வடக்கு சென்ற பின்னரே மீள்குடியேறிய முஸ்லிம்களின் பிரச்சினைகளை தெளிவாக புரிந்து கொண்டேன்

தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி

0 1,512

நேர்­காணல் : ஆர்.யசி

“வடக்கில் மீள்­கு­டி­யே­றி­யுள்ள முஸ்லிம் மக்­க­ளுக்கு பார­தூ­ர­மான பிரச்­சி­னைகள் உள்­ளன என்­பது அங்கு சென்ற பின்­னரே தெரிந்­து­கொண்டேன். 12 ஆயிரம் முஸ்லிம் குடும்­பங்கள் இன்­னமும் சிக்­கல்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர் என்­பது அறிந்­து­கொள்ள முடிந்­தது. இந்த விட­யத்தில் வடக்கில் தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களை போலவே முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண்போம் என்ற நிலைப்­பாட்டில் இருந்­து­கொண்டு தமிழ் அர­சியல் தலை­மைகள் பேசு­வதை வர­வேற்­கின்றேன். விரைவில் பேசி இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை வழங்­கு­வதே எமது நோக்­க­மாகும்” என நீதி அமைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி விடிவெள்ளிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் தெரி­வித்தார்.

அண்­மையில் நீதி அமைச்சின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற பல்­வேறு நிகழ்­வு­களில் பங்­கு­கொள்ளும் பொருட்டு வடக்கு மாகா­ணத்­திற்கு நீதி அமைச்சர் அலி சப்ரி விஜயம் மேற்­கொண்­டி­ருந்தார். இந்த விஜயம் உட்­பட மேலும் பல விவ­கா­ரங்கள் குறித்து அவர் வழங்­கிய செவ்வி பின்­வ­ரு­மாறு:

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் இடைக்­கால அறிக்கை உங்­க­ளி­டத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளதா? செய­ல­ணியின் பரிந்­து­ரை­களை விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் என்ற வகையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வீர்­களா?
இன்­னமும் எனக்கு அறிக்கை கிடைக்­க­வில்லை, அறிக்கை கிடைத்த பின்னர் ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுக்க முடியும். இந்த விட­யங்கள் தொடர்பில் ஆணைக்­குழு அமைத்து ஆராய்ந்­தாலும் கூட நீதி அமைச்சே இறுதித் தீர்­மானம் எடுக்கும். ஆகவே அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை பார்க்­கலாம்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டத் திருத்தம் எந்­தக்­கட்­டத்தில் உள்­ளது? சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­ப­டுமா?
முஸ்லிம் சட்­டத்தில் கண்­டிப்­பாக திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ள முன்­னெ­டுக்­கப்­பட்ட முயற்­சிகள் இறு­திக்­கட்­டத்தில் உள்­ளன. கிட்­டத்­தட்ட ஒரு வருட கால­மாக இது குறித்து கவனம் செலுத்தி வரு­கின்றோம். அடிப்­படை திரு­மண வய­தெல்லை 18 என்­பதும், காதி நீதி­மன்­றங்­களில் பெண்­க­ளுக்கும் இடம் வழங்­கப்­ப­டுதல், குறிப்­பாக பெண்­களும் திரு­மண ஆலோ­ச­னை­யா­ளர்­க­ளாக பணி­யாற்ற முடியும், விவா­க­ரத்து பெற்­றுக்­கொண்­டாலும் பெண்­க­ளுக்கு நட்­ட­ஈடு பெற்­றுக்­கொள்ளும் வழி­மு­றைகள் இப்­போது இல்லை, பரா­ம­ரிப்பு விட­யங்­க­ளிலும் காதி நீதி­மன்­றத்­திற்கு சென்று அங்­கி­ருந்து நீதிவான் நீதி­மன்­றத்­திற்கு செல்ல வேண்­டி­யுள்­ளது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு வெவ்­வேறு திருத்­தங்­களை செய்­ய­வுள்ளோம். சட்­டத்தில் பெரிய மாற்­றங்கள் ஏற்­படும் என்­பதை கூற முடியும். அதேபோல் விரைவில் பாரா­ளு­மன்­றத்­திற்கும் சட்­ட­மூலம் சமர்ப்­பிக்­கப்­படும்.

