இவர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நீடிக்கலாமா?

0 293

எஸ்.றிபான்

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி, அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள தட்­டுப்­பாடு, அதனால் ஏற்­பட்­டுள்ள நீண்ட வரி­சைகள், அர­சாங்­கத்தின் நிர்­வாகக் குறை­பாடு உள்­ளிட்ட பல விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி அர­சாங்­கத்­திற்கும், ஜனா­தி­ப­திக்கும் எதி­ராக நாட்டு மக்கள் பல பாகங்­க­ளிலும் தன்­னார்­வத்­துடன் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். ஜனா­தி­ப­தியின் வீடு, ஜனா­தி­பதி செய­லகம், அமைச்­சர்­களின் வீடு­க­ளையும் சுற்­றி­வ­ளைத்துப் போராட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். இந்த போராட்­டங்கள் நாளுக்கு நாள் வலுப்­பெற்று வரு­கின்­றன.

போராட்­டங்­களில் மக்கள் முன்­வைக்­கின்ற கருத்­துக்­களை அவ­தா­னிக்­கின்ற போது நாட்டின் சீர­ழி­வுக்­கு­ரிய கார­ணி­களை மக்கள் அடை­யாளங் கண்­டுள்­ளார்கள் என்­பது முக்­கிய செய்­தி­யாகும். கடந்த 75 வரு­டங்­க­ளாக அர­சி­யல்­வா­தி­களும், கட்­சி­களும் இன­வா­தத்­தையும், பிரி­வி­னை­வா­தத்­தையும், மத­வா­தத்­தையும், மொழி­வா­தத்­தையும் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய ஆயு­த­மாக பயன்­ப­டுத்தி மக்­களை பிழை­யாக வழி­ந­டத்­தி­யுள்­ளார்கள். இதனால் இன்று நாடு அத­ல­பா­தா­ளத்தில் விழுந்­துள்­ளது.

அதனால், மக்கள் புதி­ய­தொரு அர­சியல் கலா­சா­ரத்­தையும், சிங்­க­ளவர், தமிழர், முஸ்லிம் என்ற வேறு­பா­டு­களை மறந்து நாம் இலங்­கையர் என்­ப­தற்கு வலுச் சேர்க்­கவும் தீர்­மா­னித்­துள்­ளார்கள். இதனால், இன்று ஆட்­சியில் உள்ள ஜனா­தி­ப­தியும், பாரா­ளு­மன்­றத்தில் உள்ள 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தமது பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்ய வேண்­டு­மென்று போராட்­டங்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

எமது வெற்­றிக்கு சிங்­கள மக்­களே காரணம். சிறு­பான்­மை­யி­னரின் உத­வி­யின்றி ஆட்சி அமைப்­ப­தற்கு சிங்­கள மக்­க­ளினால் முடி­யு­மென்றும், தமக்கு 69 இலட்சம் மக்கள் வாக்­க­ளித்­துள்­ளார்கள் என்றும் பெருமை பேசிக் கொள்­வ­தற்கு கார­ண­மாக இருந்த சிங்­கள மக்­களே நாட்டில் அர­சாங்­கத்­திற்கும், ஜனா­தி­ப­திக்கும் எதி­ராக போராட்­டங்­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அதே வேளை, தமிழ், முஸ்லிம், மலை­யக தமி­ழர்­களும் இந்த போராட்­டத்தில் இறங்­கி­யுள்­ளார்கள். இத்­த­கை­ய­தொரு சூழ்­நி­லையில் அமைச்­சர்கள் பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்­துள்­ளார்கள். புதிய அமைச்­ச­ரவை ஒன்று அமைப்­ப­தற்கு அனைத்துக் கட்­சி­க­ளுக்கும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ அழைப்­பு­வி­டுத்­துள்ளார். இதனை எதிர்க்­கட்­சிகள் நிரா­க­ரித்­துள்­ளன.

இத்­த­கைய போராட்­டங்கள் முஸ்லிம் பிர­தே­சங்­க­ளிலும் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இன்­றைய ஆட்­சிக்கு ஆத­ர­வாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக முஸ்லிம் பிர­தே­சங்­களில் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்ற போராட்­டங்­களில் கோசங்கள் எழுப்­பப்­ப­டு­கின்­றன. இதனால், கிழக்கு மாகா­ணத்தில் உள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் வீடு­க­ளுக்கும், அலு­வ­லங்­க­ளுக்கும் பொலிஸ் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

இன்­றைய அர­சியல் நெருக்­க­டி­க­ளுக்கு முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், அக்­கட்­சி­களும் ஒரு வகையில் காரணம் என்­பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பேரி­ன­வாதக் கட்­சி­களின் அர­சி­யல்­வா­திகள் இன­வா­தத்தை கையில் எடுத்துச் செயற்­பட்ட போது, முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் அதற்கு எதி­ரான இன­வாதக் கருத்­துக்­களை முன் வைத்து தேர்­தல்­களில் வெற்றி பெற்றுக் கொண்­டார்கள். பின்னர் பௌத்த இன­வாத்தை பேசி ஆட்­சி­பீடம் ஏறி­ய­வர்­க­ளுடன் கைகோர்த்து அமைச்சர் பத­வி­க­ளையும், கொந்­த­ராத்­துக்­க­ளையும் பெற்றுக் கொண்­டார்கள்.

