தமிழ் பேசும் உலகின் தன்னிகரற்ற எழுத்தாளர் ஹிமானா சையத்

0 348

சுலைமா சமி இக்பால்

இந்­தி­யாவின் பிர­பல நாவல் சிறு­கதை எழுத்­தாளர் ஹிமானா சையத் 21.02.2022 அன்று கால­மானார்.

தமிழின் மிகச்­சி­றந்த சிறு­க­தை­யா­சி­ரியர், நாவ­லா­சி­ரியர், கட்­டு­ரை­யா­ளர், ஊட­க­வி­ய­லாளர், பன்­நூ­லா­சி­ரியர் என பன்­முக திறமை மிக்க மருத்­துவர் ஹிமானா சையத்.
தமிழ் நாட்­டி­லி­ருந்து நான்கு தசாப்த காலங்­க­ளாக வெளி­வரும் நர்கீஸ் மாத இதழில் கௌரவ ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றிய Dr.ஹிமானா சையத் தமிழ் மாமணி, பாரத் ஜோதி, சிறந்த குடி­மகன் எனும் உய­ரிய பட்­டங்­களை பெற்­றவர். இது­வரை 40 நூல்­க­ளுக்கும் மேல் எழுதி வெளி­யிட்­டுள்ளார்.

இவர் இந்­தியா, தமிழ்­நாடு, இரா­ம­நா­த­புரம் மாவட்­டத்தில் சித்தார் கோட்டை எனு­மி­டத்தில், மல்­லாரி அப்துல் கனி மரைக்­காயர், உம்மு ஹபீபா தம்­ப­தி­யி­னரின் புதல்­வ­ராக ஜன­வரி 20, 1947 இல் பிறந்தார்.

தேவ­கோட்டை தேபி­ரித்தோ பள்­ளியில் தனது ஆரம்பக் கல்­வியைப் பெற்று பின்பு சென்னை லொயோலா பள்­ளியில் உயர்­கல்­வியைத் தொடர்ந்தார். 1966 ஆம் ஆண்டில் மதுரை மருத்­துவக் கல்­லூ­ரிக்குத் (மதுரை பல்­க­லைக்­க­ழகம்) தெரி­வாகி 1972 ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். மருத்­துவப் பட்­டத்தைப் பெற்றார்.

பள்ளிக் கல்­வியை மேற்­கொள்ளும் கால­கட்­டங்­க­ளி­லேயே வாசிப்புப் பழக்­கமும், கவி­தைகள் எழுதும் பழக்­கமும் இவ­ரிடம் இயல்­பா­கவே காணப்­பட்­டது.

கற்கும் காலத்தில் நூற்­றுக்­க­ணக்­கான கவி­தை­களை தனது நோட்டுப் புத்­த­கங்­களில் எழு­தி­வ­ரு­வதை ஒரு பொழு­து­போக்­காகக் கொண்­டி­ருந்தார். இந்­நி­லையில் இவரின் முதல் கவிதை மறு­ம­லர்ச்சி இதழில் 1964ஆம் ஆண்டில் பிர­சு­ர­மா­னது.

முதல் சிறு­கதை மலர்­வதி (1987 ஒக்­டோபர்) மாத இதழில் பிர­சு­ர­மா­னது. அதைத் தொடர்ந்து இந்­தியா, இலங்கை, சிங்­கப்பூர், மலே­சியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து வெளி­வரும் பல்­வே­று­பட்ட இதழ்­க­ளிலும், பத்­தி­ரி­கை­க­ளிலும் இவர் எழு­தினார்.
சென்னை, மதுரை காம­ராசர், திருச்சி பார­தி­தாசன் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இவரின் இலக்­கி­யங்­களை இது­வரை ஆய்வு மாண­வர்கள் ஐந்து தடவை ஆய்வு செய்து எம்.பில்.பட்டம் பெற்­றுள்­ளனர்.

மதுரை காம­ராசர் பல்­க­லைக்­க­ழ­கத்தில் செல்வி சண்­மு­க­வனம் எனும் மாணவி இவரின் இலக்­கி­யத்தை ஆராய்ந்து பி.எச்.டி. பட்டம் பெற்­றுள்ளார்.

திருச்சி ஜமால் முகம்­மது கல்­லூரிப் பேரா­சி­ரியர் முகம்­மது இக்பாலும் இவரின் இலக்­கி­யத்தை ஆராய்ந்து பி.எச்.டி. பட்டம் பெற்றார்.

இவ­ரது ‘ருசி’ சிறு­கதைத் தொகுதி கேரள பல்­கலைக் கழ­கத்தில் 1992 முதல் 1996 வரை முது­கலை மாண­வர்­களின் பாடத்­திட்­டத்தில் வைக்கப் பட்­டி­ருந்­தது.