கொவிட் 19 தொற்­றினால் மர­ணித்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் ஒரு வரு­ட­மாக ஓட்­ட­மா­வ­டி­யி­லேயே அடக்கம் செய்­யப்­ப­டு­கின்­றன. சட­லங்­களை அங்கு கொண்டு செல்­வதில் தூரப் பிர­தேச மக்கள் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­கின்­றனர். மாவட்ட ரீதி­யாக அடக்­கஸ்­த­லங்­களை ஒதுக்­கு­மாறு கோரிக்கை விடப்­ப­டு­கி­றது. இது பற்­றிய உங்கள் கருத்து?
ஜனா­ஸாக்­களை மாவட்ட ரீதி­யாக நல்­ல­டக்கம் செய்­வ­தற்­கான அனு­ம­தியை வழங்­கு­மாறு நானும் கோரிக்கை விடுத்­துள்ளேன். வெகு விரைவில் இதற்கு அனு­மதி வழங்­கப்­பட வேண்டும், கண்­டிப்­பாக அவ்­வா­றான நல்ல தீர்­மா­னங்கள் வரும் என எதிர்­பார்க்­கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் சூத்திர­தா­ரி­களை கண்­ட­றிந்து சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் ஏன் இவ்­வ­ளவு தாமதம்?
இது தவ­றான விமர்­ச­ன­மாகும், இந்த தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட விசா­ர­ணைகள் முடி­வுக்கு வந்­துள்­ளன. இதில் 26 பேருக்கு எதி­ராக வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது. சந்­தே­கத்தின் பேரில் உள்ள சக­ல­ரையும் சிறையில் அடைக்க முடி­யாதே. இப்­போதும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற கார­ணத்­தினால் வழக்­குகள் முடி­வுக்கு வரும் சந்­தர்ப்­பத்தில் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். இந்த விட­யத்தில் அர­சாங்கம் மட்­டுமே தீர்­மானம் எடுத்து எவ­ரையும் கைது­செய்ய முடி­யாது. இது சட்ட பொறி­மு­றை­யாகும்.

பொலிசார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து, சட்­டமா அதி­ப­ருக்கு அறி­வித்து அதன் பின்னர் யாருக்கு எதி­ராக வழக்கு தொடர்­வது யாரை விடு­வது என்­பது குறித்து தீர்­மானம் எடுக்­கப்­படும். குற்­ற­வாளி யார் என்­பதை அர­சி­யல்­வா­தி­யினால் தீர்­மா­னிக்க முடி­யாது. இதனை நீதி­மன்­றமே தீர்­மா­னிக்கும். அதற்­கான நட­வ­டிக்­கை­களே இப்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இந்த தாக்­கு­தலில் நேர­டி­யாக தொடர்­பு­பட்ட எவரும் இன்று உயி­ருடன் இல்லை. அனை­வ­ருமே இறந்­து­விட்­டனர். ஆகவே எம்­மிடம் உள்ள ஆதா­ரங்­களை கொண்டே அடுத்­த­கட்ட விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க முடியும். நேர­டி­யாக தொடர்பில் உள்ள 26 பேரை கொண்டே அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும். அதற்கு கால தாமதம் ஏற்­படும். அதற்கு ஒன்றும் செய்ய இய­லாது.
உல­கத்தில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் பல இடம்­பெற்­றுள்­ளன. அவ்­வா­றான விசா­ர­ணைகள் ஒரே நாளில் முடி­வுக்கு வர­வில்லை. எம்மால் முடிந்த அனைத்­தையும் செய்து முடித்­துள்ளோம், அடுத்­த­தாக நீதி­மன்­றமே நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். வெகு விரைவில் இந்த வழக்­கு­களை முடி­வுக்கு கொண்­டு­வர வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்ளோம். மக்­க­ளுக்கு நீதித்­துறை மீதான நம்­பிக்­கையை உறு­திப்­ப­டுத்த வேண்டும், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­கவும் வேண்டும். ஆகவே அதனை நீதி­மன்றம் மூல­மாக முன்­னெ­டுக்க வேண்டும்.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொண்­டுள்­ளமை கூட ஒரு கண்­து­டைப்பு என கூறு­கின்­ற­னரே?
இதனை நான் ஏற்­றுக்­கொள்­ள­மாட்டேன். 42 ஆண்­டு­க­ளாக பயங்­க­ர­வாத தடை சட்டம் நடை­மு­றையில் உள்­ளது. அப்­போ­தெல்லாம் இதனை எவரும் மாற்­ற­வில்லை. நல்­லாட்சி என கூறிக்­கொண்டு ஒரு அர­சாங்கம் இருந்­தது அவர்கள் என்ன செய்­தனர். இவர்கள் எவ­ருமே ஒன்­றுமே செய்­ய­வில்லை. ஆனால் நாம் இதில் மாற்­றங்­களை கொண்­டு­வந்­துள்ளோம். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் மூலம் அநா­வ­சிய கைதுகள் இடம்­பெ­றக்­கூ­டாது, அவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு விடு­தலை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த திருத்­தங்­களை கொண்­டு­வந்தால் பல­ருக்கு பிணை வழங்கும் நிலைமை கூட ஏற்­படும். சக­லரும் எதிர்­பார்ப்­பதை ஒரே நாளில் செய்து கொடுக்க முடி­யாது. படிப்­ப­டி­யா­கவே ஏனைய விட­யங்­களை செய்ய முடியும். திருத்தம் சரி­யில்லை என்று நடை­மு­றையில் இருந்­ததை வைத்­தி­ருக்க வேண்­டுமா என்­ப­தையும் இவர்கள் சிந்­தித்­துப்­பார்க்க வேண்டும். இவர்கள் எதிர்­பார்க்கும் வேகத்தில் மாற்­றங்கள் இடம்­பெ­ற­வில்லை என்­றாலும் கூட மெது­வா­க­வேனும் மாற்­றங்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டுள்­ளன.

