, இரா­ணுவ மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணித்த இரா­ணு­வத்­தி­னரை பொலிஸார் மறித்து, எச்­ச­ரித்­தமை, கைது செய்ய முயன்ற சம்­ப­வங்கள் ஊடாக இரா­ணுவம் மற்றும் பொலி­சா­ரி­டையே பரஸ்­பர மோதல் ஏற்­படும் அபாய நிலை­மையை ஏற்­ப­டுத்­தலாம் என அஞ்­சப்­ப­டு­கின்­றது.

இந் நிலையில் இரா­ணுவ தள­ப­தியும் முப்­ப­டை­களின் தலைமை அதி­கா­ரி­யு­மான ஜெனரால் சவேந்ர சில்­வாவின் கோரிக்கை பிர­காரம், பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, குறித்த சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ள­துடன் தனது கவ­லை­யையும் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இந் நிலையில், குறித்த சந்­தர்ப்­பத்தில் பொலிஸார் செயற்­பட்ட விதம் மிகச் சரி­யா­னதே என தெரி­வித்து பொலி­ஸா­ருக்கு ஆத­ர­வாக பொலிஸ் திணைக்­க­ளத்­துக்­குள்ளும், பொது மக்­களி­டை­யேயும் ஆத­ரவு வலுத்து வரும் நிலையில், இரா­ணு­வத்­தி­னரை மறித்த பொலி­சா­ருக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு இரா­ணுவ தரப்பு வலி­யு­றுத்தி வரு­கின்­றது. இந்த விவகாரம் இராணுவம் மற்றும் பொலிஸ் தரப்புகளுக்கிடையே முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.

நடந்­தது என்ன ? :
பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கைகள் நேற்று முன் தினம் (5) ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்த போது, பாரா­ளு­மன்றை சுற்­றி­வ­ளைக்க ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பாரா­ளு­மன்றம் நோக்கி பய­ணித்­தனர். இதன்­போது பாரா­ளு­மன்ற சுற்று வட்டம் அருகே ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பொலி­ஸாரால் மறிக்­கப்­பட்டு அங்கு தடுப்­புகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

இதன்­போது திடீ­ரென இலக்­கத்­த­க­டற்ற 4 மோட்டார் சைக்­கிள்­களில் அவ்­வி­டத்­துக்கு வந்த இரா­ணுவ மோட்டார் சைக்கிள் படைப் பிரிவின் வீரர்கள் ஆர்ப்­பாட்டக் காரர்­க­ளி­டையே பய­ணித்­த­மையால் பெரும் பதற்றம் உரு­வா­னது. ஒரு மோட்டார் சைக்­கிளைப் பிடித்­துக்­கொண்ட ஆர்ப்­பாட்டக் காரர்கள் இரா­ணு­வத்­தி­னரை தாக்க முயன்­றனர்.
இந் நிலையில் ஒரு­வாறு அவர்கள் தப்­பித்து திரும்ப முற்­பட்ட போது, கட­மையில் இருந்த பொலிசார் அம்­மோட்டார் சைக்­கிள்­களை மறித்து விசா­ரித்­தனர்.

ஸ்தலத்தில் கட­மை­களை முன்­னெ­டுத்த உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் வெத்­த­சிங்க மற்றும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் மஹிந்த வில்­லவ ஆரச்சி ஆகியோர் மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணித்­தோரை மறித்து அவர்­களை மோட்டார் சைக்­கி­ளில் இருந்து இறக்கி கைது செய்­யவும், அவர்­க­ளது நட­வ­டிக்கை தொடர்பில் எச்­ச­ரிக்­கவும் முயன்­றனர். இதன்­போது மோட்டார் சைக்­கிளில் ஆயு­தங்­க­ளுடன் வந்த அவர்­களின் அடை­யா­ளத்தை உறுதி செய்யும் நட­வ­டிக்­கை­க­ளிலும் பொலிசார் ஈடு­பட்­டனர்.

அமைதி ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­து­வரும் சிவில் சமூ­கத்தை ஆயு­தத்துடன் நுழைந்து, அவர்­களை குழப்ப முயல வேண்டாம் எனவும், மு.ப. முதல் ஆர்ப்­பாட்டக் காரர்கள் அமைதி ஆர்ப்­பாட்­டத்­தையே முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் பொலிஸார் அவர்­களை எச்­ச­ரித்­தனர்.

அத்­துடன் எந்த முன்­ன­றி­விப்பும் இன்றி இவ்­வாறு தேவை­யற்ற வேலை­களை செய்ய வேண்டாம் என பொலிசார் இரா­ணு­வத்­தி­னரை எச்­ச­ரித்­தனர். மோட்டார் சைக்­கிளை நிறுத்­தாது பய­ணிக்க முயன்ற இரா­ணு­வத்­தினர் மீது அதனை நிறுத்தச் செய்ய தேவை­யான பலப் பிர­யோ­கத்­தையும் ( கடுந்­தொ­னியில் சற்று கடு­மை­யாக நடந்­து­கொண்­டமை ) பொலிஸார் பயன்­ப­டுத்­தினர்.

