“முஸ்லிம் நிகழ்ச்சி” மூலம் அறிமுகமான பிரபல பாடகி சுஜாதா அத்தநாயக்க

"பாரம்­ப­ரியம்" நிகழ்ச்­சியில் கெளரவம்

0 424

ஏ. எல். எம். சத்தார்

இலங்கை ஒலிபரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவைக்கு வளம் சேர்த்து, தாமும் நேயர்கள் மத்­தியில் அடை­யாளம் தேடி புக­ழைத்­தே­டிக்­கொண்ட, சன்­மார்க்க போத­கர்கள், எழுத்­தா­ளர்கள், கவி­ஞர்கள், கலை­ஞர்கள், பாட­கர்­களை இன்­றைய, அடுத்த தலை­மு­றைக்கும் இனங்­காட்டி, ஆவ­ணப்­ப­டுத்தும் நோக்கில் முஸ்லிம் சேவையில் மாதம் இரு நிகழ்ச்­சி­யாக ஒலி­ப­ரப்­பாகி வரும் நிகழ்ச்­சியே “பாரம்­ப­ரியம்” நிகழ்ச்சி.
இந்­நி­கழ்ச்சி தொடரில் கடந்த 1ஆம் திகதி செவ்வாய் இரவு ஒலிபரப்­பா­கிய பாரம்­ப­ரியம் நிகழ்ச்சி முற்றும் மாறு­பட்ட நிகழ்ச்­சி­யாக மிளிர்ந்து நேயர்கள் மத்­தியில் பெரும் வர­வேற்­பினை பெற்­றது. முஸ்லிம் சேவைக்கு பங்­க­ளிப்­புகள் வழங்­கியோர் வரி­சையில், முஸ்லிம் அல்­லா­தோரும் பெரும் பங்­காற்­றி­யுள்­ள­மை­யினை கடந்த பாரம்­ப­ரியம் பதி­வாக்­கி­யமை பாராட்­டுக்­கு­ரி­யதே.

கடந்த நிகழ்ச்­சியில் சிங்­கள திரை­யு­லகின் பிர­பல பாடகர் முது­பெரும் கலைஞர், சுஜாத்தா அத்­த­நா­யக்க சிறப்­ப­தி­தி­யாக கலந்து கொண்டார். அவர் பாடிய இஸ்­லா­மிய கீதங்­களைக் கொண்டே அவ­ரது நிகழ்ச்­சி­யினை மெரு­கூட்­டி­யமை நிகழ்ச்சி அதி­க­ளவில் நேயர்­களை வெகு­வாக கவர்ந்­தது எனலாம்.

தனது பிர­ப­லத்­துக்கு, முஸ்லிம் சேவையும் பெரிதும் துணை­யா­கி­ய­மை­யினை, மகிழ்ச்சி பொங்க அவர் தெரி­வித்­தமை, முஸ்லிம் சேவைக்கு அவர் வழங்­கிய கௌர­வமே!
திரு­மதி. சுஜாத்தா அத்­த­நா­யக்க, தனது வானொலி பிர­வேசம் பற்றி சொன்ன போது, 1950இல் தனது 8ஆவது வயதில், சிங்­கள சுதே­ச­சே­வையில் ஒலி­ப­ரப்­பான “விசித்­ராங்­கய” நிகழ்ச்­சியே தான் பங்­கேற்ற முதல் நிகழ்ச்சி என குறிப்­பிட்­ட­தோடு, அந் நிகழ்ச்­சிக்கு தன்னை, பிர­பல இசைக்­க­லை­ஞரும், பாட­க­ரு­மான, ஏ.ஜே. கரீம் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­தாக மிகுந்த நன்­றி­யு­ணர்­வோடு குறிப்­பிட்டார்.

முஸ்லிம் சேவை பேணி பாது­காத்­து­வந்த, வானொலி வர­லாற்றில் தனித்­துவம் நிறைந்த இசைத்­துறை பாரம்­ப­ரி­யத்­துக்கு, “சிங்­களக் குயில்” சுஜாத்தா அத்­த­நா­யக்க வழங்­கிய பங்­க­ளிப்­புகள் நேர்த்­தி­யான நேர்­காணல் மூலம் புலப்­பட்­டது.

தான் அறிந்­த­வரை இஸ்­லா­மிய கீதங்கள் பாட இஸ்­லா­மி­ய­ரா­கவே இருக்­க­வேண்டும் என சுட்­டிக்­காட்டி, தன்னை இனங்­கண்டு, முஸ்லிம் சேவையில் அன்­றி­ருந்த எம்.எச். குத்தூஸ், டி.எப்.லத்தீப், ஏ.ஜே.கரீம் போன்­ற­வர்கள் முஸ்லிம் சேவையில் பாட வாய்ப்பு வழங்கி, ஒரு பிர­ப­ல­மிக்க பாட­க­ராக தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­தி­ய­தாக குறிப்­பிட்டு மகிழ்ந்தார்.
அது ஒரு நேர­டி­யாக ஒலி­ப­ரப்­பா­கிய நிகழ்ச்சி என்றும் ஏ.ஜே. கரீம் அந்­நி­கழ்ச்­சிக்கு இசை வழங்­கி­ய­தா­கவும் நினை­வு­ப­டுத்தி மகிழ்ந்தார்.