கேரள மேல்­நி­லைப்­பள்ளி 11 வகுப்புப் பாடத்­திட்­டத்தில் இவரின் கோடுகள் கோலங்கள் நாவல் 2004 –- 2006 சேர்க்­கப்­பட்­டி­ருந்­தது. இலங்­கையில் எட்டாம் வகுப்புப் பாட­நூலில் ஆணிவேர் சிறு­கதை சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 30 ஆண்­டு­க­ளாக அவரை எனக்குத் தெரியும். எனது வைகறைப் பூக்கள், மனச்­சு­மைகள் புத்­த­கங்­களைப் படித்து விட்டு அது குறித்து கடி­தங்கள் அனுப்­பினார். 1989ஆம் ஆண்டு தொடக்கம் அவ­ரு­டனும், அவ­ரது குடும்­பத்­து­டனும் ஒரு ஆரோக்­கி­ய­மான உறவு இருந்து வந்­தது.

2003ஆம் ஆண்டு திசை மாறிய தீர்­மா­னங்கள் சிறு­கதைத் தொகு­தியின் வெளி­யீட்டு விழா­வுக்கு சிறப்­ப­தி­தி­யாக இலங்கை வந்து கலந்து கொண்டார். எனது புத்­த­கத்தைப் பற்­றிய அவ­ரது உரை தின­கரன் பத்­தி­ரி­கையில் தொட­ராக வெளி­வந்­தது. அன்­றைய தினம் அவர் எனது வீட்­டுக்கும் வந்து சென்றார். அதன் பின்­னரும் மூன்று தட­வை­க­ளுக்கு மேல் இலங்கை வந்த போது எங்கள் வீட்­டுக்கும் வந்து சென்றார். அதன் போது அவர் எழு­திய சிறு­கதை, நாவல் நூல்­களை அன்­ப­ளிப்­புச்­செய்தார்.

30 வரு­டங்­க­ளாக என்­னு­டனும், என் கணவர், பிள்­ளை­க­ளு­டனும் தொடர்­புள்ள அவர், இலங்கை வந்­தி­ருந்த போது எனக்கு சேலை, பிள்­ளை­க­ளுக்கு சல்வார் துணி, கண­வ­ருக்கு உடுப்பு என கொண்டு வந்து அன்­ப­ளிப்புச் செய்­த­மையை என்னால் மறக்க முடி­யாது. என்னை அவரின் உடன்­பி­றந்த சகோ­த­ரி­யாக நினைத்த அவர், என் கண­வ­னையும் மச்சான் மச்சான் என்று தான் அழைத்து வந்தார்.

என் மகள் இன்­ஷிராஹ் இக்­பாலின் “நிழ­லைத்­தேடி” நாவ­லுக்கும் ஒரு உரை­யினை எழுதி அனுப்­பி­யி­ருந்தார். எனது பிள்­ளை­களும் அவரின் சிறு­கதை நாவல்­களை விரும்பி வாசித்து வந்­தனர். அவரின் சிறு­க­தைகள் தின­கரன், விடி­வெள்ளி, நவ­மணி போன்ற இலங்கைப் பத்­தி­ரி­கை­க­ளிலும் வெளி­யா­கி­யுள்­ளன.
டாக்டர் ஹிமானா சையத் அவர்­க­ளுக்கு இரண்டு மகன்­களும், ஒரு மக­ளு­மாக 3 பிள்­ளைகள் உள்­ளனர்.

2018ஆம் ஆண்டு இறு­தியில் வெளி­வந்த எனது உண்­டியல் சிறு­க­தைத்­தொ­கு­திக்கு ஒரு உரை­யினை எதிர்­பார்த்து சிறு­க­தை­களை அனுப்பி வைத்தேன். உம்­ரா­விற்குப் போய் வந்த பின் உரை­யினை அனுப்­பு­வ­தாகக் கூறி­யி­ருந்தார். அதன் பின்பு பல மாதங்­க­ளா­கியும் எந்த உரையும் வந்து சேர­வில்லை. அவரின் பிள்­ளை­க­ளிடம் விசா­ரித்த போது அவர் நோய் வாய்ப்­பட்­டி­ருப்­ப­தாக அறிந்து துஆச் செய்தேன்.

அவர் சிறந்த எழுத்­தா­ள­ரா­கவும், தலை சிறந்த வைத்­தி­ய­ரா­கவும் மாத்­தி­ர­மின்றி சமூகப் பணிகள் ஆற்­று­வ­திலும் சிறந்து விளங்­கினார்.

அவரின் மறை­வா­னது அவரின் பிள்­ளை­க­ளுக்கும், குடும்­பத்­தி­ன­ருக்கும் மட்­டு­மல்ல எமக்கும் எமது சமூ­கத்­திற்கும் பேரி­ழப்­பாகும். அவர் செய்த அத்­தனை பணி­க­ளுக்கும், நல்­ல­மல்­க­ளுக்கும் அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொண்டு மேலான ஜன்­னத்துல் பிர்­தெளஸ் சுவ­னத்­தினை வழங்க வேண்­டு­மெ­னவும், அவரின் மனைவி, பிள்­ளை­க­ளுக்கு மேலான பொறு­மை­யையும், மன ஆறு­த­லையும் தர வேண்­டு­மென இறை­வனை மனமாறப் பிரார்த்திக்கிறேன்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.