பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக குரலெழுப்புவது கடமை

0 468

நாட்டில் 1979 ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ள பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை முற்­றாக ஒழிக்­கு­மாறு கோரி அண்­மைக்­கா­ல­மாக பல்­வேறு தரப்­பி­லி­ருந்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்­கி­யுள்­ளன. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தில் திருத்­தங்­களைக் கொண்டு வர­வுள்­ள­தாக அர­சாங்கம் அண்­மையில் வெளி­யிட்ட அறி­வித்­தலைத் தொடர்ந்தே இந்த விடயம் மீண்டும் தேசிய மற்றும் சர்­வ­தேச தரப்­பு­களின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

கடந்த 40 வரு­டங்­களில் இந்தக் கொடிய சட்­ட­மா­னது பல்­வேறு தரப்­பு­க­ளுக்கும் எதி­ராக பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. குறிப்­பாக யுத்த காலத்தில் ஏரா­ள­மான தமிழ் மக்கள் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு மிக நீண்ட கால­மாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இன்றும் சுமார் 50 பேர­ளவில் தமிழ் அர­சியல் கைதிகள் இச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். மறு­புறும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து இச் சட்டம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகத் திரும்­பி­யது. அன்­றி­லி­ருந்து இன்று வரை நூற்றுக் கணக்­கான முஸ்­லிம்கள் இச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு வருடக் கணக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டனர். இவர்­களில் அர­சி­யல்­வா­திகள், சட்­டத்­த­ர­ணிகள், சிவில் செயற்­பாட்­டா­ளர்கள், மத பிர­சா­ர­கர்கள், மாண­வர்கள், பெண்கள் என பலரும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி இரண்டு தட­வைகள் இச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார். சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ், ஜமா­அதே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னாப் ஜெஸீம் உட்­பட பலரும் இந்தக் கொடிய சட்­டத்­திற்குப் பலி­யா­ன­வர்­களே. இவர்கள் தற்­போது பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தாலும் வழக்­குகள் தொடர்­கின்­றன. எனினும் இன்­னமும் எந்­த­வித தீவி­ர­வாத செயல்­க­ளு­டனும் தொடர்­பு­ப­டாத நூற்றுக் கணக்­கான முஸ்லிம் இளை­ஞர்கள் இச் சட்­டத்தின் கீழ் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த தன்­னிச்­சை­யான கைதுகள் மூலம் அநி­யா­ய­மாகத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இளை­ஞர்கள் பலர் இன்று தமது பெறு­ம­தி­யான வாழ்வைத் தொலைத்து சிறைக் கம்­பி­க­ளுக்குள் முடக்­கப்­பட்­டுள்­ளனர். சமூ­கத்தில் இவர்­களைப் பற்­றிய தப்­ப­பிப்­பி­ராயம் தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது. எந்­த­வித குற்­றமும் செய்­யாத இவர்­களை குடும்ப உறுப்­பி­னர்கள் கூட கைவி­டு­கின்ற மோச­மான நிலை தோன்­றி­யுள்­ளது. சட்­டத்­த­ர­ணி­களின் உத­வி­களைப் பெறு­வ­தற்குக் கூட பல­ருக்கு அனு­மதி மறுக்­கப்­ப­டு­வ­துடன் சில சம­யங்­களில் பல இலட்சக் கணக்­கான ரூபாக்­களை சட்­ட உதவிக்காக செல­விட வேண்­டிய நிலைக்கும் பலர் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் மிக மோச­மான சரத்­துக்கள் நப­ரொ­ரு­வரைத் தன்­னிச்­சை­யாகக் கைது­செய்­வ­தற்கும் எவ்­வித விசா­ர­ணை­க­ளு­மின்றி 18 மாதங்கள் வரை தடுத்­து­வைப்­ப­தற்­கு­மான அதி­கா­ரத்தை வழங்­கு­வ­துடன் அது சந்­தே­க­ந­பர்கள் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கும் பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் இடம்­பெ­று­வ­தற்கும் வழி­வ­குக்­கின்­றது என உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு மனித உரிமை ஆர்­வ­லர்­களும் சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்­களும் தொடர்ச்­சி­யாக சுட்­டிக்­காட்டி­ வ­ரு­கின்­றனர். மனித உரி­மைகள் ஆணைக்­குழு, சர்­வ­தேச மன்­னிப்புச் சபை, ஐரோப்­பிய ஒன்­றியம் என்­பன இலங்­கையில் அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச் சட்டம் முற்­றாக ஒழிக்­கப்­பட வேண்டும் என பல தட­வை­களில் வலி­யு­றுத்­தி­யுள்­ளன. எனினும் ஆட்­சிக்கு வரும் அர­சாங்­கங்கள் இச் சட்­டத்தை தமக்கு விரோ­த­மா­ன­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் அல்­லது தமது ஆட்­சியைத் தக்க வைத்துக் கொள்­வ­தற்­கான கரு­வி­யா­க­வுமே பயன்­ப­டுத்தி வந்­துள்­ளன.