இஸ்­லா­மிய கீத பாடல்­களில் தமிழ் மொழி போன்றே அரபு மற்றும் குர்ஆன் வச­னங்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. நபி­ய­வர்­களின் மனைவி கதீஜா, மகள் பாத்திமா இரு­வரும் சிறப்­பான வாழ்க்கை வாழ்ந்த இரு பெண்கள். நாமும் அவர்­களை முன் மாதி­ரி­யா­கக்­கொண்டு வாழ­வேண்டும். பாடல் ஒலிப்­ப­திவின் போது இவர்­களின் வாழ்க்­கைச்­ச­ரிதம் பாடலின் அர்த்தம் போன்­ற­வற்றை பாட­லா­சி­ரியர், சம்­பந்­தப்­பட்­டோ­ரிடம் கேட்டு தெரிந்தே பாடு­வ­தாக பேட்­டியின் போது அவர் குறிப்­பிட்டார்.

தான் பாடிய பாடல்கள் அனைத்தும் தனக்கு பிர­ப­லத்­தினை தேடித்­தர கார­ண­மாக இருந்த தன் நினை­வுக்கு வந்த இஸ்­லா­மிய பாட­லா­சி­ரி­யர்கள், இசை­ய­மைப்­பா­ளர்கள், தன்­னோ­டி­ணைந்து பாடி­யோர்­களை நினை­வு­கூர்ந்தமை அவ­ரது சிறப்­பினை வெளிப்­ப­டுத்­தி­யது. முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்­பாளர் எம். எச். குத்தூஸ், டீ.எப்.லத்தீப், பீர் முஹம்மத், என்.எம்.நூர்தீன், பீர்­மு­ஹம்மத், ஏ.ஜே.கரீம். கே.எம், ஸவாஹிர், பூஜி இஸ்­மாயீல், டீ.எஸ்.ரமழான், எம்.ஐ.எம்.அமீன், முஹம்மத் பியாஸ், ஏ.எம்.ஸாதிகீன். இஷாக் மொஹிதீன், டொனி ஹசன், அருள்­லந்ரா, ஏ.எம்.ஏ.மொஹிதீன் போன்­றோர்­களை நினை­வு­ப­டுத்தி, இன்னும் பலர் இருப்­ப­தா­கவும், அவர்கள் அனை­வ­ரை­யுமே குறிப்­பிட முடி­யாது போன­மைக்கு தன் கவ­லையை தெரி­வித்­துக்­கொண்டார்.

தான் வழங்­கிய “இளம்­பிறை கீதங்கள்” என்ற இஸ்­லா­மிய கீதங்கள் அடங்­கிய இசைக்­கச்­சே­ரியை நினை­வு­ப­டுத்தி அந்த வைப­வத்­துக்கு பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்ட, முன்னாள் சபா­நா­யகர் பாக்கிர் மாக்கார். இசை­ய­மைப்­பா­ள­ராக இருந்த முஹம்­மத்­சாலி, டீ.எப்.லதீப், அந்­நி­கழ்ச்­சயின் வெற்­றிக்கு பக்­க­ப­ல­மாக இருந்த உலக அறி­விப்­பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் போன்ற விப­ரங்­க­ளையும் சொல்லி மகிழ்ந்தார்.
பாரம்­ப­ரியம் நிகழ்ச்சி பற்றி சுஜாத்தா அத்­த­நா­யக்க குறிப்­பி­டு­கையில், இனங்­க­ளி­டையே, ஒற்­றுமை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சிறந்­த­தொரு நிகழ்ச்­சியே பாரம்­ப­ரியம் நிகழ்ச்சி என்றார்.

இந்­நி­கழ்ச்சி தொட­ர­வேண்டும் என்றும் இன்னும் தன் போன்ற பல மூத்த கலை­ஞர்­க­ளையும் அழைத்து, அவர்­க­ளையும் கௌர­வப்­ப­டுத்த வேண்டும் எனவும் கேட்­டுக்­கொண்டார்.

இன்னும் தான் அறிந்­த­வரை, ஆண்­களே முஸ்லிம் சேவைப்­ப­ணிப்­பா­ள­ராக இருந்­தி­ருக்­கி­றார்கள்.

இன்று அதுவும் முத­லா­வது பெண் பணிப்­பா­ள­ராக பாத்­திமா ரினூ­ஸியா இருப்­பதை ஒரு பெண்ணான தான் மகிழ்வதாக தெரிவித்து, பாரம்பரியம் நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்தமைக்கு தொகுப்­பாளர் எம்.எஸ்.எம். ஜின்­னா­வுக்கும் முஸ்லிம் சேவைக்கும்ன் நன்றி கூறி விடை­பெற்றார்.

சினிமா, சிங்கள பாடல்கள் என அதிக மொழிகளில் பாடி உலக அரங்கில் புகழ்பூத்த முதுபெரும் பாடகி சுஜாத்தா, இந்நிகழ்ச்சியில் முற்று முழுதாக முஸ்லிம் சேவையின் தொடர்புகளை மாத்திரம் குறிப்பிட்டு கூறியமை விசேட பாராட்டுக்குரியது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.