அண்­மையில் வடக்­குக்கு விஜயம் செய்த நீங்கள் அங்கு வாழும் மீள்­கு­டி­யே­றிய முஸ்­லிம்­களைச் சந்­தித்­தி­ருந்­தீர்கள். அவர்­க­ளது அடிப்­படை வச­திகள் பற்­றிய என்ன வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளீர்கள்?
இது குறித்து நான் பெரி­தாக எத­னையும் அப்­போது பேச­வில்லை, ஆனால் முஸ்லிம் தரப்பை சந்­தித்த வேளையில், அவர்கள் இடம்­பெ­யர்ந்து சென்ற பின்னர் மீண்டும் அந்த பகு­தி­க­ளுக்கு வந்து பார்த்தால் அங்கு அவர்­களின் காணிகள் இல்லை என்­ப­தையும், ஆரம்­பத்தில் 2600 குடும்­பங்­க­ளாக இருந்த போதிலும் இப்­போது 12 ஆயிரம் குடும்­பங்­க­ளாக பெரு­கி­யுள்­ள­தா­கவும் அவர்­க­ளுக்கு இன்­று­வரை எந்த நலன்­களும் கிடைக்­க­வில்லை என்­பதை வலி­யு­றுத்­தி­னார்கள். அவர்கள் குறித்து எவ­ருமே கவனம் செலுத்­தாது உள்­ள­தாக வேத­னைப்­பட்­டனர். இது பரி­தா­ப­மான நிலை­மை­யாகும். அவர்­களின் பிரச்­சி­னைகள் குறித்தும் அரச அதி­கா­ரி­க­ளிடம் பேசி­யி­ருந்தேன். இந்த விட­யத்­திற்கும் தீர்வு காண வேண்டும். இந்த பிரச்­சி­னை­களில் தமி­ழர்­களா, சிங்­க­ள­வர்­களா அல்­லது முஸ்­லிம்­களா என பாகு­பாடு காட்ட வேண்டாம். பிரச்­சி­னைகள் உள்ள மக்­க­ளுக்கு அதில் இருந்து தீர்வு கிடைக்க வேண்டும். முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் நாம் கருத்தில் கொண்­டுள்ளோம்.

நல்­லி­ணக்க வேலைத்­திட்டம் எனும் போது முஸ்­லிம்­க­ளுக்கும் நியாயம் கிடைத்­தே­யாக வேண்டும். அது குறித்து உங்­களின் கவனம் எந்­த­ளவு தூரத்தில் உள்ளது?
நிச்­ச­ய­மாக, வடக்கில் முஸ் லிம் மக்­க­ளுக்கும் பார­தூ­ர­மான பிரச்சி னைகள் உள்­ளது என்­பது அங்கு சென்ற பின்­னரே எனக்கும் தெரிய வந்­தது. இடம்­பெ­யர்ந்­தார்கள் என்­பது மட்­டுமே எனக்கு தெரியும். ஆனால் 12 ஆயிரம் முஸ்லிம் குடும்­பங்கள் இன்­னமும் சிக்­கல்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். முன்­னைய ஆட்­சியில் கூட முஸ்லிம் அமைச்­சர்கள் இருந்தும் எத­னையும் செய்­ய­வில்லை. ஆனால் இந்த விட­யங்­களை தீர்க்க வேண்டும். அதற்­காக எம்­மா­லான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்கத் தயா­ராக உள்ளோம். இந்த விட­யத்தில் தமிழ் அர­சியல் தலை­மை­களும் ஆரோக்­கி­ய­மான நிலைப்­பாட்டில் உள்­ளனர். தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களை போலவே முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண் போம் என்ற நிலைப்­பாட்டில் இருந்­து­கொண்டு தமிழ் அர­சியல் தலை­மைகள் பேசுவதை வரவேற்கின்றேன். விரைவில் பேசி தீர்மானம் எடுப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.