இரா­ணு­வத்­தி­னரின் முறைப்­பாடு :
இவ்­வா­றான நிலை­யி­லேயே இலங்கை இரா­ணு­வத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் 4 மோட்டார் சைக்­கிள்கள், பாரா­ளு­மன்ற வளா­கத்தை சுற்­றி­யுள்ள வீதித் தடையை அண்­மித்த சந்­தர்ப்­பத்தில் இரு பொலிஸ் அதி­கா­ரிகள் செயற்­பட்ட விதம் தொடர்பில் குறித்த அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு இலங்கை இரா­ணுவம், பொலிஸ்மா அதி­ப­ரிடம் கோரிக்கை விடுத்­தது.

இரா­ணு­வத்­தி­னரின் கட­மை­க­ளுக்கு பொலிஸார் இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­ய­தாக இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் நிலந்த பிரே­ம­ரத்ன குறிப்­பிட்டார்.
இரா­ணுவத் தள­ப­தியால் விடுக்­கப்­பட்ட இந்த கோரிக்கை தொடர்பில் உட­ன­டி­யாக செயற்­ப­டு­வ­தாக பொலிஸ்மா அதிபர் அறி­வித்­துள்­ள­தாக பிரி­கே­டியர் நிலந்த பிரே­ம­ரத்ன குறிப்­பிட்டார்.

இத­னி­டையே, இந்த சம்­பவம் தொடர்பில் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பாது­காப்பு செய­லா­ள­ரினால் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ரி­டமும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.
இந்த சம்­பவம் தொடர்பில் பொலிஸ்மா அதி­பரின் உத்­த­ரவின் படி விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நிஹால் தல்­துவ கூறினார்.

பொலிஸ் உய­ர­தி­கா­ரியின் விளக்கம் :
எவ்­வா­றா­யினும், குறித்த பாரா­ளு­மன்ற சுற்று வட்ட வளாக பாது­காப்­புக்கு பொறுப்­பாக இருந்த உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தகவல் தரு­கையில், பொலிசார் அவ்­வி­டத்தில் செயற்­பட்ட விதம் மிகச் சரி­யா­னதே எனவும், சிவில் சமூக ஆர்ப்­பாட்டக் காரர்­களை குழப்பி வன்­மு­றையை தூண்டும் விதமாக இரா­ணுவ மோட்டார் சைக்கிள் பிரி­வினர் நடந்­து­கொண்­ட­தாக சுட்­டிக்­காட்­டினார். இந் நிலை­யி­லேயே ஆர்ப்­பாட்­டத்தில் தேவை­யற்ற தலை­யீ­டு­களை செய்த இரா­ணு­வத்­தினர் தொடர்பில் பொலிஸார் தேவை­யான தலை­யீ­டு­களைச் செய்­த­தாக அவர் குறிப்­பிட்டார்.

பொலி­ஸுக்கு வலுக்கும் ஆத­ரவு :
இந் நிலையில் இந்த சம்­பவம் சமூக வலைத் தளங்­க­ளிலும், பிர­தான ஊட­கங்­க­ளிலும் பரவி வரும் நிலையில், ஆர்ப்­பாட்­டத்தை குழப்ப முயன்ற இரா­ணு­வத்­தி­னரைக் கண்­டித்த பொலி­ஸாரை தண்­டிக்க முயலக் கூடாது என பர­வ­லாக எதிர்ப்­புக்கள் முன் வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதனால் பொலி­சா­ருக்கு ஆத­ரவு வலுத்­துள்­ளது. பொலிஸ் திணைக்­க­ளத்­துக்­குள்­ளேயும், கட­மை­களை சரி­யாக செய்­தோரை அதை­ரி­யப்­ப­டுத்தும் வித­மாக இரா­ணு­வத்­தினை திருப்திப் படுத்த பொலிஸார் தண்­டிக்­கப்­படல் கூடாது என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

இடமாற்ற முஸ்தீபு :
எவ்வாறாயினும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் அழுத்தங்கள் பிரகாரம், சிவில் ஆர்ப்பாட்டத்துக்கு பாதுகாப்பளித்த இரு உதவி பொலிஸ் அத்தியட்சர்களையும் பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றி உத்தரவிட முஸ்தீபுகள் நேற்று (6) முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்கான கடிதம் தயார் செய்யப்பட்டிருந்த போதும், இச்செய்தி எழுதப்படும் போதும் ( நேற்று மாலை 5.00 மணி) அக்கடிதத்தில் பொலிஸ் மா அதிபர் கையெழுத்திட்டிருக்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.