இன்­றைய ஆட்­சி­யிலும் முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­திக்கு அதி­உச்ச நிறை­வேற்று அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்­காக கொண்டு வரப்­பட்ட 20வது திருத்தச் சட்ட மூலத்­திற்கு ஆத­ர­வ­ளித்­தார்கள். அர­சாங்­கத்தின் அனைத்து காரி­யங்­க­ளிலும் நியா­யங்­களை கண்­டார்கள். முஸ்­லிம்­களை பாது­காத்துக் கொள்­வ­தற்­கா­கவே அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கிக் கொண்­டி­ருக்­கின்றோம் என்று சாக்­குப்­போக்குக் கூறி கட்­சியின் தீர்­மா­னத்­திற்கு மாற்­ற­மா­கவும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஆனால், இன்று இவர்­களின் தீர்­மானம் பொய்த்­துள்­ளது. சமூ­கத்­திற்­காக அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­க­வில்லை என்­பது நிரு­பிக்­கப்­பட்­டுள்­ளது. முழு நாடும் இன­வா­தத்­திற்கும், மத­வா­தத்­திற்கும் எதி­ராக நாம் இலங்­கையர் என்று போராட்­டங்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கின்ற சூழ்­நி­லையில் கூட தாம் “அர­சாங்­கத்­திற்கு வழங்கிக் கொண்­டி­ருக்­கின்ற ஆத­ரவை வாபஸ் வாங்­கு­கின்றோம். நாம் பிழை­யாக முடி­வு­களை எடுத்­து­விட்டோம்” என்று மக்­க­ளிடம் சொல்ல முடி­யாத அள­வுக்கு வெட்கித் தலை­கு­னிந்­துள்­ளார்கள் முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்.

ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்ற தேர்­தல்­களின் போது மொட்­டுக்கு வாக்­க­ளிப்­பது ஹராம் என்­றார்கள். தேர்தல் முடிந்­ததும் தாம் எதிர்க்­கட்­சியில் அமர்ந்த நிலையில் அமைச்சர் பத­வி­க­ளுக்கு ஆசைப்­பட்டு மொட்டு ஹலால் என்­றார்கள். சமூ­கத்­திற்­காக ஹராத்தை ஹலாக்கிக் கொண்­ட­தா­கவும் தெரி­வித்துக் கொண்­டார்கள்.

இப்­போது நாட்டில் பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளிடம் ஏற்­பட்­டுள்ள மன­மாற்­றத்­தையும், நாட்­டுக்கு தேவை­யான உண்­மை­யான நிலைப்­பாட்­டையும் பார்த்து முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளார்கள். தாம் என்ன பேசு­கின்றோம் என்று தெரி­யாமல் உளறிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ‘மொட்டு முதலில் ஹராம், பின்னர் ஹலால்’ என்று சொன்­ன­வர்­களில் ஒரு­வ­ரா­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஷர்ரப் முது­நபீன், தாம் பாரா­ளு­மன்­றத்தில் சுய­மாக இயங்கப் போவ­தாகத் தெரி­வித்­துள்ளார். தாம் புதி­ய­தொரு அர­சியல் கலா­சா­ரத்தை உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய அத்­தி­வா­ரத்­தை­யிட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

மேலும், முஸ்லிம் காங்­கி­ரஸின் ஏற்­பாட்டில் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக 03.04.2022 அன்று அட்­டா­ளைச்­சே­னையில் ஆர்ப்­பாட்டப் பேர­ணியும், பொதுக் கூட்­டமும் நடை­பெற்­றது. இதில் முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் முட்டி மோதிக் கொண்­டி­ருக்­கின்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா.சாணக்­கி­யனும் கலந்து கொண்­டி­ருந்தார்.
மேற்­படி போராட்­டத்தை மழுங்­க­டிக்கச் செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மேற்­கொண்­டி­ருப்­ப­தாக சமூக ஊட­கங்­களில் கருத்­துக்கள் முன் வைக்­கப்­பட்­டன. இதன்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹாPஸ் தமது முகநூல் பக்­கத்தில் தாமும் கட்­சியின் ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் நாட்டில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­கடி தொடர்பில் கட்­சி­யினால் முன்­னெ­டுக்­கப்­படும் ஆர்ப்­பாட்ட பேரணிக்கு எந்தவொரு எதிர்ப்பும் கிடையாது. அதனால், பொது மக்கள் அதில் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு தெரிவித்திருந்தார்.

இவ்வாறு குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ளுமாறு கட்சியின் ஆதரவாளர்களுக்கு கூறிய பாராளுமன்ற உறுப்பினர் ஹாPஸோ அல்லது அக்கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோ கட்சியின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ளவில்லை. இதன்மூலம் அவர்களின் இரட்டை முகத்தைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

இவ்விதமாக சமூகம் சார்ந்த கொள்கை இல்லாமலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் தொடர்பில் தெளிவில்லாமலும் செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்திற்குரிய அடையாளமாக இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்க முடியுமென்று சிந்திக்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.