இந் நிலை­யில்தான் இம்­மாத இறு­தியில் ஜெனீவா மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கையின் மனித உரிமை நிலை­வ­ரங்கள் முக்­கிய கவ­னத்தைப் பெற­வுள்­ளன. இதன்­போது தாம் குறித்த சட்­டத்தில் திருத்­தங்­களைக் கொண்டு வர­வுள்­ள­தாக கண்­து­டைப்புச் செய்­வ­தற்­கா­கவே அர­சாங்கம் அண்­மையில் இது தொடர்­பான திருத்­தங்­களை வெளி­யிட்­டது. எனினும் எதிர்க்­கட்­சி­யினர், மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள், சர்­வ­தேச மனித உரிமை நிறு­வ­னங்கள் என பலரும் இத்­தி­ருத்­தங்­களை நிரா­க­ரித்­துள்­ளனர். அது­மாத்­தி­ர­மன்றி இக் கொடிய சட்­டத்தை முற்­றாக நீக்­கு­மாறு வலி­யு­றுத்தி சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன் எம்.பி. தலை­மையில் நாட­ளா­விய ரீதி­யி­லான கையெ­ழுத்துப் பிர­சா­ரமும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

தமிழ் சமூ­கத்தைப் பொறுத்­த­வரை யுத்தம் இடம்­பெற்ற காலத்­தி­லி­ருந்தே இந்த சட்­டத்­திற்கு எதி­ரான குரல்கள் ஓங்கி ஒலித்து வரு­கின்­றன. இதற்­காக தமிழ் அர­சி­யல்­வா­திகள், சிவில் செயற்­பாட்­டா­ளர்கள், சமய தலை­வர்கள், பொது மக்கள் என பலரும் முன்­னின்று பாடு­ப­டு­கின்­றனர். ஏனெனில் இச் சட்­டத்தின் பாதிப்பை தமிழ் சமூகம் நேர­டி­யாக அனு­ப­வித்­துள்­ளது. இன்றும் அனு­ப­வித்து வரு­கி­றது. இந் நிலை­யில்தான் இச் சட்­டத்தை ஒழிப்­ப­தற்­கான குரல்கள் முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்தும் ஓங்கி ஒலிக்க வேண்­டி­யதன் அவ­சியம் தற்­போது உண­ரப்­ப­டு­கி­றது. கடந்த காலங்­களில் தமிழ் அப்­பாவி இளை­ஞர்கள் இச் சட்­டத்­தினால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­ட­போது முஸ்­லிம்­க­ளா­கிய நாம் அதற்­காக குரல் எழுப்­பி­னோமா என்ற கேள்­வி­யையும் ஒரு­முறை நம்முள் எழுப்­பு­வது பொருத்­த­மா­னது. அன்று நாமும் இணைந்து போரா­டி­யி­ருந்தால், இதனை ஒரு முக்­கிய விவ­கா­ர­மாக சர்­வ­தே­ச­ம­யப்­ப­டுத்­தி­யி­ருந்தால் இன்று அப்­பாவி முஸ்லிம் இச் சட்­டத்­தினால் பாதிக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து பாது­காத்­தி­ருக்­கலாம். எனினும் அது நடக்­க­வில்லை.

இந் நிலையில் தற்­போது நூற்றுக் கணக்­கான முஸ்லிம் இளை­ஞர்கள் இச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போதாவது முஸ்லிம் சமூகம் விழித்துக் கொள்ள வேண்டும். தற்போது அமுலிலுள்ள கொடிய சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற அதேநேரம் சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு கட்டுப்படும் வகையிலான புதிய சட்டத்தை கொண்டு வருமாறு முஸ்லிம் சமூகமும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உட்பட முஸ்லிம் சிவில் அமைப்புகள், அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், இளைஞர்கள், ஊடகவியலாளர்கள் என சகலரும் இது தொடர்பில் களமிறங்கிச் செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.